Pages

Subscribe Twitter Twitter

Thursday, November 18, 2010









ஈழத்து எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் ஓர் முயற்சி..

இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சியிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை என்பது இன்று நேற்றல்ல நீண்டகாலமாகவே பலராலும் முன்வைக்கப்படும் ஓர் குற்றச்சாட்டு.அவ்வாறான் ஒரு சில ஆவணப்படுத்தல் முயற்சிகளும் தீயாலும் வேறும் பல காரணங்கலாலும் நாசமாக்கப்பட்டதே வரலாறு.




ஈழத்து எழுத்தாவனங்களை எண்ணிமப்படுத்தி  ஆவணப்படுத்தி உலகளவிய ரீதியில் அனைவரிற்கும் இணையத்தினூடே கொண்டுசேர்க்கும் ஓர் பெரும் பணியை நூலக நிறுவனம் தனது மின் நூலகத் திட்டத்தின் மூலம் ஆற்றி வருகின்றது.இதில் குறிப்பிடத் தக்க விடயம் யாதெனில் இம் மின்னூலகத் திட்டம் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சியாக உலகெங்குமிருக்கும் தமிழ் பேசும் தன்னார்வத் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றது.2005 ல் ஆரம்மித்த இப் பணி இன்று ஏறக்குறைய 7000  வரையான நூல்களை எண்ணிம ஆவனங்களாக தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ச்சியாக இப்பணியை அவதானித்து வருபவர்கள் அண்மைக்காலத்தில் நூல்களை எண்ணிமப்படுத்தும் பணி மிகுந்த ஆர்முடுக்கப் பட்ட நிலையில் மேற்கொள்ளப்படுவதைக் காணலம்.

நூலகம்” எண்மிய நூலகத்தில் நூல்கள்,இதழ்கள்,பத்திரிகைகள்,பிரசுரங்கள் என ஆவண வகைகளாகவும்,எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள்,வெளியீட்டு ஆண்டு மற்றும் நூல்வகை போன்ற பலவாறு பகுப்பாக்கி இலகுவில் தேவையான நூல்களைப் பெற்றுக்கொள்ளத்தக்கவாறு பாகுபடுத்தியிறுக்கிறார்கள்.

ஈழத்து எழுத்தாவனங்களை எண்ணிமப்படுத்தி  ஆவனப்படுத்தும் நூலக நிறுவனத்தின்  இந்த முயற்சிக்குக் கைகொடுத்து உதவவேண்டியது நம் அனைவர் முன்னாலுள்ள வரலாற்றுக் கடமை.. நிறைவேற்றுமா..?


6 comments:

Prem said...

நிச்சயமாக நல்லதொரு முயற்சி...
இது மென் மேலும் வளர்த்தெடுக்க வேண்டியது எமது கடமை...!!!

anu said...

very nice flow....

யுவன் said...

நல்லதொரு முயற்சி..
ஒரு அரசாங்கம் செய்யவேண்டியது..

ஷஹன்ஷா said...

அருமையான தகவல்...நன்றி...

கணாதீபன் said...

நான் வாசிக்க வேண்டுமென எண்ணிய பல புத்தகங்கள் உள்ளன.. பகிர்விற்கு நன்றி

sinmajan said...

வருகைக்கு நன்றி prem,Anu,யுவன், ஜனகன்,கணாதீபன்