சில நாட்களாக ஊடகங்களில் பலமாக அடிபடும் சொற்கள் தான் SOPA(Stop Online Piracy Act), PIPA(PROTECTIP Act). .அமெரிக்காவிலும் ஏனைய பாகங்களிலும் இணையத்தளம் மூலம் இடம்பெறும் காப்புரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க செனற்றில் நிறைவேற்ற முயலும் இரு சட்ட மூலங்கள் தான் இவை..
இந்தச் சட்டங்கள் என்ன தான் செய்யப்போகின்றன? உதாரணமாக இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் வெளிவந்து திரையரங்குகளில் வந்தவுடனேயே ஏன் சிலசமயங்களில் வரமுதலே இணையத்தளங்களில் இலவசமாக தரவிறக்கக் கூடியதாக செய்துவிடுகிறார்கள் அல்லவா..அதேபோல் பாடல்கள் மற்றும் இசைத்தொகுப்புகளின் நிலையும் இதே தான்.இதனையெல்லாம் தடுப்பது தான் இந்தச் சட்டங்களின் வெளிப்படையான நோக்கம்.
உதாரணமாக
- youtube ல் நாளந்தம் பார்த்து ரசிக்கும் பாடல்கள், நகைச்சுவைகள்..
- வெளியான உடனேயே தரவிறக்கி கேட்டுவிடத்துடிக்கும் எம்மைப் போன்ற விசிறிகள்..
- மொழிகடந்து இலவசமாகவே Torrent உதவியுடன் தரவிறக்கி பார்த்துவிடும் பல்வேறு மொழிப் படங்கள்..
- இலவசமாகவே தரவிறக்கிவிடும் e புத்தகங்கள்..
இங்கே தான் பிரச்சினை எழுகின்றது...
இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலமான கோசங்கள் உலகெங்கும் எழ ஆரம்பித்துள்ளது. காப்புரிமையப் பேணுவது அவசியமானது என்ற அடிப்படையில் இதற்கு ஆதரவானவர்களும்,இது இறுதியில் கட்டற்ற இணையத்தைக் கட்டுப்படுத்தி சுதந்திர கருத்துரிமையை மீறுவதிலே தான் முடியும் என இத்ற்கு எதிரானவர்களின் வாதங்களும் எழ ஆரம்பித்துள்ளன.இது Wikipedia போன்ற பல இலட்சம் பார்வையாளர்களை நாளொன்றிற்குக் கொண்டுள்ள இணையத்தளாங்களின் ஒருநாள் Blackout (ஒரு வகையிலான கடையடைப்பு ;-) ) போராட்டம் வரை இதுவரை சென்றுள்ளது.
பல கோடிகளோ இலட்சங்களோ செலவுசெய்து மேலும் காப்புரிமை பெற்று தயாரிக்கப்படும் திரைப்படங்களோ இசைத்தொகுப்புக்களோ ஏனைய அம்சங்களோ சட்டவிரோ தமான முறையில் இணையத்தளங்களில் தர வேற்றப்படுவதால் அதனை வெளியிடும் நிறுவனங்களிற்கு பெருமளவு வருமான இழப்பு ஏற்படுகிறது .. இது அடிப்படையில் அந்த துறை(Industry)யையே படிப்படியாகப் பாதிக்கச் செய்கிறது.தொடர்ந்து அந்த துறையையே ஆட்டங்காணச் செய்கையில் அந்தத் துறையயே நம்பி வாழும் அன்றாடங்காய்ச்சிகளின் அடிவயிற்றில் இறுதியாகக் கைவைக்கின்றது.ஆகவே இதனைத் தடுத்தேயாக வேண்டும் என இதனை ஆதரிப்பவர்கள் வாதாடுகிறார்கள்.
ஆனால் சட்டங்கள் போட்டுத் தடுப்பதனால் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. தொழிநுட்பங்களில் கைதேர்ந்தவர்களாலேயே இதுபோன்ற தளங்கள் நடாத்தப்படுவதால் அவர்கள் வேறுவழிகளில் இதனைக் கொண்டு செல்வார்கள். ஆனால் அடிப்படையில் பாதிக்கப்படப் போவது என்னவோ இது போன்ற காப்புரிமைபெறப்பட்ட பொருட்களைக் கட்டனங்செலுத்திப் பெறமுடியாதவர்களே எனவும் வாதாடுகிறார்கள். குறிப்பாக எல்ல நாட்டுச் சந்தைகளுக்கும் எல்லாப் பொருளும் எளிதில் வந்தடைவதில்லையெனவும், அவ்வாறான பிரதேசங்களில் வாழ்பவர்களையே இது பாதிக்கும் எனவும் வாதாடுகின்றார்கள். மாறாக இந்தச் சட்டமூலங்கள் புத்தாக்கங்களில் ஈடுபடும் சிறிய நிறுவனங்களை சட்டங்களிலுள்ள ஓட்டைகளப் பயன்படுத்தி பெரிய நிறுவனங்கள் அடிமைப்படுத்திவிடவே ஊக்குவிக்கும் எனவும் வாதாடுகிறார்கள்.
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்க திட்டம் போட்டுத் திருடிற கூட்டம் திருடிக்கொண்டேயிருக்கும் என்பது இவர்களது வாதம்.இதற்கு மாறாக சட்டங்களை இயற்ற செலவு செய்யும் நேரத்தையும் பணத்தையும் இவ்வாறன செயற்பாடுகளைத் தடுக்கப் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் செலவுசெய்வதே சிறந்தது என்கிறார்கள் இந்தச் சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள்.
எது எவ்வாறானாலும் இந்தச் சல்லமூலம் நிறவேற்றப்படுமா, அல்லது பல்வேறு மற்றங்களிற்கு உட்பட்டு நிறைவேற்றப்படுமா, நிறவேற்றப்பட்டாலும் எவ்வாறு அமுல்படுத்தப்படப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தச் சட்டமூலங்கள் பற்றி நான் அண்மைய நாட்களில் இணையத்தில் வாசித்த ஆக்கங்களின் அடிப்படையில் மேலெழுந்தவாரியாகவே இங்கு விளக்கியிருக்கிறேன்.மேலும் படிக்க கீழுள்ள இணைப்புக்களைச் சொடுக்குங்கள்.