Pages

Subscribe Twitter Twitter
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, July 15, 2011









தெய்வத்திருமகள்- அருமையான பாசப் பிணைப்பு

யாழ் இந்துக் கல்லூரி இளைஞர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட   தெய்வத்திருமகள் சிறப்புக்காட்சி நேற்றிரவு பார்க்கக் கிடைத்தது .படம் முடிவடைகையில் நள்ளிரவு தாண்டியிருந்தபோதும் எந்தச் சலிப்புமில்லாமல் மனது முழுவதும் இனம்புரியாத ஓர் இதமான உணர்வு நிரம்பியிருந்தது. படக் காட்சி ஒழுங்கமைப்பில் நானும் பங்குபற்றியிருந்ததால் பல நண்பர்களோடு உரையாடி படத்தைப்பற்றிய கருத்துகளை அறிய முற்படுகையில் அனைவருமே திருப்ப்தியாயிருந்தமை இரட்டிப்பு சந்தோசமே..

இயக்குனர் விஜய் மீது கிரீடம் படத்திலிருந்தே ஒர் ஈர்ப்பு இருந்ததும், விக்ரமை தெய்வத்திருமகள் ரெயிலரரில் பார்த்ததிலிருந்தே எப்படியாவது இந்தப் படத்தை பார்த்துவிடவேண்டும் என்று தீர்மாந்த்திருந்தேன்.மன நலம் குன்றிய தந்தையின் வேடம்.. விக்ரம் யாவரும் எதிர்பார்த்தது போலவே நடித்துக் கலக்கியுள்ளார்.



Sunday, May 29, 2011









என்னைக் கவர்ந்த சங்கர் மகாதேவன் ..


யாழ் இந்துவில் நான் ஒன்பதாம் ஆண்டு கற்றுக் கொண்டிருந்த காலம்.ஏதோவொரு நாடகப் பயிற்சியிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது.. 
உடனே நான் ஏதோ பெரிய நடிகன் என்றெல்லாம்  முடிவு எடுத்துவிடக்கூடாது.. பாடவேளைகளில் உத்தியோகபூர்வமாக வகுப்பிலிருக்காமல் 
கடத்துவதற்காக நாங்கள் தெரிவு செய்திருந்தவோர் உத்தி தான் இந்த நாடகங்களில் நடிப்பது..நாடகப் பயிற்சி முடிவடைந்தாலும் பின்னர் நாங்கள்
வகுப்பறைப் பக்கம் எட்டிப் பார்ப்பதேயில்லை என்பது வேறு விடயம்.. இவ்வாறு கிடைக்கும் இடை வேளைகளில் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்..

இந்த வேளைகளில் நாம் ஆரம்பித்தது தான் உடைந்துபோன கதிரை மேசைகளின் பலகைகளை முறித்தெடுத்து துடுப்பாகவும் டஸ்ரரை பந்தாகவும் கொண்டு கிறிக்கெற் அடிப்பது..இந்தப் போட்டிகளைக் கூட சில சமயங்களில் வாழ்வா சாவா போட்டிகளாக நாம் உத்வேகம் கொண்டு ஆடியது இப்போது நினைத்தால் சிரிப்புத் தான் வரும்.. பல சமயங்களில் புண்ணியலிங்கம் சேரிடம் சிக்கி எல்லோரும் செய்வது போல விபூதி வேட தாரியாகச் சென்று தப்பித்தது பலமுறை.. இப்படியான எங்கள் குழுவில் எல்லோரும் பாட்டுப் 
பாடக் கூடியவர்கள்..அதற்கேற்ற குரல் வளமும் உடையவர்கள்..ஹிஹி..என்னைத் தவிர..இடையிடையே சினிமாப் பாடல்களைப் பாடிக் கும்மாளமடிப்பதும் நடக்கும்..

இவ்வாறான ஒரு கும்மாளத்தின்போது என் நண்பனொருவனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் சங்கர் மகாதேவன்..சந்தணத் தென்றலே பாடல் என்று நினைக்கிறேன்.அன்றிலிருந்து சங்கர் மகாதேவனின் பாடல்களைத் தேடிக் கேட்கத் தொடங்கினேன்.அவரது குரலில் அப்படி ஏதோவொரு ஈர்ப்பு இருக்கிறது.அதிலும் உச்ச வீச்செல்லை கொண்ட
கிறங்கடிக்கும் அவரது குரலும் இதற்கு ஒரு காரணமாயிருக்கலாம்.. அனுபவித்து தமிழில் பாடல்களைப் பாடும் பாடகர்களில் பிரதானமாக இவரையும் நான் குறிப்பிட்டுச் சொல்வேன்.மும்பையில் பிறந்த தமிழ் பேசும் கேரள அந்தணக் குடும்பப் பின்ணணியும் இதற்கு சங்கர் மகாதேவனிற்குத் துணை புரிந்திருக்கலாம்.


இசைப்புயல் ரகுமானின் இசையில் சங்கர் மகாதேவன் சங்கமம் பாடிய ”வராகை நதிக்கரையோரம்.. “ எனும்  மெலிதான ஹிந்துஸ்தானி கலந்த கிராமியப் பாடல் மெட்டுக் கொண்ட இந்தப் பாடல் மூலம் முதல் தமிழ் இசை ரசிகர்களைத் திரும்பிப்பார்க்கச் செய்தார். ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை என்பவற்றில் இவருக்குள்ள தேர்ச்சியை இவரது பாடல்களிலே நாங்கள் இனங்கண்டு கொள்ளலாம்.

தொடர்ந்து இவரது உச்சஸ்தாயி குரலை இனங்கண்டு இசைப்புயல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வழங்கிய பாடல் தான் இல்லையென்று சொல்ல ஒருகணம் போதும்..அந்தப் பாடலில் உணர்ந்து அனுபவித்து உச்சவீச்சுக்கு இடையிடையே சென்று  தமிழ் இசை ரசிகர்களை வசீகரித்தார் சங்கர் மகாதேவன்.. அந்த ஆண்டிற்கான சிறந்த பாடகரிற்கான தேசிய விருதையும் சங்கர் மகாதேவனிற்குத் தேடிக்கொடுத்தது இந்தப் பாடல்.

இசைப்புயல் தவிர யுவன் சங்கர் ராஜா சங்கர் மகாதேவனை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பாடல் தான் என் அன்பே..என் அன்பே.. இயக்குனர் அமீரின் முதல் படமான மோனம் பேசியதே திரைப்படத்திற்காக பாடிய பாடல் தான் அது..ஓ சகி .. பிரிய சகி யென வேறு வேறான வீச்செல்லைகளுடன் இந்தப் பாடலில் உருகியிருந்தார் சங்கர் மகாதேவன்.. யுவனும் அதற்கேற்ற மெலிதான வாத்திய இசைகொண்ட மெலடியாக  அந்தப் பாடலை உருவாக்கியிருந்தார்.

இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் சங்கர் மகாதேவனை உபயோகித்துக் கலக்கிய பாடல் தான் சங்கரின் அந்நியன் படத்தில் இடம்பெற்ற குமாரி.. வித்தியாசமான உச்சரிப்புடன் அந்தப் பாடலைப் பாடிக் கலக்கியிருப்பார் சங்கர் மகாதேவன்..இசையமைப்பாளர் வித்தியாசாகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து திருமலை படத்திற்காகப் பாடிய நீயா பேசியது.. பாடலைக் குறிப்பிடலாம்.இவ்வாறு சங்கர் மகாதேவன் தமிழில் கலக்கிய பாடல்களைக் கூறிக்கொண்டே போகலாம். சங்கர் மகாதேவனின் உச்சஸ்தாயி குரலை நடிகர்களின் அறிமுகப் பாடல்களிற்கு உபயோகிக்கும் ஒரு பாணியே ஒரு காலத்தில் தமிழ் சினிமாவிலிருந்தது.

இன்று பல ஹிந்தித் திரைப்படங்களிற்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் சங்கர் மகாதேவன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய படம் தான் கமலின் ஆளவந்தான்..துரதிஸ்டவசமாக அந்தப் படத்தின் தோல்வி அவரை தமிழில் இசையமைப்பாளராகத் தொடர அனுமதிக்கவில்லைப் போலும்...

2010இல் சங்கர் மகாதேவன் அக்கடமி எனும் பெயரில் சங்கீத  அக்கடமியை ஆரம்பித்து ஹிந்துஸ்தானி, கர்நாடக இசைப் பயிற்சி உட்பட திரையிசைப்பாடலிற்கன பயிற்சியை வழங்கி வருகிறார்.சங்கர் மகாதேவனின் பிரபல அல்பம் Breathless..அதிலே முழுமையான பாடலையே மூச்சுவிடாமல் பாடுவதுபோன்று ஒலிச்சேர்க்கை சேர்த்திருந்தார்கள் .
அந்தப் பாடல் இங்கே கேட்கலாம்..











Monday, May 16, 2011









பேசும் படம் - Hotel Rwanda


வெசாக் விடுமுறையில் யாழ் வந்து என் நெருங்கிய நண்பனொருவனில் வீட்டில் இராப் பொழுதொன்றைக் கழிக்கையில் தற்செயலாக நாங்கள் பார்த்த திரைப்படம் Hotel Rwanda.. .2005ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் படம் வெளியாகியிருந்தாலும் இப்போது தான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது.உங்களில் பலர் ஏற்கனவே பார்த்துமிருக்கக்கூடும்.1990 களின் நடுப்பகுதியில் Rwanda வில் நடைபெற்ற ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்களைக் காவு கொண்ட ஓர் பெரும் இனவழிப்பின்போதான ஓர் உண்மைக் கதையைப் படமாக்கியிருக்கிறார்கள்.

Paul Rusesabagina எனும் ஹோட்டல் முகாமையாளர் ஒருவரது உண்மைக் கதை தான் இது..றுவண்டாவை Belgium  கைப்பற்றி ஆட்சி செய்லையில்  நிர்வாக வசதிகளிற்காக  Tutsi இன மக்களினை முதன்மைப் படுத்திவிட்டு பின்னர் ருவண்டாவைவிட்டு வெளியேறுகையில் பெரும்பான்மை  Hutu மக்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டுச் செல்கிறது . ருவண்டாவில் வாழ்ந்த Tutsi மற்றும் Hutu இன மக்களிடையே ஏற்படு(த்தப்படு)ம்  கலவரம் எவ்வாறு இனவழிப்பாக மாற்றப்படுகின்றது..Paul Rusesabagina தனது குடும்பத்தையும் அவரது ஹொட்டலில் சரணடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதற்கான ஒரு சாதாரண மனிதனின் அபரிமிதமான போராட்டம் தான் படத்தின் கதை..

கதையினிடையே கலவரங்களைத் தூண்டும் பெருச்சாளிகளின் நிஜ முகங்கள், உசுப்பேத்தல்கள்.. ஐ.நா வின் மீட்பு நடவடிக்கையிலுள்ள ஓட்டைகள்.. மேல் நாட்டவர்களின்(western people)  தங்கள் நலனின் மீதான அதீத அக்கறையும் ஆபிரிக்க மக்கள் மீதான இளக்காரம்..சில நல்ல மனிதர்களின் கையறு நிலமை,ஆற்றாமை, இனவழிப்பு, போர்க் குற்றம் ,ஐ.நா என ஏதேதோ எனப் பல பேசப்படா உண்மைகளைப் படம் பேசிச் செல்கின்றது..

முடிந்தால் Hotel Rwanda வை ஒருமுறை பாருங்கள்..படம் பே(சா/சமுடியா)ப் பொருளை பேசத்துணிந்திருக்கின்றது.


Wednesday, December 8, 2010









இது Facebook உருவான கதை..

The Social Network.. .
உலகின் மிக இளவயது செல்வந்தர் Facebook நிறுவுனர் Mark Zuckerberg இன் கதை இது..facebook இன் ஆரம்பகாலம் பற்றி மிக சுவாரஷ்யமாகவே பேசுகின்றது..ஆச்சர்யம் என்னவென்றால் நண்பர்களிடையே இணைப்பை உருவாக்குவதையே அடிப்படையாகக் கொண்ட facebook, அதன் உருவாக்கம் மற்றும் பிரமாண்ட வளர்ச்சியின்போது நண்பர்களைப் பிரித்தது தான்..அங்கொன்றும் இங்கொன்றுமாக நான் கேள்விப்பட்டிருந்த Facebookஇன் தோற்றம் பற்றிய கதையை ஒரு வரிசையாக்கி காரணகாரிய தர்க்கங்களை ஊகிக்கக் கூடியவாறானதோர் நிலைக்கு இட்டுச் செல்கின்றது இப்படம்.. தற்செயலான மில்லியனர் என சிலரால் விமர்சிக்கப்படுவார் Mark  Zuckerberg.ஆனால் facebookன் உருவாக்கத்திற்காக அவரின் மிகக் கடுமையான உழைப்பை தெளிவாகக் காட்டுவதில் எந்த இடத்திலும் பின் நிற்கவில்லை இப் படம்..

Erika எனும் பெண் நண்பியுடனான வாக்குவாதமும் அதனால் ஏற்படும் பிரிவுடன் ஆரம்ப்பிக்கிறது படம்..இவ் வாக்குவாதத்தால் கடுப்படையும் Mark , மதுபோதையில் தாறுமாறாக நண்பியை விமர்சித்து blog பதிவு போட்டவாறே, ஒரே இரவில், சக மாணவிகளை எழுந்தமானமாக  இருவர் இருவராக தெரிவுசெய்து "Who looks more hotter in these two?” என தரப்படுத்தும் facemash எனும் வலைத்தளமொன்றை உருவாக்குகின்றார்.இதற்காக பல்கலைக்கழக வலையமைப்பை உடைத்து அங்கிருந்து இரகசியமாக சக மாணவிகளது புகைப்படங்களைப் பெற்றுக்கொள்கிறார்.Mark ன் நண்பர் Eduardo தான் சதுரங்க வீரர்களை தரப்படுத்தும் முறையை சிறிய தயக்கத்தின் பின்னர் இங்கு மாணவிகளை தரப்படுத்த உபயோகிக்க உதவுகின்றார்.இவ்வாறு வலுப்பெறுகிறது Mark,Eduardo நட்பு..