ராஜ் ராஜரட்ணம்..
அண்மைக்காலமாக ஊடகங்களில் அதிகம் உபயோகிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று.
Gallean Group இன் நிறுவுனர்..
இலங்கையில் பிறந்து நியூஜோர்க்கில் வாழ்ந்தவொரு தமிழர் ...
பங்குச் சந்தை வியாபாரத்தின் மூலம் அமெரிக்காவின் முன்ணணி பணக்காரர்களில் ஒருவராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்....
87 000 அமெரிக்க டொலர்களை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்திற்காக வழங்கியவர்.ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை முன்ணாள் போராளிகளின் புனர்வாழ்விற்காக ஒதுக்க முன்வந்தவர்.இலங்கையில் 2004 சுனாமி அன்ர்த்தத்தின் பின்னான புனருத்தாரண பணிகளிற்கு உதவியதோடு மட்டுமல்லாமல் மிதிவெடியகற்றும் பணிகளிற்குப் பெருமளவில் உதவியவர்..
ஒக்ரோப்ர் 2009 காலப்பகுதியில் FBI யினால் இரகசியமான முறையில் IBM போன்ற பல்வேறு பிரபல பொதுக் கம்ம்பனிகளிலுள்ள தனது நண்பர்கள் அல்லது கைக்கூலிகள் மூலம் அக் கம்பனிகளின் சாதாரண வெளி நபர்களிற்குத் தெரியாத பெறுமதியான உள்வீட்டு தகவல்களைப் பெற்று அதற்கேற்ப பங்குச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் இலாபமீட்டினார் என்று குற்றச்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியேவந்து தன் மீதன குற்றச்சாட்டிலிருந்து வெளிவரக் கடுமையாகப் போராடினார் ராஜ்.
இந்த மாதம் 11ந் திகதியளவில் அவருக்கெதிராக 14 குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் ராஜ்ஜிற்கு தனது எங்சிய வாழ்நாளை சிறையில் கழிக்கவேண்டிய அபாயம் நேர்ந்துள்ளது.இந்த 14 குற்றச் சாட்டுக்களில் 9 குற்றச்சாட்டுக்கள் சட்டவிரோத உள்வியாபாரத்திற்காகவும் எஞ்சிய 5 குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்ட சதி என்றமுறையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன.எது எவ்வறாயினும் ராஜ்ஜின் சட்டத்தரணி இதனை எதிர்த்து மேன் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் அமெரிக்கப் பொதுமக்களில் ஒரு சாரார் வியாபாரப் போட்டி காரணமாக பல பெரும் முதலைகள் இணைந்து ராஜ்ஜை சிக்கவைத்து விட்டது எனவும் மறுபுறம் சட்டம் அனைவருக்கும் சமம் என்பது அமெரிக்காவில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது என பெருமளவானவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
ராஜ் மீதான வழக்கு விசாரனை, குற்றச்சாட்டுக்கள் பற்றி இணையத்தில் தேடியபோது அவர் சிக்கியது எவ்வாறு என பல சுவாரசியமான தகவல்கள் கிட்டின. அவற்றைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.
4 comments:
நல்ல தகவல்களுக்கு நன்றி! எனக்கு சில விடயங்கள் புதிதாக இருந்தன
தகவலுக்கு நன்றி
அடடா..இம்புட்டு விடயங்கள் நடந்திருக்கா? லிங்குக்கு நன்றி...
/////ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை முன்ணாள் போராளிகளின் புனர்வாழ்விற்காக ஒதுக்க முன்வந்தவர்////
இந்த ஒரு விடயத்தக்காகவே அவருக்காக நான் வாதிடுவேன் நியத்தை உணர்ந்த உண்மைத் தமிழன் அவன்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)
Post a Comment