Pages

Subscribe Twitter Twitter

Monday, September 27, 2010

லிப்ட்டும் அவள் லிப்ஸும்..

அன்றொருநாள்..
வழக்கம் போலஒரு காத்திருப்பு..
Lift க்கு முன்னால் ...

1 க்குப் போய் 3 க்குப் போய் G க்குப் போய்..கடைசியாய் வந்தது 4 க்கு ...
What a spark ...!!
வந்தது நீயா.. ?
அன்று ஏதோ விஷேசம் தான் ..
Even though I know u before ..
 Hello!!
உன் லிப்ஸ் திறக்க..
தானாக மூடிக்கொண்டது Lift ...
திருப்பியும் வெயிட் பண்ண வேணும் Lift க்கு ..But இனி
காத்திருப்பு ஒரு சுகம் தான் ..


மீண்டும் ஒரு Lift scene ..
உன் வீட்டு கதவிடுக்கில் நீ ..
Lift ஐ அழுத்திட்டு காத்திருக்கும் நான் ..
இடைநடுவில்
என் கேள்விகளுக்கு
உன் பதில்..
ஒரு உதட்டுச் சுழிப்புத் தான் ...
என் கைகளோ ..
பட்டனை தான் அழுத்திக்கொண்டிருந்தது
..
போய் போய் வந்து கொண்டிருந்தது லிப்ட்,
உன் அம்மா வந்து கூப்பிடும் வரை ..
மனமும் அப்பிடித்தான் ஊசலாடிக்கொண்டிருந்தது,..
யுனி(Uni)யில் ஒரு பாடம் கையில வாங்கும் வரை ...பின் ஒருநாள்..
வைரமுத்து
எனக்காக எழுதினான்


"உசிரே போகுது ..
.. உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கயில.."
அந்த நேரம் வந்திருந்தால்
Ringin tone ஆக போட்டு
பீலிங்கை ஏத்தியிருக்கலாம்
இப்போதெல்லாம்..
எனக்கு படிகளே
பிடிக்கின்றன ...
உன் Lips லுள்ள கோபத்துக்கு..
என் கண் பட்ட ஆசைக்கு..
துன்பம் அனுபவிக்கின்றன
என் கால்கள்..
பிள்ளைகள் விடும் தவறுக்கு..
அப்பா அம்மா அனுபவிக்கும் துன்பங்கள் போல..

திறப்பதற்காக மட்டும் காத்திருக்கப்படும்.. Lift..

மூடுவதற்காகவும் காத்திருக்கப் படலாம்.. Lips...


Saturday, September 25, 2010

Google என்றொரு தேடற் பொறி(Search Engine ) புதுசாய் வந்திருக்காம்..


என்ன..?! மொழி படத்தில் M.S பாஷ்கர் மணிரத்தினம், அசாருதீன் பற்றி சொன்னது தான் நினைவிற்கு வருகின்றதா..??


தேடற்பொறிகளின் வல்லரசனாக வலம் வரும் Google ஆரம்பகாலத்தில் எப்படியிருந்திருக்கும் என்று ஓர் உள்ளார்ந்த உந்துகையில் ;) இணையத் தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது சில சுவாரசியமான தகவல்கள் சிக்கின.
1995ல்   Staford பல்கலைக்கழகத்தில் Larry Page மற்றும் Sergey Brin  ஆகியோரின் p.h.d ஆய்வில் ஆரம்பித்து 15 வருட காலத்தினுள் பல துறைகளில் கால் பதித்து அசுர வளர்ச்சி கண்டுவிட்டது.

கீழுள்ள சுட்டிகளைச் சொடுக்கி விபரங்களைப் பார்வையிடுங்கள்.
  • முதன் முதலில் Google இப்படித் தான் இருந்திருக்கின்றது.
  • Google Beta பரிசீலனையின் போது இப்படி இருந்திருக்கின்றது.
  • அப்போதைய Google இன் பாவனையாளர்கள் இவ்வாறெல்லாம் தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கின்றார்கள்.


Friday, September 24, 2010

எண்ணத்தெரிந்தவர்கள் மற்றும் எண்ணத் தெரியாதவர்கள் என உலகத்தில் உள்ளவர்களை மூன்றாக வகைப்பட்டுத்த முடியும்.


உலகவரலாறு வழமைபோன்று தனது பிடிவாதமான பாதையில் சற்றும் தளராமல் மனிதர்களைப் பணயமாக வைத்து போய்க்கொண்டிருக்கிறது. இஸ்லாமின் இறைத்தூதரின்(முகம்மது நபி- Peace be upon him) உருவத்தை காட்டுன்னாக(Cartoon) வரைந்து 'ஒருவிதமான' பாராட்டு மற்றும் எதிர்ப்பை பெற்றுக்கொண்ட டென்மார்க் கேலிச்சித்திரஒவியர் தற்போது அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளாராம். ஐக்கிய இராச்சியத்திற்கு விஐயம் மேற்கொண்ட பாப்பாண்டவர் உலகத்தில் மதச்சார்பற்றவர்களின்(Secular) ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றுதிரளவேண்டும் எனக்கூறி, "தான் கண்ட நாசிசத்தை" தன் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டி, அரியணையிலுள்ளோர் ஆட்சிபுரிவோரிடம் தனது மனக்கவலையை கொட்டித்தீர்த்துள்ளார். இன்றைய யூதர்களுக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையும் அக்கறையும் இல்லையாம். அமெரிக்கா இருக்கும்போது, ஏன் இருக்கவேணும் என திண்ணையில் இருக்கிற நீங்கள் நினைக்கிறது புரியுது எனக்கு.

அது சரி மனிதர்களை பணயமாகவைத்து என்றால் எப்படி? என்கிற உங்கட கேள்வி நியாயம்தான். கேணல் சண்டர்ஸ் (அதுதாங்க KFC கடையிலுள்ள தாத்தா) யாரென்பது இன்றுள்ள அமெரிக்கச் சிறுவர்களுக்குத் தெரியாதாம் ஆனால் KFC என்றால் தெரியாதவர்கள் இல்லையாம். 11 வகையான மூலிகைகளையும் சில வசனைத்திரவியங்களையும் கொண்டு எப்படி வளர்த்த கோழியை "வதைத்து" பின் வறுத்து KFC செய்வது என்பதை வரிக்குவரி ஒரு காகிதத்தில் அதுவும் பென்சிலால கைப்பட எழுதிப்போட்டு, அந்த ஒரேயோரு ககிதத்தையே மூலதனமாகக் கொண்ட நிறுவனம் தான் KFC. இருவருக்குமட்டுமே தெரிந்த இருட்டுச் சுரங்கம் ஒன்றின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருகும் காகிதத்தின் துலக்கம் மங்குகிறதாம் என்பது KFCஇன் தற்போதைய கவலை. ஆனால் 60வயதினை கேணல் சாண்டர்ஸ் எட்டும்வரை ஒரு கடைக்காரரும் அவருடைய முறையை எற்றுக்கொள்ளவுமிலையாம், ஏறெடுத்துப் பார்க்கவுமில்லையாம் என்றால் பாருங்களேன். அதேவேளை கலாநிதி ஐயன்ஸ்டைனை எடுத்துக்கொள்ளுங்கள், பெளதீகத் தத்துவஞானி. சார்பியல் கோட்பாட்டினை (சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது) இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். வாயைபிளந்த விஞ்ஞானிகள் அவருடைய பிறந்ததினங்களில் எதாவது அதிசயம் நடக்கும் என இன்றும் நம்புகிறார்களாம். ஆனால் "சார்பியல் கோட்பாட்டிற்காக" அவருக்கு நோபல் பரிசு(Nobel Prize) வழங்கப்படவில்லை மாறாக "ஒளி மின் ஆற்றல்(Photovoltaic Effect)" தொடர்பான ஒரு சிறுவிடையத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பலகதைகள்தான் இன்று வரலாற்றை சிருஸ்டித்துக்கொண்டு இருக்கிறது. எனவெ இந்த வரலாற்றை விடுவோம். ஒரு உண்மையான மனிதனுக்கும் அவனுடைய அறிவியல்ஞானத்திற்கும் இடையேயான மென்மையான தொடர்புதான் அவனுடைய உண்மையான வரலாறு என்பது எனது நிலைப்பாடு, அது எற்றுக்கொள்ளப்படுகிறதா அல்லது மற்றப்படுகிறதா என்பது தேவையில்லாதது. யாராவது மேலுள்ள படத்தை விளங்கிக்கோள்ளா முடிகிறதா எனப்பருங்கள். அச்சடிக்கும்கருவியின்(Printer) காபன் தூள்(Toner)தான் அது. படுபயங்கரமான பச்சைவீட்டுவிளைவு ஊக்கி என்பது உங்களுக்குத் தெரியும். காபன் தூளில் என்ன மாற்றம் செய்தார்களோ தெரியவிலை பழைய காபன் தூள்மாதிரி இந்த புதிய காபன் தூள் இல்லையாம் ஆனால் ஒரேவிதாமான நேர்த்தியான அச்சாம்... என்னால நம்பவே முடியல, இந்தக் காபன் தூளின் வரலாற்று மாற்றத்தை. நீங்களும் உங்கட நியாயப்படுகளைச் சொல்லவாறமாதிரித் தெரியுது ஆனாலும் தலைப்பை ஒருதடவை வாசியுங்கோ... அப்ப தெரியும் நான் வரலாற்றின் எந்தப்பக்கம் என்று.Wednesday, September 22, 2010

கேள்விக் குறியின் இறுதியில் உள்ள புள்ளி தானா "உண்மை "..?????


உண்மை என்றால் என்ன ? உண்மை என்று உலகில் ஏதாவது ஒன்று உள்ளதா? உண்மையை தேடி நாம் அலைகிறோமா? .. அல்லது சங்கரரின் மாயா வாதம் போல எல்லாம் பொய் தானா?? but பொய் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் உண்மை என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும் ... because தற்போதைய அறிவுக்கு எட்டிய வகையில் எல்லாம் "சார்ந்தவையே".. (ஐன்ஸ்டீனின் கொள்கை இன்னும் முறியடிக்கப் படவில்லை .. ஆகவே அதை சரியெனக் கொள்வோம் )..கணித ரீதியில் உள்ள உண்மைகள் ...
தூய கணிதத்திலே சிலவற்றை "வெளிப்படை உண்மைகள்" என்று சொல்வோம்.... அதைவிட 1 +2 =3 .. போன்றவைகளும் கணித ரீதியில் உண்மைகள் .. ஆனால் இப்படி யோசித்துப் பாருங்கள் .. ஒரு நாட்டில் எண் வரிசையை 2,4,5,3,9,7,8,1,6.. இவ்வாறு சிறிய வயதிலிருந்து சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் ... அதாவது எங்களது 2 அவர்களது 1 ...எங்களது 4 அவர்களது 2 ... எங்களது 5 அவர்களது 3 ... so , அவர்களிடம் கேட்டால் 2+4=5 என்று தான் சொல்வார் ... எங்களுக்குப் பிழையாகத் தோன்றும் ஒன்று அவர்களைப் பொறுத்தவரை சரி.. இந்த எளிய உதாரணம் மூலம் நாம் ஒரு பெரிய தத்துவத்தை எளிதில் விளங்கி கொள்ளலாம் .. அதாவது ....
உண்மைகள் எல்லாவற்றுக்கும் ஒரு Frame உண்டு... அந்த Frame இல் மட்டுமே .. அந்த உண்மை செல்லுபடியாகும் ... அதற்று வெளியே அது பொய் ... அல்லது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது ....

எனக்கு அவள் பச்சை ... உனக்கு அவள் மஞ்சள் ....
ஒரு இலையை எடுத்துக் கொள்ளுங்கள் ... சின்ன வயதிலிருந்தே அம்மா முதல் எல்லாரும் அதை பார்த்து பச்சை நிறம் என்று கூறியிருப்பார்.. so எனது மூளையில் உள்ள operating system இவ்வாறு codes எழுதிக் கொள்ளும் ... " இப்ப நீ பாக்கிறது மாதிரி ஒரு நிறத்துக்குப் பெயர் தான் பச்சை .." (இப்பொழுது கண்ணில் விழும் போல ஒரு விழுந்தால் அதை பச்சை என்று உணர் )
ஆனால் அந்த பச்சைகுரிய தன்மை எனது மனதினாலேயே தீர்மானிக்கப் படும் ... அந்த தன்மை ஆளாளுக்கு வேறுபாடும் .. அதாவது பச்சை என்று நினைக்கும் போது உடனே உங்கள் மனதில் தோன்றும் நிறம் இன்னொருவர் சிவப்பு என்று நினைக்கும் போது அவர் மனதில் தோன்றும் நிறத்துக்கு சமமாக இருக்கலாம் ...
கணணி அறிவுள்ளவர்களுக்கு இதை
இவ்வாறு விளக்கலாம் ....
ஆக இருவர் ஒரு பொருளை பாக்கிறார்கள்... இருவரும் அதன் நிறத்தை சரியாகச் சொல்கிறார்கள் .... ஆனால் உண்மையில் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த processing வேறு வேறு .... இதை உணர்ந்து கொள்வது கடினம் ... சிறிது ஆழ்ந்து சிந்தித்தல் விளங்கும் .... இவ்வாறே "ருசி" களும் ... எல்லோரும் "தேன்" குடிக்கிறோம் .. உடனே "இனிக்குது" என்கிறோம் ... எமக்கு தேன் தரும் ருசிக்குப் பெயர் இனிப்பு என்பது சின்ன வயதிலிருந்து சொல்லித்தரப் பட்டுள்ளது .... இந்த தேன் தரும் ருசியை நான் உணரும் உணர்ச்சி ஆனது கத்தரிக்காய் தரும் ருசியை நீங்கள் உணரும் உணர்ச்சிக்கு சமமாக இருக்கலாம் ...

உண்மைகள் பற்றிய இப்படியான விடயங்கள் தொடரும் ....
ஆம்!! கேள்விக் குறிக்கு அடியில் ஏன் புள்ளடி வந்திருக்கும் ..?? கையொப்பங்களை ஏன் அநேகமானோர் புள்ளடி உடன் தான் முடிக்கின்றனர் ??.... அநேகமானோர் சிறு கோடு ஒன்று வெறுங்கையால் கீறும் போது முடிவில் ஏன் டக் எண்டு ஒரு குத்து போடுகிறார்கள் .... ??? ஆம் இவை அனைத்தும் தன்னை அறியாமல் போடப்படும் குத்துக்கள் .... அவ்வாறே எங்களை அறியாமல் எங்களுக்கு தெரியாமல் "உண்மை" ஒன்று உண்டு ... அது புள்ளி போலத்தான் இருக்க வேண்டும் ... இருந்துகொண்டிருக்கிறது ....


மீள்பதிவு ;-)


Saturday, September 18, 2010

பேசும் புகைப்படங்கள்..
நன்றி:புகைப்படங்கள்: Google,மின்னஞ்சல்களிலிருந்து..


Wednesday, September 15, 2010

YouTube வீடியோவில் உபயோகமான பகுதியை மட்டும் கத்தரித்து எடுக்க..

வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதைப் பற்றிக் குறிப்பிடுவதென்றால் இன்று You Tube தவிர்க்கமுடியாததொரு காரணியாக விளங்குகின்றது.இவ் you Tube பற்றிய கருதுகோள் 2005ல் PayPal நிறுவன ஊழியர்களான Chad Hurley, Steve Chen மற்றும் Jawed Karim ஆகியோரின் எண்ணத்தில் உருவாகி $3.5 மில்லியன் மூலதனத்துடன் 2005ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருட காலப்பகுதியினுள்ளேயே Google நிறுவனத்தின் கழுகுப் பார்வையினுள்ளே சிக்கி $1.65 பில்லியனிற்கு விலைக்கு வாங்கப்பட்டு இன்றும் Google இன் இணை நிறுவனங்களில் ஒன்றாக பிரமாண்டமாக வளர்ச்சியடைந்தவாறேயுள்ளது.

கலிபோர்னியாவிலுள்ள YouTube தலைமை அலுவலகம்
முதன் முதலில் me at the zoo  என்ற வீடியோவை Jawed Karim சித்திரை மாதம் 23, 2005ல்  தரவேற்றி ஆரம்பித்திருக்கிறார்.இன்று ஒவ்வொரு நிமிடமும் 24 மணிநேரத்திற்கு மேற்பட்ட வீடியோ உலகெங்குமிருந்து தரவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றதாம் என்றால் அதன் பிரமாண்ட வளர்ச்சியைப் பாருங்களேன்..ஆனாலும் பதிப்புரிமை மற்றும் காப்புரிமை மீறல் ,தனிப்பட்ட சுதந்திர மீறல் எனப் பல விமர்சனங்களும் YouTube மீது இல்லாமலில்லை.

எத்தனையோ வகையான அனுகூலங்களை You Tube வழங்கினாலும் நம்மைப் போன்ற பலரிற்கு பயன்படுவது நாம் ரசித்த You Tube வீடியோக் காட்சிகளை Face Book ,Twitter போன்ற சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களையும் பெறச் செய்வது தானே.. ;)..ஆனாலும் சில சமயங்களில் அவ் வீடியோவின் நீளம் பத்து நிமிடங்களை அண்மித்து நம்மில் பலரது பொறுமையைச் சோதித்து விடுகின்றது..இன்னும் சில சமயங்களில் அவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே ரசிக்கக் கூடியதாயிருக்கையில் பொறுமையாக முழு வீடியோவையும் பார்க்க வேண்டி ஏற்பட்டு கடுப்பாக்குவதுமுண்டு..இனி மேல் இந்தக் கவலையை விட்டு விடுங்கள். சில இனையத் தளங்கள் You Tube வீடியோவின் ஒரு குறித்த பகுதியை மட்டுமே வெட்டியெடுத்து நாம் உபயோகிக்கக் கூடிய வடிவில் தருகின்றன.அவ் இணையத் தளங்களிற்குச் செல்ல கீழுள்ள சுட்டிகளைச் சொடுக்குங்கள்.
1) TubeChop
2)splicd 


Saturday, September 11, 2010

உண்மையான நற்குணமுடைய மனிதனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று எவருமே இல்லை.


விஞ்ஞானம் விந்தையானது மட்டுமல்ல, சிலவேளைகளில் அது விசித்திரமானதும் கூட. விமர்சகர்கள் விஞ்ஞானத்தின் 'அவசரத்தன்மை'யை பலவீனமாக எடுத்துக்கொண்டு சூடாக விவாதிப்பதும் உண்டு. இன்றைய விஞ்ஞான விளைவு, வழிகாட்டும் நிலையிலா அல்லது எங்கோ ஒரு திசையில் 'வழிந்தோடும்' நிலையிலா என்பதும் விளங்குவதற்கு சற்றே கடினமாகத்தான் உள்ளது. சரி, அது இருக்கட்டும், திண்ணையில் இருக்கிற 'உங்களோடு' நேரடியாகவே விசயத்துக்கு வாறேன்.
"அதிக மதுபானம் அருந்துவபர்களின் ஆயுட்காலம், மதுபானம் அருந்துவதனை இடை நிறுத்தியவர்களிலும் பார்க்க, அதிகம் ", நான் சொல்லவில்லை, 20 வருடங்களாக 1800பேரைக்(அதிகமானவர்கள் ஆண்கள்) கொண்டு மேற்கொள்ளப்பட்ட ' புள்ளிவிபர ஆராய்ச்சி ' தெரிவிக்கிறது. வாழ்நாளிலே மது அருந்ததவர்கள் இங்கு கருதப்படவுமில்லை, கவலைப்படத் தேவையுமில்லை. ஆராய்ச்சிக் கட்டுரையின் முழு வடிவம் ஆங்கிலத்தில்.
ஆராய்ச்சி முடிவு ஒருபுறம் இருக்கட்டும், சரியா பிழையா என்பது தேவையில்லை, நடக்கிறதை கண்டுகொள்வோம் என்பது எனது நிலை. ஆனால் ஒருவிடயம் மிகவும் முக்கியமானது, என்னவென்றால், ' மது அருந்துவதைக் கைவிட்டவர்கள்(abstainers) ' பற்றியது. இவர்களது மனங்களுக்குள் ஆழ ஊடுருவினால் பின்வரும் 'மனத்தாக்கங்களை' கேட்கமுடியும். கையில காசில்லை, அதனால குடியை நிறுத்திட்டன், என்பவர்கள் சிலவேளைகளில் கழிவிரக்கம் கொள்கிறர்கள். தாம் மதுவுக்கு அடிமையாக காரணமான 'சந்தர்ப்பத்தையோ அல்லது சம்பவத்தையோ', மீட்டுப்பார்த்து தங்களின் கரங்களைக் கட்டிப்போடுகிறார்கள். "ஏனக்கு இவ்வளவு நஷ்டம் எற்பட்டுவிட்டது, மானம் போய்விட்டது" என்று கூறிக்கூறி தங்களின் மது எதிர்ப்பு வலிமையை கூட்டிக்கொள்கின்றனர். இவற்றை எல்லாம் கடந்து தன்னுடன் "கூட மது அருந்தியவர்களையும் / தற்போதும் மது அருந்த வற்புறுத்த்தும் நண்பர்களையும் " இவர்கள் வெறுப்போடு கடந்து செல்கிறார்கள். எனவே இவர்கள் மது அருந்துவபர்களையும் பார்க்க, அதிகமாக தங்களை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். வாழ்வுநிறைவு வேகமாக அண்மிக்கிறது.
"உங்களுடைய கோபங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படமாட்டிர்கள், மாறாக உங்களுடைய கோபம் தான் உங்களைத் தண்டிக்கும்" என்பது புத்தபெருமான் கூறியதாம். உங்களைத் தண்டிப்பதனை முதலில் நிறுத்துங்கள். முன்பின் தெரியாத, எந்தவித தொடர்பும் அற்ற, முற்றுமுழுதாக அன்னியமான ஒரு மனிதனுக்கும் தன்னால் இயன்ற உதவியை தன் நெருங்கிய நண்பனாகப் பாவித்து செய்யத் தெரிந்தவன் தான் நற்குணமுடைய மனிதன். ஏனவே அவனுக்கு எவருமே நெருங்கிய நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை. எம்மில் பலர், "கூட்டாக மதுஅருந்துபவர்களை" நெருங்கிய நண்பர்களாகக்கருதுவதும், மதுவை வெறுக்கும் போது 'எதிரிகளாக' நினைப்பதும்(அவர்களிடமிருந்து விலகி இருத்தல்) எமக்கு ஆரோக்கியமானது அல்ல. சமூகக்குடிப்பழக்கம்(social drinking) என்பது எம்மிடமிருந்து விலக்கப்படவேண்டும் என்பத்ற்கு காரணங்கள் உண்டு. உங்களிடமிருந்து விடைபெறும் முன்பு, 'வயிறுமுட்டக் குடிக்கும்' கனவான்களுக்கு ஒரு செய்தி:, நீங்கள் வாழும் காலம் அதிகமாக இருக்கலாம் ஆனாலும் சுயநினைவோடு, வாழ்வை ரசித்து வாழும் காலம் மிகவும் குறைவாகவே இருக்கும். உங்களை நீங்களே அறியாமல், ஞாபகம் இன்றி, பலகாலம் உயிரோடு இரு()ந்துகொண்டிருப்பீர்க்ள்.


Thursday, September 9, 2010

ஆடுகள் எல்லாம் கழுத்தில் கயிறுடன் பிறப்பதில்லை..! !


தேரேறிய நல்லூர் முருகன் தீர்த்தமாடி திருக்கல்யாணத்துக்கும் தயார், முருகா! முருகா! என திருவடிதொழும் பக்த்தர்கள் அமைதியாக தம் கடவுளருக்கு நேர்த்திக்கடன்கள் நிறைவேறியதாக ஓரு மனநிறைவு. அறுதிப்பெரும்பான்மை வாக்குகளால் தம்வம்ச இலட்சியங்கள் இன்று பரளுமன்றில் நிறைவேறியதாக மக்கள் பிரதிநிதிகள், கல்லெறி மரணதண்டனைக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஈரானியப் பெண்மணி, துபாய் பூருஜி (Burj Kahlifa) கட்டிட உயரத்திலும் 130 மீற்றர்கள் உயரம் குறைவன அளவு அடிஆழத்தில் உயிருடன் பத்திரமாக புதைந்து, வெளியேவர குறைந்தது நான்கு மாதங்களாவது செலுமென காத்திருக்கும் சிலியின் 33 சுரங்கப்பணியாளர்கள், கண்ணிவெடி அகற்றும் ஆபிரிக்க எலிகள் என உலகம் வலம் வந்துகொண்டிருக்க நாங்களும் நீங்களும் திண்ணையில் ...
உங்களுக்குத் தெரியும், ஒரு கதை இருக்குது! ரொம்பகாலத்துக்கு முன்பு கடவுள் ஆண்கள் பெண்கள் என்று உருவாக்கமுன்பே அழகு, அழகில்லாதது, பண்பு, பண்பில்லாதது, வீரம், மானம், அது இது என்று ஒருமனிதனுக்கு இருக்கவேண்டிய எல்லாப் சிறப்பியல்புகளையும் படைத்துவிட்டாராம். காலாகாலத்தில் கடவுள் மனிதனைப் படைக்கும் போது எழுந்தமானமாக( கடவுளின் சிபார்சு இன்றி ), எலவே பூமியில் படைக்கப்பட்டுள்ள சிறப்பியல்புகளும் வந்து ஒட்டிக்கெளுமாம். கதை, படைக்கப்பட்ட 'சிறப்பியல்புகள்' மட்டும் இருந்த் காலத்தில் நடந்ததாம். அழகும் அழகில்லாததும் சேர்ந்துதான் எப்போதும் திரியுமாம். அறிவு ரொம்பவே கவனமானதாம், அறிவில்லாததுடன் சேரவேமாட்டாதாம், வீரத்தைக் கண்டால் வீரமில்லாததுக்கு நடுக்கமாம், அதிர்ஷ்டத்தின் வழி தனிவழி இப்படி எல்லாமே ஒரே தினுசு தினுசாக இருந்தாதாம். இப்ப உங்களுக்கு விளங்கும் பல வகையான சுவாரசியம் மிக்க சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்புண்டு. அவற்றில் ஒரு மாதிரிக்கதைதான் இது!
அழகும் அழகில்லாததும் சேர்ந்து குளிக்கப் போனார்களாம். அழகில்லாதது, அழகின் ஆடைகளை அணிந்துவிட்டு தனது அசிங்கமான ஆடையினை விட்டுவிட்டு எங்கோ கண்தெரியாத இடம் சென்றுவிட்டதாம். அழகும் வேறுவழியின்றி அசிங்கமான ஆடையுடன் 'மானத்தை' காப்பாற்றியதாம். இன்றும்கூட அழகு அசிங்கமான ஆடையுடன் திரிவதாகத் தகவல். ஏனவெ இதுபோன்ற பல 'தில்லுமுல்லுகள்' அந்தக்காலத்தில் நடந்ததாகக் கேள்வி. ஏனவே, பாவம் மனிதர்கள் நாங்கள் இது போன்ற உண்மைகளை அறிவதில்லை. வெளியில் காண்பதை உண்மையேன நம்புகிறோம். ஒரு மனிதனின் இயல்புகளை கொண்டு அவனை தீர்ப்பிடவோ, புகழவே, இகழவோ, இன்ன்னும் எனென்னவோ செய்யக்கூடாது என கடுமையாக நம்புவதில் என்ன தவறு. ஏன்னைப் பொறுத்தவரையில் மனிதர்கட்கேஉரிய மனிதம் மட்டுமே கொண்டாடப்படவேண்டியது, நம்பப்படவேண்டியது.
எங்கள் அறிவுக்கு எட்டியவகையில், ஆத்மீக எண்ணங்களுக்கு எற்றவகையில் இலங்கயில் மடுத்திருப்பதியோ, கதிர்காமமோ, சிவனோளிபாதமோ, தலதாமாளிகையோ இந்தியாவின் அதோ இதோ, மிகவும் அமைதி, நிம்மதி, விரும்புவது எல்லாம் தருமென நினைப்பதைவிட மனிதர்கள் தமது மனிதத்துவத்தை முதன்மைப்படுத்துவது நல்லது. ஏன் இதை நான் சொல்லிமுடிக்கிறேன் என்றால் அந்தக்காலத்தில் இந்த 'நிம்மதி' என்ன தில்லுமுல்லு செய்திச்சுதோ யாருக்குத்தெரியும்.
ஆடுகள் எல்லாம் கழுத்தில் கயிறுடன் பிறப்பதில்லை, அதுபோல்
நாங்களும் நீங்களும் அங்கும்இங்கும் இழுபட எதையும்கொண்டு வரவில்லை.