Pages

Subscribe Twitter Twitter
Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Saturday, August 20, 2011









இலங்கை அணி.. கவனஞ் செலுத்த வேண்டியவை..


 இன்று இடம்பெற்ற தொடரைத் தீர்மானிக்கும் முக்கிய கிறிக்கெற் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவி இந்திய அணிக்கு தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்து இந்திய அணி விசிறிகளை சீண்டிய எங்களைப் போன்றவர்களிற்கு எல்லாம் மரண அடி வாங்கித் தந்துள்ளது. அடுத்த போட்டியிலாவது இலங்கை அணி வென்று மீண்டு எங்களைப் போன்றவர்களை பழையபடி சீண்டிப்பார்க்கும் போமிற்கு திரும்பச் செய்யுமோ என் நாமே குப்புறப் படுத்துச் சிந்தித்திருந்த வேளையில் கிறிக்கெற் பதிவெழுதாத நீயெல்லாம் ஒரு பதிவரா என நண்பனொருவன் வெந்த புண்ணில் வேல் பாச்சிவிட்டான்.


இலங்கை அணிக்கு ஆலோசனைகளை வழங்கி அணியை அடுத்த போட்டியிலாவது வெல்லச் செய்ய எதற்கும் சளைக்காமல் இலங்கை அணிக்காக வாதாடும் அமரேசைத் தொடர்பு கொள்வோமென்று பார்த்தால் அவர் தொடர்பு வலையமைப்புக்கு இப்பாலோ அப்பாலோ சென்றுவிட்டதால் ..இதோ நானே களத்தில் இறங்கி விட்டேன். இதோ எனது ஆலோசனைகள்.

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் இப்போதெல்லாம் தடுமாறுவதால் இன்னும் இரண்டு துடுப்பாட்ட வீரர்களை அணியிலிருந்து தூக்கிவிட்டு பந்துவீச்சாளர்கள் இருவரை அணியில் இணைக்கலாம்.தொடரை ஏற்கனவே இழந்து விட்டதால் அடுத்த போட்டியில் உலகில் மிக நீண்ட வால் (அது தாங்க tail end) கொண்ட அணியென்ற கிண்ணஸ் சாதனையை இலக்கு வைத்து பத்துப் பந்து வீச்சாளர்களும் ஒரு விக்கெட் காப்பாளருமாக ஒரு அணியைத் தெரிவு செய்யலாம். முடிந்தால் இந்திய அணித் தலைவர் டோணி போலப் பகுதி நேரமாகப் பந்து வீசக்கூடிய விக்கெட் காப்பாளர் ஒருவரை இணைப்பது அணிக்கு மேலும் வலுச் சேர்த்து சாதனையை மேலும் வலுவாக்கும்.

எத்தனை முழுநேரப் பந்து வீச்சாளர்கள் அணியிலிருந்தாலும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு தான் ஆரம்ப பந்துப் பரிமாற்றங்களை வீசி முடிக்கவேண்டும். முடிந்தால் லசித் மலிங்கவிற்கு ஓவரே கொடுக்காமல் அதனையும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு வீசி முடிக்கச் செய்யலாம்.

எப்போதோ ஒரு உலகக் கிண்ணத் தொடரில் சில ஐம்பதுகளை அடித்ததோடு மட்டுமல்லாமல் அணி தோற்கும் போதெல்லாம் ஐம்பது அடித்து சாதனை படைக்கும் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சாமர சில்வாவை தலைவராக நியமித்துப் அணியைத் தூக்கி நிறுத்துவதோடு மைந்தன் சிவா போன்ற விமர்சகர்களிற்குத் தகுந்த பதிலடி கொடுக்கலாம். அதுவும் அவரைத் துடுப்பாட்ட வீரராகவே கணிக்க முடியாது எனக் கருத்துக் கூறும் கன்கோன் போன்றவர்களை 4 துடுப்பாளர்+5 பந்து வீச்சாளர் + அணித்தலைவர் எனக் கருத்துக் கூறச் செய்யலாம். 

எல்லாவற்றிற்கும் மேலாக ”சுழற்றக் காத்திருக்கும் இலங்கை ” எனப் போட்டி தொடங்க முதலே ஆரூடம் கூறி எவ்வளவு அடி வாங்கினாலும் சளைக்காத எங்கள் விக்கிரமாதித்தன் லோசன் அண்ணாவின் வலைப்பூவை இலங்கை தொடர்பான போட்டித் தொடர்கள் ஆரம்பிக்க முதலே ஏதாவது தொழினுட்ப முறைகளைக் கையாண்டு உத்தியோகப்பற்றற்ற முறையிலே முடக்க வேண்டும். 

7 தடவை துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கப் போய் சகல தடவையும் இலங்கை அணியைத் தோற்கடிக்கச் செய்த அஷ்வின் போன்றவர்களையெல்லாம் ஏதாவது தடைச்சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டு அடுத்த போட்டிக்கு மைதானப் பக்கமே வரவிடாமல் செய்து இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 

யாரது..?? எனது பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சொல்லி மகஜர் தாயாரிப்பது..!!
பி.கு: யாவும் கலப்படமற்ற கற்பனை










அமெரிக்கா.. கருத்து.. மாற்றுக் கருத்து..



உண்மையிலேயே நாமெல்லாம் எமக்கு அருகில், எம்மைச் சூழ எம்மையெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கின்ற விடயங்களைப் பற்றியெல்லாம் அடிப்படையிலிருந்து அறிந்து வைத்திருக்கின்றோமா என்பதில் எனக்கு நீண்டகாலமாகவே ஒரு சந்தேகம்.

 முதலில் இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள்.அவர்களது விடைகளையும் கருத்துக்களையும் அவதானமாகக் கவனியுங்கள்..


சிரிப்பை அடக்கமுடியாதவர்கள் நன்றாகவே சிரித்துவிட்டு விடயத்திற்கு வாருங்கள்.


எங்களில் பலரும் இப்படியானவர்களாக இருப்பது மறுக்க முடியாத உண்மையே.
Facebook ல் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முற்பட்டுத் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுபவர்கள் பலரை நீங்கள் கண்டிருப்பீர்கள்.  இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து எங்கள் நண்பர் குழுவிடையே வழமை போலவே ஆரம்பித்த விவாதமொன்று நீண்டு ..வழமை போலவே முடிவேதும் இல்லாமல் முடிவடைந்துவிட்டது.

அந்த விவாதத்தின் அடிப்படைச் சந்தேகங்கள் இது தான்..

  • எதற்கெடுத்தாலும் தங்கள் கருத்தைக் குறிப்பிடுபவர்கள் இருக்கிறார்களே. அவர்கள் எத்தனை சதவீதமானவர்கள் விடயத்தின் ஆழத்தை புரிந்து  கருத்துத் தெரிவிக்கிறார்கள்..? ?
  • உண்மையிலேயே எல்லா விடயத்திலும் ஒருவனிற்கு சொந்தக் கருத்து இருக்க வேண்டுமா..?? சில விடயங்களில்  தனக்கென சொந்தக்கருத்தெதுவும் இல்லாமல் இருப்பதில் தவறேதுமிருக்கிறதா..?? 
  • மாற்றுக் கருத்து..மாற்றுக் கருத்து என்கிறார்களே.. அப்படி மாற்றுக் கருத்துக் கூறுபவர்களில் ஏறக்குறைய சகலருமே ஏன் எல்லாக்கருத்துக்குமே மாற்றுக் கருத்துக் கூறுகிறார்கள்..?? 
  • எது கருத்து ..??எது மாற்றுக்கருத்து..?? அநேகமானவர்கள் தெரிவிப்பதற்கு மாறாகத் தெரிவிப்பது தானா மாற்றுக்கருத்து..?? ;-)


யாரது..??இப்பவே கண்ணைக் கட்டுதே என்பது..
 சரி சரி .. பிழைத்துப் போங்கள்.



Thursday, December 23, 2010









இலங்கைப் பதிவர் சந்திப்பு என்னில் ஏற்படுத்திய பாதிப்பு..

அண்மையில் இடம்பெற்ற பதிவர் சந்திப்பிற்குச் சென்று வந்ததிலிருந்து பதிவிடுவோமென்று சிந்தித்தாலே பலவாறு சிந்திக்க வேண்டியிருக்கிறது.எங்கள் அண்ணன்மார் தெரிவித்த கலந்துரையாடிய கருத்துக்களை அனுசரித்துத் தான் இனிமேல்  பதிவெழுதுவதாக அன்று முடிவெடுத்திருந்தேன்.


இப்போது தான் பார்த்தேன் பவன் தான்  இரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010 என்று ஒரு பதிவிட்டிருந்தார்.அதிலே தேடிப்பார்த்தேன் என் பதிவு எதனையும் காணவில்லை.நான் எழுதும்   எல்லாப் பதிவையும் மொக்கைப் பதிவாய்க் கருத்தித்தானே பதிவேற்றுகின்றேன்.ஒன்றுகூடவா  பவனுக்குச் சிக்கவில்லை.கடுப்பாகி பவனுக்கு வெள்ளை வான் அனுப்புவோமாவென்று சிந்திக்கையில்தான் பவனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கி அவரது  2011 பதிவுகளிலாவது இடம்பெறுவோமென்று முடிவெடுத்தேன். சின்மஜா.. உன் மொக்கை இராச்சியம் தான் இனியென்று ஒரு மொக்கைப் பதிவு எழுதுவோமென்று பார்த்தால்


Friday, December 17, 2010









பதிவர் கிறிக்கெற்.. பிந்திக் கிடைத்த திடுக்கிடும் செய்திகள்

உலகே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர் பார்த்துக் காத்திருந்த இலங்கைப் பதிவர்களின் மாபெரும் கிறிக்கெற் திருவிழா நாளை இடம்பெறவுள்ள நிலையில் வெள்ளவத்தைப் பகுதியில் சிறு மழைப்பொழிவு ரசிகர்களிடையே சிறு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.மழையை நிறுத்தவேண்டி ஆங்காங்கே ரசிகர்கள் மொனப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளதைக் காணக்கூடியதாயுள்ளது.

போட்டி நடைபெறும் மைதானத்திற்கு மழையால் எந்தப் பாதிப்பும் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக உள்ள ஏற்பாட்டாளர்கள் அதற்கான முன் ஆயத்தங்களை ஏற்கனவே செய்துள்ளதாக அனுதினன் தெரிவித்துள்ளார். மைதானத்தை மூடித் தாழ்ப்பாள் இடுவதற்காக கடும் பிரயர்த்தனத்திலீடுபட்டுள்ளனர் பதிவர்கள் மது மற்றும் ஆதிரை.

இம்மழைத்துளிகள் பட்ட ஆடுகளம் எகிறி எழும் பந்துகளுக்கு சாதகமில்லையெனவும்,சுழல் பந்து வீச்சாளர்களுக்கே சாதாகமாய் நாளை அமையலாம் என பிரபல அனலிஸ்ற் கன்கொன் எங்கள் துடுப்பு இன்போ விற்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.


Wednesday, September 8, 2010









என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க யாருமே இல்லையா..??


அண்மைக்காலமாக ஒரு ஆறு Error messages வந்து  என் நிம்மதியான தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டே இருக்கிறது..நானு எவ்வாறெல்லாமோ முயன்று பார்க்கிறேன்..சரிசெய்ய முடிகிறதேயில்லை..
அப்போதுதான் ஒரு யோசனை தோன்றியது..எங்கள் தமிழ் பதிவுலகில் தான் நூற்றுக்கனக்கான தொழிநுட்பப் பதிவர்கள் இருக்கிறார்கள்.எத்தனை ஆயிரம் கணனி வல்லுனர்கள் நாளாந்தம் தமிழ் பதிவுகளை உலகெல்லாம் இருந்து வாசிக்கிறார்கள்.இவர்களிடம் சொன்னால் உடனே தீர்த்துவைத்துவிடப் போகிறார்கள்.இதற்குப் போய் தூக்கத்தை இழப்பதா..?? யாரது..??NO..Never எண்டிறது..அதைத்தான்க நானும் சொல்ல வாறன்..இதோ..இவை தான் ..அவை..

முதலாவது..




 அழிக்கிறதுக்கு இப்ப நான் என்ன செய்ய? proceed ஐயா delete ஐயா  சொடுக்கணும்(click)?

இரண்டாவது..



இது ERROR ஆ..?? ERROR இல்லையா..?? அல்லது ERROR இல்லையென்பதே ஒரு ERROR ஆ??

மூன்றாவது..



key Board டே failure ஆன பிறகு F1,F2 அமத்தெண்டிறாங்களே..! என்னை என்ன பைத்தியக்காறன் எண்டு நினைக்கிறாங்களா..? இல்லை..அவங்களுக்கு பைத்தியமா..??

நான்காவது..



Tipsஏ இல்லையெண்டிறது எல்லாம் ஒரு Tipஆ..?

ஐந்தாவது..



இப்ப என்ன எண்டிறாங்க..?? Install ஆகுதெண்டிறாங்களா?? இல்ல Uninstall ஆகிதெண்டிறாங்களா??

ஆறாவது..



error காட்டிறதிலயே error காட்டுதே..??

செப்பா யாராச்சும் உதவுங்கப்பா..??என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்து என்ரை நிம்மதியான நித்திரையை மீட்டுத்தர யாருமே இல்லையா..?? ;)