Pages

Subscribe Twitter Twitter

Thursday, January 6, 2011

இணையத்தின் மீதான நம்பிக்கை இழக்கப்படுகிறதா..??

அண்மையில் நண்பன்  ஒருவனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது உலகமே தனது சகல தேவைகளையும் இணையத்தினூடே வீட்டிலிருந்தவாறே நிறைவேற்றுமளவிற்கு  வந்துவிட்டது.நம்மூரெல்லாம் எப்போது அந்த நிலைக்கு வரப்போகின்றது என அதிகமாகவே ஆதங்கப்பட்டான்.அவன் சொல்வதற்கு மாறாக என் கருத்தைத் தெரிவித்து வழமையாகவே விவாதத்தை ஆரம்பித்துவைப்பேன் (அது தான் என் கருத்தாய் இருந்தால் கூட..) இன்றும் அவ்வாறு தான்... இணையம் ஒன்றும் நில்லையானதும் உறுதியானதுமான நிலையை அடைந்துவிடவில்லை..அதுவும் நம் நாட்டில் இன்னும் அதிகமாகவே..ஆகவே அத்தியாவசிய தேவைகள் எல்லாவற்றையும் நாங்கள் முழுமையாக இணையத்திலேற்றிவிட்டால் அது சிக்கலில்தான் முடியும் என .ஆரம்பித்தேன் என் (கு)தர்க்கத்தை ..அண்மையில்த் தான் வலையில் 2010ல் இணையத் திலேற்பட்ட பிரதான சம்பவங்களையெல்லாம்  தொகுத்திருந்த ஒரு கட்டுரையை வாசித்திருந்தேன்.எல்லாவற்றையும் இழுத்து அவனை உண்டு இல்லை என்றாக்கிவிட்டேன்.நீண்ட காலத்தின் பின் அவனை மடக்கிவிட்ட திருப்தி எனக்கு..கடந்தவருடத்தில் இணையத்திலியங்கும் நிறுவனங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை இப்போது பார்ப்போம்.ஏதாவதொரு விடயம் பற்றி அறிவதாயிருந்தால் நாம் உடனே இணையத்தில் அணுகுவது Wikipeediaவைத் தான்.கடந்த பங்குனி மாதமளவில் Wikipeedia சில மணி நேரம் செயலிழந்திருந்தது.Googleஇன் தரவுகளின்படி நாளுக்கு 50 மில்லியனிற்கு மேற்பட்ட வாசகர் வரவு கொண்டது  Wikipeedia . ஆகவே Wikipeedia யாரது கண்ணிலும் படாமல் தனது செயலிழப்பைச் (சில நிமிடங்களாயிருந்தால் கூட) சீர்செய்வது சாத்தியப்படாது . Wikimediaவின்  UKயிலுள்ள தகவல்வழங்கி மிகைசூடாகி ;) (over heated) செயற்பாட்டை நிறுத்தியதைத் தொடர்ந்து வரிசையாக சில செயலிழப்புகள் ஏற்பட்டது தான் இப் பிரச்சினைக்குக் காரணமானது.சில மணிநேரத்தில் இப் பிரச்சினையை அவர்கள் சீர் செய்து விட்டார்கள்.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

நம்மில் பலர்  Wordpress இனை பதிவிடுவதற்கு உபயோகிக்கிறோம்.10மில்லியனிற்கு மேலான பதிவுகள் wordpress மூலமாக இடப்படுகின்றன.Techcrunch போன்ற பல பிரபல பதிவு நிறுவனங்கள் கூட Wordpressஐத் தான் உபயோகிக்கின்றன.கடந்த வருட ஆரம்பத்தில் Wordpress (மாசி மாதமளவில்) இரு மணி நேரத்திற்கு மேலாக சில வலையமைப்பு பிரச்சினைகளால் செயலிழந்திருந்தது.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

Googleஇன் பிரபல மின்னஞ்சல் சேவையான Gmail கடந்த வருடம் மாசி,பங்குனி,புரட்டாதி மாதங்களில் சில சிக்கல்களை எதிர்கொண்டது.ஆயினும் Gmail நிறுவனத்தினர்  இச் சிக்கல்களால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெருமளவு பாவனையாளர்களும் பாதிக்கப்படாமல் தவிர்த்துக்கொண்டனர்.எனினும் குறித்ததொகையிலான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனராயினும் Google என வருகையில் இது பெருமளவு கவனத்தைப் பல மட்டங்களிலும் ஈர்ப்பது தவிர்க்கமுடியாதது.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

சீனா கடந்த சித்திரை மாதத்தில் 18 நிமிடங்களிற்கு உலகளாவிய இணைய உபயோகத்தின் 15% சதவீத நெரிசலை வலிந்து China Telecom ஊடாக நகர்த்தியிருந்தது.வழமையாக இந்த அளவிலான நெரிசலை சமாளிக்க முடியாமல் செயலிகள் செயலிழந்துவிடும்.ஆனால் China Telecom இதனை திறமையாகக் கையாண்டிருந்தது.இது திட்டமிட்ட நடவடிக்கையா, தற்செயலானதா என்று அக்காலப்பகுதியில் சர்ச்சை எழுந்திருந்தது.ஆனால் எது எவ்வாறானாலும்  சம்பவம் நடந்தது உண்மையானது.மேலதிக விரிவான  விளக்கம் இங்கே.

500மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்டது  Facebook.கடந்த நான்கு வருடங்களில் Facebook சந்தித்த மோசமான சம்பவத்தைக் கடந்த புரட்டாதி மாதத்தில் சந்தித்திருந்தது.ஓர் பின்னூட்ட loop தொடர்ச்சியாகச் செயற்பட்டு அவர்களது databaseஐ கடும் நெரிசலுக்குள்ளாக்கி செயலிழக்கச் செய்தது. இதனை சடி செய்ய facebookகை முழுமையாகவே 2.5 மணிநேரம் நிறுத்திவைக்க வேண்டையதாயிற்று mark zuckembergற்கு..மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.(havard network அதிகாலை 4 மணிக்கு mark zuckemberkஆல் செயலிழக்கச் செய்யப்பட்ட கதையை Facebookஉருவான கதையில் குறிப்பிட்டிருந்தேன்..இந்த நேரம் zuckemberkற்கு அது தான் நினைவிற்கு வந்திருக்குமென்று யாரும் இங்கே ஆரூடம் கூற முற்பட வேண்டாம்.. ;) ).

மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களிற்காக paypal உபயோகிக்கிறார்கள்.ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளிற்கு paypalஇல் தங்கியுள்ளார்கள்.paypal சேவை சில மணி நேரம் செயலிழந்தால் ஏற்படக் கூடிய வியாபார நட்டத்தை எண்ணிப் பாருங்கள்.கடந்த ஐப்பசி மாதமளவில் 4.5 மணி நேரம் Paypal செயலிழந்திருந்தது.மேலதிக விபரங்களிற்கு இங்கே.

கடந்த காற்பந்து உலகக் கின்ண காலத்தில் Twitter பல தடவை செயலிழந்திருந்தது அல்லது மெதுவாகியிருந்தது.மேலதிக விபரங்களிற்கு இங்கே.wikileaks மீது இனைய உலகில் பிரயோகிக்கப்பட்ட நெருக்கடிகளும், Wikileaks ஆதரவாளர்களால் ஏனைய நிறுவனங்களிற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளையும் ஏற்கனவே wikileaksற்கு ஓர் மாற்றுத் தெரிவு பகுதியில் குறிப்பிட்டதால் இங்கு சேர்த்துக்கொள்ளவில்லை.

இவை யாவும் உலகப் பிரசித்தி பெற்ற இணையத்திலியங்கும்  நிறுவனங்கள் கடந்த வருடத்தில் மட்டும் எதிர்கொண்ட நெருக்கடிகள்.இவை இணையம் இன்னும் ஓர் நிரம்பலான நிலைதகு நிலையை அடையவில்லையோ என்ற சந்தேகம் பலரிற்கு எழச் செய்த சம்பவங்கள்.. எது எவ்வாறானாலும் இச் சிறு சிறு சம்பவங்களால் அந்த நிறுவனங்கள் ஒன்றும் செயலிழந்துவிடவில்லை.தம்மை சீர் செய்துகொண்டு சில மணி நேரங்களிலேயே வழமைக்குத் திரும்பிவிட்டன என்பது தான் இங்கே கவனிக்கப் பட வேண்டியது.Tuesday, January 4, 2011

உங்கள் முன்னாலுள்ள பாரிய சவால்கள்..

பெற்றோர்களே..!!
உங்கள் தண்டனைகளை நீங்கள் புதுப்பித்தேயாக வேண்டும்.மரபு வழித் தண்டனைகள் இனி வேலைக்காகாது..


நாளைய இளைஞர்களே..!!
நாளை உங்கள் பெற்றோர் உங்களுக்கு Facebookஇல் friend request அனுப்பினால் என்ன செய்வீர்கள்..!! ??சிந்தியுங்கள்..செயற்படுங்கள்..

ஏதோ எங்களால் முடிந்த உதவி ;)

எங்கள் சிபாரிசு..
புதிது புதிதாய் எதனையெல்லாமோ புகுத்தும் நீங்கள் ஏன் இப்படியொரு வசதியையும் அறிமுகப்படுத்தக்கூடாது..??நாளை நாமும்..
இன்று இவர்..நாளை நாமும் கூட..


உங்கள் கணனி அடிக்கடி செயலிழக்கிறதா..??
கவலையை விடுங்கள்.. இனி மேல் நீங்களும் கணனி திருத்துவதில் விற்பன்னர் தான்..

பிற்குறிப்பு: குப்பிறப் படுத்திருந்து இவ்வாறெல்லாம் சிந்தித்தது நான் அல்ல..

நன்றி: abstrusegoose,coolmaterialendlessorigamistrikegentlygraphjam