அண்மையில் GroundViews இணையத் தளத்தை மேய்ந்து கொண்டிருக்கையில் காணக்கிடைத்த காணொளி..90களில் நான் சிறுவனாயிருந்தபோதும்..இப்போதும் நன்கு நினைவிருக்கின்றது..பொருளாதாரத் தடைகளின் மத்தியில் எமது மக்கள் அன்றாட வாழ்க்கைக்காகப் போட்ட நெருப்பாற்று நீச்சல்..
- சவர்க்காரத்துக்குப் பதிலாக பனம்பழத்தைப் பாவித்து உடுப்புத் துவைத்தது..
- ஜாம் போத்தலிலில் விளக்குச் செய்து மண்ணெண்ணெயை உச்சமாகப் பாவித்து குப்பி விளக்கில் படித்தது..
- வானொலியில் செய்தி கேட்பதற்காக சைக்கிள் (அப்போதைய எங்கள் தேசிய வாகனம்) மிதித்து தைனமோ சுழற்றியது...
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்..
இவ்வாறாக இப்போதெல்லாம் பேச மறந்தே போய்விட்ட எமது வாழ்க்கையின் ஒர் காலத்தைப் பேச முயல்கிறது கண்ணன் அருணாசலத்தின் இந்தக் காணொளி..
Kerosene from Kannan Arunasalam on Vimeo.
நன்றி..
GroundView, mooving Images, Kannan Arunasalam