யாழ் இந்துவில் நான் ஒன்பதாம் ஆண்டு கற்றுக் கொண்டிருந்த காலம்.ஏதோவொரு நாடகப் பயிற்சியிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது..
உடனே நான் ஏதோ பெரிய நடிகன் என்றெல்லாம் முடிவு எடுத்துவிடக்கூடாது.. பாடவேளைகளில் உத்தியோகபூர்வமாக வகுப்பிலிருக்காமல்
கடத்துவதற்காக நாங்கள் தெரிவு செய்திருந்தவோர் உத்தி தான் இந்த நாடகங்களில் நடிப்பது..நாடகப் பயிற்சி முடிவடைந்தாலும் பின்னர் நாங்கள்
வகுப்பறைப் பக்கம் எட்டிப் பார்ப்பதேயில்லை என்பது வேறு விடயம்.. இவ்வாறு கிடைக்கும் இடை வேளைகளில் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்..
இந்த வேளைகளில் நாம் ஆரம்பித்தது தான் உடைந்துபோன கதிரை மேசைகளின் பலகைகளை முறித்தெடுத்து துடுப்பாகவும் டஸ்ரரை பந்தாகவும் கொண்டு கிறிக்கெற் அடிப்பது..இந்தப் போட்டிகளைக் கூட சில சமயங்களில் வாழ்வா சாவா போட்டிகளாக நாம் உத்வேகம் கொண்டு ஆடியது இப்போது நினைத்தால் சிரிப்புத் தான் வரும்.. பல சமயங்களில் புண்ணியலிங்கம் சேரிடம் சிக்கி எல்லோரும் செய்வது போல விபூதி வேட தாரியாகச் சென்று தப்பித்தது பலமுறை.. இப்படியான எங்கள் குழுவில் எல்லோரும் பாட்டுப்
பாடக் கூடியவர்கள்..அதற்கேற்ற குரல் வளமும் உடையவர்கள்..ஹிஹி..என்னைத் தவிர..இடையிடையே சினிமாப் பாடல்களைப் பாடிக் கும்மாளமடிப்பதும் நடக்கும்..
இவ்வாறான ஒரு கும்மாளத்தின்போது என் நண்பனொருவனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் சங்கர் மகாதேவன்..சந்தணத் தென்றலே பாடல் என்று நினைக்கிறேன்.அன்றிலிருந்து சங்கர் மகாதேவனின் பாடல்களைத் தேடிக் கேட்கத் தொடங்கினேன்.அவரது குரலில் அப்படி ஏதோவொரு ஈர்ப்பு இருக்கிறது.அதிலும் உச்ச வீச்செல்லை கொண்ட
கிறங்கடிக்கும் அவரது குரலும் இதற்கு ஒரு காரணமாயிருக்கலாம்.. அனுபவித்து தமிழில் பாடல்களைப் பாடும் பாடகர்களில் பிரதானமாக இவரையும் நான் குறிப்பிட்டுச் சொல்வேன்.மும்பையில் பிறந்த தமிழ் பேசும் கேரள அந்தணக் குடும்பப் பின்ணணியும் இதற்கு சங்கர் மகாதேவனிற்குத் துணை புரிந்திருக்கலாம்.
இசைப்புயல் ரகுமானின் இசையில் சங்கர் மகாதேவன் சங்கமம் பாடிய ”வராகை நதிக்கரையோரம்.. “ எனும் மெலிதான ஹிந்துஸ்தானி கலந்த கிராமியப் பாடல் மெட்டுக் கொண்ட இந்தப் பாடல் மூலம் முதல் தமிழ் இசை ரசிகர்களைத் திரும்பிப்பார்க்கச் செய்தார். ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை என்பவற்றில் இவருக்குள்ள தேர்ச்சியை இவரது பாடல்களிலே நாங்கள் இனங்கண்டு கொள்ளலாம்.
தொடர்ந்து இவரது உச்சஸ்தாயி குரலை இனங்கண்டு இசைப்புயல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வழங்கிய பாடல் தான் இல்லையென்று சொல்ல ஒருகணம் போதும்..அந்தப் பாடலில் உணர்ந்து அனுபவித்து உச்சவீச்சுக்கு இடையிடையே சென்று தமிழ் இசை ரசிகர்களை வசீகரித்தார் சங்கர் மகாதேவன்.. அந்த ஆண்டிற்கான சிறந்த பாடகரிற்கான தேசிய விருதையும் சங்கர் மகாதேவனிற்குத் தேடிக்கொடுத்தது இந்தப் பாடல்.
இசைப்புயல் தவிர யுவன் சங்கர் ராஜா சங்கர் மகாதேவனை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பாடல் தான் என் அன்பே..என் அன்பே.. இயக்குனர் அமீரின் முதல் படமான மோனம் பேசியதே திரைப்படத்திற்காக பாடிய பாடல் தான் அது..ஓ சகி .. பிரிய சகி யென வேறு வேறான வீச்செல்லைகளுடன் இந்தப் பாடலில் உருகியிருந்தார் சங்கர் மகாதேவன்.. யுவனும் அதற்கேற்ற மெலிதான வாத்திய இசைகொண்ட மெலடியாக அந்தப் பாடலை உருவாக்கியிருந்தார்.
இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் சங்கர் மகாதேவனை உபயோகித்துக் கலக்கிய பாடல் தான் சங்கரின் அந்நியன் படத்தில் இடம்பெற்ற குமாரி.. வித்தியாசமான உச்சரிப்புடன் அந்தப் பாடலைப் பாடிக் கலக்கியிருப்பார் சங்கர் மகாதேவன்..இசையமைப்பாளர் வித்தியாசாகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து திருமலை படத்திற்காகப் பாடிய நீயா பேசியது.. பாடலைக் குறிப்பிடலாம்.இவ்வாறு சங்கர் மகாதேவன் தமிழில் கலக்கிய பாடல்களைக் கூறிக்கொண்டே போகலாம். சங்கர் மகாதேவனின் உச்சஸ்தாயி குரலை நடிகர்களின் அறிமுகப் பாடல்களிற்கு உபயோகிக்கும் ஒரு பாணியே ஒரு காலத்தில் தமிழ் சினிமாவிலிருந்தது.
இன்று பல ஹிந்தித் திரைப்படங்களிற்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் சங்கர் மகாதேவன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய படம் தான் கமலின் ஆளவந்தான்..துரதிஸ்டவசமாக அந்தப் படத்தின் தோல்வி அவரை தமிழில் இசையமைப்பாளராகத் தொடர அனுமதிக்கவில்லைப் போலும்...
2010இல் சங்கர் மகாதேவன் அக்கடமி எனும் பெயரில் சங்கீத அக்கடமியை ஆரம்பித்து ஹிந்துஸ்தானி, கர்நாடக இசைப் பயிற்சி உட்பட திரையிசைப்பாடலிற்கன பயிற்சியை வழங்கி வருகிறார்.சங்கர் மகாதேவனின் பிரபல அல்பம் Breathless..அதிலே முழுமையான பாடலையே மூச்சுவிடாமல் பாடுவதுபோன்று ஒலிச்சேர்க்கை சேர்த்திருந்தார்கள் .
அந்தப் பாடல் இங்கே கேட்கலாம்..
12 comments:
I like him very well. Reasons are really same
அந்நியன் படத்தில் வரும் 'ஐயங்காரு வீட்டு அழகே' பாடலைப் பாடியவர் ஹரிஹரன். அப்படத்தில் வரும் 'குமாரி என் காதல்' பாடலைத்தான் சங்கர் மகாதேவன் வித்தியாசமான குரலில் பாடியிருப்பார்..
நன்றி ராஜா..சரி செய்துவிட்டேன்
அருமையான ரசனையுடன் ரசித்துள்ளீர்கள் அருமைங்க..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)
சங்கர் மகாதேவன் பற்றிய அருமையான அலசல் நண்பா
சங்கமம், நிலவே முகம் காட்டு ரெண்டு படமுமே 1999ல வந்த படங்கள். இதுல நிலவே முகம் காட்டு படத்துல, ”சிட்டு பறக்குது குத்தாலத்தில்”னு ஒரு பாட்டை பாடிருப்பாரு.. அந்த பாடலும் சூப்பரா இருக்கும். ராஜா மியூசிக்.. இந்த ரெண்டு பாட்டுல, எதை முதல்ல ரெக்கார்ட் பண்ணாங்கன்னு தெரியலை..
//பாடவேளைகளில் உத்தியோகபூர்வமாக வகுப்பிலிருக்காமல்
கடத்துவதற்காக நாங்கள் தெரிவு செய்திருந்தவோர் உத்தி தான் இந்த நாடகங்களில் நடிப்பது.//
சேம் ப்ளட் ;)
//உச்ச வீச்செல்லை கொண்ட
கிறங்கடிக்கும் அவரது குரலும் //
அத்துடன் அவரது தெளிவான தமிழ் உச்சரிப்பும் கூட..
//இசைப்புயல் ரகுமானால் தமிழ் திரையிசை உலகிற்கு சங்கர் மகாதேவன் சங்கமம் திரைப்படத்தில் அறிமுகப் படுத்தப்பட்டார்//
தவறு.. அதற்கு முதலே வீ.ஐ.பீ திரைப்படத்தில் நேற்று நோ பாடி விட்டார்.. இசையமைப்பாளர் - ரஞ்சித் பரோட்.. அத்துடன் மின்சாரக் கனவிலும் ஒரு பிட் பாடல் பாடியுள்ளார்.
அருமையான பாடல்..
ஷங்கர் (இஷான்-லாய்) அருமையான இசையமைப்பாளரும் கூட.. இப்போது ஹிந்தியில் கலக்குகிறார்கள்.
சூப்பரா ரசித்துள்ளீர்கள்...
எனக்கு அந்தோனியார் திரைப்படத்தில் இடம் பெற்ற நிலா ஒன்று கண்டேன் பாடல் மிகவும் கவர்ந்தது..
@சதீஷ்,ஜனகன்.. சேம் பிளட் ;)
@ம.தி சுதா, மதுரன்
நன்றி ..வருகைக்கும் கருத்திற்கும்
@கா.கி
லோசன் அண்ணா கூறியதுபோல் 1997லிலேயே வி.ஐ.பி படத்தில் சங்கர் மகாதேவன் தமிழில் பாடியுள்ளார்.
@லோசன்
பாடங்கடத்தியோர் கூட்டணிக்கு வெல்கம் லோசன் அண்னா.. ;-)
வி.ஐ.பி படத்தில் சங்கர் மகாதேவன் பாடியது பற்றி நான் முதலில் அறிந்திருக்கவில்லை.இப்போது சரி செய்துவிட்டேன்.சுட்டிக் காட்டியதுக்கு நன்றி லோசன் அண்ணா.
Post a Comment