யாழ் இந்துக் கல்லூரி இளைஞர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தெய்வத்திருமகள் சிறப்புக்காட்சி நேற்றிரவு பார்க்கக் கிடைத்தது .படம் முடிவடைகையில் நள்ளிரவு தாண்டியிருந்தபோதும் எந்தச் சலிப்புமில்லாமல் மனது முழுவதும் இனம்புரியாத ஓர் இதமான உணர்வு நிரம்பியிருந்தது. படக் காட்சி ஒழுங்கமைப்பில் நானும் பங்குபற்றியிருந்ததால் பல நண்பர்களோடு உரையாடி படத்தைப்பற்றிய கருத்துகளை அறிய முற்படுகையில் அனைவருமே திருப்ப்தியாயிருந்தமை இரட்டிப்பு சந்தோசமே..
இயக்குனர் விஜய் மீது கிரீடம் படத்திலிருந்தே ஒர் ஈர்ப்பு இருந்ததும், விக்ரமை தெய்வத்திருமகள் ரெயிலரரில் பார்த்ததிலிருந்தே எப்படியாவது இந்தப் படத்தை பார்த்துவிடவேண்டும் என்று தீர்மாந்த்திருந்தேன்.மன நலம் குன்றிய தந்தையின் வேடம்.. விக்ரம் யாவரும் எதிர்பார்த்தது போலவே நடித்துக் கலக்கியுள்ளார்.