கடந்த மாதம் முதலாம் திகதி தேவேந்திர முனையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட "பாதை" எனப் பெயரிடப்பட்ட பிரமாண்ட நடைபயணம் இருபத்தேழாம் திகதி பருத்தித்துறை முனையை வந்தடைந்தது.
குறைந்தது இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதன் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை உருவாக்குவதே நடைபயணத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. ஆனாலும் ஏறக்குறைய 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையே அவர்களால் இதுவரை திரட்ட முடிந்துள்ளது. எனவே, உரிய இலக்கினை அடைவதற்காக மேலும் நன்கொடைகள் எதிபார்க்கப்படுகிறன. இறுதி நாளன்று இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மஹேல ஜெயவர்தன அவர்களால் தெல்லிப்பளையில் புதிய கட்டடத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது.
- இது தொடர்பான மேலதிக விபரங்களையும், நன்கொடை வழங்குவதற்கான அறிவுறுத்தல்களையும் பெறுவதற்கு இங்கே சொடுக்குங்கள்.
- இது பற்றிய எனது முன்னைய பதிவிற்கு இங்கே சொடுக்குங்கள்.
- உத்தியோகபூர்வ இணைய முகவரி .www.trailsl.com
1 comments:
தேவையான நல்ல பதிவு சகோ..
என்னாலான பங்களிப்பை செய்திருக்கிறேன்..
தொடர்ந்து எம் காலத்தின் கட்டாயக் கடமையை நாம் அனைவருமே செய்ய வேண்டும்
Post a Comment