நீண்ட காலத்தின் பின் திண்ணையைத் தூசி தட்டுகிறேன்.
அண்மைக்காலமாக ஒரு சந்தேகம்.
காரணம் தான் புரிகிறது இல்லை.
அண்மையில் அலுவலகத்தில் பணியாற்றும் சீன நண்பரொருவரின் கணினியைப் பார்த்தபோது அதிர்ந்து போனேன்.உலாவி (Browser) முதற்கொண்டு எங்கெல்லாம் சீனமொழியை உபயோகப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் சீனமொழியை சாதாரணமாகவே உபயோகிக்கிறார்.இத்தனைக்கும் அவரது ஆங்கிலப்புலமை சிறப்பானது.அவர்களில் அனேகர் பொதுவாகவே சீனமொழியைத்தான் கணனி மொழியாக உபயோகப்படுத்துவதைப் பின்புதான் அவதானித்தேன் .
இத்தனைக்கும் Google முகப்புப் பக்கம் ,Gmail போன்ற இடங்களிலெல்லாம் தமிழை உபயோகப்படுத்த வாய்ப்பிருந்தும் நான் எதிலும் தமிழைப் பாவனை மொழியாகப் பயன்படுத்துவதில்லை. அறிமுகப்படுத்தப்பட்டபோது சிலகாலம் உபயோகித்திருக்கிறேன்.பின்னர் ஏனோ ஆங்கிலத்திற்கு மாற்றிவிட்டேன்.
இத்தனைக்கும் தமிழை உபயோகப்படுத்துவதைத் தரக்குறைவாக எண்ணுபவன் நான் இல்லை. போதுமான அளாவிற்குத் தமிழ் புலமையும் எனக்கிருப்பதாகவே எண்ணுகிறேன்.இருந்தும் ஏன் நான் (நான் மட்டுமல்ல. நம்மில் பெரும்பாலானோர்) தமிழை கணனி பாவனை மொழியாகப் பெரிதாக உபயோகப்படுத்துவதில்லை.
இதுதான் இப்போ விடைகாண முடியாக் கேள்வியாய் எனக்கிருக்கிறது.
என்ன காரணமாயிருக்கலாம்..??