Facebook பாவனையாளர்களின் சொந்த விடயங்களைப் பகிரங்கப்ப்டுத்துகின்றது என்ற விவாதம் உச்சக்கட்டத்தை அடைந்த தறுவாயில் , ”தனது சொந்தத் தகவல்களை சமூகவலைத்தளங்களில் தனது சொந்தக்கணனியிலேயே பேணுதல் “ என்ற கோசத்துடன்
நான்கு பல்கலை மாணவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த Diaspora. ஆனால் இதற்குக் கிடைத்த வரவேற்பு ஏதோ நான்கு பொடிப்பசங்களின் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என கவனிக்காமல் விட்டு விடக் கூடியதாயிருக்கவில்லை.ஏற்கனவே Mark Zuckerberg
இளம் வயதிலேயே Facebook ஊடாக சாதித்திருந்தமையும் ஒரு காரணமாயிருக்களாம். Diaspora வின் ஆரம்ப முன்னெடுப்புகளிற்காக 39 நாட்களில் 10000 அமெரிக்க டொலர்களைத் தன்னார்வத் தொண்டர்களிடமிருந்து இணையமூடாகத் திரட்டுவடென்ற இலக்கில் களம் இறங்கினார்கள். ஆனால் நடந்ததை அந்த நான்கு இளைஞர்களுமே எதிர்பார்த்திருப்பார்களோ தெரியாது.
வெறும் பன்னிரண்டே நாட்களில் அந்த இலக்கை அவர்களால் திரட்ட முடிந்தது.இதில் பணமிட்டவர்களில் Fred Wilson போன்ற சில பெருந்தலைகளும் அடக்கம்..அத்துடன் Diasporaவை அவர்கள் கட்டற்ற மென்பொருளாக (open source) ஆக வெளியிடவும் தீர்மானித்திருந்தார்கள்.இவை யாவும் ஒன்று சேர்ந்து உலகின் கவனம் Diasporaவின் பக்கம் திருப்பியது.
இப்போது Diasporaவை ஒரு வரையறுத்த குழுவினரிற்கு பரீட்சார்த்தமாக இவ்வாறு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.இவ் எண்ணிக்கைய தொடர்ச்சியாக அதிகரித்துப் பரீட்சித்துப் பார்க்க அவர்கள் உத்தேசித்துள்ளார்கள்.இது சம்பந்தமான அவர்களின் உத்தியோகபூர்வ அறிவிப்பைப் பார்வையிட இங்கே சொடுக்குங்கள்.
Diasporaவின் சிறப்பம்சமாக அவர்கள் aspects என்னும் வடிவத்தை அறிமுகப்படுத்துகிறார்ளாம்.இதன் மூலம் நீங்கள் சமூகவலைத்தளத்தில் பகிரும் விடயங்களை யார் யார் பார்வையிடலாம் என்பது உங்கள் பூரண கட்டுப்பாட்டிலிருக்குமாம்.நீங்கள் உங்கள் விரிவுரையாளர்களைப்பற்றி அடிக்கும் உங்கள் கருத்துக்களை விரிவுறையாளர்கள் பார்வையிடுவதையோ,உங்கள் boss மீதான கடுப்பை நீங்கள் சமூக வலைத் தளங்களில் கொட்டித்தீர்ப்பதை உங்கள் boss பார்வையிடுவதையோ நீங்கள் விரும்பமாட்டீர்கள் தானே? இதற்காக உங்கள் கடுப்புக்களையெல்லாம் கொட்டித்தீர்ப்பதற்கு இதோ நாங்கள் இருக்கிறோம் என்று Diaspora களத்தில் இறங்கினர்கள்.ஆனால் Facebook அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்திய Group முறை மூலம் இவற்றின் பெரும்பாலானவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ளலாம்..
ஏற்கனவே Facebook இராட்சத வளர்ச்சி பெற்று இன்றும் வளர்ந்தவாறே Google உடனான வர்த்தகப் போட்டியில் நேரடியாக இறங்கியுள்ள நிலையில் Diaspora மக்களை வேறொரு சமூகவலைத் தளத்தை நோக்கி இழுத்து வர என்ன செய்யப் போகிறது..? இவர்கள் மிகத் தாமதமாகிவிட்டார்கள் என ஒரு சாரார் கருத்துக் கூறுகையில், yahoo இணைய உலகில் வல்லரசாயிருக்கையில் Google எவ்வாறு அதிரடியாக புகுந்து தன்னை நிலை நிறுத்தியதோ அவ்வாறே Diasporaவால் முடியும் என இன்னொரு சாராரும் வாஅதாடுகிறார்கள்.இவர்கள் ஏற்கனவே facebbok google maps ல் பிரதான பங்காற்றிய பொறியியலாளர் உட்பட சிலரை தன்வசப்பாடுத்தியதால் கடுப்பாகியுள்ள Google Diaspora வினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து Facebookற்கு தகுந்த நெருக்கடியைக் கொடுப்பார்கள் என்று வேறு எதிர்வு கூறுகிறார்கள்..
காலம் தான் பதில் கூறும். ..
இவ் வர்த்தகப் போட்டியில் privacy மீது சமூகத் தளங்கள் அதிக அக்கறை செலுத்தப்போவது உறுதி.. எது நடந்தாலும் எங்கள் பாடு கொண்டாட்டம் தான்..
இவ் வர்த்தகப் போட்டியில் privacy மீது சமூகத் தளங்கள் அதிக அக்கறை செலுத்தப்போவது உறுதி.. எது நடந்தாலும் எங்கள் பாடு கொண்டாட்டம் தான்..
9 comments:
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
ஃஃஃஃஃகடுப்பாகியுள்ள Google Diaspora வினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து Facebookற்கு தகுந்த நெருக்கடியைக் கொடுப்பார்கள் என்று வேறு எதிர்வு கூறுகிறார்கள்..ஃஃஃஃஃ
நானும் அப்படித் தான் எதிர் பார்க்கிறேன்...
இன்னுமொரு சோஷியல் நெட்வேர்க்கினை தரமாட்டாதாம் என்று உறுதியாக கூகிள் கூறுகிறதே..
நான் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன் நண்பா..
நன்றி ம.தி. சுதா.. காலம் தான் பதில் கூறும். ..
நன்றி Kana Varo.. உங்கள் சிவபூமி பற்றிய பகிர்வு பார்த்தேன்.. பலரையும் சென்றடைய வேண்டியது...http://shayan2613.blogspot.com/2010/11/blog-post_23.html
நன்றி அஸ்பர்.. வர்த்தகப் போட்டியில் எதுவும் நடைபெறலாம்..Google,Mozilla வை ஊக்குவிப்பது போலக் கூடச் செய்யலாமே..!! எல்லா விடயங்களையும் Google அறிவித்துவிட்டுச் செய்யவேண்டிய அவசியம் இல்லையே..
ஆனால் எல்லாமே ஊகம் மட்டுமே.. காலம் தான் பதில் கூறும். ..எது நடந்தாலும் எங்கள் பாடு கொண்டாட்டம் தான்.. ;)
இவ் ஊகங்களுக்கப்பால் Facebookஇலிருந்து எவ்வாறு Diasporaவை வேறுபடுத்தித் தனித்துவமாகக் காட்டுகிறார்களோ அதிலேயே இவ் நான்கு இளைஞர்களின் வெற்றி தங்கியுள்ளது.
கணா நீயும் தனித்துவம் பேசத் தொடங்கிவிட்டாயா..!! ;) நிச்சயமாக கணா,,
Diaspora பற்றி இதுவரை கேள்விப்படவேயில்லை..பயனுள்ள தகவல்
Post a Comment