Pages

Subscribe Twitter Twitter
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, January 3, 2012









நான்.. விவாதம்.. TinTin..


அது.. முகமூடி மாயாவி எங்கள் கல்லூரி வகுப்பறைகளில் பிரபலமாயிருந்த காலம்..நாமெல்லாம் சுழற்சி முறையில் நம்மிடையே இருந்த ராணி காமிக்ஸ்களை ஒருவர் மாறி ஒருவர் பகிர்ந்து வாசித்துக் கொண்டிருந்தோம்..இதனை ஒரு வகையான பண்டமாற்று என்றே கூறலாம்.. 
சில காமிக்ஸ்கள் சுழற்சி முறையில் நம்மை வந்தடைய வாரக் கணக்கில்கூட காத்திருக்க வேண்டி இருக்கும்.இப்படி நம்ம பசங்களெள்லாம் முகமூடி மாயவி மீது வெறிகொண்டலைந்தபோது திடீரென மாணவ முதல்வர்கள் இதனை வாசிக்கக்கூடாதெனக் கூறி பெருமளவு புத்தகங்களை நண்பர்களிடமிருந்து அள்ளிச் சென்றது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.. ஏன்  வாசிக்கக் கூடாதெனக்கூறினார்கள் என்பதை இன்றுவரை குப்புறப் படுத்திருந்து யோசித்துப்பார்த்தாலும் எந்தக் காரணமும் புரிகிறதில்லை.பின்னர் சிலகாலம் அதனை மறைத்து வைத்து இரகசியமாக வாசித்து வந்தாலும் பழைய வெறித்தனம்.. நாட்டம் அதில் தொடரவில்லை..



பின்னர்..  எமது கல்லுரியில் விவாதம் கொடிகட்டிப்பறந்த காலம்..குமாரசுவாமி மண்டபத்தில் முன்னால் நிலத்தி உட்கார்ந்தபடி அனல் பறக்கும் விவாதங்களிற்கு கைதட்டி குதூகலித்திருந்தபோது.. நாமளும் விவாதத்தில் இறங்கினால் என்ன என ஒரு விபரீதமான நப்பாசை பிறந்தது. (எவண்டா அது பாடம் கடத்த காயாளும் உபாயங்களில் ஒன்றாகவே இவற்றிலெல்லாம்  நமக்கு நாட்டம் வந்தது எண்டு அரசாங்க ரகசியங்களைப் போட்டு உடைப்பது..). ஒரு வழியாய் முட்டிமோதி நம்மளையும் விவாத அணியிலே நம்மளையும் நம்பி இறக்கிவிட்டர்கள்.


நாமளும் ஒரு மாதிரி சமுதாய நலன் அது இதென்று விவாதங்களில் ஏதோ புகுந்து கலக்கிய/கலாய்த்துக்கொண்டிருந்தபோதுதான் நிகழ்ந்தது அந்தவிபரீதம்.ஒரு நாள் இலக்கியத் தலையங்கம்.. நமக்குத்தான் பாடப்புத்தகத்திலுள்ள தமிழ் இலக்கியம் தெரிகிறதே பெரிய விசயம்..  என்ன செய்வதென்றே தெரியவில்லை. நம்ம அணியிலே முதலில் பேசிற இரண்டு பேருமே இலக்கியம் தெரிந்தவங்கள் எண்டதால ஏதோ நமக்குத் தெரிந்த கோயில்களில் சிறுவயதில் பிரசங்கங்களில் கேட்டதெல்லாம் சேர்த்து.. அதோட எப்பவும் குறைகண்டு பிடிக்கிறதில வல்லவன் எண்டிறதாலயோ என்னமோ மூண்டாவதாய் என்னை இறக்கிறவங்கள்.. ஆக எதிரணியிலே அளவுக்கதிகமாகக் குறைகண்டுபிடித்தும், ஒரு மாதிரி எனக்கு தமிழ் இலக்கியமெல்லாம் தெரியாதெண்டிற இரகசியம் வெளியில தெரியாமல் சமாளித்து ஒருமாதிரி வென்றுவிட்டோம்..ஆனா நம்ம நடுவப் பெருந்தகை  இலக்கியக்கருத்துகளுக்கு அப்பால் வெட்டியாடி ஒரு மாதிரி வென்றுவிட்டீங்கள் என்று நம்ம குட்டை தனிப்பட்ட ரீதியில் உரையாடும் போது போட்டு உடைத்துவிட்டார்..இதனால் வீறுகொண்டெழிந்த நாம் தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடிப்பதென்று முடிவெடுத்து நம்ம கல்லூரி நூலகத்தைத் துழைத்தெடுக்க ஆரம்பித்தோம். சிவகாமியின் சபதம், கடல்புறா என்று நம்மட இலக்கியப்பயணம்(?) சென்றுகொண்டிருக்கையில்தான் எமது நூலகத்திற்கு எதோ வெளிநாட்டுப் பழையமாணவர் சங்கத்தின் அன்பளிப்பு என்று பெருந்தொகையான ஆங்கிலப் புத்தகங்கள் வந்து சேர்ந்தது.

நாம தான் ஆங்கிலக் கதைப்புத்தகங்களின்ர பக்கமே தலை வைச்சுப் படுக்கிறதேயில்லையே..ஆனாலும் நம்ம பசங்க சிலபேர் கலர்கலராய் படங்களோட நம்ம முகமூடி மாயாவி போல புத்தகம் வாசிக்கிறத கண்டபோது ஆர்வமேலீட்டால் வாங்கிப்  படம் பார்த்து..சிறிது சிறிதாய்.. என்ர ஆங்கிலப் புத்தகம் வாசிக்கிறதில்ல எண்டிற சபத்தத்தையே முறியடிக்கச் செய்தது தான் அந்த TinTIn..
சிறிதுகாலம் நம்ம பசங்களை வெறி கொண்டலையச் செய்தது அந்தக் பல வர்ண TinTin புத்தகங்கள்..மழைக்கும் நூலகப்பக்கம் ஒதுங்காத நம்ம பசங்கள் சிலரை நூலக அங்கத்துவம் பெறச்செய்யும் அளவிற்கு நீண்டிருந்தது இந்த TinTIn வெறி.இந்தப் புத்தகங்களை எடுப்பதற்கு பலரும் முண்டையடிக்கவே ..இறுதியாக சுழற்சிமுறையிலே இந்த புத்தகங்கள் வெளியில் செல்ல்லாமல் வாசிப்பதாக முடிவெடுத்து செயலில் இறங்கினோம். அதிலும் சில குழறுபடிகள் ஏற்படவே TinTIn சில புத்தகங்களை எடுத்து வேறுஅலுமாரிகளில் யாரும் எடுத்துவிடாதவாறு ஒழித்துவைக்கத் தீர்மானித்தோம்.இதற்காக நாம் தெரிவுசெய்தது தமிழ் இலக்கியப் புத்தகங்கள் வைக்கும் அலுமாரியைத்தான்.. இப்போது நினைத்தாலும் இந்தச் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள் சிரிப்பைத்தான் வரச் செய்கிறது..

பின்னர் செங்கையாழியான், சுஜாதா என எமது ரசனை திரும்பிவிட்டது. அந்த ரசனை இப்போது இணையத்தில் ஏதாவது வாசித்தால் சரி அது தவிர எந்த புத்தகத்தையுமே வாசிப்பதில்லை என ஒடுங்கிவிட்டது.

TinTin வருகையோடு நான் கடற்புறா நாவலை இறுதிப் பாகத்தை வாசிக்காமலே விட்டுவிட்டேன் என்பது ஞாபகத்திற்கு வருகிறது..வாசிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அநேகமாக கதை மறந்தே போய்விட்டதால் முதலில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.. ஆனால் என் இயல்பான சோம்பலைக் கடந்து நானாவது அந்த புத்தகத்தையெல்லாம் தேடியெடுத்து எல்லாப் பாகத்தையும் வாசிப்பதாவது என என் உள்மனம் சிரிக்கிறது. அநேகமாக என் உள்மனம் ஜெயித்துவிடும் போலத்தான் எனக்கும் தோன்றுகின்றது. ;-)


Saturday, April 9, 2011









காலக் கண்ணாடி.. 90களில் யாழ்ப்பாணம்..

அண்மையில் GroundViews இணையத் தளத்தை மேய்ந்து கொண்டிருக்கையில் காணக்கிடைத்த காணொளி..90களில் நான் சிறுவனாயிருந்தபோதும்..இப்போதும் நன்கு நினைவிருக்கின்றது..பொருளாதாரத் தடைகளின் மத்தியில் எமது மக்கள் அன்றாட வாழ்க்கைக்காகப் போட்ட நெருப்பாற்று நீச்சல்..

  • சவர்க்காரத்துக்குப் பதிலாக பனம்பழத்தைப் பாவித்து உடுப்புத் துவைத்தது..
  • ஜாம் போத்தலிலில் விளக்குச் செய்து மண்ணெண்ணெயை உச்சமாகப் பாவித்து குப்பி விளக்கில் படித்தது..
  • வானொலியில் செய்தி கேட்பதற்காக சைக்கிள் (அப்போதைய எங்கள் தேசிய வாகனம்) மிதித்து   தைனமோ சுழற்றியது...

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்..

இவ்வாறாக இப்போதெல்லாம் பேச மறந்தே போய்விட்ட  எமது வாழ்க்கையின் ஒர் காலத்தைப் பேச முயல்கிறது கண்ணன் அருணாசலத்தின் இந்தக் காணொளி..


Kerosene from Kannan Arunasalam on Vimeo.

நன்றி..
GroundView, mooving ImagesKannan Arunasalam


Thursday, January 6, 2011









இணையத்தின் மீதான நம்பிக்கை இழக்கப்படுகிறதா..??

அண்மையில் நண்பன்  ஒருவனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது உலகமே தனது சகல தேவைகளையும் இணையத்தினூடே வீட்டிலிருந்தவாறே நிறைவேற்றுமளவிற்கு  வந்துவிட்டது.நம்மூரெல்லாம் எப்போது அந்த நிலைக்கு வரப்போகின்றது என அதிகமாகவே ஆதங்கப்பட்டான்.அவன் சொல்வதற்கு மாறாக என் கருத்தைத் தெரிவித்து வழமையாகவே விவாதத்தை ஆரம்பித்துவைப்பேன் (அது தான் என் கருத்தாய் இருந்தால் கூட..) இன்றும் அவ்வாறு தான்... இணையம் ஒன்றும் நில்லையானதும் உறுதியானதுமான நிலையை அடைந்துவிடவில்லை..அதுவும் நம் நாட்டில் இன்னும் அதிகமாகவே..ஆகவே அத்தியாவசிய தேவைகள் எல்லாவற்றையும் நாங்கள் முழுமையாக இணையத்திலேற்றிவிட்டால் அது சிக்கலில்தான் முடியும் என .ஆரம்பித்தேன் என் (கு)தர்க்கத்தை ..அண்மையில்த் தான் வலையில் 2010ல் இணையத் திலேற்பட்ட பிரதான சம்பவங்களையெல்லாம்  தொகுத்திருந்த ஒரு கட்டுரையை வாசித்திருந்தேன்.எல்லாவற்றையும் இழுத்து அவனை உண்டு இல்லை என்றாக்கிவிட்டேன்.நீண்ட காலத்தின் பின் அவனை மடக்கிவிட்ட திருப்தி எனக்கு..கடந்தவருடத்தில் இணையத்திலியங்கும் நிறுவனங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை இப்போது பார்ப்போம்.



ஏதாவதொரு விடயம் பற்றி அறிவதாயிருந்தால் நாம் உடனே இணையத்தில் அணுகுவது Wikipeediaவைத் தான்.கடந்த பங்குனி மாதமளவில் Wikipeedia சில மணி நேரம் செயலிழந்திருந்தது.Googleஇன் தரவுகளின்படி நாளுக்கு 50 மில்லியனிற்கு மேற்பட்ட வாசகர் வரவு கொண்டது  Wikipeedia . ஆகவே Wikipeedia யாரது கண்ணிலும் படாமல் தனது செயலிழப்பைச் (சில நிமிடங்களாயிருந்தால் கூட) சீர்செய்வது சாத்தியப்படாது . Wikimediaவின்  UKயிலுள்ள தகவல்வழங்கி மிகைசூடாகி ;) (over heated) செயற்பாட்டை நிறுத்தியதைத் தொடர்ந்து வரிசையாக சில செயலிழப்புகள் ஏற்பட்டது தான் இப் பிரச்சினைக்குக் காரணமானது.சில மணிநேரத்தில் இப் பிரச்சினையை அவர்கள் சீர் செய்து விட்டார்கள்.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

நம்மில் பலர்  Wordpress இனை பதிவிடுவதற்கு உபயோகிக்கிறோம்.10மில்லியனிற்கு மேலான பதிவுகள் wordpress மூலமாக இடப்படுகின்றன.Techcrunch போன்ற பல பிரபல பதிவு நிறுவனங்கள் கூட Wordpressஐத் தான் உபயோகிக்கின்றன.கடந்த வருட ஆரம்பத்தில் Wordpress (மாசி மாதமளவில்) இரு மணி நேரத்திற்கு மேலாக சில வலையமைப்பு பிரச்சினைகளால் செயலிழந்திருந்தது.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

Googleஇன் பிரபல மின்னஞ்சல் சேவையான Gmail கடந்த வருடம் மாசி,பங்குனி,புரட்டாதி மாதங்களில் சில சிக்கல்களை எதிர்கொண்டது.ஆயினும் Gmail நிறுவனத்தினர்  இச் சிக்கல்களால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெருமளவு பாவனையாளர்களும் பாதிக்கப்படாமல் தவிர்த்துக்கொண்டனர்.எனினும் குறித்ததொகையிலான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனராயினும் Google என வருகையில் இது பெருமளவு கவனத்தைப் பல மட்டங்களிலும் ஈர்ப்பது தவிர்க்கமுடியாதது.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

சீனா கடந்த சித்திரை மாதத்தில் 18 நிமிடங்களிற்கு உலகளாவிய இணைய உபயோகத்தின் 15% சதவீத நெரிசலை வலிந்து China Telecom ஊடாக நகர்த்தியிருந்தது.வழமையாக இந்த அளவிலான நெரிசலை சமாளிக்க முடியாமல் செயலிகள் செயலிழந்துவிடும்.ஆனால் China Telecom இதனை திறமையாகக் கையாண்டிருந்தது.இது திட்டமிட்ட நடவடிக்கையா, தற்செயலானதா என்று அக்காலப்பகுதியில் சர்ச்சை எழுந்திருந்தது.ஆனால் எது எவ்வாறானாலும்  சம்பவம் நடந்தது உண்மையானது.மேலதிக விரிவான  விளக்கம் இங்கே.

500மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்டது  Facebook.கடந்த நான்கு வருடங்களில் Facebook சந்தித்த மோசமான சம்பவத்தைக் கடந்த புரட்டாதி மாதத்தில் சந்தித்திருந்தது.ஓர் பின்னூட்ட loop தொடர்ச்சியாகச் செயற்பட்டு அவர்களது databaseஐ கடும் நெரிசலுக்குள்ளாக்கி செயலிழக்கச் செய்தது. இதனை சடி செய்ய facebookகை முழுமையாகவே 2.5 மணிநேரம் நிறுத்திவைக்க வேண்டையதாயிற்று mark zuckembergற்கு..மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.(havard network அதிகாலை 4 மணிக்கு mark zuckemberkஆல் செயலிழக்கச் செய்யப்பட்ட கதையை Facebookஉருவான கதையில் குறிப்பிட்டிருந்தேன்..இந்த நேரம் zuckemberkற்கு அது தான் நினைவிற்கு வந்திருக்குமென்று யாரும் இங்கே ஆரூடம் கூற முற்பட வேண்டாம்.. ;) ).

மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களிற்காக paypal உபயோகிக்கிறார்கள்.ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளிற்கு paypalஇல் தங்கியுள்ளார்கள்.paypal சேவை சில மணி நேரம் செயலிழந்தால் ஏற்படக் கூடிய வியாபார நட்டத்தை எண்ணிப் பாருங்கள்.கடந்த ஐப்பசி மாதமளவில் 4.5 மணி நேரம் Paypal செயலிழந்திருந்தது.மேலதிக விபரங்களிற்கு இங்கே.

கடந்த காற்பந்து உலகக் கின்ண காலத்தில் Twitter பல தடவை செயலிழந்திருந்தது அல்லது மெதுவாகியிருந்தது.மேலதிக விபரங்களிற்கு இங்கே.wikileaks மீது இனைய உலகில் பிரயோகிக்கப்பட்ட நெருக்கடிகளும், Wikileaks ஆதரவாளர்களால் ஏனைய நிறுவனங்களிற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளையும் ஏற்கனவே wikileaksற்கு ஓர் மாற்றுத் தெரிவு பகுதியில் குறிப்பிட்டதால் இங்கு சேர்த்துக்கொள்ளவில்லை.

இவை யாவும் உலகப் பிரசித்தி பெற்ற இணையத்திலியங்கும்  நிறுவனங்கள் கடந்த வருடத்தில் மட்டும் எதிர்கொண்ட நெருக்கடிகள்.இவை இணையம் இன்னும் ஓர் நிரம்பலான நிலைதகு நிலையை அடையவில்லையோ என்ற சந்தேகம் பலரிற்கு எழச் செய்த சம்பவங்கள்.. எது எவ்வாறானாலும் இச் சிறு சிறு சம்பவங்களால் அந்த நிறுவனங்கள் ஒன்றும் செயலிழந்துவிடவில்லை.தம்மை சீர் செய்துகொண்டு சில மணி நேரங்களிலேயே வழமைக்குத் திரும்பிவிட்டன என்பது தான் இங்கே கவனிக்கப் பட வேண்டியது.



Monday, November 29, 2010









கித்துல்கல வில் ஓர் மறக்கமுடியாத சாகச சுற்றுலா அனுபவம்....

சாகசத்திற்கு தயாராக நண்பர் குழாம் :D 

எங்கள் யாழ் இந்து 2005 மாணவர்கள் எல்லோரும் ஒன்றுணைந்து கடந்த வருடம் முதல் வருடாந்தம் ஒரு நாள் சுற்றுலாவை ஒழுங்குசெய்து வருகின்றோம்.இம்முறை  கித்துள்கல சென்று White water rafting செய்வதாகத் திட்டமிட்டிருந்தோம். முன்பொருமுறை கேதா அண்ணா ஒழுங்கு செய்த கித்துல்கல சுற்றுலா பற்றிய முன்னாள் பதிவர்  ;) புல்லட்டின் பதிவொன்றை வாசித்ததிலிருந்து நானும் கித்துல்கல செல்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.இதற்கமைய குறுகிய கால முன் அறிவித்தலுடன் முப்பத்திரண்டு நண்பர்களைத் திரட்டி நேற்று கித்துல்கல நோக்கிய எமது சாகசப் பயணத்தை ஆற்றியிருந்தோம்.இம் முறை யாழ்ப்பானத்திலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்து கொண்டிருந்தார்கள். பழைய பாடசாலைக்கால நினைவுகளைக் கிளறி ஒரே குறும்பும் கும்மாளமுமாக ஏறக்குறைய இரண்டரை மணி நேரப் பயணத்தின் பின்னர் கித்துல்கலவை அடைந்தோம்.

ஆற்றங்கரையில் படகோட்டும் நண்பர்கள் :P
அங்கே ஆறு அண்மைக்கால பெரு மழையாலோ என்னவோ கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. எங்களுக்கு முன்னமே சில சுற்றுலாப் பயணிகள் பயணத்தை ஆரம்பித்திருந்தார்கள்.  முதலில் நெறிப்படுத்துனர்கள் துடுப்பு வலிப்பது பற்றியும் அதற்காக அவர்கள் வழங்கும் கட்டளைகளையும் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளையும் எங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்தினார்கள்.


Friday, September 24, 2010









எண்ணத்தெரிந்தவர்கள் மற்றும் எண்ணத் தெரியாதவர்கள் என உலகத்தில் உள்ளவர்களை மூன்றாக வகைப்பட்டுத்த முடியும்.


உலகவரலாறு வழமைபோன்று தனது பிடிவாதமான பாதையில் சற்றும் தளராமல் மனிதர்களைப் பணயமாக வைத்து போய்க்கொண்டிருக்கிறது. இஸ்லாமின் இறைத்தூதரின்(முகம்மது நபி- Peace be upon him) உருவத்தை காட்டுன்னாக(Cartoon) வரைந்து 'ஒருவிதமான' பாராட்டு மற்றும் எதிர்ப்பை பெற்றுக்கொண்ட டென்மார்க் கேலிச்சித்திரஒவியர் தற்போது அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளாராம். ஐக்கிய இராச்சியத்திற்கு விஐயம் மேற்கொண்ட பாப்பாண்டவர் உலகத்தில் மதச்சார்பற்றவர்களின்(Secular) ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றுதிரளவேண்டும் எனக்கூறி, "தான் கண்ட நாசிசத்தை" தன் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டி, அரியணையிலுள்ளோர் ஆட்சிபுரிவோரிடம் தனது மனக்கவலையை கொட்டித்தீர்த்துள்ளார். இன்றைய யூதர்களுக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையும் அக்கறையும் இல்லையாம். அமெரிக்கா இருக்கும்போது, ஏன் இருக்கவேணும் என திண்ணையில் இருக்கிற நீங்கள் நினைக்கிறது புரியுது எனக்கு.

அது சரி மனிதர்களை பணயமாகவைத்து என்றால் எப்படி? என்கிற உங்கட கேள்வி நியாயம்தான். கேணல் சண்டர்ஸ் (அதுதாங்க KFC கடையிலுள்ள தாத்தா) யாரென்பது இன்றுள்ள அமெரிக்கச் சிறுவர்களுக்குத் தெரியாதாம் ஆனால் KFC என்றால் தெரியாதவர்கள் இல்லையாம். 11 வகையான மூலிகைகளையும் சில வசனைத்திரவியங்களையும் கொண்டு எப்படி வளர்த்த கோழியை "வதைத்து" பின் வறுத்து KFC செய்வது என்பதை வரிக்குவரி ஒரு காகிதத்தில் அதுவும் பென்சிலால கைப்பட எழுதிப்போட்டு, அந்த ஒரேயோரு ககிதத்தையே மூலதனமாகக் கொண்ட நிறுவனம் தான் KFC. இருவருக்குமட்டுமே தெரிந்த இருட்டுச் சுரங்கம் ஒன்றின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருகும் காகிதத்தின் துலக்கம் மங்குகிறதாம் என்பது KFCஇன் தற்போதைய கவலை. ஆனால் 60வயதினை கேணல் சாண்டர்ஸ் எட்டும்வரை ஒரு கடைக்காரரும் அவருடைய முறையை எற்றுக்கொள்ளவுமிலையாம், ஏறெடுத்துப் பார்க்கவுமில்லையாம் என்றால் பாருங்களேன். அதேவேளை கலாநிதி ஐயன்ஸ்டைனை எடுத்துக்கொள்ளுங்கள், பெளதீகத் தத்துவஞானி. சார்பியல் கோட்பாட்டினை (சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது) இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். வாயைபிளந்த விஞ்ஞானிகள் அவருடைய பிறந்ததினங்களில் எதாவது அதிசயம் நடக்கும் என இன்றும் நம்புகிறார்களாம். ஆனால் "சார்பியல் கோட்பாட்டிற்காக" அவருக்கு நோபல் பரிசு(Nobel Prize) வழங்கப்படவில்லை மாறாக "ஒளி மின் ஆற்றல்(Photovoltaic Effect)" தொடர்பான ஒரு சிறுவிடையத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பலகதைகள்தான் இன்று வரலாற்றை சிருஸ்டித்துக்கொண்டு இருக்கிறது. எனவெ இந்த வரலாற்றை விடுவோம். ஒரு உண்மையான மனிதனுக்கும் அவனுடைய அறிவியல்ஞானத்திற்கும் இடையேயான மென்மையான தொடர்புதான் அவனுடைய உண்மையான வரலாறு என்பது எனது நிலைப்பாடு, அது எற்றுக்கொள்ளப்படுகிறதா அல்லது மற்றப்படுகிறதா என்பது தேவையில்லாதது. யாராவது மேலுள்ள படத்தை விளங்கிக்கோள்ளா முடிகிறதா எனப்பருங்கள். அச்சடிக்கும்கருவியின்(Printer) காபன் தூள்(Toner)தான் அது. படுபயங்கரமான பச்சைவீட்டுவிளைவு ஊக்கி என்பது உங்களுக்குத் தெரியும். காபன் தூளில் என்ன மாற்றம் செய்தார்களோ தெரியவிலை பழைய காபன் தூள்மாதிரி இந்த புதிய காபன் தூள் இல்லையாம் ஆனால் ஒரேவிதாமான நேர்த்தியான அச்சாம்... என்னால நம்பவே முடியல, இந்தக் காபன் தூளின் வரலாற்று மாற்றத்தை. நீங்களும் உங்கட நியாயப்படுகளைச் சொல்லவாறமாதிரித் தெரியுது ஆனாலும் தலைப்பை ஒருதடவை வாசியுங்கோ... அப்ப தெரியும் நான் வரலாற்றின் எந்தப்பக்கம் என்று.



Friday, August 13, 2010









சிக்கிச் சின்னாபின்னமான அரட்டை ஆட்டை

இணைய அரட்டை.. சற்(chat).. இப்போதெல்லாம் நம் வாழ்வில் தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டது.அரைமணி நேர அரட்டை என்று ஆரம்பித்து மணிக்கனக்கில் நீண்டு
அவ் அரட்டைகள் நமக்கெல்லாம்ஆப்படிப்பதும் உண்டு.நாங்கள் எல்லாரும் சற்(chat)ல ஆட்டையைப் போடுறதைப் பார்த்திற்று நம்ம நண்பன் ஒருத்தன்..
ஒரு நாள்...இணைய அரட்டையில தன்ர திறமையைக் காட்டப்ப்போய் மொக்கையாகின வரலாறும் இருக்கு..

அவன் இணைய அரட்டைக்கு புதுசு..அவன நாங்கள் எல்லாம் ”தல” எண்டு தான் கூப்பிடிறனாங்கள்.அவனும் தன்னோடை முந்தி ஊரில படிச்ச பிள்ள ஒண்டு இப்ப ukல இருக்கெண்டு எங்களுகெல்லாம் build up குடுத்திற்று தான் இண்டைக்கு  ”சற்”ல அந்தப் பிள்ளைக்கு ஆட்டையைப் போட்டுக் காட்டிறன் எண்டு சவால் விட்டுக் களத்தில இறங்கினான்.

நம்மாள் அமர்க்களமாய் தன்ர ஆங்கிலப் புலமையை எல்லாம் எடுத்து விட்டு ஆட்டையை ஆரம்பிச்சிது..  எழுத்துக் கூட்டி ஒன்றை அடிச்சு முடிக்கிறதுக்கிடையில அங்கையிருந்து மல்ரிபரல் மாதிரி பதில் வந்து குவியத் தொடங்கீற்றுது. நம்ம ”தல”யும் எங்களிட்டை நோண்டி ஆகியிரக்கூடாது எண்டதுக்காண்டி சமாளிச்சு சற்ல அடிச்சுத் தள்ளிக்
கொண்டிருக்கத்தான் அந்த இடி வந்து நம்ம ”தல”யின்ர தலையில இறங்கிச்சு..”சற்”றுக்கிடையில UKWIM எண்டு.. நம்ம நண்பனுக்கு அதுக்கு கருத்துப் புரியல..அது போன்ற அரட்டைக்கே உரித்தான குறுக்கப்பட்ட ;) விசேட சொற்கள் அவனுக்குப் பெரிதாகப் பரிச்சயமுமில்லை.எங்கள கேட்டு நோண்டியும் ஆகியிரக்கூடாதெண்டிட்டு அதுக்கு ஏதோ மழுப்பி அடிச்சு முடிச்சிட்டான்..தொடர்ந்து இப்பிடியே சுருக்கெழுத்து வந்திறங்கவே நிலைகுலைஞ்ச நம்மாள் அவசரமாய் வெளில போகணும்
 எண்டு ஒரு மாதிரி சொல்லி சமாளிச்சு சற்றை மூடி எதுவுமே ஆகாத மாதிரி
அப்பாவியாய் வெளில வந்திடிச்சு..

ஆனாப் பாருங்கோ எங்கட புலனாய்வுப் படை இதை சும்மா விட்டிருமோ..??அக்குவேறு ஆணி வேறாய் துப்புத் துலக்கி ukwim விசயத்தைக் கண்டு புடிச்சு நம்ம தலய உண்டு இல்லாமல் பண்ணிடிச்சு..

அது சரி அதில அவனை பிரிச்சு மேஞ்ச பலருக்கு ukwim எண்டா என்னண்டு கருத்து தெரியாது பாருங்கோ..(நம்மளுக்கும் தான்..)என்ன..??உங்களுக்கும் தெரியாது போல..கண்டுக்காதங்க.. you know what i mean ?? சிரிக்கிறீங்களே..
ஐயோ கையோ..என்ன சின்ன புள்ளத் தனமாய் கிடக்கு..
அந்த you know what i mean ர முதலெழுத்துகளைச் சேர்த்துப் பாருங்கோ..
ukwim வரும் (யாருப்பா அது UKல விக்கிற விம் சோப் எண்டு நினைச்சன் எண்டிறது ;))

அதுசரி ..இப்படி இனி நாங்கள் மொக்கையாகீரக்கூடாதென்று இணையத்தில கூகிளாண்டவரிட்ட சரணடைந்த போது தான் இது சிக்கியது.
ஏராளமான உத்தியோகப்பற்றற்ற ஆனால் அடிக்கடி உபயோகிக்கப்படும் சொற்களைத் திரட்டி அகராதியையே தயாரித்திருந்தார்கள்.


Thursday, August 5, 2010









நான் கொழும்புக்குப் புறப்பட்ட காலக் கதை....

 இரண்டு மூன்று வருடங்களிற்கு முன் ..யாழ்-கொழும்பு பயணம் என்பது குதிரைக் கொம்பு போன்றது..நீண்ட நெடிய வலிமிகு ஏற்பாடுகள் அவசியமானது.. அந்த ஏற்பாடுகள் மிக வேகமாக மாறுந் தன்மையுடையது.நேற்று இருந்த ஒழுங்கு முறை இன்றிருக்காது.இன்றைய ஒழுங்கு முறை நாளை இருக்குமா என்பதையும் யாராலும் உறுதிப் படுத்திவிடவும் முடியாது..இவற்றோடு ஒப்பிடுகையில் வெளிநாடு செல்வது எவ்வளவோ எளிதானது..

முதலில் பாதுகாப்பு முன் அனுமதி(clearance) பாதுகாப்பமைச்சிடம் பெறவேண்டும்.மாதக்கணக்கில் தவமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளவேண்டும்…இந்த முதல் ஏற்பாட்டைப் பூர்த்தி செய்த பின் அடுத்தது..
கப்பலில் செல்வதென்றால் யாழ் பழைய புகையிரத நிலையத்தில் முதல் நாளே பெட்டி படுக்கையுடன் குடி பெயர வேண்டியது தான்.(யாரது? கப்பல் என்று விட்டு புகையிரத் நிலையம் என்கிறான் என்று புத்திசாலியாக் முற்படுவது.. J எங்கள் புகையிரத நிலையம் அப்போதெல்லாம் புகையிரதத்தைக் கண்டு தசாப்த காலமாயிருந்தது..)இங்கு சென்று ஆயிரக் கணக்கான மக்கள் சமுத்திரத்தில் ஐக்கியமாகி விட்டால் அதன் பின் கப்பல் ஓடும் நாட்களில் அவ்ர்கள் வந்து பல நூற்றுக் கனக்காண மக்களை வசு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சென்று பாதுகாப்புப் பதிவுகள் முடித்து பயணம் ஆரம்பமாகும். இரவிரவாக கப்பலோடி மறுநாள் காலையில் திருகோணமலையை அடையும்..இந்தக் கப்பலைப்பெறவே மாதக் கணக்கில் புகையிரத நிலையத்தில் தவமிருந்தவர்களும் நம்மிடையே இருந்தார்கள்.

விமானமென்றால் சொல்லவே தேவையில்லை.அது ஒரு வர்த்தக ஏகபோகம்.ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனம் தான் அதனை வழங்கியது..சில மாதத்திற்கு முந்தியே முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டும்.அந்த நிறுவனத்தில் முன்பதிவு செய்தவர் நீங்கள் என்றால் உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.எந்த அவமானத்தையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருந்திருக்கவேண்டும்.அங்கே உங்களை மந்தை மேய்ப்பதைப்போல் மேய்ப்பார்கள்.சுய ரவத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பதிவினை மேற்கொள்வதை விட வேறு வழியில்லை.பெருங்கொடுமை என்னவெண்றால் இந்த நிறுவனத்தின் கதவுகள் அவர்களது உறவினர்களுக்கும்,தெரிந்தவர்களுக்கும் பண முதலைகளுக்கும் எப்போதும் திறந்திருக்கும்..யாரும் கண்டுகொள்ளக் கூடாது..ஆனால் இவ்வளவும் நிகழ்ந்தாலும் அந்த நிறுவனத்திற்கு முன்னால் மக்கள் கூட்டத்திற்கு குறைவிருக்காது..ஏனென்றால் இவ் இரு (கடல்,ஆகாய) மார்க்கங்களைத் தவிர எங்கள் மக்களுக்கு வேறு மார்க்கமிருக்கவில்லை....