Pages

Subscribe Twitter Twitter
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, December 3, 2010









ம்..

வெள்ளாட்டு மந்தைக் கூட்டம்..
அமைதியாய்ச் சிங்கம்..
நாதியற்று நடுத்தெருவில் நரிகள்..

முள்வேலியற்ற முகாம்கள்
மாதிரிக் கிராமங்கள்..
யாருமற்ற சிறைச்சாலை
தொல்பொருட்சாலை..
சமச் சீரான தராசு..
பீரங்கியில் ஊங்சல்..
குதூகலமானதோர் குடும்பம்..

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு..
படுகொலைச் செய்தியேயில்லாத நாளிதள்..
ஆர்ப்பாட்டங்களேயற்ற தலைநகரம்..

தொடர்ந்து அலறும் தொலைபேசி..
கலைக்கப்பட்டது தூக்கம் ..
விழிகளின் ஓரமாய் வடியும்
ஒரு துளி கண்ணீர்..


Sunday, October 31, 2010









ஏதோ இருக்கிறோம்..



ஏதோ இருக்கிறோம் என்று கூறிக் கூறியே
நாமும்
ஏதோ இருக்கிறோம்..


ஏதிலியாய் முட்கம்பிவேலிகளிற்டையே
நீங்கள் இருக்கையில் கூட
இங்கே ”ஏதோ இருந்தோம்”..
மரண ஓலங்கள் மனதில் ஒலிக்க..
கொண்டாட்டங்கள் காதிலொலிக்க..
”ஏதோ இருந்தோம்”..

இதோ..
சாவிற்குள் வாழ்ந்து
ஏலவே செத்த நடைப் பிணங்களெல்லாம்..
வாழ்விற்குள் செத்துக் கொண்டிருக்க..
இங்கே..
”ஏதோ இருக்கிறோம்”..

அதோ..
செத்த மாட்டின் மீது..
காகங்கள் கூட்டமாய்க் கூடி..
 இறுதி அஞ்சலி செலுத்தியவாறு..
சாப விமோசனம் கொடுக்கத் தயாராகிவிட்டன..

இதோ..
 நாங்கள்..
'ஏதோ இருந்து கொண்டிருக்கிறோம்"..
நாளையும் "ஏதோ இருப்போம்"..
ஏனென்றால்..
நேற்றுக் கூட இப்படித் தான்
“ஏதோ இருந்தோம்”..


Saturday, October 9, 2010









காமம் என்னும் செசிக்கு காதல் என்னும் பொடி வேணும் ....


இது லம்போரோகினி செசிஸ்.. சில்லால் மட்டுமே அடையாளம் காணக்கூடிய இரும்பு குவியல்....

இதுக்காகத்தானா கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தும்டெலிவரிக்காக காத்துக் கிடக்கிறார்கள் ..???
ஏதோ உண்மை தான் ...
ஒருசிலசெக்கன்களில் சில நூறு மைல்களை எட்டிப்பிடிக்கும் வேகம் ... லாவகமாகதிருப்பக்கூடிய சக்கரங்கள் ...
எந்த தரைதோற்றத்திற்கும் தாக்குப் பிடித்து ஓடும்கட்டமைப்பு ... எல்லாம் இந்த செசி
ஸ்ன் வேலை தான் ....
ஆனாலும் ஒரு பொடிதேவை ...
எந்திரன் ரஜினி மாதிரி .. என்ன ஒரு லுக்கு ...
அந்த இரும்பு செசிஸ்க்கு அடிச்ச பொடி தான் இது ... பொடி கட்டாயம் தேவை ... பார்க்க ..ரசிக்க ..ஏன் சுகமாய் ஏறிப் பொய் வர ...
ஒரு பொடி தேவை தான் ...
அடிப்படை நோக்கம் சீறிப் பாயும் எஞ்சின் என்றபோதிலும் அதை செயல்ப்படுத்த அல்லது அனுபவிக்க எமக்கு ஒரு அழகிய வசதியான பார்த்தவுடன் கண்ணைப் பறிக்கும் ஒரு வெளித்தோற்றம் தேவை ...


Monday, September 27, 2010









லிப்ட்டும் அவள் லிப்ஸும்..

அன்றொருநாள்..
வழக்கம் போலஒரு காத்திருப்பு..
Lift க்கு முன்னால் ...

1 க்குப் போய் 3 க்குப் போய் G க்குப் போய்..கடைசியாய் வந்தது 4 க்கு ...
What a spark ...!!
வந்தது நீயா.. ?
அன்று ஏதோ விஷேசம் தான் ..
Even though I know u before ..
 Hello!!
உன் லிப்ஸ் திறக்க..
தானாக மூடிக்கொண்டது Lift ...
திருப்பியும் வெயிட் பண்ண வேணும் Lift க்கு ..But இனி
காத்திருப்பு ஒரு சுகம் தான் ..


மீண்டும் ஒரு Lift scene ..
உன் வீட்டு கதவிடுக்கில் நீ ..
Lift ஐ அழுத்திட்டு காத்திருக்கும் நான் ..
இடைநடுவில்
என் கேள்விகளுக்கு
உன் பதில்..
ஒரு உதட்டுச் சுழிப்புத் தான் ...
என் கைகளோ ..
பட்டனை தான் அழுத்திக்கொண்டிருந்தது
..
போய் போய் வந்து கொண்டிருந்தது லிப்ட்,
உன் அம்மா வந்து கூப்பிடும் வரை ..
மனமும் அப்பிடித்தான் ஊசலாடிக்கொண்டிருந்தது,..
யுனி(Uni)யில் ஒரு பாடம் கையில வாங்கும் வரை ...



பின் ஒருநாள்..
வைரமுத்து
எனக்காக எழுதினான்


"உசிரே போகுது ..
.. உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கயில.."
அந்த நேரம் வந்திருந்தால்
Ringin tone ஆக போட்டு
பீலிங்கை ஏத்தியிருக்கலாம்




இப்போதெல்லாம்..
எனக்கு படிகளே
பிடிக்கின்றன ...
உன் Lips லுள்ள கோபத்துக்கு..
என் கண் பட்ட ஆசைக்கு..
துன்பம் அனுபவிக்கின்றன
என் கால்கள்..
பிள்ளைகள் விடும் தவறுக்கு..
அப்பா அம்மா அனுபவிக்கும் துன்பங்கள் போல..

திறப்பதற்காக மட்டும் காத்திருக்கப்படும்.. Lift..

மூடுவதற்காகவும் காத்திருக்கப் படலாம்.. Lips...


Monday, August 9, 2010









கலாசாரம் பேணுவோம்..வாரீர்..




தம்பிக்கு தடுமாற்றம் தலை கால் புரியாது
வெம்பிப் பழுத்த பழம் வேறொன்றும் அறியாது
”அம்பி”யாய் இருந்த தம்பி ”றெமோ”வாகி
 மதில் வழியே எம்பி எம்பி கனவுலகில் சஞ்சரிப்பார்..

உந்துருளி உந்துகையில் சுந்தரியின் சிந்தனையில்
மந்திபோல் குந்தி மாடுபோல் முறுக்கிடுவார்
சந்து பொந்து தெரியாமல் வந்த லொறி மீது பாய்ந்து
நொந்து போய் கட்டிலிலே நோவால் படுத்திடுவார்


பனிநனைத்த தலையோடும் முகம் நிறையப் பூச்சோடும்
நம்மூர் பெண்கள் சினிமா நாயகிகள் தாமென்ற நினைப்பில்
நுனிநாக்கு ஆங்கிலத்தோடு நூதனமாய் ”டமில்” கலந்து
எஞ்சியிருந்த தமிழழையும் கதறக் கதறக் கருவறுப்பர்


கன்றாவிக் கதை கனக்க காதோரம் கேட்குதப்பா
எண்டாலும் கனபேர் உயிர் கொடுத்து பொத்தி வளர்த்த
பண்பாடு பஞ்சாபி போட்டால்த்தான் போகுமென்றால்
பெண்சாதி எல்லோரும் போட்டிடுவீர் பஞ்சாபி..