Pages

Subscribe Twitter Twitter

Monday, June 20, 2011

புள்ளிகள் தானா "உண்மை "..??


உண்மை என்றால் என்ன உண்மை என்று உலகில் ஏதாவது ஒன்று உள்ளதாஉண்மையை தேடி நாம் அலைகிறோமா? .. அல்லது சங்கரரின் மாயா வாதம் போல எல்லாம் பொய் தானா?? but பொய் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் உண்மை என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும் ... becauseதற்போதைய அறிவுக்கு எட்டிய வகையில் எல்லாம் "சார்ந்தவையே".. (ஐன்ஸ்டீனின் கொள்கை இன்னும் முறியடிக்கப் படவில்லை .. ஆகவே அதை சரியெனக் கொள்வோம் )..


கணித ரீதியில் உள்ள உண்மைகள் ...தூய கணிதத்திலே சிலவற்றை "வெளிப்படை உண்மைகள்" என்று சொல்வோம்.... அதைவிட 1 +2 =3 .. போன்றவைகளும் கணித ரீதியில் உண்மைகள் .. ஆனால் இப்படி யோசித்துப் பாருங்கள் .. ஒரு நாட்டில் எண் வரிசையை 2,4,5,3,9,7,8,1,6.. இவ்வாறு சிறிய வயதிலிருந்து சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் ... அதாவது எங்களது 2 அவர்களது 1 ...எங்களது 4 அவர்களது 2 ... எங்களது 5 அவர்களது ... so , அவர்களிடம் கேட்டால் 2+4=5 என்று தான் சொல்வார் ... எங்களுக்குப் பிழையாகத் தோன்றும் ஒன்று அவர்களைப் பொறுத்தவரை சரி.. இந்த எளிய உதாரணம் மூலம் நாம் ஒரு பெரிய தத்துவத்தை எளிதில் விளங்கி கொள்ளலாம் .. அதாவது ....
 உண்மைகள் எல்லாவற்றுக்கும் ஒரு Frame உண்டு... அந்த Frame இல் மட்டுமே .. அந்த உண்மை செல்லுபடியாகும் ... அதற்று வெளியே அது பொய் ... அல்லது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது ....

எனக்கு அவள் பச்சை ... உனக்கு அவள் மஞ்சள் ....
ஒரு இலையை எடுத்துக் கொள்ளுங்கள் ... சின்ன வயதிலிருந்தே அம்மா முதல் எல்லாரும் அதை பார்த்து பச்சை நிறம் என்று கூறியிருப்பார்.. so எனது மூளையில் உள்ள operating system இவ்வாறு codes  எழுதிக் கொள்ளும் ... " இப்ப நீ பாக்கிறது மாதிரி ஒரு நிறத்துக்குப் பெயர் தான் பச்சை .." (இப்பொழுது கண்ணில் விழும் போல ஒரு விழுந்தால் அதை பச்சை என்று உணர் )
ஆனால் அந்த பச்சைகுரிய தன்மை எனது மனதினாலேயே தீர்மானிக்கப் படும் ... அந்த தன்மை ஆளாளுக்கு வேறுபாடும் .. அதாவது பச்சை என்று நினைக்கும் போது உடனே உங்கள் மனதில் தோன்றும் நிறம் இன்னொருவர் சிவப்பு என்று நினைக்கும் போது அவர் மனதில் தோன்றும் நிறத்துக்கு சமமாக இருக்கலாம் ... 
கணணி அறிவுள்ளவர்களுக்கு இதை
இவ்வாறு விளக்கலாம் ....
ஆக இருவர் ஒரு பொருளை பாக்கிறார்கள்... இருவரும் அதன் நிறத்தை சரியாகச் சொல்கிறார்கள் .... ஆனால் உண்மையில் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த processing வேறு வேறு .... இதை உணர்ந்து கொள்வது கடினம் ... சிறிது ஆழ்ந்து சிந்தித்தல் விளங்கும் .... இவ்வாறே "ருசி" களும் ... எல்லோரும் "தேன்" குடிக்கிறோம் .. உடனே "இனிக்குது" என்கிறோம் ... எமக்கு தேன் தரும் ருசிக்குப் பெயர் இனிப்பு என்பது சின்ன வயதிலிருந்து சொல்லித்தரப் பட்டுள்ளது .... இந்த தேன் தரும் ருசியை நான் உணரும் உணர்ச்சி ஆனது கத்தரிக்காய் தரும் ருசியை நீங்கள் உணரும் உணர்ச்சிக்கு சமமாக இருக்கலாம் ...

உண்மைகள் பற்றிய இப்படியான விடயங்கள் தொடரும் ....
ஆம்!! கேள்விக் குறிக்கு அடியில் ஏன் புள்ளடி வந்திருக்கும் ..?? கையொப்பங்களை ஏன் அநேகமானோர் புள்ளடி உடன் தான் முடிக்கின்றனர் ??.... அநேகமானோர் சிறு கோடு ஒன்று வெறுங்கையால் கீறும் போது முடிவில் ஏன் டக் எண்டு ஒரு குத்து போடுகிறார்கள் .... ???ஆம் இவை அனைத்தும் தன்னை அறியாமல் போடப்படும் குத்துக்கள் .... அவ்வாறே எங்களை அறியாமல் எங்களுக்கு தெரியாமல் "உண்மை" ஒன்று உண்டு ... அது புள்ளி போலத்தான் இருக்க வேண்டும் ... இருந்துகொண்டிருக்கிறது ....

மீள்பதிவு ;-)

Monday, June 13, 2011

புற்றுநோய்க்கெதிரானதொரு பாரிய போர்..


அண்மைக்காலமாக யாழ்குடாநாடு அடங்கலாக இலங்கையின் வடக்குக் கிழக்கு பகுதிகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் தொகை துரித கதியில் அதிகரித்தவண்னமுள்ளது. செயற்கை அனர்த்தங்களாலான உயிர்ப்பலி இப்போது இப்பகுதிகளில் குறைவடைந்துள்ள போதும் மறுபுறம் புற்று நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழப்போர் தொகை அதிகரித்திருப்பது பலராலும் கவலையுடன் நோக்கப்பட்டு வருகின்றது.அதிலும் பலர் சிறுவயதிலேயே இப் பாதிப்பை எதிர்கொள்வது தான் பெருஞ் சோகம்.

இப்போது இலங்கையில் இலவச புற்றுநோய்ச் சிகிச்சைக்கான பெருமளவு வசதிகளுடனான வைத்தியசாலை மகரகம பகுதியிலே அமைந்துள்ளது.தொலை தூரத்திலுள்ள இவ் வைத்தியசாலைக்கு வருகைதர அப் பகுதி மக்கள் பலத்த இடர்பாடுகளைச் சந்தித்தவண்ணமுள்ளனர்.இவற்றைத் தவிர்க்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுவர்களிற்கான புற்றுநோய் சிகிச்சைக்கென சகல வசதிகளுடனான ஒரு பிரிவினை நிறுவும் நோக்கத்திற்க்காக colours of courage trust அமைப்பினால் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் திரட்டும் பாரியதொரு முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதன் ஒரு கட்டமாக தேவேந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை வரையிலான 670 Km தூர பாரிய நடைப்பயணமொன்று எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு ஒத்துழைக்க இலங்கைக் கிறிக்கெற் அணித்தலைவர் டில்சான், மகெல ஜெயவர்த்தன போன்றோர் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புற்று நோய்க்கு எதிரான இப் பாரிய போராட்டத்திற்கு நீங்களும் நிதி ரீதியாகவோ அல்லது ஏனைய வழிகளிலோ பங்களிக்க விரும்பினால் விபரங்களிற்காக இங்கே சொடுக்குங்கள்உத்தியோகபூர்வ இணயத்தள முகவரி:-  Trail
twitter:- TrailSL