உண்மையிலேயே நாமெல்லாம் எமக்கு அருகில், எம்மைச் சூழ எம்மையெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கின்ற விடயங்களைப் பற்றியெல்லாம் அடிப்படையிலிருந்து அறிந்து வைத்திருக்கின்றோமா என்பதில் எனக்கு நீண்டகாலமாகவே ஒரு சந்தேகம்.
முதலில் இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள்.அவர்களது விடைகளையும் கருத்துக்களையும் அவதானமாகக் கவனியுங்கள்..
சிரிப்பை அடக்கமுடியாதவர்கள் நன்றாகவே சிரித்துவிட்டு விடயத்திற்கு வாருங்கள்.
எங்களில் பலரும் இப்படியானவர்களாக இருப்பது மறுக்க முடியாத உண்மையே.
Facebook ல் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முற்பட்டுத் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுபவர்கள் பலரை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து எங்கள் நண்பர் குழுவிடையே வழமை போலவே ஆரம்பித்த விவாதமொன்று நீண்டு ..வழமை போலவே முடிவேதும் இல்லாமல் முடிவடைந்துவிட்டது.
- எதற்கெடுத்தாலும் தங்கள் கருத்தைக் குறிப்பிடுபவர்கள் இருக்கிறார்களே. அவர்கள் எத்தனை சதவீதமானவர்கள் விடயத்தின் ஆழத்தை புரிந்து கருத்துத் தெரிவிக்கிறார்கள்..? ?
- உண்மையிலேயே எல்லா விடயத்திலும் ஒருவனிற்கு சொந்தக் கருத்து இருக்க வேண்டுமா..?? சில விடயங்களில் தனக்கென சொந்தக்கருத்தெதுவும் இல்லாமல் இருப்பதில் தவறேதுமிருக்கிறதா..??
- மாற்றுக் கருத்து..மாற்றுக் கருத்து என்கிறார்களே.. அப்படி மாற்றுக் கருத்துக் கூறுபவர்களில் ஏறக்குறைய சகலருமே ஏன் எல்லாக்கருத்துக்குமே மாற்றுக் கருத்துக் கூறுகிறார்கள்..??
- எது கருத்து ..??எது மாற்றுக்கருத்து..?? அநேகமானவர்கள் தெரிவிப்பதற்கு மாறாகத் தெரிவிப்பது தானா மாற்றுக்கருத்து..?? ;-)
யாரது..??இப்பவே கண்ணைக் கட்டுதே என்பது..
சரி சரி .. பிழைத்துப் போங்கள்.
2 comments:
நல்ல பதிவு! U வில் தொடங்கும் நாடு அருமை. நாட்டுப்பற்று தெரிகிறது .....
இப்பவே இந்த ராத்திரி நேரம் இத பாக்க வந்தான் பாருங்கோ..என்னைய சொல்லணும் ஹிஹி
ம்ம் நல்ல கருத்து தான்...இத நீங்க போட முதல் நீங்க ரூம் போட்டு ஜோசிச்சனீன்களோ???ஹிஹிஹி டவுட்டு!
Post a Comment