நம்மில் பலர் நமது கணனியில் நமது இணையத்தள விஜயங்கள் பற்றிய தடயம் இல்லாமல் இணையத்தில் உலாவும் நோக்கத்துடன் பாவனையின் பின்னர் ;) firefox,chrome போன்ற பல உலாவிகளின்(Browser) துணையுடன் பாவனைத்தொகுப்பை( history) அழித்துவிட்டு திருப்திப்பட்டுக் கொள்கிறோம்.
இந்த பாவனைத் தொகுப்பை(History) அழிக்கும் நடவடிக்கையை இலகுவாக்கும் முகமாக ஏறக்குறைய அனைத்து உலாவிகளும் இப்போது Private Browsing/incoginto
வசதியை வழங்குகின்றது.இவ்வசதியை நாம் பயன்படுத்தினால் மேற்படி உலாவிகள் எமது இணையத் தள உலாவல்களிற்கான பாவனைத் தொகுப்பை பதிந்து வைத்துக்கொள்வதில்லை.இவ் வசதியைப் பெற்றுக்கொள்ள Google chromeல் ctrl+Shift+n பொத்தான்களை ஒன்றாக அழுத்தினால் போதும்.incoginto வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.Firefox என்றால் ctrl+Shift+P யை அழுத்தி மேற்கூறிய வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.ஆனால் இவ் incoginto சில வெளிப்படையான விடயங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்காது.chromeஇல் கீழுள்ளவாறான எச்சரிக்கையில் அவர்கள் இது எச் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பானதல்ல என்பதை உங்களிற்கு குறிப்பிட்டிருப்பார்கள்.
ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் இது உங்களிணையத் தள விஜயங்கள் பற்றிய பாவனை வரலாற்றில் (History)பதிந்து வைத்திருப்பதைத் தடுக்குமே தவிர உங்கள் கணனியிலேயே வேறெங்கும் உங்கள் இணையத் தள விஜயங்கள் பற்றிய தகவல்களைச் சேமிக்கப்படுவதையும் தடுக்கும் என்று குறிப்பிட்டுவிட முடியாது.அங்கே தான் பெரியதொரு ஓட்டையிருக்கிறது.மிக இலகுவில் உங்கள் கணனியிலிருந்தே நீங்கள் incoginto வசதியைப் பாவித்தால் கூட நீங்கள் பாவித்த தள விபரங்களைப் பெற்றுக்கொண்டுவிடலாம்.அது எப்படியென்றும் அதனைத் தடுப்பதெப்படியென்றும் வேறோர் பதிவில் பார்ப்போம்.


2 comments:
என்னமா ரூட்டு போட்டு குடுக்குறீங்க போங்க நீங்க...!!!
நல்லாதான் இருக்கு விசயம், பாப்பம் அடுத்த பதிவில... :)
எதோ எங்களால முடிஞ்சது :P
Post a Comment