Pages

Subscribe Twitter Twitter

Monday, May 16, 2011









பேசும் படம் - Hotel Rwanda


வெசாக் விடுமுறையில் யாழ் வந்து என் நெருங்கிய நண்பனொருவனில் வீட்டில் இராப் பொழுதொன்றைக் கழிக்கையில் தற்செயலாக நாங்கள் பார்த்த திரைப்படம் Hotel Rwanda.. .2005ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் படம் வெளியாகியிருந்தாலும் இப்போது தான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது.உங்களில் பலர் ஏற்கனவே பார்த்துமிருக்கக்கூடும்.1990 களின் நடுப்பகுதியில் Rwanda வில் நடைபெற்ற ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்களைக் காவு கொண்ட ஓர் பெரும் இனவழிப்பின்போதான ஓர் உண்மைக் கதையைப் படமாக்கியிருக்கிறார்கள்.

Paul Rusesabagina எனும் ஹோட்டல் முகாமையாளர் ஒருவரது உண்மைக் கதை தான் இது..றுவண்டாவை Belgium  கைப்பற்றி ஆட்சி செய்லையில்  நிர்வாக வசதிகளிற்காக  Tutsi இன மக்களினை முதன்மைப் படுத்திவிட்டு பின்னர் ருவண்டாவைவிட்டு வெளியேறுகையில் பெரும்பான்மை  Hutu மக்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டுச் செல்கிறது . ருவண்டாவில் வாழ்ந்த Tutsi மற்றும் Hutu இன மக்களிடையே ஏற்படு(த்தப்படு)ம்  கலவரம் எவ்வாறு இனவழிப்பாக மாற்றப்படுகின்றது..Paul Rusesabagina தனது குடும்பத்தையும் அவரது ஹொட்டலில் சரணடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதற்கான ஒரு சாதாரண மனிதனின் அபரிமிதமான போராட்டம் தான் படத்தின் கதை..

கதையினிடையே கலவரங்களைத் தூண்டும் பெருச்சாளிகளின் நிஜ முகங்கள், உசுப்பேத்தல்கள்.. ஐ.நா வின் மீட்பு நடவடிக்கையிலுள்ள ஓட்டைகள்.. மேல் நாட்டவர்களின்(western people)  தங்கள் நலனின் மீதான அதீத அக்கறையும் ஆபிரிக்க மக்கள் மீதான இளக்காரம்..சில நல்ல மனிதர்களின் கையறு நிலமை,ஆற்றாமை, இனவழிப்பு, போர்க் குற்றம் ,ஐ.நா என ஏதேதோ எனப் பல பேசப்படா உண்மைகளைப் படம் பேசிச் செல்கின்றது..

முடிந்தால் Hotel Rwanda வை ஒருமுறை பாருங்கள்..படம் பே(சா/சமுடியா)ப் பொருளை பேசத்துணிந்திருக்கின்றது.


1 comments:

நிரூஜா said...

பல வருடங்களுக்கு முன் பாத்திருக்கிறேன். நல்ல படம் ம்ஹ்..!