அண்மைக்காலமாக யாழ்குடாநாடு அடங்கலாக இலங்கையின் வடக்குக் கிழக்கு பகுதிகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் தொகை துரித கதியில் அதிகரித்தவண்னமுள்ளது. செயற்கை அனர்த்தங்களாலான உயிர்ப்பலி இப்போது இப்பகுதிகளில் குறைவடைந்துள்ள போதும் மறுபுறம் புற்று நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழப்போர் தொகை அதிகரித்திருப்பது பலராலும் கவலையுடன் நோக்கப்பட்டு வருகின்றது.அதிலும் பலர் சிறுவயதிலேயே இப் பாதிப்பை எதிர்கொள்வது தான் பெருஞ் சோகம்.
இப்போது இலங்கையில் இலவச புற்றுநோய்ச் சிகிச்சைக்கான பெருமளவு வசதிகளுடனான வைத்தியசாலை மகரகம பகுதியிலே அமைந்துள்ளது.தொலை தூரத்திலுள்ள இவ் வைத்தியசாலைக்கு வருகைதர அப் பகுதி மக்கள் பலத்த இடர்பாடுகளைச் சந்தித்தவண்ணமுள்ளனர்.இவற்றைத் தவிர்க்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுவர்களிற்கான புற்றுநோய் சிகிச்சைக்கென சகல வசதிகளுடனான ஒரு பிரிவினை நிறுவும் நோக்கத்திற்க்காக colours of courage trust அமைப்பினால் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் திரட்டும் பாரியதொரு முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக தேவேந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை வரையிலான 670 Km தூர பாரிய நடைப்பயணமொன்று எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு ஒத்துழைக்க இலங்கைக் கிறிக்கெற் அணித்தலைவர் டில்சான், மகெல ஜெயவர்த்தன போன்றோர் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புற்று நோய்க்கு எதிரான இப் பாரிய போராட்டத்திற்கு நீங்களும் நிதி ரீதியாகவோ அல்லது ஏனைய வழிகளிலோ பங்களிக்க விரும்பினால் விபரங்களிற்காக இங்கே சொடுக்குங்கள்
உத்தியோகபூர்வ இணயத்தள முகவரி:- Trail
twitter:- TrailSL
4 comments:
வந்துட்டேன்..... பொறுங்கோ படிக்கணும் மொதல்ல.
நன்றி சகோ அருமையான சமூக நலம் மிக்க பகிர்வுக்கு. நிச்சயம் என்னால் ஏதாவது ஒரு பங்களிப்பு செய்யவேண்டுமென நினைக்கிறேன். கடைசி இவ்விடயத்தை பலரிடமாவது கொண்டு சேர்ப்பேன்..
இன்று என் வலையில்:
உச்சக்கட்ட இன்பம்
தேவையான பதிவு. மஹேல இதை முன்னெடுத்திருப்பது குறித்து ஆங்கிலப் பத்திரிகளிலும் அறிந்தேன், மகிழ்ச்சி.
நல்ல விஷயங்களுக்கு அனைவரும் கரம் கோர்க்க வேண்டும்
நல்ல விடயம் பற்றி அறிய தந்துள்ளீர்கள்!
Post a Comment