Pages

Subscribe Twitter Twitter
Showing posts with label தொழிநுட்பம். Show all posts
Showing posts with label தொழிநுட்பம். Show all posts

Thursday, January 19, 2012









SOPA.. நாம்.. கட்டற்ற இணையம்.


சில நாட்களாக ஊடகங்களில் பலமாக அடிபடும் சொற்கள் தான் SOPA(Stop Online Piracy Act), PIPA(PROTECTIP Act). .அமெரிக்காவிலும் ஏனைய பாகங்களிலும் இணையத்தளம் மூலம் இடம்பெறும் காப்புரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க செனற்றில் நிறைவேற்ற முயலும் இரு சட்ட மூலங்கள் தான் இவை..

இந்தச் சட்டங்கள் என்ன தான் செய்யப்போகின்றன? உதாரணமாக இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் வெளிவந்து திரையரங்குகளில் வந்தவுடனேயே ஏன் சிலசமயங்களில் வரமுதலே இணையத்தளங்களில் இலவசமாக தரவிறக்கக் கூடியதாக செய்துவிடுகிறார்கள் அல்லவா..அதேபோல் பாடல்கள் மற்றும் இசைத்தொகுப்புகளின் நிலையும் இதே தான்.இதனையெல்லாம் தடுப்பது தான் இந்தச் சட்டங்களின் வெளிப்படையான நோக்கம்.

உதாரணமாக
  •  youtube ல் நாளந்தம் பார்த்து ரசிக்கும்  பாடல்கள், நகைச்சுவைகள்..
  •  வெளியான உடனேயே தரவிறக்கி கேட்டுவிடத்துடிக்கும் எம்மைப் போன்ற விசிறிகள்..
  •  மொழிகடந்து இலவசமாகவே Torrent உதவியுடன் தரவிறக்கி பார்த்துவிடும் பல்வேறு மொழிப் படங்கள்..
  • இலவசமாகவே தரவிறக்கிவிடும் e புத்தகங்கள்.. 

இங்கே தான் பிரச்சினை எழுகின்றது... 

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலமான கோசங்கள் உலகெங்கும் எழ ஆரம்பித்துள்ளது. காப்புரிமையப் பேணுவது அவசியமானது என்ற அடிப்படையில் இதற்கு ஆதரவானவர்களும்,இது இறுதியில் கட்டற்ற இணையத்தைக் கட்டுப்படுத்தி சுதந்திர கருத்துரிமையை மீறுவதிலே தான் முடியும் என இத்ற்கு எதிரானவர்களின் வாதங்களும் எழ ஆரம்பித்துள்ளன.இது Wikipedia போன்ற பல இலட்சம் பார்வையாளர்களை நாளொன்றிற்குக் கொண்டுள்ள இணையத்தளாங்களின் ஒருநாள் Blackout (ஒரு வகையிலான கடையடைப்பு ;-) ) போராட்டம் வரை இதுவரை சென்றுள்ளது.

பல கோடிகளோ இலட்சங்களோ செலவுசெய்து மேலும் காப்புரிமை பெற்று தயாரிக்கப்படும் திரைப்படங்களோ இசைத்தொகுப்புக்களோ ஏனைய அம்சங்களோ சட்டவிரோ தமான முறையில் இணையத்தளங்களில் தர வேற்றப்படுவதால் அதனை வெளியிடும் நிறுவனங்களிற்கு பெருமளவு வருமான இழப்பு ஏற்படுகிறது .. இது அடிப்படையில் அந்த துறை(Industry)யையே படிப்படியாகப் பாதிக்கச் செய்கிறது.தொடர்ந்து அந்த துறையையே ஆட்டங்காணச் செய்கையில் அந்தத் துறையயே நம்பி வாழும் அன்றாடங்காய்ச்சிகளின் அடிவயிற்றில் இறுதியாகக் கைவைக்கின்றது.ஆகவே இதனைத் தடுத்தேயாக வேண்டும் என இதனை ஆதரிப்பவர்கள் வாதாடுகிறார்கள்.

ஆனால் சட்டங்கள் போட்டுத் தடுப்பதனால் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. தொழிநுட்பங்களில் கைதேர்ந்தவர்களாலேயே இதுபோன்ற தளங்கள் நடாத்தப்படுவதால் அவர்கள் வேறுவழிகளில் இதனைக் கொண்டு செல்வார்கள். ஆனால் அடிப்படையில் பாதிக்கப்படப் போவது என்னவோ இது போன்ற காப்புரிமைபெறப்பட்ட பொருட்களைக் கட்டனங்செலுத்திப் பெறமுடியாதவர்களே எனவும் வாதாடுகிறார்கள். குறிப்பாக எல்ல நாட்டுச் சந்தைகளுக்கும் எல்லாப் பொருளும் எளிதில் வந்தடைவதில்லையெனவும், அவ்வாறான பிரதேசங்களில் வாழ்பவர்களையே இது பாதிக்கும் எனவும் வாதாடுகின்றார்கள். மாறாக இந்தச் சட்டமூலங்கள் புத்தாக்கங்களில் ஈடுபடும் சிறிய நிறுவனங்களை சட்டங்களிலுள்ள ஓட்டைகளப் பயன்படுத்தி பெரிய நிறுவனங்கள் அடிமைப்படுத்திவிடவே ஊக்குவிக்கும் எனவும் வாதாடுகிறார்கள்.

சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்க திட்டம் போட்டுத் திருடிற கூட்டம் திருடிக்கொண்டேயிருக்கும் என்பது இவர்களது  வாதம்.இதற்கு மாறாக சட்டங்களை இயற்ற செலவு செய்யும் நேரத்தையும் பணத்தையும் இவ்வாறன செயற்பாடுகளைத் தடுக்கப் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் செலவுசெய்வதே சிறந்தது என்கிறார்கள் இந்தச் சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள்.

எது எவ்வாறானாலும் இந்தச் சல்லமூலம் நிறவேற்றப்படுமா, அல்லது பல்வேறு மற்றங்களிற்கு உட்பட்டு நிறைவேற்றப்படுமா, நிறவேற்றப்பட்டாலும் எவ்வாறு அமுல்படுத்தப்படப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தச் சட்டமூலங்கள் பற்றி நான் அண்மைய நாட்களில் இணையத்தில் வாசித்த ஆக்கங்களின் அடிப்படையில் மேலெழுந்தவாரியாகவே இங்கு விளக்கியிருக்கிறேன்.மேலும் படிக்க கீழுள்ள இணைப்புக்களைச் சொடுக்குங்கள்.



Tuesday, September 13, 2011









புதிய கைத்தொலைபேசியோ, மடிக் கணனியோ வாங்க வேண்டுமா..??கவலையை விடுங்கள்..

புதியதொரு கையடக்கத் தொலைபேசியோ, மடிக் கணனியோ, புகைப்படக் கருவியோ வாங்கியபின்னர் உடனடியகவே அறிமுகமாகும் புதிய மொடெலாலோ அல்லது நாம் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து வாங்கியவுடன் அந்தப் பொருளின் சந்தை விலையில் சடுதியாக ஏற்படும் வீழ்ச்சியாலோ கடுமையாகப் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..??கவலையை விடுங்கள்.

அண்மையில் உங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்காகக் கொண்ட Decide.com என்ற தளமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. குறித்த இலத்திரனியல் பொருளை நீங்கள் வாங்கலாமா இல்லை புதிய அறிமுகத்திற்காகக் காத்திருத்தல் உசிதமானதா..விலையிலேற்படக்கூடிய மாற்றங்களிற்கான எதிர்வு கூறல்கள் என உங்களிற்கு ஆலோசனை வழங்கக் கூடியவாறு இந்தத் தளத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு புதிய மடிக்கணனி வகைகள்,ஒரு புதிய வகை புகைப்படக் கருவி ,ஒரு புதிய வகை தொலைக்கட்ட்சியென புத்திது புதிதாக அறிமுமாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நுகர்வோரிற்கு இந்தத் தளம் பெருந்துணையாக இருக்கும்.ஆனால் இத் தளம் பிரபலமானால் இவர்களது விலை எதிர்வு கூறல்கள் பொருட்களின் விலையை, நிரம்பலை செயற்கையாக நிர்ணயிக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்திவிடும் என விமர்சிப்பவர்களும் உள்ளார்கள்
.
எது எவ்வாறானாலும்  புதிய மொடல்களின் அறிமுகம் பற்றிப் பெரிதாக உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியாதவர்கள், புதியதொரு இலத்திரனியல் உபகரணத்தினை வாங்கமுற்படுகையில் இந்தத் தளத்தினது எதிர்வுகூறலையும் ஒரு முறை கவனித்துத் தங்கள் தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் ஏற்படக் கூடிய ஏமாற்றத்தினைத் தவிர்த்துக்கொள்ளலாம்..

மேலதிக விரிவான விபரங்களிற்கு இங்கே சொடுக்குங்கள்
tech crunch பதிவிற்கு.. 


Thursday, January 6, 2011









இணையத்தின் மீதான நம்பிக்கை இழக்கப்படுகிறதா..??

அண்மையில் நண்பன்  ஒருவனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது உலகமே தனது சகல தேவைகளையும் இணையத்தினூடே வீட்டிலிருந்தவாறே நிறைவேற்றுமளவிற்கு  வந்துவிட்டது.நம்மூரெல்லாம் எப்போது அந்த நிலைக்கு வரப்போகின்றது என அதிகமாகவே ஆதங்கப்பட்டான்.அவன் சொல்வதற்கு மாறாக என் கருத்தைத் தெரிவித்து வழமையாகவே விவாதத்தை ஆரம்பித்துவைப்பேன் (அது தான் என் கருத்தாய் இருந்தால் கூட..) இன்றும் அவ்வாறு தான்... இணையம் ஒன்றும் நில்லையானதும் உறுதியானதுமான நிலையை அடைந்துவிடவில்லை..அதுவும் நம் நாட்டில் இன்னும் அதிகமாகவே..ஆகவே அத்தியாவசிய தேவைகள் எல்லாவற்றையும் நாங்கள் முழுமையாக இணையத்திலேற்றிவிட்டால் அது சிக்கலில்தான் முடியும் என .ஆரம்பித்தேன் என் (கு)தர்க்கத்தை ..அண்மையில்த் தான் வலையில் 2010ல் இணையத் திலேற்பட்ட பிரதான சம்பவங்களையெல்லாம்  தொகுத்திருந்த ஒரு கட்டுரையை வாசித்திருந்தேன்.எல்லாவற்றையும் இழுத்து அவனை உண்டு இல்லை என்றாக்கிவிட்டேன்.நீண்ட காலத்தின் பின் அவனை மடக்கிவிட்ட திருப்தி எனக்கு..கடந்தவருடத்தில் இணையத்திலியங்கும் நிறுவனங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை இப்போது பார்ப்போம்.



ஏதாவதொரு விடயம் பற்றி அறிவதாயிருந்தால் நாம் உடனே இணையத்தில் அணுகுவது Wikipeediaவைத் தான்.கடந்த பங்குனி மாதமளவில் Wikipeedia சில மணி நேரம் செயலிழந்திருந்தது.Googleஇன் தரவுகளின்படி நாளுக்கு 50 மில்லியனிற்கு மேற்பட்ட வாசகர் வரவு கொண்டது  Wikipeedia . ஆகவே Wikipeedia யாரது கண்ணிலும் படாமல் தனது செயலிழப்பைச் (சில நிமிடங்களாயிருந்தால் கூட) சீர்செய்வது சாத்தியப்படாது . Wikimediaவின்  UKயிலுள்ள தகவல்வழங்கி மிகைசூடாகி ;) (over heated) செயற்பாட்டை நிறுத்தியதைத் தொடர்ந்து வரிசையாக சில செயலிழப்புகள் ஏற்பட்டது தான் இப் பிரச்சினைக்குக் காரணமானது.சில மணிநேரத்தில் இப் பிரச்சினையை அவர்கள் சீர் செய்து விட்டார்கள்.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

நம்மில் பலர்  Wordpress இனை பதிவிடுவதற்கு உபயோகிக்கிறோம்.10மில்லியனிற்கு மேலான பதிவுகள் wordpress மூலமாக இடப்படுகின்றன.Techcrunch போன்ற பல பிரபல பதிவு நிறுவனங்கள் கூட Wordpressஐத் தான் உபயோகிக்கின்றன.கடந்த வருட ஆரம்பத்தில் Wordpress (மாசி மாதமளவில்) இரு மணி நேரத்திற்கு மேலாக சில வலையமைப்பு பிரச்சினைகளால் செயலிழந்திருந்தது.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

Googleஇன் பிரபல மின்னஞ்சல் சேவையான Gmail கடந்த வருடம் மாசி,பங்குனி,புரட்டாதி மாதங்களில் சில சிக்கல்களை எதிர்கொண்டது.ஆயினும் Gmail நிறுவனத்தினர்  இச் சிக்கல்களால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெருமளவு பாவனையாளர்களும் பாதிக்கப்படாமல் தவிர்த்துக்கொண்டனர்.எனினும் குறித்ததொகையிலான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனராயினும் Google என வருகையில் இது பெருமளவு கவனத்தைப் பல மட்டங்களிலும் ஈர்ப்பது தவிர்க்கமுடியாதது.மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.

சீனா கடந்த சித்திரை மாதத்தில் 18 நிமிடங்களிற்கு உலகளாவிய இணைய உபயோகத்தின் 15% சதவீத நெரிசலை வலிந்து China Telecom ஊடாக நகர்த்தியிருந்தது.வழமையாக இந்த அளவிலான நெரிசலை சமாளிக்க முடியாமல் செயலிகள் செயலிழந்துவிடும்.ஆனால் China Telecom இதனை திறமையாகக் கையாண்டிருந்தது.இது திட்டமிட்ட நடவடிக்கையா, தற்செயலானதா என்று அக்காலப்பகுதியில் சர்ச்சை எழுந்திருந்தது.ஆனால் எது எவ்வாறானாலும்  சம்பவம் நடந்தது உண்மையானது.மேலதிக விரிவான  விளக்கம் இங்கே.

500மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்டது  Facebook.கடந்த நான்கு வருடங்களில் Facebook சந்தித்த மோசமான சம்பவத்தைக் கடந்த புரட்டாதி மாதத்தில் சந்தித்திருந்தது.ஓர் பின்னூட்ட loop தொடர்ச்சியாகச் செயற்பட்டு அவர்களது databaseஐ கடும் நெரிசலுக்குள்ளாக்கி செயலிழக்கச் செய்தது. இதனை சடி செய்ய facebookகை முழுமையாகவே 2.5 மணிநேரம் நிறுத்திவைக்க வேண்டையதாயிற்று mark zuckembergற்கு..மேலதிக விபரங்களிற்கு அவர்களது  விளக்கம் இங்கே.(havard network அதிகாலை 4 மணிக்கு mark zuckemberkஆல் செயலிழக்கச் செய்யப்பட்ட கதையை Facebookஉருவான கதையில் குறிப்பிட்டிருந்தேன்..இந்த நேரம் zuckemberkற்கு அது தான் நினைவிற்கு வந்திருக்குமென்று யாரும் இங்கே ஆரூடம் கூற முற்பட வேண்டாம்.. ;) ).

மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களிற்காக paypal உபயோகிக்கிறார்கள்.ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளிற்கு paypalஇல் தங்கியுள்ளார்கள்.paypal சேவை சில மணி நேரம் செயலிழந்தால் ஏற்படக் கூடிய வியாபார நட்டத்தை எண்ணிப் பாருங்கள்.கடந்த ஐப்பசி மாதமளவில் 4.5 மணி நேரம் Paypal செயலிழந்திருந்தது.மேலதிக விபரங்களிற்கு இங்கே.

கடந்த காற்பந்து உலகக் கின்ண காலத்தில் Twitter பல தடவை செயலிழந்திருந்தது அல்லது மெதுவாகியிருந்தது.மேலதிக விபரங்களிற்கு இங்கே.wikileaks மீது இனைய உலகில் பிரயோகிக்கப்பட்ட நெருக்கடிகளும், Wikileaks ஆதரவாளர்களால் ஏனைய நிறுவனங்களிற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளையும் ஏற்கனவே wikileaksற்கு ஓர் மாற்றுத் தெரிவு பகுதியில் குறிப்பிட்டதால் இங்கு சேர்த்துக்கொள்ளவில்லை.

இவை யாவும் உலகப் பிரசித்தி பெற்ற இணையத்திலியங்கும்  நிறுவனங்கள் கடந்த வருடத்தில் மட்டும் எதிர்கொண்ட நெருக்கடிகள்.இவை இணையம் இன்னும் ஓர் நிரம்பலான நிலைதகு நிலையை அடையவில்லையோ என்ற சந்தேகம் பலரிற்கு எழச் செய்த சம்பவங்கள்.. எது எவ்வாறானாலும் இச் சிறு சிறு சம்பவங்களால் அந்த நிறுவனங்கள் ஒன்றும் செயலிழந்துவிடவில்லை.தம்மை சீர் செய்துகொண்டு சில மணி நேரங்களிலேயே வழமைக்குத் திரும்பிவிட்டன என்பது தான் இங்கே கவனிக்கப் பட வேண்டியது.



Tuesday, December 28, 2010









Windows 7.. Google Chrome.. எது உங்கள் தெரிவு..??



நீங்கள் உங்கள் கணனி உங்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்கின்றதில்லையே என அடிக்கடி கடுப்பாகின்றீர்களா..?? கற்பனை செய்து பாருங்கள்..
 நீங்கள் உங்கள் மின்னஞ்சலை பார்வையிடுவதற்காக உங்கள் கணனியை இயக்கியவுடன் வழமைபோல் உங்கள் கணனி இயங்குநிலையை அடையும் வரை நீண்ட நேரம் காத்திருக்காமல் சில செக்கன்களிலேயே உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குச் சென்றுவிட்டால்..நீங்கள் கணனியை வாங்கும்போது இயங்கிய வேகத்திலேயே தொடர்ந்து இயங்கினால்.. நீங்கள் எங்கிருந்தாலும் திடீரென்று தேவைப்படுகையில் நீங்கள் சேகரித்த  தகவல்களை உபயோகிக்கக் கூடியதாயிருந்தால்... உங்கள் கணனி தொலைந்துவிட்டால் உங்கள் தரவுகள் முழுமையாகவே இழக்கப்பட்டுவிடுமே என்னும் பயமில்லாது போய்விட்டால்...புதிதாய் நீங்கள்  வாங்கும் வன்பொருட்களை(digitel camera,Printer,etc.) கணனியுடன் இணைப்பதற்கிடையில் நீண்ட நெடிய படிமுறைகளைத் தாண்ட வேண்டியில்லாமல் கணனியுடன் இனைத்தவுடன் வேகமாகவே உபயோகிக்கக்கூடியதாயிருந்தால்...நீங்கள் குதூகலமாயிருப்பீர்கள் என உணர்கிறீர்களா..??

கவலையை விடுங்கள்..Google உங்களுக்காகவே Chrome OS உடன் தயாராகிவிட்டது.. உங்களுக்குப் பரீச்சயமான Microsoft windows போன்ற ஆனால் புதியதொரு இயங்குதளம்(operating system)..இது பெரும்பான்மையாக இணையத்தை அடிப்படையாகக் கொண்டதொரு இயங்கு தளம்..



Monday, December 6, 2010









Facebookஇன் புதிய profile..LinkedInற்கு ஆப்பா..??

நேற்றிரவு Facebook புதியதொரு profile view வை அறிமுகப்படுத்தியுள்ளது.இன்று காலை பெரும்பாலான ஆங்கில தொழிநுட்பத் தளங்களில் இது தான் செய்தி.
இப் புதிய  மாற்றத்தின்போது அவர்கள் இரு  விடயங்களை முக்கியமாகக் கவனத்திலெடுத்துள்ளார்கள்.முதலாவது விடயங்களைச் சுவாரஷ்யமான முறையில் காட்சிப்படுத்தல், மற்றையது பயனர்கள் அடிக்கடி உபயோகிக்கும் விடயங்களை முன்னிலைப் படுத்தி எளிதில் அடையச் செய்தல்.இதற்காக profile பக்கத்தை அணுஅணுவாக ஆராய்ந்திருக்கிறார்கள். உதாரணமாக view more photos முன்பெல்லாம் முக்கியத்துவம் குறைந்த பல இணைப்புகளுடன் இருந்தது.அதனை இப்போது சரி செய்து இருக்கிறார்களாம்.

பிரதான மாற்றங்களாக உங்கள் பிறந்தநாள்,தொழிலிடம்,வசிப்பிடம் போன்ற தகவல்களை முன்கொண்டுவந்திருக்கிறார்கள்.அத்துடன் மிக அண்மையில் உங்களின் பெயரிடப்பட்ட புகைப்படங்களினை வரிசையாகக் காட்சிப்படுத்தும் வசதியினை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.அங்கே நீங்கள் விரும்பாத புகைப்படங்களை மறைக்கும் வசதியினையும் ஏற்படுத்தியிருக்கிறார்களாம்.Tab வசதியினை profile படத்தின் கீழ்கொண்டுவந்திருக்கிறார்கள்.

சுவாராசியமான மாற்றம் info பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.உங்கள் கடந்த கால ,நிகழ்கால தொழில் வழங்குனரின் விபரங்கள்,நீங்கள் முன்பு,தற்போது பணியாற்றிய project விபரங்கள்,உங்களுடன் பணியாற்றியோர் விபரங்கள் என பல புதிய விபரங்களை இணைத்துள்ளார்கள்.இவற்றின்மூலம் உங்கள் face book profile info பக்கம் ஏறக்குறைய ஓர்online resume போன்றதொரு தோற்றப்பாட்டினைக் கொடுக்கும்.இது அண்மைக் காலமாக தொழில்சார் profile உருவாக்குவதை நோக்காகக்கொண்டு துரிதமாக வளர்ந்துவரும் LinkedIn ற்கு ஆப்படிக்கும் முயற்சியாகவே பரவலாகப் பேசப்படுகிறது. ஏனெனில் புதிதாக இங்கு facebook profile info வில் இணைக்கப்பட்ட விடயங்களை linkedIn முதலிலேயே சிறிது மாறுதலான வடிவில் வழங்கிக் கொண்டிருந்தது.எனினும் இவ் ஆப்படிக்கும் முயற்சியில் facebook எந்தளவு வெற்றி பெறுகின்றது என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும். facebookகை ஓர் தொழில்சார் தளமாகவும் பார்க்க எவ்வளவு பேர் முன்வருகின்றார்கள் என்பதில் தான் இது தங்கியுள்ளது.

தற்போதைக்கு இப் புதிய profileஐ நீங்கள் விரும்பினால் உடனடியாக நீங்களாகவே Activate செய்யும் வசதியை வழங்கியிருக்கிறார்கள்.ஆனால் புதிய profileற்கு மாறிய பின்னர் old is gold என்று பழைய profile ற்கு மாற எண்ணுபவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.இங்கே சென்று நீங்கள் புதிய profileற்கு மாறிக்கொள்ளலாம்.ஆனால் சிறிது சிறிதாக அவர்களே அடுத்த வருட முற்பகுதியிலே அனைவரையும் இப் புதிய profile க்கு மாற்றிவிடக்கூடும்.
உத்தியோகபூர்வ தகவல் அறிய இங்கே சொடுக்குங்கள்.. ;)


Wednesday, November 24, 2010









Facebookக்கு சரியானதோர் மாற்றுத்தேர்வு..!?

Facebook பாவனையாளர்களின் சொந்த விடயங்களைப் பகிரங்கப்ப்டுத்துகின்றது என்ற விவாதம் உச்சக்கட்டத்தை அடைந்த தறுவாயில் , ”தனது சொந்தத் தகவல்களை சமூகவலைத்தளங்களில் தனது சொந்தக்கணனியிலேயே    பேணுதல் “ என்ற கோசத்துடன்
நான்கு பல்கலை மாணவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த Diaspora. ஆனால் இதற்குக் கிடைத்த வரவேற்பு ஏதோ நான்கு பொடிப்பசங்களின் சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என  கவனிக்காமல் விட்டு விடக் கூடியதாயிருக்கவில்லை.ஏற்கனவே Mark Zuckerberg
இளம் வயதிலேயே Facebook ஊடாக சாதித்திருந்தமையும் ஒரு காரணமாயிருக்களாம். Diaspora வின் ஆரம்ப முன்னெடுப்புகளிற்காக 39 நாட்களில் 10000 அமெரிக்க டொலர்களைத் தன்னார்வத் தொண்டர்களிடமிருந்து இணையமூடாகத்  திரட்டுவடென்ற இலக்கில் களம் இறங்கினார்கள். ஆனால் நடந்ததை அந்த நான்கு இளைஞர்களுமே எதிர்பார்த்திருப்பார்களோ தெரியாது.


Monday, October 25, 2010









நீங்கள் உபயோகிப்பது office 2007/2003 யா எனும் பிரச்சினைக்கான ஓர் தீர்வு..

நீங்கள் அனுப்பும் கோப்புகள் தங்களால் வாசிக்க முடியாத வடிவில் உள்ளதாக உங்கள் நண்பர்களிடம் அடிக்கடி திட்டு வாங்குகின்றீர்களா..??
உதாரணமாக நீங்கள் MsOffice 2007 பாவனையாளராயிருக்க உங்கள் நண்பர்கள் office 2003 பாவனையாளராயிருந்தால் நீங்கள் .docx formatல் அனுப்பும் word கோப்புகளையோ .pptx format ல் அனுப்பும் கோப்புகளையோ
உங்கள் நண்பர் தனது office 2003 நிறுவப்பட்டுள்ள கணனியில் உபயோகிக்க முடியாது அவதிப்படுவார்.

உங்கள் நண்பர் office2003/ 2007யா உபயோகிக்கிறாரென்று முன்கூட்டியே உங்களுக்குத் தெரிந்திருந்தால் உரிய formatல் அனுப்ப முடியும்.ஆனால் உங்கள் நண்பர் எதனை தனது கணனியில் நிறுவியிருக்கிறாரென்று முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டிய தேவை இனிமேல் இல்லை.



Sunday, October 24, 2010









YouTube வீடியோவில் நீங்கள் விரும்பும் பகுதியை மட்டும் கத்தரித்து எடுக்க..

நாம் சில சமயங்களில் பார்த்து ரசிக்கும் You Tube கானொளிக் காட்சிகளை
Face Book ,Twitter போன்ற சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற இன்பத்தை/துன்பத்தை ;)  மற்றவர்களையும் பெறச் செய்ய வேண்டுமென விரும்புவோம்..ஆனால் சில சமயங்களில் அவ் வீடியோவின் நீளம் பத்து நிமிடங்களை அண்மித்து பலரது பொறுமையைச் சோதித்து விடும்..இன்னும் சில சமயங்களில் அவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே ரசிக்கக் கூடியதாயிருக்கையில் பொறுமையாக முன்னேயுள்ள பகுதி load ஆகும்வரை பொறுமை பேணி எங்சிய பகுதிக் காணொலியைப் பார்க்க வேண்டி ஏற்பட்டு கடுப்பாக்குவதுமுண்டு..இனி மேல் இந்தக் கவலையை விட்டு விடுங்கள். சில இனையத் தளங்கள் You Tube வீடியோவின் ஒரு குறித்த பகுதியை மட்டுமே வெட்டியெடுத்து நாம் உபயோகிக்கக் கூடிய வடிவில் தருகின்றன.அவ்வாறான தளங்களின் இணைய முகவரியை முன்பொருமுறை வழங்கியிருந்தேன்.
 tubechop தளத்தில் எவ்வாறு காணொளியைக் கத்தரிப்பது என்று சற்று விளக்கமாகப் பார்ப்போம்.


Wednesday, October 13, 2010









நீங்கள் Net-cafeயில் Facebook உபயோகித்துவிட்டு Logout செய்ய மறந்து விட்டால்..


பொதுக் கணனிகளில் நீங்கள் உங்கள் Facebook கணக்கை உபயோகிக்கின்றீர்களா..? நீங்கள் ஒரு Net Cafe யில் உங்கள் Facebook  கணக்கை உபயோகித்துவிட்டு கணக்கிலிருந்து வெளியேற (Log out )மறந்துவிட்டாலோ அல்லது உங்கள் கடவுச்சொல்லை நினைவில் வைத்திரு Remember me :)  தெரிவை நீக்க மறந்துவிட்டாலோ உங்கள் கணக்கில் புகும் ஒரு விசமியால் நிகழக்கூடிய விபரீதத்தை ஒரு தடவை நினைத்துப் பாருங்கள்...

இன்றுமுதல் நீங்கள் இந்தக் கவலையை விட்டுவிடலாம்.. :)


Wednesday, October 6, 2010









YouTube வீடியோக்களை இலகுவில் தரவிறக்க..


 இப்போதெல்லாம்  ஏதாவதொரு விடயம் சம்பந்தமான வீடியோவைப் பார்வையிடவோ ,பாடல்களைப் பார்த்து ரசிக்கவோ நாமெல்லாம்  YouTube ற்குச் சென்றுவிடுகின்றோம்.அன்றாடம் நீங்கள் YouTube ல்  பல அருமையான வீடியோக்களைப் பார்த்து ரசிப்பீர்கள்.சில சமயங்களில் உங்களுக்கு அவற்றைத் தரவிறக்கி உங்கள் கணனியில் சேமித்து வைத்திருக்கத் தோன்றும்.இதற்காக நீங்கள் எந்த மென்பொருட்களையும் உங்கள் கணனியில் நிறுவியிருக்க வேண்டிய அவசியமில்லை.keepvid என்ற இணையத் தளத்தின் துணையுடன் நீங்கள் இலகுவில் தரவிறக்கிக் கொள்ளளாம்..

http://keepvid.com/

நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL ஐ மேலுள்ளவாறான பெட்டியில் வழங்கி Download ஐ அழுத்துங்கள்.
அவர்கள் வெவ்வேறு தரத்(Quality)திலான அவ் வீடியோவைப் பட்டியலிடுவார்கள்.
http://keepvid.com/

அதில் நீங்கள் விரும்பிய தரத்தைச் சுட்டும்  இணைப்பைச் சொடுக்கி அவ் வீடியோவைத் தரவிறக்கி உங்கள் கணனியில் சேமித்துக் கொள்ளளாம்.

YouTube வீடியோவிலிருந்து உபயோகமான பகுதியை மட்டும் கத்தரித்து எடுப்பது சம்பந்தமான பதிவிற்கு இங்கே சொடுக்குங்கள்.. :)


Saturday, September 25, 2010









Google என்றொரு தேடற் பொறி(Search Engine ) புதுசாய் வந்திருக்காம்..


என்ன..?! மொழி படத்தில் M.S பாஷ்கர் மணிரத்தினம், அசாருதீன் பற்றி சொன்னது தான் நினைவிற்கு வருகின்றதா..??


தேடற்பொறிகளின் வல்லரசனாக வலம் வரும் Google ஆரம்பகாலத்தில் எப்படியிருந்திருக்கும் என்று ஓர் உள்ளார்ந்த உந்துகையில் ;) இணையத் தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது சில சுவாரசியமான தகவல்கள் சிக்கின.
1995ல்   Staford பல்கலைக்கழகத்தில் Larry Page மற்றும் Sergey Brin  ஆகியோரின் p.h.d ஆய்வில் ஆரம்பித்து 15 வருட காலத்தினுள் பல துறைகளில் கால் பதித்து அசுர வளர்ச்சி கண்டுவிட்டது.

கீழுள்ள சுட்டிகளைச் சொடுக்கி விபரங்களைப் பார்வையிடுங்கள்.
  • முதன் முதலில் Google இப்படித் தான் இருந்திருக்கின்றது.
  • Google Beta பரிசீலனையின் போது இப்படி இருந்திருக்கின்றது.
  • அப்போதைய Google இன் பாவனையாளர்கள் இவ்வாறெல்லாம் தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கின்றார்கள்.


Wednesday, September 15, 2010









YouTube வீடியோவில் உபயோகமான பகுதியை மட்டும் கத்தரித்து எடுக்க..

வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதைப் பற்றிக் குறிப்பிடுவதென்றால் இன்று You Tube தவிர்க்கமுடியாததொரு காரணியாக விளங்குகின்றது.இவ் you Tube பற்றிய கருதுகோள் 2005ல் PayPal நிறுவன ஊழியர்களான Chad Hurley, Steve Chen மற்றும் Jawed Karim ஆகியோரின் எண்ணத்தில் உருவாகி $3.5 மில்லியன் மூலதனத்துடன் 2005ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருட காலப்பகுதியினுள்ளேயே Google நிறுவனத்தின் கழுகுப் பார்வையினுள்ளே சிக்கி $1.65 பில்லியனிற்கு விலைக்கு வாங்கப்பட்டு இன்றும் Google இன் இணை நிறுவனங்களில் ஒன்றாக பிரமாண்டமாக வளர்ச்சியடைந்தவாறேயுள்ளது.

கலிபோர்னியாவிலுள்ள YouTube தலைமை அலுவலகம்
முதன் முதலில் me at the zoo  என்ற வீடியோவை Jawed Karim சித்திரை மாதம் 23, 2005ல்  தரவேற்றி ஆரம்பித்திருக்கிறார்.இன்று ஒவ்வொரு நிமிடமும் 24 மணிநேரத்திற்கு மேற்பட்ட வீடியோ உலகெங்குமிருந்து தரவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றதாம் என்றால் அதன் பிரமாண்ட வளர்ச்சியைப் பாருங்களேன்..ஆனாலும் பதிப்புரிமை மற்றும் காப்புரிமை மீறல் ,தனிப்பட்ட சுதந்திர மீறல் எனப் பல விமர்சனங்களும் YouTube மீது இல்லாமலில்லை.

எத்தனையோ வகையான அனுகூலங்களை You Tube வழங்கினாலும் நம்மைப் போன்ற பலரிற்கு பயன்படுவது நாம் ரசித்த You Tube வீடியோக் காட்சிகளை Face Book ,Twitter போன்ற சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களையும் பெறச் செய்வது தானே.. ;)..ஆனாலும் சில சமயங்களில் அவ் வீடியோவின் நீளம் பத்து நிமிடங்களை அண்மித்து நம்மில் பலரது பொறுமையைச் சோதித்து விடுகின்றது..இன்னும் சில சமயங்களில் அவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே ரசிக்கக் கூடியதாயிருக்கையில் பொறுமையாக முழு வீடியோவையும் பார்க்க வேண்டி ஏற்பட்டு கடுப்பாக்குவதுமுண்டு..இனி மேல் இந்தக் கவலையை விட்டு விடுங்கள். சில இனையத் தளங்கள் You Tube வீடியோவின் ஒரு குறித்த பகுதியை மட்டுமே வெட்டியெடுத்து நாம் உபயோகிக்கக் கூடிய வடிவில் தருகின்றன.அவ் இணையத் தளங்களிற்குச் செல்ல கீழுள்ள சுட்டிகளைச் சொடுக்குங்கள்.
1) TubeChop
2)splicd 


Wednesday, September 8, 2010









என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க யாருமே இல்லையா..??


அண்மைக்காலமாக ஒரு ஆறு Error messages வந்து  என் நிம்மதியான தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டே இருக்கிறது..நானு எவ்வாறெல்லாமோ முயன்று பார்க்கிறேன்..சரிசெய்ய முடிகிறதேயில்லை..
அப்போதுதான் ஒரு யோசனை தோன்றியது..எங்கள் தமிழ் பதிவுலகில் தான் நூற்றுக்கனக்கான தொழிநுட்பப் பதிவர்கள் இருக்கிறார்கள்.எத்தனை ஆயிரம் கணனி வல்லுனர்கள் நாளாந்தம் தமிழ் பதிவுகளை உலகெல்லாம் இருந்து வாசிக்கிறார்கள்.இவர்களிடம் சொன்னால் உடனே தீர்த்துவைத்துவிடப் போகிறார்கள்.இதற்குப் போய் தூக்கத்தை இழப்பதா..?? யாரது..??NO..Never எண்டிறது..அதைத்தான்க நானும் சொல்ல வாறன்..இதோ..இவை தான் ..அவை..

முதலாவது..




 அழிக்கிறதுக்கு இப்ப நான் என்ன செய்ய? proceed ஐயா delete ஐயா  சொடுக்கணும்(click)?

இரண்டாவது..



இது ERROR ஆ..?? ERROR இல்லையா..?? அல்லது ERROR இல்லையென்பதே ஒரு ERROR ஆ??

மூன்றாவது..



key Board டே failure ஆன பிறகு F1,F2 அமத்தெண்டிறாங்களே..! என்னை என்ன பைத்தியக்காறன் எண்டு நினைக்கிறாங்களா..? இல்லை..அவங்களுக்கு பைத்தியமா..??

நான்காவது..



Tipsஏ இல்லையெண்டிறது எல்லாம் ஒரு Tipஆ..?

ஐந்தாவது..



இப்ப என்ன எண்டிறாங்க..?? Install ஆகுதெண்டிறாங்களா?? இல்ல Uninstall ஆகிதெண்டிறாங்களா??

ஆறாவது..



error காட்டிறதிலயே error காட்டுதே..??

செப்பா யாராச்சும் உதவுங்கப்பா..??என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்து என்ரை நிம்மதியான நித்திரையை மீட்டுத்தர யாருமே இல்லையா..?? ;) 


Thursday, September 2, 2010









தடயமில்லா இணையப் பாவனை நோக்கி..-02

தடயமில்லா இணையப் பாவனை பற்றிய சில அடிப்படைத் தகவல்களைப் பெற தடயமில்லா இணையப் பாவனை நோக்கி-01 ஐ வாசித்துவிட்டு இங்கே வாருங்கள்.

நாம் இணையத்தில் உலாவுகையில் ஒரு இணையத் தளத்திற்கான URL ஐ அடித்தோமென்றால் பின்புலத்தில்  DNS எனும் செயன்முறை நடந்து முடிந்தே அவ் இணையத் தளம் எமது பார்வைக்கு வருகின்றது.
உதாரணமாக நாம் www.nizal-sinmajan.blogspot.com எனும் URL ஐ அடித்தோமென்றால் முதலில் அத் தளமுள்ள server இனுடைய IP முகவரி கண்டறியப்பட்டு அவ் IP முகவரியினூடாகவே உரிய தளம் பெறப்பட்டு எங்கள் Google chrome, firefox போன்ற உலாவி(Browser)களில் காட்சிப்படுத்தப்படுகின்றது.இவ் DNS வசதி மட்டும் இல்லாவிட்டால் நாம் இணையத் தள முகவரிகளை இலக்கங்களில் தான் மனனம் செய்தோ பதிந்தோ வைத்திருக்கவேண்டியிருந்திருக்கும்.உதாரணமாக twitter தளத்திற்குச் செல்வதற்கு http://168.143.162.36/ என்றே அடிக்கவேண்டியிருக்கும்.இவ் DNS வசதியானது இலக்கங்களுடன் விளையாடுவதற்கு ;) நம்மில் பலருக்குள்ள சிரமத்தைப் போக்கியிருக்கின்றது.
ஆனால் எங்கள் உலாவிகள் நாம் ஏற்கனவே விஜயம் செய்த இணையத் தளத்திற்கு மீள விஜயம் செய்கையில் மீள DNS செயன்முறையில் ஈடுபட்டு நேர விரயம் ஏற்படாமலிருக்க நாம் விஜயம் செய்த தளங்களையும் அவற்றின் IP முகவரியையும் (நாம்  incognito/private browsing நிலையில் இணையத்தில் உலாவினால் கூட)நமது கணனியிலேயே சேமித்து வைக்கின்றது. இங்கே தான் நமது தடயமில்லா இணையப் பாவனைக்கு ஆப்பு அடிக்கப்படுகிண்றது.
Run இல் சென்று cmd என அடித்தோ அல்லது வேறு முறைகளிலோ Command prompt ஐ பெறுங்கள்.அதிலே ipconfig /displaydns என அடித்து ENTER செய்து பாருங்கள்.நீங்கள் விஜயம் செய்த தளங்களின் முழு வரலாறே வந்து இருக்கும்.இங்கே நீங்கள் private browsing இல் ஈடுபட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் தள முகவரிகளைச் சேமித்து வைத்திருக்கும்.

கவலையை விடுங்கள்.இதனை நாங்கள் அழித்துவிடலாம்.command prompt இல் ipconfig /flushdns என அடித்து EN TER செய்தால் எல்லா விபரங்களையும் அழித்துவிடலாம்.
யாரது அப்பாடா என ஆழ்ந்த பெருமூச்சு விடுவது..?? இன்னும் சில வழிகள் இருக்கின்றன உங்கள் இணையத் தள விஜயங்களிற்கான தடங்களைப் பெற்றுக் கொள்வதற்கு..


Friday, August 27, 2010









தடயமில்லாத இணையப் பாவனையை நோக்கி..-01

சில சமயங்களில் நம்மில் பல பேரிற்கு நாம் விஜயம் செய்த இணையத் தளங்களின் தள விபரங்களை வேறு நபர்கள் அறியாமலிருக்க வேண்டும் என்ற தேவையிருக்கலாம்.காரணங்கள் பல இருக்கலாம்  ;) . தடயமற்ற முறையில் இணையத் தளங்களில் உலாவுவதெப்படி என்று எனக்குத் தெரிந்த சில விடயங்களை உங்களுடன் பகிரலாமென எண்ணியுள்ளேன்.
நம்மில் பலர் நமது கணனியில் நமது இணையத்தள விஜயங்கள் பற்றிய தடயம் இல்லாமல் இணையத்தில் உலாவும் நோக்கத்துடன் பாவனையின் பின்னர் ;)   firefox,chrome போன்ற பல உலாவிகளின்(Browser) துணையுடன்  பாவனைத்தொகுப்பை( history) அழித்துவிட்டு திருப்திப்பட்டுக் கொள்கிறோம்.
 இந்த பாவனைத் தொகுப்பை(History) அழிக்கும் நடவடிக்கையை இலகுவாக்கும் முகமாக ஏறக்குறைய அனைத்து உலாவிகளும் இப்போது Private Browsing/incoginto
வசதியை வழங்குகின்றது.இவ்வசதியை நாம் பயன்படுத்தினால் மேற்படி உலாவிகள் எமது இணையத் தள உலாவல்களிற்கான பாவனைத் தொகுப்பை பதிந்து வைத்துக்கொள்வதில்லை.இவ் வசதியைப் பெற்றுக்கொள்ள Google chromeல் ctrl+Shift+n பொத்தான்களை ஒன்றாக அழுத்தினால் போதும்.incoginto வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.Firefox என்றால் ctrl+Shift+P யை அழுத்தி மேற்கூறிய வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.ஆனால் இவ் incoginto சில வெளிப்படையான விடயங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்காது.
chromeஇல் கீழுள்ளவாறான எச்சரிக்கையில் அவர்கள் இது எச் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பானதல்ல என்பதை உங்களிற்கு குறிப்பிட்டிருப்பார்கள்.

 ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் இது உங்களிணையத் தள விஜயங்கள் பற்றிய பாவனை வரலாற்றில் (History)பதிந்து வைத்திருப்பதைத் தடுக்குமே தவிர உங்கள் கணனியிலேயே வேறெங்கும் உங்கள் இணையத் தள விஜயங்கள் பற்றிய தகவல்களைச் சேமிக்கப்படுவதையும் தடுக்கும் என்று குறிப்பிட்டுவிட முடியாது.அங்கே தான் பெரியதொரு ஓட்டையிருக்கிறது.மிக இலகுவில் உங்கள் கணனியிலிருந்தே நீங்கள் incoginto  வசதியைப் பாவித்தால் கூட நீங்கள் பாவித்த தள விபரங்களைப் பெற்றுக்கொண்டுவிடலாம்.அது எப்படியென்றும் அதனைத் தடுப்பதெப்படியென்றும் வேறோர் பதிவில் பார்ப்போம்.


Tuesday, August 24, 2010









டக்டக்கோ..

டக்டக்கோ என்றதும் எதோ சிறு பிள்ளைகளின் விளையாட்டுடன் சம்பந்தப்பட்ட பதிவு என எண்ணி வந்திருந்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான்.

இது அதுபற்றியது அல்ல.DuckDuckGo என்பது Google,Bing,yahoo போன்றதொரு தேடற்பொறி(search engine)யின் பெயர். அண்மைக்காலமாகத் துரித கதியில் இணையத் தேடல் உலகில் பிரபலமடைந்துவருகிறது இந்த DuckDuckGo.

இவ் DuckDuckGoவில் நாம் தேடலிற்காக ஓரு சொல்லை அடிக்கின்றோமென்றால்
அது அச் சொல் பற்றிய பயனுள்ள சிறிய முற்குறிப்பொன்றை முன்கூட்டியே வழங்கிவிடுகின்றது(Zero-click info).உதாரணமாக Sri Lanka என்று தேடினோமானால் முதலில்
Sri Lanka பற்றிய முன்குறிப்பொன்று DuckDuckGo வால் தொடர்பான இணைய இணைப்புகளுக்கு (related web links)முன்னமே வழங்கப்பட்டிருக்கும்.அத்துடன் அவ் இணைப்பு உத்தியோகப்பூர்வ தளத்தினுடையதா என்பதையும் அருகிலேயே DuckDuckGoவில் தந்து விடுகிறார்கள்.இதன்மூலம் நாம் பெறப்போகும் தகவல் உத்தியோகபூர்வமானதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.


அத்துடன் பலபொருள் கொள்ளக்கூடிய ஒரு சொல்லை நாம் DuckDuckGoவில் தேட முற்பட்டால் அது நம்மை முன்கூட்டியே பலபொருள் உள்ளது பற்றி நினைவுறுத்தும்.இதன் மூலம் நாம் பயனற்ற வேறு இணைப்புகளிற்குச் சென்று எமது நேரத்தை வீணடிப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.
DuckDuckGoவை பயன்படுத்தும்போது பயன்படுத்தும் எங்களைப் பற்றிய எந்த தகவல்களையும் இரகசியமான முறையில் பெற்றுக்கொள்வதில்லை.google இவ்வாறாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதாக சர்ச்சை பலகாலமாயுள்ளது. தனிப்பட்ட சுதந்திரத்தைத் த் தாம்(privacy) மீறுவதில்லை என்பதை தமக்குரிய விளம்பரமாகக்கூட உபயோகித்துவருகின்றது DuckDuckGo.


மேலும் DuckDuckGoவில் தேடலில் ஈடுபடுகையில் நாம் பல விசைப்பலகை சுருக்கக்குறியீடு(Key Board short cuts) களை உபயோகிக்கலாம்.உதாரணமாக கீழ் நோக்கிய அம்புக்குறியை உபயோகித்து எமக்குத் தேவையான கீழுள்ள தேடல் பெறுபேறுகளை இலகுவில்அடைந்துகொள்ளலாம்.
துரிதகதியில் வளர்ந்து வரும் இந்த DuckDuckGo தேடற்பொறியை நீங்களும் உபயோகித்துப்பார்க்க விரும்பினால் இங்கே சொடுக்குங்கள்.