Pages

Subscribe Twitter Twitter

Saturday, August 20, 2011









இலங்கை அணி.. கவனஞ் செலுத்த வேண்டியவை..


 இன்று இடம்பெற்ற தொடரைத் தீர்மானிக்கும் முக்கிய கிறிக்கெற் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவி இந்திய அணிக்கு தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்து இந்திய அணி விசிறிகளை சீண்டிய எங்களைப் போன்றவர்களிற்கு எல்லாம் மரண அடி வாங்கித் தந்துள்ளது. அடுத்த போட்டியிலாவது இலங்கை அணி வென்று மீண்டு எங்களைப் போன்றவர்களை பழையபடி சீண்டிப்பார்க்கும் போமிற்கு திரும்பச் செய்யுமோ என் நாமே குப்புறப் படுத்துச் சிந்தித்திருந்த வேளையில் கிறிக்கெற் பதிவெழுதாத நீயெல்லாம் ஒரு பதிவரா என நண்பனொருவன் வெந்த புண்ணில் வேல் பாச்சிவிட்டான்.


இலங்கை அணிக்கு ஆலோசனைகளை வழங்கி அணியை அடுத்த போட்டியிலாவது வெல்லச் செய்ய எதற்கும் சளைக்காமல் இலங்கை அணிக்காக வாதாடும் அமரேசைத் தொடர்பு கொள்வோமென்று பார்த்தால் அவர் தொடர்பு வலையமைப்புக்கு இப்பாலோ அப்பாலோ சென்றுவிட்டதால் ..இதோ நானே களத்தில் இறங்கி விட்டேன். இதோ எனது ஆலோசனைகள்.

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் இப்போதெல்லாம் தடுமாறுவதால் இன்னும் இரண்டு துடுப்பாட்ட வீரர்களை அணியிலிருந்து தூக்கிவிட்டு பந்துவீச்சாளர்கள் இருவரை அணியில் இணைக்கலாம்.தொடரை ஏற்கனவே இழந்து விட்டதால் அடுத்த போட்டியில் உலகில் மிக நீண்ட வால் (அது தாங்க tail end) கொண்ட அணியென்ற கிண்ணஸ் சாதனையை இலக்கு வைத்து பத்துப் பந்து வீச்சாளர்களும் ஒரு விக்கெட் காப்பாளருமாக ஒரு அணியைத் தெரிவு செய்யலாம். முடிந்தால் இந்திய அணித் தலைவர் டோணி போலப் பகுதி நேரமாகப் பந்து வீசக்கூடிய விக்கெட் காப்பாளர் ஒருவரை இணைப்பது அணிக்கு மேலும் வலுச் சேர்த்து சாதனையை மேலும் வலுவாக்கும்.

எத்தனை முழுநேரப் பந்து வீச்சாளர்கள் அணியிலிருந்தாலும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு தான் ஆரம்ப பந்துப் பரிமாற்றங்களை வீசி முடிக்கவேண்டும். முடிந்தால் லசித் மலிங்கவிற்கு ஓவரே கொடுக்காமல் அதனையும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு வீசி முடிக்கச் செய்யலாம்.

எப்போதோ ஒரு உலகக் கிண்ணத் தொடரில் சில ஐம்பதுகளை அடித்ததோடு மட்டுமல்லாமல் அணி தோற்கும் போதெல்லாம் ஐம்பது அடித்து சாதனை படைக்கும் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சாமர சில்வாவை தலைவராக நியமித்துப் அணியைத் தூக்கி நிறுத்துவதோடு மைந்தன் சிவா போன்ற விமர்சகர்களிற்குத் தகுந்த பதிலடி கொடுக்கலாம். அதுவும் அவரைத் துடுப்பாட்ட வீரராகவே கணிக்க முடியாது எனக் கருத்துக் கூறும் கன்கோன் போன்றவர்களை 4 துடுப்பாளர்+5 பந்து வீச்சாளர் + அணித்தலைவர் எனக் கருத்துக் கூறச் செய்யலாம். 

எல்லாவற்றிற்கும் மேலாக ”சுழற்றக் காத்திருக்கும் இலங்கை ” எனப் போட்டி தொடங்க முதலே ஆரூடம் கூறி எவ்வளவு அடி வாங்கினாலும் சளைக்காத எங்கள் விக்கிரமாதித்தன் லோசன் அண்ணாவின் வலைப்பூவை இலங்கை தொடர்பான போட்டித் தொடர்கள் ஆரம்பிக்க முதலே ஏதாவது தொழினுட்ப முறைகளைக் கையாண்டு உத்தியோகப்பற்றற்ற முறையிலே முடக்க வேண்டும். 

7 தடவை துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கப் போய் சகல தடவையும் இலங்கை அணியைத் தோற்கடிக்கச் செய்த அஷ்வின் போன்றவர்களையெல்லாம் ஏதாவது தடைச்சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டு அடுத்த போட்டிக்கு மைதானப் பக்கமே வரவிடாமல் செய்து இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 

யாரது..?? எனது பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சொல்லி மகஜர் தாயாரிப்பது..!!
பி.கு: யாவும் கலப்படமற்ற கற்பனை


7 comments:

Unknown said...

அம்புட்டு போரையும் தூக்கி உள்ள போட்டா இலங்கை அடுத்த போட்டியில வென்றிடுமோ?ஹிஹி

Prapa said...

இந்த கிரீஸ் மனிதன், தார் மனிதன் எல்லாம் இந்த பதிவரை காணலையோ ? நாங்களே நொந்து நூலாகி போய் கிடக்குறம், நீங்க வேற .. போதுமையா..!!!
எவ்வளவு காலத்துக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது..

ARV Loshan said...

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...

தோல்வியா?
நேற்று போட்டி நடந்ததா?

ARV Loshan said...

சாமர சில்வா, மத்தியூஸ், டில்ஷான், மென்டிஸ் வகையறாக்களைத் தாக்குறதை விட்டிட்டு எங்களை மாதிரி அப்பாவி சிகாமநிகளைத் தாக்கிறது கொஞ்சமும் நல்லா இல்லை யுவர் ஆனர்..

ஆனாலும் இந்தியா ஐந்நூறு அறுநூறு ஓட்டங்களைக் குடுத்த நேரத்தில் நாங்க கொஞ்சமாத் தானே குடுத்தோம்..
அப்பிடின்னு சொல்லி ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியது தான்..

டெஸ்ட் போட்டிகளில் பார்த்துக்கொள்வோம் ;)

Ashwin-WIN said...

ஹி ஹி ஹி..... சாமர சில்வா தலைவரா..... அப்போ மறுபடியும் நான் மாட்ச் பாக்க வருவன்... ஏழு முறை தோத்தாலும் எட்டாவது முறையும் மாட்ச் பாக்க வருவன்.. அப்பவாவது வெல்லாதா நம்ம டீம்..

கார்த்தி said...

நீங்க உருப்படவே மாட்டீங்க!! டெஸ்டில ஒரு போட்டியில வெல்லுறதே கஸ்டம் அதுக்குள்ள seriesஆ ஐயோ உங்கட அலப்பறை தாங்கல சார்!!
சாமரா சில்வா உங்களுக்கெல்லாம் அல்வா தந்துட்டாரே ஹிஹிஹி

அமரேஷ் said...

எல இதென்ன நியாயம்.எலெ நீ தானே அண்டைக்கு கிணத்த காணேல்லை எண்டு கம்ப்ளெயின் குடுக்க வந்தவன்

என்னத்த ஐயா சொல்லுறது.இப்பதான் அதள பாதாளம் வரை ரெயில் ஓடர் நீண்டிருக்கு.இந்தியாவையே வெல்லக்கூடிய ரீம் எண்டு நினக்க...நாசமாய்ப்ப்போனதுகள் ......

இனி இப்புட்டு பயபுள்ளயளயும் என்னட்ட கோச்சிங்குக்கு அனுப்புங்க..முதல்ல மத்யூஸ 4 நாளக்கு கக்கூசுக்க வச்சு பூட்டி பொறுமை கத்துக்குடுக்கணூம்.....