Pages

Subscribe Twitter Twitter

Monday, November 29, 2010

கித்துல்கல வில் ஓர் மறக்கமுடியாத சாகச சுற்றுலா அனுபவம்....

சாகசத்திற்கு தயாராக நண்பர் குழாம் :D 

எங்கள் யாழ் இந்து 2005 மாணவர்கள் எல்லோரும் ஒன்றுணைந்து கடந்த வருடம் முதல் வருடாந்தம் ஒரு நாள் சுற்றுலாவை ஒழுங்குசெய்து வருகின்றோம்.இம்முறை  கித்துள்கல சென்று White water rafting செய்வதாகத் திட்டமிட்டிருந்தோம். முன்பொருமுறை கேதா அண்ணா ஒழுங்கு செய்த கித்துல்கல சுற்றுலா பற்றிய முன்னாள் பதிவர்  ;) புல்லட்டின் பதிவொன்றை வாசித்ததிலிருந்து நானும் கித்துல்கல செல்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.இதற்கமைய குறுகிய கால முன் அறிவித்தலுடன் முப்பத்திரண்டு நண்பர்களைத் திரட்டி நேற்று கித்துல்கல நோக்கிய எமது சாகசப் பயணத்தை ஆற்றியிருந்தோம்.இம் முறை யாழ்ப்பானத்திலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்து கொண்டிருந்தார்கள். பழைய பாடசாலைக்கால நினைவுகளைக் கிளறி ஒரே குறும்பும் கும்மாளமுமாக ஏறக்குறைய இரண்டரை மணி நேரப் பயணத்தின் பின்னர் கித்துல்கலவை அடைந்தோம்.

ஆற்றங்கரையில் படகோட்டும் நண்பர்கள் :P
அங்கே ஆறு அண்மைக்கால பெரு மழையாலோ என்னவோ கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. எங்களுக்கு முன்னமே சில சுற்றுலாப் பயணிகள் பயணத்தை ஆரம்பித்திருந்தார்கள்.  முதலில் நெறிப்படுத்துனர்கள் துடுப்பு வலிப்பது பற்றியும் அதற்காக அவர்கள் வழங்கும் கட்டளைகளையும் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளையும் எங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்தினார்கள்.


Wednesday, November 24, 2010

Facebookக்கு சரியானதோர் மாற்றுத்தேர்வு..!?

Facebook பாவனையாளர்களின் சொந்த விடயங்களைப் பகிரங்கப்ப்டுத்துகின்றது என்ற விவாதம் உச்சக்கட்டத்தை அடைந்த தறுவாயில் , ”தனது சொந்தத் தகவல்களை சமூகவலைத்தளங்களில் தனது சொந்தக்கணனியிலேயே    பேணுதல் “ என்ற கோசத்துடன்
நான்கு பல்கலை மாணவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த Diaspora. ஆனால் இதற்குக் கிடைத்த வரவேற்பு ஏதோ நான்கு பொடிப்பசங்களின் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என  கவனிக்காமல் விட்டு விடக் கூடியதாயிருக்கவில்லை.ஏற்கனவே Mark Zuckerberg
இளம் வயதிலேயே Facebook ஊடாக சாதித்திருந்தமையும் ஒரு காரணமாயிருக்களாம். Diaspora வின் ஆரம்ப முன்னெடுப்புகளிற்காக 39 நாட்களில் 10000 அமெரிக்க டொலர்களைத் தன்னார்வத் தொண்டர்களிடமிருந்து இணையமூடாகத்  திரட்டுவடென்ற இலக்கில் களம் இறங்கினார்கள். ஆனால் நடந்ததை அந்த நான்கு இளைஞர்களுமே எதிர்பார்த்திருப்பார்களோ தெரியாது.


Thursday, November 18, 2010

ஈழத்து எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் ஓர் முயற்சி..

இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சியிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை என்பது இன்று நேற்றல்ல நீண்டகாலமாகவே பலராலும் முன்வைக்கப்படும் ஓர் குற்றச்சாட்டு.அவ்வாறான் ஒரு சில ஆவணப்படுத்தல் முயற்சிகளும் தீயாலும் வேறும் பல காரணங்கலாலும் நாசமாக்கப்பட்டதே வரலாறு.
ஈழத்து எழுத்தாவனங்களை எண்ணிமப்படுத்தி  ஆவணப்படுத்தி உலகளவிய ரீதியில் அனைவரிற்கும் இணையத்தினூடே கொண்டுசேர்க்கும் ஓர் பெரும் பணியை நூலக நிறுவனம் தனது மின் நூலகத் திட்டத்தின் மூலம் ஆற்றி வருகின்றது.இதில் குறிப்பிடத் தக்க விடயம் யாதெனில் இம் மின்னூலகத் திட்டம் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சியாக உலகெங்குமிருக்கும் தமிழ் பேசும் தன்னார்வத் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றது.2005 ல் ஆரம்மித்த இப் பணி இன்று ஏறக்குறைய 7000  வரையான நூல்களை எண்ணிம ஆவனங்களாக தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ச்சியாக இப்பணியை அவதானித்து வருபவர்கள் அண்மைக்காலத்தில் நூல்களை எண்ணிமப்படுத்தும் பணி மிகுந்த ஆர்முடுக்கப் பட்ட நிலையில் மேற்கொள்ளப்படுவதைக் காணலம்.

நூலகம்” எண்மிய நூலகத்தில் நூல்கள்,இதழ்கள்,பத்திரிகைகள்,பிரசுரங்கள் என ஆவண வகைகளாகவும்,எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள்,வெளியீட்டு ஆண்டு மற்றும் நூல்வகை போன்ற பலவாறு பகுப்பாக்கி இலகுவில் தேவையான நூல்களைப் பெற்றுக்கொள்ளத்தக்கவாறு பாகுபடுத்தியிறுக்கிறார்கள்.

ஈழத்து எழுத்தாவனங்களை எண்ணிமப்படுத்தி  ஆவனப்படுத்தும் நூலக நிறுவனத்தின்  இந்த முயற்சிக்குக் கைகொடுத்து உதவவேண்டியது நம் அனைவர் முன்னாலுள்ள வரலாற்றுக் கடமை.. நிறைவேற்றுமா..?