Sunday, October 31, 2010
ஏதோ இருக்கிறோம்..
ஏதோ இருக்கிறோம் என்று கூறிக் கூறியே
நாமும்
ஏதோ இருக்கிறோம்..
ஏதிலியாய் முட்கம்பிவேலிகளிற்டையே
நீங்கள் இருக்கையில் கூட
இங்கே ”ஏதோ இருந்தோம்”..
மரண ஓலங்கள் மனதில் ஒலிக்க..
கொண்டாட்டங்கள் காதிலொலிக்க..
”ஏதோ இருந்தோம்”..
இதோ..
சாவிற்குள் வாழ்ந்து
ஏலவே செத்த நடைப் பிணங்களெல்லாம்..
வாழ்விற்குள் செத்துக் கொண்டிருக்க..
இங்கே..
”ஏதோ இருக்கிறோம்”..
அதோ..
செத்த மாட்டின் மீது..
காகங்கள் கூட்டமாய்க் கூடி..
இறுதி அஞ்சலி செலுத்தியவாறு..
சாப விமோசனம் கொடுக்கத் தயாராகிவிட்டன..
இதோ..
நாங்கள்..
'ஏதோ இருந்து கொண்டிருக்கிறோம்"..
நாளையும் "ஏதோ இருப்போம்"..
ஏனென்றால்..
நேற்றுக் கூட இப்படித் தான்
“ஏதோ இருந்தோம்”..
Email This BlogThis! Share to X Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
////நேற்றுக் கூட இப்படித் தான்
“ஏதோ இருந்தோம்”.. ///
அருமை சகோதரா... இருந்தாலும் பரவாயில்லை.. நிங்கள் சில அரசியல்வாதிகள் போல் எங்களை வைத்து புகழ் தேடவில்லைத் தானே...
என்ன திடீர் என்று சீரியஸ் ஆய் ஆரம்பிசிட்டீங்க ..
நாமும் உங்கள் ஏதோ இருக்கிறோம் வகையறா தான்
கையாலாகதவனாய் இருந்தாலும் சில விடயங்கள் உறுத்திக்கொண்டே இருக்கிறது..
அது தான் ..
சாட்டையடி ..
Post a Comment