புதியதொரு கையடக்கத் தொலைபேசியோ, மடிக் கணனியோ, புகைப்படக் கருவியோ வாங்கியபின்னர் உடனடியகவே அறிமுகமாகும் புதிய மொடெலாலோ அல்லது நாம் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து வாங்கியவுடன் அந்தப் பொருளின் சந்தை விலையில் சடுதியாக ஏற்படும் வீழ்ச்சியாலோ கடுமையாகப் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..??கவலையை விடுங்கள்.
அண்மையில் உங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்காகக் கொண்ட Decide.com என்ற தளமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. குறித்த இலத்திரனியல் பொருளை நீங்கள் வாங்கலாமா இல்லை புதிய அறிமுகத்திற்காகக் காத்திருத்தல் உசிதமானதா..விலையிலேற்படக்கூடிய மாற்றங்களிற்கான எதிர்வு கூறல்கள் என உங்களிற்கு ஆலோசனை வழங்கக் கூடியவாறு இந்தத் தளத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு புதிய மடிக்கணனி வகைகள்,ஒரு புதிய வகை புகைப்படக் கருவி ,ஒரு புதிய வகை தொலைக்கட்ட்சியென புத்திது புதிதாக அறிமுமாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நுகர்வோரிற்கு இந்தத் தளம் பெருந்துணையாக இருக்கும்.ஆனால் இத் தளம் பிரபலமானால் இவர்களது விலை எதிர்வு கூறல்கள் பொருட்களின் விலையை, நிரம்பலை செயற்கையாக நிர்ணயிக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்திவிடும் என விமர்சிப்பவர்களும் உள்ளார்கள்
.
எது எவ்வாறானாலும் புதிய மொடல்களின் அறிமுகம் பற்றிப் பெரிதாக உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியாதவர்கள், புதியதொரு இலத்திரனியல் உபகரணத்தினை வாங்கமுற்படுகையில் இந்தத் தளத்தினது எதிர்வுகூறலையும் ஒரு முறை கவனித்துத் தங்கள் தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் ஏற்படக் கூடிய ஏமாற்றத்தினைத் தவிர்த்துக்கொள்ளலாம்..