Pages

Subscribe Twitter Twitter
Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Tuesday, September 13, 2011









புதிய கைத்தொலைபேசியோ, மடிக் கணனியோ வாங்க வேண்டுமா..??கவலையை விடுங்கள்..

புதியதொரு கையடக்கத் தொலைபேசியோ, மடிக் கணனியோ, புகைப்படக் கருவியோ வாங்கியபின்னர் உடனடியகவே அறிமுகமாகும் புதிய மொடெலாலோ அல்லது நாம் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து வாங்கியவுடன் அந்தப் பொருளின் சந்தை விலையில் சடுதியாக ஏற்படும் வீழ்ச்சியாலோ கடுமையாகப் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..??கவலையை விடுங்கள்.

அண்மையில் உங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்காகக் கொண்ட Decide.com என்ற தளமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. குறித்த இலத்திரனியல் பொருளை நீங்கள் வாங்கலாமா இல்லை புதிய அறிமுகத்திற்காகக் காத்திருத்தல் உசிதமானதா..விலையிலேற்படக்கூடிய மாற்றங்களிற்கான எதிர்வு கூறல்கள் என உங்களிற்கு ஆலோசனை வழங்கக் கூடியவாறு இந்தத் தளத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு புதிய மடிக்கணனி வகைகள்,ஒரு புதிய வகை புகைப்படக் கருவி ,ஒரு புதிய வகை தொலைக்கட்ட்சியென புத்திது புதிதாக அறிமுமாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நுகர்வோரிற்கு இந்தத் தளம் பெருந்துணையாக இருக்கும்.ஆனால் இத் தளம் பிரபலமானால் இவர்களது விலை எதிர்வு கூறல்கள் பொருட்களின் விலையை, நிரம்பலை செயற்கையாக நிர்ணயிக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்திவிடும் என விமர்சிப்பவர்களும் உள்ளார்கள்
.
எது எவ்வாறானாலும்  புதிய மொடல்களின் அறிமுகம் பற்றிப் பெரிதாக உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியாதவர்கள், புதியதொரு இலத்திரனியல் உபகரணத்தினை வாங்கமுற்படுகையில் இந்தத் தளத்தினது எதிர்வுகூறலையும் ஒரு முறை கவனித்துத் தங்கள் தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் ஏற்படக் கூடிய ஏமாற்றத்தினைத் தவிர்த்துக்கொள்ளலாம்..

மேலதிக விரிவான விபரங்களிற்கு இங்கே சொடுக்குங்கள்
tech crunch பதிவிற்கு.. 


Tuesday, May 24, 2011









ராஜ் ராஜரட்ணம்..சிக்கியது எவ்வாறு ..??


ராஜ் ராஜரட்ணம்..
அண்மைக்காலமாக ஊடகங்களில் அதிகம் உபயோகிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று.
Gallean Group இன் நிறுவுனர்..
இலங்கையில் பிறந்து நியூஜோர்க்கில் வாழ்ந்தவொரு தமிழர் ...
பங்குச் சந்தை வியாபாரத்தின் மூலம் அமெரிக்காவின் முன்ணணி பணக்காரர்களில் ஒருவராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்....


87 000 அமெரிக்க டொலர்களை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்திற்காக வழங்கியவர்.ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை முன்ணாள் போராளிகளின் புனர்வாழ்விற்காக ஒதுக்க முன்வந்தவர்.இலங்கையில் 2004 சுனாமி அன்ர்த்தத்தின் பின்னான புனருத்தாரண பணிகளிற்கு உதவியதோடு மட்டுமல்லாமல் மிதிவெடியகற்றும் பணிகளிற்குப் பெருமளவில் உதவியவர்..

ஒக்ரோப்ர் 2009 காலப்பகுதியில் FBI யினால் இரகசியமான முறையில்  IBM போன்ற பல்வேறு பிரபல பொதுக் கம்ம்பனிகளிலுள்ள தனது நண்பர்கள் அல்லது கைக்கூலிகள் மூலம் அக் கம்பனிகளின்   சாதாரண வெளி நபர்களிற்குத் தெரியாத பெறுமதியான உள்வீட்டு தகவல்களைப் பெற்று அதற்கேற்ப பங்குச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் இலாபமீட்டினார் என்று குற்றச்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியேவந்து தன் மீதன குற்றச்சாட்டிலிருந்து வெளிவரக் கடுமையாகப் போராடினார் ராஜ்.

இந்த மாதம் 11ந் திகதியளவில் அவருக்கெதிராக  14 குற்றச்சாட்டுக்கள்  அமெரிக்க நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் ராஜ்ஜிற்கு தனது எங்சிய  வாழ்நாளை சிறையில் கழிக்கவேண்டிய அபாயம் நேர்ந்துள்ளது.இந்த 14 குற்றச் சாட்டுக்களில் 9 குற்றச்சாட்டுக்கள் சட்டவிரோத உள்வியாபாரத்திற்காகவும் எஞ்சிய 5 குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்ட சதி என்றமுறையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன.எது எவ்வறாயினும் ராஜ்ஜின் சட்டத்தரணி இதனை எதிர்த்து மேன் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் அமெரிக்கப் பொதுமக்களில் ஒரு சாரார் வியாபாரப் போட்டி காரணமாக பல பெரும் முதலைகள் இணைந்து ராஜ்ஜை சிக்கவைத்து விட்டது  எனவும்  மறுபுறம் சட்டம் அனைவருக்கும் சமம் என்பது அமெரிக்காவில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது என பெருமளவானவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

அரசின் உத்தியோகபூரவ செய்திக் குறிப்பைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.

ராஜ் மீதான வழக்கு விசாரனை, குற்றச்சாட்டுக்கள் பற்றி இணையத்தில் தேடியபோது அவர் சிக்கியது எவ்வாறு என பல சுவாரசியமான தகவல்கள்  கிட்டின. அவற்றைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.