Pages

Subscribe Twitter Twitter

Sunday, October 31, 2010

ஏதோ இருக்கிறோம்..ஏதோ இருக்கிறோம் என்று கூறிக் கூறியே
நாமும்
ஏதோ இருக்கிறோம்..


ஏதிலியாய் முட்கம்பிவேலிகளிற்டையே
நீங்கள் இருக்கையில் கூட
இங்கே ”ஏதோ இருந்தோம்”..
மரண ஓலங்கள் மனதில் ஒலிக்க..
கொண்டாட்டங்கள் காதிலொலிக்க..
”ஏதோ இருந்தோம்”..

இதோ..
சாவிற்குள் வாழ்ந்து
ஏலவே செத்த நடைப் பிணங்களெல்லாம்..
வாழ்விற்குள் செத்துக் கொண்டிருக்க..
இங்கே..
”ஏதோ இருக்கிறோம்”..

அதோ..
செத்த மாட்டின் மீது..
காகங்கள் கூட்டமாய்க் கூடி..
 இறுதி அஞ்சலி செலுத்தியவாறு..
சாப விமோசனம் கொடுக்கத் தயாராகிவிட்டன..

இதோ..
 நாங்கள்..
'ஏதோ இருந்து கொண்டிருக்கிறோம்"..
நாளையும் "ஏதோ இருப்போம்"..
ஏனென்றால்..
நேற்றுக் கூட இப்படித் தான்
“ஏதோ இருந்தோம்”..


Monday, October 25, 2010

நீங்கள் உபயோகிப்பது office 2007/2003 யா எனும் பிரச்சினைக்கான ஓர் தீர்வு..

நீங்கள் அனுப்பும் கோப்புகள் தங்களால் வாசிக்க முடியாத வடிவில் உள்ளதாக உங்கள் நண்பர்களிடம் அடிக்கடி திட்டு வாங்குகின்றீர்களா..??
உதாரணமாக நீங்கள் MsOffice 2007 பாவனையாளராயிருக்க உங்கள் நண்பர்கள் office 2003 பாவனையாளராயிருந்தால் நீங்கள் .docx formatல் அனுப்பும் word கோப்புகளையோ .pptx format ல் அனுப்பும் கோப்புகளையோ
உங்கள் நண்பர் தனது office 2003 நிறுவப்பட்டுள்ள கணனியில் உபயோகிக்க முடியாது அவதிப்படுவார்.

உங்கள் நண்பர் office2003/ 2007யா உபயோகிக்கிறாரென்று முன்கூட்டியே உங்களுக்குத் தெரிந்திருந்தால் உரிய formatல் அனுப்ப முடியும்.ஆனால் உங்கள் நண்பர் எதனை தனது கணனியில் நிறுவியிருக்கிறாரென்று முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டிய தேவை இனிமேல் இல்லை.Sunday, October 24, 2010

YouTube வீடியோவில் நீங்கள் விரும்பும் பகுதியை மட்டும் கத்தரித்து எடுக்க..

நாம் சில சமயங்களில் பார்த்து ரசிக்கும் You Tube கானொளிக் காட்சிகளை
Face Book ,Twitter போன்ற சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற இன்பத்தை/துன்பத்தை ;)  மற்றவர்களையும் பெறச் செய்ய வேண்டுமென விரும்புவோம்..ஆனால் சில சமயங்களில் அவ் வீடியோவின் நீளம் பத்து நிமிடங்களை அண்மித்து பலரது பொறுமையைச் சோதித்து விடும்..இன்னும் சில சமயங்களில் அவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே ரசிக்கக் கூடியதாயிருக்கையில் பொறுமையாக முன்னேயுள்ள பகுதி load ஆகும்வரை பொறுமை பேணி எங்சிய பகுதிக் காணொலியைப் பார்க்க வேண்டி ஏற்பட்டு கடுப்பாக்குவதுமுண்டு..இனி மேல் இந்தக் கவலையை விட்டு விடுங்கள். சில இனையத் தளங்கள் You Tube வீடியோவின் ஒரு குறித்த பகுதியை மட்டுமே வெட்டியெடுத்து நாம் உபயோகிக்கக் கூடிய வடிவில் தருகின்றன.அவ்வாறான தளங்களின் இணைய முகவரியை முன்பொருமுறை வழங்கியிருந்தேன்.
 tubechop தளத்தில் எவ்வாறு காணொளியைக் கத்தரிப்பது என்று சற்று விளக்கமாகப் பார்ப்போம்.


Sunday, October 17, 2010

கடவுளிடம் இருக்கும் Decryption Key அல்லது Decryption Keyஐ வைத்திருக்கும் கடவுள்.
நீதியே வெல்லும் .... உண்மையே வெல்லும் .. இப்படியான கதைகளை நம்புவர நீங்கள் ??? பாவம் ... இந்த உலகத்தில் அப்பிடி ஒண்டுமே இல்லை .. எல்லாம் randomness ….
விக்கி பீடியா Randomness இவ்வாறு வரையறுக்கிறது :
Governed by or involving equal chances for each of the actual or hypothetical members of a population; (also) produced or obtained by such a process, and therefore unpredictable in detail."
ஆம் இது தான் உண்மையில் நடக்கிறது .... எல்லா செயற்பாடுகளும் இந்த தியரிக்கு ஒத்துப் போகும் ... இல்லா விட்டால் நாங்கள் சிலவேளை ஒரேமாதிரியான நிகழ்சிகளையே கண்டுகொண்டிருப்போம் ... உலகில் பல பேர் ஒரே மாதிரியே இருப்பார் ... ஆண்களும் பெண்களும் ஓரளவு சம எண்ணிக்கையில் பிறப்பதும் இந்த தியரியால் நிறுவப்பட முடியும் .... அவ்வாறே இங்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளும் Randomமாகத்தான் நடக்கின்றன ...

Randomnessக்கும் எதிர்வு கூறப்பட முடியாமைக்கும் இடையிலான வித்தியாசம் ..
ஒருவருக்கு ரண்டம் ஆக தெரியும் ஒரு நிகழ்சித் தொடர் இன்னொருவருக்கு ராண்டமாக தெரிய வேண்டிய அவசியமில்லை ...


Wednesday, October 13, 2010

நீங்கள் Net-cafeயில் Facebook உபயோகித்துவிட்டு Logout செய்ய மறந்து விட்டால்..


பொதுக் கணனிகளில் நீங்கள் உங்கள் Facebook கணக்கை உபயோகிக்கின்றீர்களா..? நீங்கள் ஒரு Net Cafe யில் உங்கள் Facebook  கணக்கை உபயோகித்துவிட்டு கணக்கிலிருந்து வெளியேற (Log out )மறந்துவிட்டாலோ அல்லது உங்கள் கடவுச்சொல்லை நினைவில் வைத்திரு Remember me :)  தெரிவை நீக்க மறந்துவிட்டாலோ உங்கள் கணக்கில் புகும் ஒரு விசமியால் நிகழக்கூடிய விபரீதத்தை ஒரு தடவை நினைத்துப் பாருங்கள்...

இன்றுமுதல் நீங்கள் இந்தக் கவலையை விட்டுவிடலாம்.. :)


Saturday, October 9, 2010

காமம் என்னும் செசிக்கு காதல் என்னும் பொடி வேணும் ....


இது லம்போரோகினி செசிஸ்.. சில்லால் மட்டுமே அடையாளம் காணக்கூடிய இரும்பு குவியல்....

இதுக்காகத்தானா கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தும்டெலிவரிக்காக காத்துக் கிடக்கிறார்கள் ..???
ஏதோ உண்மை தான் ...
ஒருசிலசெக்கன்களில் சில நூறு மைல்களை எட்டிப்பிடிக்கும் வேகம் ... லாவகமாகதிருப்பக்கூடிய சக்கரங்கள் ...
எந்த தரைதோற்றத்திற்கும் தாக்குப் பிடித்து ஓடும்கட்டமைப்பு ... எல்லாம் இந்த செசி
ஸ்ன் வேலை தான் ....
ஆனாலும் ஒரு பொடிதேவை ...
எந்திரன் ரஜினி மாதிரி .. என்ன ஒரு லுக்கு ...
அந்த இரும்பு செசிஸ்க்கு அடிச்ச பொடி தான் இது ... பொடி கட்டாயம் தேவை ... பார்க்க ..ரசிக்க ..ஏன் சுகமாய் ஏறிப் பொய் வர ...
ஒரு பொடி தேவை தான் ...
அடிப்படை நோக்கம் சீறிப் பாயும் எஞ்சின் என்றபோதிலும் அதை செயல்ப்படுத்த அல்லது அனுபவிக்க எமக்கு ஒரு அழகிய வசதியான பார்த்தவுடன் கண்ணைப் பறிக்கும் ஒரு வெளித்தோற்றம் தேவை ...


பதிவர்களே.. நீங்கள் பாவம்..!!

இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது ” ENTHIRAN ஆங்கில படத்தின் காபியா? “என்ற இந்தப் பதிவு சிக்கியது.. சமீபத்தில் படித்த கருத்து என,,அதிலே பல தமிழ் படங்கள் எந்த ஆங்கிலப் படத்தின் தழுவல் என்றெல்லாம் பிரித்து மேய்ந்திருந்தார்கள்..அப்படியே கீழே படித்துச் செல்கையில் தான் அதிர்ச்சி..திரைப்படங்களில் தழுவல்கள் பற்றிக் கொந்தளிக்கும் அவ் அன்பர்  ஊருக்குத் தான் உபதேசம் தனக்கில்லை என்ற எண்ணத்தோடு போலும்.. YouTube வீடியோக்களை இலகுவில் தரவிறக்க.. என்ற இந்தப் பதிவை அப்படியே எனது  இந்தப் பதிவை  பிரதி செய்து இட்டிருக்கின்றார்..அண்மையில் இணையத்தில் பெற்ற பல தகவல்களைத் திரட்டி, Google இன் ஆரம்பகாலத் தகவல்கள் அடங்கிய  Google என்றொரு தேடற் பொறி(Search Engine ) புதுசாய் வந்திருக்காம்.. என்றொரு பதிவிட்டிருந்தேன். அதனை இன்னொருவர் அப்படியே வரிக்கு வரி பிரதியிட்டு தனது தளத்தில் இங்கே இட்டிருக்கிறார்...

திருடப்பட்ட மேலும் இரு பதிவுகள் பற்றிய விபரங்களை நண்பரொருவர் பின்னூட்டியிருக்கிறார்.. 
....... 
இப்படி எத்தனை பேர் தான் கிளம்பியிருக்கிறார்களோ..??
இப்போது தான் பதிவிட ஆரம்பித்திருக்கும் எங்கள் பதிவுகளே இப்படி ஆட்டையப் போடப்படுகிறதென்றால்.. நீண்டகாலமாய் பதிவிடும் பல பதிவர்களின் எத்தனை பதிவுகள் இப்படி.....
திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்....


Wednesday, October 6, 2010

YouTube வீடியோக்களை இலகுவில் தரவிறக்க..


 இப்போதெல்லாம்  ஏதாவதொரு விடயம் சம்பந்தமான வீடியோவைப் பார்வையிடவோ ,பாடல்களைப் பார்த்து ரசிக்கவோ நாமெல்லாம்  YouTube ற்குச் சென்றுவிடுகின்றோம்.அன்றாடம் நீங்கள் YouTube ல்  பல அருமையான வீடியோக்களைப் பார்த்து ரசிப்பீர்கள்.சில சமயங்களில் உங்களுக்கு அவற்றைத் தரவிறக்கி உங்கள் கணனியில் சேமித்து வைத்திருக்கத் தோன்றும்.இதற்காக நீங்கள் எந்த மென்பொருட்களையும் உங்கள் கணனியில் நிறுவியிருக்க வேண்டிய அவசியமில்லை.keepvid என்ற இணையத் தளத்தின் துணையுடன் நீங்கள் இலகுவில் தரவிறக்கிக் கொள்ளளாம்..

http://keepvid.com/

நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL ஐ மேலுள்ளவாறான பெட்டியில் வழங்கி Download ஐ அழுத்துங்கள்.
அவர்கள் வெவ்வேறு தரத்(Quality)திலான அவ் வீடியோவைப் பட்டியலிடுவார்கள்.
http://keepvid.com/

அதில் நீங்கள் விரும்பிய தரத்தைச் சுட்டும்  இணைப்பைச் சொடுக்கி அவ் வீடியோவைத் தரவிறக்கி உங்கள் கணனியில் சேமித்துக் கொள்ளளாம்.

YouTube வீடியோவிலிருந்து உபயோகமான பகுதியை மட்டும் கத்தரித்து எடுப்பது சம்பந்தமான பதிவிற்கு இங்கே சொடுக்குங்கள்.. :)