Pages

Subscribe Twitter Twitter
Showing posts with label விக்ரர். Show all posts
Showing posts with label விக்ரர். Show all posts

Monday, July 28, 2014









சிதறிய‌ கண்ணாடித் துண்டுகளின் முகவரிகள்...



from www.bbc.com

உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றின் மீது பட்டுத்தெறிக்கும் சூரியஒளிக்கதிர்க்கீற்று ஒன்றுக்கு இருக்கும் சுதந்திரத்தை பாதுகாப்பதாக எண்ணியபடி, சற்று நேரம்முன்பு வெடித்துச் சிதறிய எறிகணையினால் சிதைந்த வாழ்விடமொன்றில் இருந்து வெளிப்பட்ட ஒரு கண்ணாடி துண்டுக்கு அபயமளித்த பாலஸ்தீனநிலம் இன்முகத்துடன் கந்தகத்தூசினை நுகருகின்றது. ஏறிகணையின் முகவரி "அவர்கள்". யாவும் கற்பனை என்று நிராகரிப்பதனையும், சத்தியம் என்று அளூத்தி உச்சரிப்பதையும் நான் விரும்பவில்லை ஆனால் நல்மனிதர்களின் மெளனம் உலகத்தில் பேரழிவுகளின் திறவுகோல். ஒடிவரும் நீரோடையின் சலசலப்பில் ஒரு மூளை நித்திரையில் இருக்கும் அவனுக்கு தெரியாமல் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டு மும்மணினேரம் முன்பு அவ் ஓசைமீது அவன் எரிந்துவிழுந்த போது பதியப்பட்ட "ஞாபகஇழையின்" தழும்புக்கு மருந்து தடவிக்கொண்டிருக்கிறது. ஓவ்வொரு நாள் காலையின் துயில்ழெழும் வேளையிலும் அவன் அந்த ஓசையினை வெறுப்பதே இல்லை.  
உதவி என்ற செயல் ஒன்றே உலக‌ இயக்கத்திற்க்கு காரணகர்த்தாவாகின்றது என்பது எனது நிலைப்பாடு. இடைவெளியின் பின் திண்ணையில் தோற்றம்...  சிறுவயதில் "காக்கும் கரங்கள்" என்று வாசித்த ஞாபகம். எங்கும் நீக்கமற‌ நிறைந்திருந்ந்தாலும் இடதுகை அறியாமல் வலதுகை செய்வதே பெரியஉதவியாக இருக்கும் என்று நினைப்பதற்குள் எங்கிருந்தொவந்த ஒட்சிசன் நிறைந்தவாயூ என்பெருமூச்சின் சுவாசமாய் என்னுள் பரவுகின்றது. "ஏணியாயும் தோணியாயும்" உதவிசெய்யும் பலர், மெழுகுவர்தியாக உருக்கும் சிலர், ஆலைமரமாக தாங்குபவர்கள், விளைநிலங்கள் எனஎண்ணற்ற வகையில் பூமி புண்ணியம் செய்கிறது இவர்களின் பெயரால். கண்களை மூடும் இமையால் கண்ணீரை மூடமுடிவதில்லை அதுபோல் ஒவ்வொருவரும் தம் "காக்கும் கரங்களை" நினைக்கும் தருணங்களில் காரணங்களின்றி இதயம் இரைகின்றது. 
அன்னையின்கை, அன்னமிட்டகை, அரவணைத்தகை, தொட்டணைத்தகை, அந்தோ தூரத்தே மனக்கண்ணிற்குத் தெரியும் கைகள் என சிந்தை தெளிவிக்கும் நினைவுகள் ஏராளம். உதவிதான் இறைவன் என்றால் நாஙகள் அவர்ப‌டைப்பு என்று மார்புதட்டி பெருமைகொள்ள நாம் தகுதியானவர்கள் அல்லாவிடின் கடவுள் படைப்பதற்கும், நாம் படைப்பதற்க்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. கூர்ப்புக்கொள்கையின் தக்கனதான் பிழைக்கும் என்று வாதிடும்போதும் உதவிடுதல் என்றசெயல் தவிர்க்கமுடியாதது. மனிதர் செத்துச் செத்து விழுந்தாலும் அவர்காலத்தால் ஈன்றஉதவி உயிர் பெற்று உலாவருகின்றாது, அசைவாடுகின்றது, மனங்களிற்குள் ஊடுருவுகின்றது, மனம் மாற்றுகின்றது. வெள்ளிநிலவின் தண்மைக்கு, என் அதன் "ஆண்மைக்கு" கூட‌, அதன் விகாரமான வதனம்தான் காரணமோ அதுபோல் எண்ணமுயர்ந்த இடத்தில் சிறுபுன்முறுவல்கூட உயிர்காக்கும் உதவியாகின்றாது. 

உலகத்தின் நிம்மதிக்கும் உதவி தேவை... உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஒன்றுசேர்க்கப்பட்டு ஒரேகுழியில் புதைக்கப்படுகின்றன, கண்ணாடித் தூண்டுகளின் முகவரிகள் காலதிதின் கண்ணாடியாக‌ எதோ ஒருவகையில் உதவி தேடி. ஏன்னைத் தூண்டிய கண்ணாடித் துண்டுகளின் முகவரிகள்... MH17, Gaza Crisis, South Sudan-Food Crisis, Syria Crisis, and many more.


Friday, December 10, 2010









எண்ணத்தெரிந்தவர்கள் மற்றும் எண்ணத் தெரியாதவர்கள் என உலகத்தில் உள்ளவர்களை மூன்றாக வகைப்பட்டுத்த முடியும்.

உலகவரலாறு வழமைபோன்று தனது பிடிவாதமான பாதையில் சற்றும் தளராமல் மனிதர்களைப் பணயமாக வைத்து போய்க்கொண்டிருக்கிறது. இஸ்லாமின் இறைத்தூதரின்(முகம்மது நபி- Peace be upon him) உருவத்தை காட்டுன்னாக(Cartoon) வரைந்து 'ஒருவிதமானபாராட்டு மற்றும் எதிர்ப்பை பெற்றுக்கொண்ட டென்மார்க் கேலிச்சித்திரஒவியர் தற்போது அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளாராம். ஐக்கிய இராச்சியத்திற்கு விஐயம் மேற்கொண்ட பாப்பாண்டவர் உலகத்தில் மதச்சார்பற்றவர்களின்(Secular) ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றுதிரளவேண்டும் எனக்கூறி, "தான் கண்ட நாசிசத்தை" தன் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டிஅரியணையிலுள்ளோர் ஆட்சிபுரிவோரிடம் தனது மனக்கவலையை கொட்டித்தீர்த்துள்ளார். இன்றைய யூதர்களுக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையும் அக்கறையும் இல்லையாம். அமெரிக்கா இருக்கும்போதுஏன் இருக்கவேணும் என திண்ணையில் இருக்கிற நீங்கள் நினைக்கிறது புரியுது எனக்கு.

அது சரி மனிதர்களை பணயமாகவைத்து என்றால் எப்படிஎன்கிற உங்கட கேள்வி நியாயம்தான்.


Friday, September 24, 2010









எண்ணத்தெரிந்தவர்கள் மற்றும் எண்ணத் தெரியாதவர்கள் என உலகத்தில் உள்ளவர்களை மூன்றாக வகைப்பட்டுத்த முடியும்.


உலகவரலாறு வழமைபோன்று தனது பிடிவாதமான பாதையில் சற்றும் தளராமல் மனிதர்களைப் பணயமாக வைத்து போய்க்கொண்டிருக்கிறது. இஸ்லாமின் இறைத்தூதரின்(முகம்மது நபி- Peace be upon him) உருவத்தை காட்டுன்னாக(Cartoon) வரைந்து 'ஒருவிதமான' பாராட்டு மற்றும் எதிர்ப்பை பெற்றுக்கொண்ட டென்மார்க் கேலிச்சித்திரஒவியர் தற்போது அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளாராம். ஐக்கிய இராச்சியத்திற்கு விஐயம் மேற்கொண்ட பாப்பாண்டவர் உலகத்தில் மதச்சார்பற்றவர்களின்(Secular) ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றுதிரளவேண்டும் எனக்கூறி, "தான் கண்ட நாசிசத்தை" தன் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டி, அரியணையிலுள்ளோர் ஆட்சிபுரிவோரிடம் தனது மனக்கவலையை கொட்டித்தீர்த்துள்ளார். இன்றைய யூதர்களுக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையும் அக்கறையும் இல்லையாம். அமெரிக்கா இருக்கும்போது, ஏன் இருக்கவேணும் என திண்ணையில் இருக்கிற நீங்கள் நினைக்கிறது புரியுது எனக்கு.

அது சரி மனிதர்களை பணயமாகவைத்து என்றால் எப்படி? என்கிற உங்கட கேள்வி நியாயம்தான். கேணல் சண்டர்ஸ் (அதுதாங்க KFC கடையிலுள்ள தாத்தா) யாரென்பது இன்றுள்ள அமெரிக்கச் சிறுவர்களுக்குத் தெரியாதாம் ஆனால் KFC என்றால் தெரியாதவர்கள் இல்லையாம். 11 வகையான மூலிகைகளையும் சில வசனைத்திரவியங்களையும் கொண்டு எப்படி வளர்த்த கோழியை "வதைத்து" பின் வறுத்து KFC செய்வது என்பதை வரிக்குவரி ஒரு காகிதத்தில் அதுவும் பென்சிலால கைப்பட எழுதிப்போட்டு, அந்த ஒரேயோரு ககிதத்தையே மூலதனமாகக் கொண்ட நிறுவனம் தான் KFC. இருவருக்குமட்டுமே தெரிந்த இருட்டுச் சுரங்கம் ஒன்றின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருகும் காகிதத்தின் துலக்கம் மங்குகிறதாம் என்பது KFCஇன் தற்போதைய கவலை. ஆனால் 60வயதினை கேணல் சாண்டர்ஸ் எட்டும்வரை ஒரு கடைக்காரரும் அவருடைய முறையை எற்றுக்கொள்ளவுமிலையாம், ஏறெடுத்துப் பார்க்கவுமில்லையாம் என்றால் பாருங்களேன். அதேவேளை கலாநிதி ஐயன்ஸ்டைனை எடுத்துக்கொள்ளுங்கள், பெளதீகத் தத்துவஞானி. சார்பியல் கோட்பாட்டினை (சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது) இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். வாயைபிளந்த விஞ்ஞானிகள் அவருடைய பிறந்ததினங்களில் எதாவது அதிசயம் நடக்கும் என இன்றும் நம்புகிறார்களாம். ஆனால் "சார்பியல் கோட்பாட்டிற்காக" அவருக்கு நோபல் பரிசு(Nobel Prize) வழங்கப்படவில்லை மாறாக "ஒளி மின் ஆற்றல்(Photovoltaic Effect)" தொடர்பான ஒரு சிறுவிடையத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பலகதைகள்தான் இன்று வரலாற்றை சிருஸ்டித்துக்கொண்டு இருக்கிறது. எனவெ இந்த வரலாற்றை விடுவோம். ஒரு உண்மையான மனிதனுக்கும் அவனுடைய அறிவியல்ஞானத்திற்கும் இடையேயான மென்மையான தொடர்புதான் அவனுடைய உண்மையான வரலாறு என்பது எனது நிலைப்பாடு, அது எற்றுக்கொள்ளப்படுகிறதா அல்லது மற்றப்படுகிறதா என்பது தேவையில்லாதது. யாராவது மேலுள்ள படத்தை விளங்கிக்கோள்ளா முடிகிறதா எனப்பருங்கள். அச்சடிக்கும்கருவியின்(Printer) காபன் தூள்(Toner)தான் அது. படுபயங்கரமான பச்சைவீட்டுவிளைவு ஊக்கி என்பது உங்களுக்குத் தெரியும். காபன் தூளில் என்ன மாற்றம் செய்தார்களோ தெரியவிலை பழைய காபன் தூள்மாதிரி இந்த புதிய காபன் தூள் இல்லையாம் ஆனால் ஒரேவிதாமான நேர்த்தியான அச்சாம்... என்னால நம்பவே முடியல, இந்தக் காபன் தூளின் வரலாற்று மாற்றத்தை. நீங்களும் உங்கட நியாயப்படுகளைச் சொல்லவாறமாதிரித் தெரியுது ஆனாலும் தலைப்பை ஒருதடவை வாசியுங்கோ... அப்ப தெரியும் நான் வரலாற்றின் எந்தப்பக்கம் என்று.



Saturday, September 11, 2010









உண்மையான நற்குணமுடைய மனிதனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று எவருமே இல்லை.


விஞ்ஞானம் விந்தையானது மட்டுமல்ல, சிலவேளைகளில் அது விசித்திரமானதும் கூட. விமர்சகர்கள் விஞ்ஞானத்தின் 'அவசரத்தன்மை'யை பலவீனமாக எடுத்துக்கொண்டு சூடாக விவாதிப்பதும் உண்டு. இன்றைய விஞ்ஞான விளைவு, வழிகாட்டும் நிலையிலா அல்லது எங்கோ ஒரு திசையில் 'வழிந்தோடும்' நிலையிலா என்பதும் விளங்குவதற்கு சற்றே கடினமாகத்தான் உள்ளது. சரி, அது இருக்கட்டும், திண்ணையில் இருக்கிற 'உங்களோடு' நேரடியாகவே விசயத்துக்கு வாறேன்.
"அதிக மதுபானம் அருந்துவபர்களின் ஆயுட்காலம், மதுபானம் அருந்துவதனை இடை நிறுத்தியவர்களிலும் பார்க்க, அதிகம் ", நான் சொல்லவில்லை, 20 வருடங்களாக 1800பேரைக்(அதிகமானவர்கள் ஆண்கள்) கொண்டு மேற்கொள்ளப்பட்ட ' புள்ளிவிபர ஆராய்ச்சி ' தெரிவிக்கிறது. வாழ்நாளிலே மது அருந்ததவர்கள் இங்கு கருதப்படவுமில்லை, கவலைப்படத் தேவையுமில்லை. ஆராய்ச்சிக் கட்டுரையின் முழு வடிவம் ஆங்கிலத்தில்.
ஆராய்ச்சி முடிவு ஒருபுறம் இருக்கட்டும், சரியா பிழையா என்பது தேவையில்லை, நடக்கிறதை கண்டுகொள்வோம் என்பது எனது நிலை. ஆனால் ஒருவிடயம் மிகவும் முக்கியமானது, என்னவென்றால், ' மது அருந்துவதைக் கைவிட்டவர்கள்(abstainers) ' பற்றியது. இவர்களது மனங்களுக்குள் ஆழ ஊடுருவினால் பின்வரும் 'மனத்தாக்கங்களை' கேட்கமுடியும். கையில காசில்லை, அதனால குடியை நிறுத்திட்டன், என்பவர்கள் சிலவேளைகளில் கழிவிரக்கம் கொள்கிறர்கள். தாம் மதுவுக்கு அடிமையாக காரணமான 'சந்தர்ப்பத்தையோ அல்லது சம்பவத்தையோ', மீட்டுப்பார்த்து தங்களின் கரங்களைக் கட்டிப்போடுகிறார்கள். "ஏனக்கு இவ்வளவு நஷ்டம் எற்பட்டுவிட்டது, மானம் போய்விட்டது" என்று கூறிக்கூறி தங்களின் மது எதிர்ப்பு வலிமையை கூட்டிக்கொள்கின்றனர். இவற்றை எல்லாம் கடந்து தன்னுடன் "கூட மது அருந்தியவர்களையும் / தற்போதும் மது அருந்த வற்புறுத்த்தும் நண்பர்களையும் " இவர்கள் வெறுப்போடு கடந்து செல்கிறார்கள். எனவே இவர்கள் மது அருந்துவபர்களையும் பார்க்க, அதிகமாக தங்களை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். வாழ்வுநிறைவு வேகமாக அண்மிக்கிறது.
"உங்களுடைய கோபங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படமாட்டிர்கள், மாறாக உங்களுடைய கோபம் தான் உங்களைத் தண்டிக்கும்" என்பது புத்தபெருமான் கூறியதாம். உங்களைத் தண்டிப்பதனை முதலில் நிறுத்துங்கள். முன்பின் தெரியாத, எந்தவித தொடர்பும் அற்ற, முற்றுமுழுதாக அன்னியமான ஒரு மனிதனுக்கும் தன்னால் இயன்ற உதவியை தன் நெருங்கிய நண்பனாகப் பாவித்து செய்யத் தெரிந்தவன் தான் நற்குணமுடைய மனிதன். ஏனவே அவனுக்கு எவருமே நெருங்கிய நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை. எம்மில் பலர், "கூட்டாக மதுஅருந்துபவர்களை" நெருங்கிய நண்பர்களாகக்கருதுவதும், மதுவை வெறுக்கும் போது 'எதிரிகளாக' நினைப்பதும்(அவர்களிடமிருந்து விலகி இருத்தல்) எமக்கு ஆரோக்கியமானது அல்ல. சமூகக்குடிப்பழக்கம்(social drinking) என்பது எம்மிடமிருந்து விலக்கப்படவேண்டும் என்பத்ற்கு காரணங்கள் உண்டு. உங்களிடமிருந்து விடைபெறும் முன்பு, 'வயிறுமுட்டக் குடிக்கும்' கனவான்களுக்கு ஒரு செய்தி:, நீங்கள் வாழும் காலம் அதிகமாக இருக்கலாம் ஆனாலும் சுயநினைவோடு, வாழ்வை ரசித்து வாழும் காலம் மிகவும் குறைவாகவே இருக்கும். உங்களை நீங்களே அறியாமல், ஞாபகம் இன்றி, பலகாலம் உயிரோடு இரு()ந்துகொண்டிருப்பீர்க்ள்.


Thursday, September 9, 2010









ஆடுகள் எல்லாம் கழுத்தில் கயிறுடன் பிறப்பதில்லை..! !


தேரேறிய நல்லூர் முருகன் தீர்த்தமாடி திருக்கல்யாணத்துக்கும் தயார், முருகா! முருகா! என திருவடிதொழும் பக்த்தர்கள் அமைதியாக தம் கடவுளருக்கு நேர்த்திக்கடன்கள் நிறைவேறியதாக ஓரு மனநிறைவு. அறுதிப்பெரும்பான்மை வாக்குகளால் தம்வம்ச இலட்சியங்கள் இன்று பரளுமன்றில் நிறைவேறியதாக மக்கள் பிரதிநிதிகள், கல்லெறி மரணதண்டனைக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஈரானியப் பெண்மணி, துபாய் பூருஜி (Burj Kahlifa) கட்டிட உயரத்திலும் 130 மீற்றர்கள் உயரம் குறைவன அளவு அடிஆழத்தில் உயிருடன் பத்திரமாக புதைந்து, வெளியேவர குறைந்தது நான்கு மாதங்களாவது செலுமென காத்திருக்கும் சிலியின் 33 சுரங்கப்பணியாளர்கள், கண்ணிவெடி அகற்றும் ஆபிரிக்க எலிகள் என உலகம் வலம் வந்துகொண்டிருக்க நாங்களும் நீங்களும் திண்ணையில் ...
உங்களுக்குத் தெரியும், ஒரு கதை இருக்குது! ரொம்பகாலத்துக்கு முன்பு கடவுள் ஆண்கள் பெண்கள் என்று உருவாக்கமுன்பே அழகு, அழகில்லாதது, பண்பு, பண்பில்லாதது, வீரம், மானம், அது இது என்று ஒருமனிதனுக்கு இருக்கவேண்டிய எல்லாப் சிறப்பியல்புகளையும் படைத்துவிட்டாராம். காலாகாலத்தில் கடவுள் மனிதனைப் படைக்கும் போது எழுந்தமானமாக( கடவுளின் சிபார்சு இன்றி ), எலவே பூமியில் படைக்கப்பட்டுள்ள சிறப்பியல்புகளும் வந்து ஒட்டிக்கெளுமாம். கதை, படைக்கப்பட்ட 'சிறப்பியல்புகள்' மட்டும் இருந்த் காலத்தில் நடந்ததாம். அழகும் அழகில்லாததும் சேர்ந்துதான் எப்போதும் திரியுமாம். அறிவு ரொம்பவே கவனமானதாம், அறிவில்லாததுடன் சேரவேமாட்டாதாம், வீரத்தைக் கண்டால் வீரமில்லாததுக்கு நடுக்கமாம், அதிர்ஷ்டத்தின் வழி தனிவழி இப்படி எல்லாமே ஒரே தினுசு தினுசாக இருந்தாதாம். இப்ப உங்களுக்கு விளங்கும் பல வகையான சுவாரசியம் மிக்க சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்புண்டு. அவற்றில் ஒரு மாதிரிக்கதைதான் இது!
அழகும் அழகில்லாததும் சேர்ந்து குளிக்கப் போனார்களாம். அழகில்லாதது, அழகின் ஆடைகளை அணிந்துவிட்டு தனது அசிங்கமான ஆடையினை விட்டுவிட்டு எங்கோ கண்தெரியாத இடம் சென்றுவிட்டதாம். அழகும் வேறுவழியின்றி அசிங்கமான ஆடையுடன் 'மானத்தை' காப்பாற்றியதாம். இன்றும்கூட அழகு அசிங்கமான ஆடையுடன் திரிவதாகத் தகவல். ஏனவெ இதுபோன்ற பல 'தில்லுமுல்லுகள்' அந்தக்காலத்தில் நடந்ததாகக் கேள்வி. ஏனவே, பாவம் மனிதர்கள் நாங்கள் இது போன்ற உண்மைகளை அறிவதில்லை. வெளியில் காண்பதை உண்மையேன நம்புகிறோம். ஒரு மனிதனின் இயல்புகளை கொண்டு அவனை தீர்ப்பிடவோ, புகழவே, இகழவோ, இன்ன்னும் எனென்னவோ செய்யக்கூடாது என கடுமையாக நம்புவதில் என்ன தவறு. ஏன்னைப் பொறுத்தவரையில் மனிதர்கட்கேஉரிய மனிதம் மட்டுமே கொண்டாடப்படவேண்டியது, நம்பப்படவேண்டியது.
எங்கள் அறிவுக்கு எட்டியவகையில், ஆத்மீக எண்ணங்களுக்கு எற்றவகையில் இலங்கயில் மடுத்திருப்பதியோ, கதிர்காமமோ, சிவனோளிபாதமோ, தலதாமாளிகையோ இந்தியாவின் அதோ இதோ, மிகவும் அமைதி, நிம்மதி, விரும்புவது எல்லாம் தருமென நினைப்பதைவிட மனிதர்கள் தமது மனிதத்துவத்தை முதன்மைப்படுத்துவது நல்லது. ஏன் இதை நான் சொல்லிமுடிக்கிறேன் என்றால் அந்தக்காலத்தில் இந்த 'நிம்மதி' என்ன தில்லுமுல்லு செய்திச்சுதோ யாருக்குத்தெரியும்.
ஆடுகள் எல்லாம் கழுத்தில் கயிறுடன் பிறப்பதில்லை, அதுபோல்
நாங்களும் நீங்களும் அங்கும்இங்கும் இழுபட எதையும்கொண்டு வரவில்லை.