Pages

Subscribe Twitter Twitter

Friday, July 15, 2011

தெய்வத்திருமகள்- அருமையான பாசப் பிணைப்பு

யாழ் இந்துக் கல்லூரி இளைஞர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட   தெய்வத்திருமகள் சிறப்புக்காட்சி நேற்றிரவு பார்க்கக் கிடைத்தது .படம் முடிவடைகையில் நள்ளிரவு தாண்டியிருந்தபோதும் எந்தச் சலிப்புமில்லாமல் மனது முழுவதும் இனம்புரியாத ஓர் இதமான உணர்வு நிரம்பியிருந்தது. படக் காட்சி ஒழுங்கமைப்பில் நானும் பங்குபற்றியிருந்ததால் பல நண்பர்களோடு உரையாடி படத்தைப்பற்றிய கருத்துகளை அறிய முற்படுகையில் அனைவருமே திருப்ப்தியாயிருந்தமை இரட்டிப்பு சந்தோசமே..

இயக்குனர் விஜய் மீது கிரீடம் படத்திலிருந்தே ஒர் ஈர்ப்பு இருந்ததும், விக்ரமை தெய்வத்திருமகள் ரெயிலரரில் பார்த்ததிலிருந்தே எப்படியாவது இந்தப் படத்தை பார்த்துவிடவேண்டும் என்று தீர்மாந்த்திருந்தேன்.மன நலம் குன்றிய தந்தையின் வேடம்.. விக்ரம் யாவரும் எதிர்பார்த்தது போலவே நடித்துக் கலக்கியுள்ளார்.

விக்ரம், குட்டி மகள் நிலா, நிலாவின் தாயின் தந்தை மூவரிற்குமிடையிலான பாசப் போரட்டம் தான் படம்..அதிலும் விக்க்ரமிற்கே போட்டி போட்டு நடித்துக் கலக்கியுள்ள அந்தக் குட்டி தேவதை சரா.. எவ்வளவு நெகிழ்ந்து பாராட்டினாலும் தகும்.

மிருதுவான நெகிழ்வான கதையோட்டம்.. மீண்டும் இயக்குனர் விஜய் ஜமாய்த்துள்ளார்.ஜி.வி பிரகாஸ் இசையால் உணர்வுபூர்வமாக எல்லாவிதமான பாசங்களையும் பின்னணியில் வடித்துள்ளார்.எந்தவிடத்திலும் உறுத்தாத மிகைப்படாத இசை.. ஜிவி மற்றும் விஜய் கூட்டணி மீண்டும் கலக்கியுள்ளது.கதையோட்டத்தினூடேயே பயணிக்கும் பாடல்கள் படத்தினது மற்றுமோர் பலம்.ஏனோ  பாடலாகக் கேட்கையில் என்னைக் கவர்ந்திருந்த விழிகளில் ஒரு பாடல் படத்தில் கதையோட்டத்தைக் குலைப்பதுபோல் ஓர் உணர்வு..(எனக்கு மட்டுந்தானா.. ?? ) ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா காட்சிகளைக் குளிர்மையாகக் காட்டி அசத்துவதில் தான் வல்லவன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

நாசர்,அனுஸ்கா,எம்.எஸ் பாஷ்கர், விழிகளால் கலக்கும் அந்தக் குட்டிப் பயல் என பலர் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள்..குட்டி தேவதை நிலா..மனதை விட்டு அகல மறுக்கிறாள்.இவ்வளவு சிறிய வயதில் அருமையான நடிப்பு..முகபாவனை.காட்சி காட்சியாகச் சிலாகிக்கலாம் .ஆனாலும் நீங்கள் திரைப்ப்டத்தைப் பார்க்கையில் உங்கள் உணர்வோட்டத்தை அவை சிதைத்துவிடலாம் என அஞ்சி அவற்றைத் தவிர்த்துவிடுகிறேன்.

என் உலக சினிமா ரசிக நண்பனொருவன் இப்படத்தை I Am Sam படத்தின்  தழுவலென நேற்றே திரையரங்கில் கூறிக் குறைப்பட்டான். எதுவாயிருந்தாலும் என்னைப் போல் அப்படத்தைப் பார்வையிடாத இலட்சக் கணக்கான நபர்களிற்கு அது எந்தப் பாதிப்பையும் தரப்போவதில்லைத் தானே.. J ..ஆனாலும் அந்தப் படத்தையும் எங்காவது தேடிப் பார்த்துவிட வேண்டுமென முடிவெடுத்திருக்கின்றேன்.

 அண்மைக்காலத்தில் திரையரங்கிற்குச் சென்று சொந்தச் செலவில் சூனியம் வைத்துவிட்டதாக உணர்ந்த பலரும் துணிந்து இத் திரைப்படத்திற்குச் சென்று உங்களது அந்த பிறவிப் பிணியைப் ;-) போக்கிக்கொள்ளலாம்.துணிந்து செல்லுங்கள். 


4 comments:

Ashwin-WIN said...

அருமையான விமர்சனம். இந்துவின் இளைஞர் அணியின் துடிப்பான நபர்களுள் ஒருவரான சின்மஜன்கு வாழ்த்துக்கள்.. மனதை ஆட்கொண்ட திரைப்படம்..

niranjan said...

ACTING COMPETITION BETWEEN 'sara nd Vikram..both rocks for their charactors.nice job Sinmayan

கார்த்தி said...

எனக்கு படம் சுப்பரா இருந்தது!

தையோட்டத்தைக் குலைப்பதுபோல் ஓர் உணர்வு..(எனக்கு மட்டுந்தானா.. ?? )
எனக்கும்தான். சும்மா அல்றா மோசன் எபக்ட் கொடுத்து வீணாக்கியிருக்கிறார்கள்!

I am Sam என்பதன் தழுவல்தானாம் இந்த படம்!

♔ம.தி.சுதா♔ said...

////அண்மைக்காலத்தில் திரையரங்கிற்குச் சென்று சொந்தச் செலவில் சூனியம் வைத்துவிட்டதாக உணர்ந்த பலரும் துணிந்து இத் திரைப்படத்திற்குச் சென்று உங்களது அந்த பிறவிப் பிணியைப் ;-) போக்கிக்கொள்ளலாம்.துணிந்து செல்லுங்கள். ////

உண்மை தாம்பா உணர்ந்தேன்...