Pages

Subscribe Twitter Twitter
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Tuesday, January 4, 2011









உங்கள் முன்னாலுள்ள பாரிய சவால்கள்..

பெற்றோர்களே..!!
உங்கள் தண்டனைகளை நீங்கள் புதுப்பித்தேயாக வேண்டும்.மரபு வழித் தண்டனைகள் இனி வேலைக்காகாது..


நாளைய இளைஞர்களே..!!
நாளை உங்கள் பெற்றோர் உங்களுக்கு Facebookஇல் friend request அனுப்பினால் என்ன செய்வீர்கள்..!! ??சிந்தியுங்கள்..செயற்படுங்கள்..

ஏதோ எங்களால் முடிந்த உதவி ;)

எங்கள் சிபாரிசு..
புதிது புதிதாய் எதனையெல்லாமோ புகுத்தும் நீங்கள் ஏன் இப்படியொரு வசதியையும் அறிமுகப்படுத்தக்கூடாது..??



நாளை நாமும்..
இன்று இவர்..நாளை நாமும் கூட..


உங்கள் கணனி அடிக்கடி செயலிழக்கிறதா..??
கவலையை விடுங்கள்.. இனி மேல் நீங்களும் கணனி திருத்துவதில் விற்பன்னர் தான்..

பிற்குறிப்பு: குப்பிறப் படுத்திருந்து இவ்வாறெல்லாம் சிந்தித்தது நான் அல்ல..

நன்றி: abstrusegoose,coolmaterialendlessorigamistrikegentlygraphjam


Saturday, September 18, 2010









பேசும் புகைப்படங்கள்..












நன்றி:புகைப்படங்கள்: Google,மின்னஞ்சல்களிலிருந்து..


Wednesday, September 8, 2010









என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க யாருமே இல்லையா..??


அண்மைக்காலமாக ஒரு ஆறு Error messages வந்து  என் நிம்மதியான தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டே இருக்கிறது..நானு எவ்வாறெல்லாமோ முயன்று பார்க்கிறேன்..சரிசெய்ய முடிகிறதேயில்லை..
அப்போதுதான் ஒரு யோசனை தோன்றியது..எங்கள் தமிழ் பதிவுலகில் தான் நூற்றுக்கனக்கான தொழிநுட்பப் பதிவர்கள் இருக்கிறார்கள்.எத்தனை ஆயிரம் கணனி வல்லுனர்கள் நாளாந்தம் தமிழ் பதிவுகளை உலகெல்லாம் இருந்து வாசிக்கிறார்கள்.இவர்களிடம் சொன்னால் உடனே தீர்த்துவைத்துவிடப் போகிறார்கள்.இதற்குப் போய் தூக்கத்தை இழப்பதா..?? யாரது..??NO..Never எண்டிறது..அதைத்தான்க நானும் சொல்ல வாறன்..இதோ..இவை தான் ..அவை..

முதலாவது..




 அழிக்கிறதுக்கு இப்ப நான் என்ன செய்ய? proceed ஐயா delete ஐயா  சொடுக்கணும்(click)?

இரண்டாவது..



இது ERROR ஆ..?? ERROR இல்லையா..?? அல்லது ERROR இல்லையென்பதே ஒரு ERROR ஆ??

மூன்றாவது..



key Board டே failure ஆன பிறகு F1,F2 அமத்தெண்டிறாங்களே..! என்னை என்ன பைத்தியக்காறன் எண்டு நினைக்கிறாங்களா..? இல்லை..அவங்களுக்கு பைத்தியமா..??

நான்காவது..



Tipsஏ இல்லையெண்டிறது எல்லாம் ஒரு Tipஆ..?

ஐந்தாவது..



இப்ப என்ன எண்டிறாங்க..?? Install ஆகுதெண்டிறாங்களா?? இல்ல Uninstall ஆகிதெண்டிறாங்களா??

ஆறாவது..



error காட்டிறதிலயே error காட்டுதே..??

செப்பா யாராச்சும் உதவுங்கப்பா..??என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்து என்ரை நிம்மதியான நித்திரையை மீட்டுத்தர யாருமே இல்லையா..?? ;) 


Sunday, September 5, 2010









நான் ஏன் தகவல் தொழிநுட்பத் துறை(IT)யைத் தெரிவு செய்தேன் ..??

இன்று தகவல் தொழிநுட்பத்துறையில்(IT) வேலை செய்வதையே பலர் விரும்புகின்றார்கள்.பலரும் தகவல் தொழிநுட்பத் துறையில் வேலை செய்வதை இலகுவானதாகவும் ,குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்த இடத்தில் கணனி முன் இருந்தவாறே பெருமளவு சம்பளம் கை நிறையப் பெறும் துறை எனவே நம்புகின்றார்கள்.
ஆனால் அத் துறையில் வேலை செய்பவர்களைக் கேட்டால் குழறிக் குழறி அழுவார்கள். ஒரு நாளில் மிக அதிக மணி நேர வேலை.. மிக இறுக்கமான நேர வரையறைகளுக்குள் வேலைகளைச் செய்து முடிக்கவேண்டியிருத்தல்..விடுமுறை நாட்களிலும் வேலை கட்டாயமாக்கப்படல்.. குழு வேலைகளிற்கேயுரித்தான தவறுகளிற்கு பிறரைச் சுட்டலும் வெற்றிகள் தங்களால் மட்டுமே என பறை சாற்றலும்.. இவை எல்லாவற்றிற்கும் மேலாக  திடீர் திடீரென்று வேலையிலிருந்து தூக்கி வீசப்படும் அபாயம்.. என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்..அவர்கள்  அடிக்கடி கம்பனி மாறுவது வெறுமனே அதிக சம்பளம் பெறுவதற்காக மட்டும் அல்ல  என்பது அப்போது தான் புரியும் ..!!.
யாரது..??இவ்வளவும் தெரிந்தும் நீயேன் தகவல் தொழிநுட்பத்துறையைத் தெரிவு செய்தாயென பராசக்தி படப் பாணியிலே கேட்பது..??

நான் ஏன் தகவல்  தொழிநுட்பத் துறை(IT)யைத் தெரிவு செய்தேன் என்றால் ..!!??

  • நான் சீரான நித்திரையை வெறுக்கின்றேன்.
  • நான் ஏற்கனவே போதுமான அளவு வாழ்வின் இன்பங்களை அனுபவித்து விட்டேன்.
  • பதற்றம்(tension) இன்றிய வாழ்க்கை எனக்கு பிடிப்பதில்லை
  • செய்த பாவங்களிற்கெல்லாம் வாழும்போதே பரிகாரம் தேட நினைக்கிறேன்.
  • வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஓர் காரணமிருக்கிண்றது என்ற கோட்பாட்டைத் தவறென நிரூபிக்க விரும்புகின்றேன்.
  • என் வாழ்வு வேறு யாராலும் நாசமாக்கப்பட்டது என்று பிறர் கூறுவதை நான் விரும்பவில்லை.ஆகவே சொந்தச் செலவில் சூனியம் வைக்க விரும்புகின்றேன். 
;)

மூலம்: அண்மையில் நண்பனொருவன் அனுப்பிய மின்னஞ்சல்


Friday, August 13, 2010









சிக்கிச் சின்னாபின்னமான அரட்டை ஆட்டை

இணைய அரட்டை.. சற்(chat).. இப்போதெல்லாம் நம் வாழ்வில் தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டது.அரைமணி நேர அரட்டை என்று ஆரம்பித்து மணிக்கனக்கில் நீண்டு
அவ் அரட்டைகள் நமக்கெல்லாம்ஆப்படிப்பதும் உண்டு.நாங்கள் எல்லாரும் சற்(chat)ல ஆட்டையைப் போடுறதைப் பார்த்திற்று நம்ம நண்பன் ஒருத்தன்..
ஒரு நாள்...இணைய அரட்டையில தன்ர திறமையைக் காட்டப்ப்போய் மொக்கையாகின வரலாறும் இருக்கு..

அவன் இணைய அரட்டைக்கு புதுசு..அவன நாங்கள் எல்லாம் ”தல” எண்டு தான் கூப்பிடிறனாங்கள்.அவனும் தன்னோடை முந்தி ஊரில படிச்ச பிள்ள ஒண்டு இப்ப ukல இருக்கெண்டு எங்களுகெல்லாம் build up குடுத்திற்று தான் இண்டைக்கு  ”சற்”ல அந்தப் பிள்ளைக்கு ஆட்டையைப் போட்டுக் காட்டிறன் எண்டு சவால் விட்டுக் களத்தில இறங்கினான்.

நம்மாள் அமர்க்களமாய் தன்ர ஆங்கிலப் புலமையை எல்லாம் எடுத்து விட்டு ஆட்டையை ஆரம்பிச்சிது..  எழுத்துக் கூட்டி ஒன்றை அடிச்சு முடிக்கிறதுக்கிடையில அங்கையிருந்து மல்ரிபரல் மாதிரி பதில் வந்து குவியத் தொடங்கீற்றுது. நம்ம ”தல”யும் எங்களிட்டை நோண்டி ஆகியிரக்கூடாது எண்டதுக்காண்டி சமாளிச்சு சற்ல அடிச்சுத் தள்ளிக்
கொண்டிருக்கத்தான் அந்த இடி வந்து நம்ம ”தல”யின்ர தலையில இறங்கிச்சு..”சற்”றுக்கிடையில UKWIM எண்டு.. நம்ம நண்பனுக்கு அதுக்கு கருத்துப் புரியல..அது போன்ற அரட்டைக்கே உரித்தான குறுக்கப்பட்ட ;) விசேட சொற்கள் அவனுக்குப் பெரிதாகப் பரிச்சயமுமில்லை.எங்கள கேட்டு நோண்டியும் ஆகியிரக்கூடாதெண்டிட்டு அதுக்கு ஏதோ மழுப்பி அடிச்சு முடிச்சிட்டான்..தொடர்ந்து இப்பிடியே சுருக்கெழுத்து வந்திறங்கவே நிலைகுலைஞ்ச நம்மாள் அவசரமாய் வெளில போகணும்
 எண்டு ஒரு மாதிரி சொல்லி சமாளிச்சு சற்றை மூடி எதுவுமே ஆகாத மாதிரி
அப்பாவியாய் வெளில வந்திடிச்சு..

ஆனாப் பாருங்கோ எங்கட புலனாய்வுப் படை இதை சும்மா விட்டிருமோ..??அக்குவேறு ஆணி வேறாய் துப்புத் துலக்கி ukwim விசயத்தைக் கண்டு புடிச்சு நம்ம தலய உண்டு இல்லாமல் பண்ணிடிச்சு..

அது சரி அதில அவனை பிரிச்சு மேஞ்ச பலருக்கு ukwim எண்டா என்னண்டு கருத்து தெரியாது பாருங்கோ..(நம்மளுக்கும் தான்..)என்ன..??உங்களுக்கும் தெரியாது போல..கண்டுக்காதங்க.. you know what i mean ?? சிரிக்கிறீங்களே..
ஐயோ கையோ..என்ன சின்ன புள்ளத் தனமாய் கிடக்கு..
அந்த you know what i mean ர முதலெழுத்துகளைச் சேர்த்துப் பாருங்கோ..
ukwim வரும் (யாருப்பா அது UKல விக்கிற விம் சோப் எண்டு நினைச்சன் எண்டிறது ;))

அதுசரி ..இப்படி இனி நாங்கள் மொக்கையாகீரக்கூடாதென்று இணையத்தில கூகிளாண்டவரிட்ட சரணடைந்த போது தான் இது சிக்கியது.
ஏராளமான உத்தியோகப்பற்றற்ற ஆனால் அடிக்கடி உபயோகிக்கப்படும் சொற்களைத் திரட்டி அகராதியையே தயாரித்திருந்தார்கள்.