Pages

Subscribe Twitter Twitter

Wednesday, September 15, 2010









YouTube வீடியோவில் உபயோகமான பகுதியை மட்டும் கத்தரித்து எடுக்க..

வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதைப் பற்றிக் குறிப்பிடுவதென்றால் இன்று You Tube தவிர்க்கமுடியாததொரு காரணியாக விளங்குகின்றது.இவ் you Tube பற்றிய கருதுகோள் 2005ல் PayPal நிறுவன ஊழியர்களான Chad Hurley, Steve Chen மற்றும் Jawed Karim ஆகியோரின் எண்ணத்தில் உருவாகி $3.5 மில்லியன் மூலதனத்துடன் 2005ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருட காலப்பகுதியினுள்ளேயே Google நிறுவனத்தின் கழுகுப் பார்வையினுள்ளே சிக்கி $1.65 பில்லியனிற்கு விலைக்கு வாங்கப்பட்டு இன்றும் Google இன் இணை நிறுவனங்களில் ஒன்றாக பிரமாண்டமாக வளர்ச்சியடைந்தவாறேயுள்ளது.

கலிபோர்னியாவிலுள்ள YouTube தலைமை அலுவலகம்
முதன் முதலில் me at the zoo  என்ற வீடியோவை Jawed Karim சித்திரை மாதம் 23, 2005ல்  தரவேற்றி ஆரம்பித்திருக்கிறார்.இன்று ஒவ்வொரு நிமிடமும் 24 மணிநேரத்திற்கு மேற்பட்ட வீடியோ உலகெங்குமிருந்து தரவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றதாம் என்றால் அதன் பிரமாண்ட வளர்ச்சியைப் பாருங்களேன்..ஆனாலும் பதிப்புரிமை மற்றும் காப்புரிமை மீறல் ,தனிப்பட்ட சுதந்திர மீறல் எனப் பல விமர்சனங்களும் YouTube மீது இல்லாமலில்லை.

எத்தனையோ வகையான அனுகூலங்களை You Tube வழங்கினாலும் நம்மைப் போன்ற பலரிற்கு பயன்படுவது நாம் ரசித்த You Tube வீடியோக் காட்சிகளை Face Book ,Twitter போன்ற சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களையும் பெறச் செய்வது தானே.. ;)..ஆனாலும் சில சமயங்களில் அவ் வீடியோவின் நீளம் பத்து நிமிடங்களை அண்மித்து நம்மில் பலரது பொறுமையைச் சோதித்து விடுகின்றது..இன்னும் சில சமயங்களில் அவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே ரசிக்கக் கூடியதாயிருக்கையில் பொறுமையாக முழு வீடியோவையும் பார்க்க வேண்டி ஏற்பட்டு கடுப்பாக்குவதுமுண்டு..இனி மேல் இந்தக் கவலையை விட்டு விடுங்கள். சில இனையத் தளங்கள் You Tube வீடியோவின் ஒரு குறித்த பகுதியை மட்டுமே வெட்டியெடுத்து நாம் உபயோகிக்கக் கூடிய வடிவில் தருகின்றன.அவ் இணையத் தளங்களிற்குச் செல்ல கீழுள்ள சுட்டிகளைச் சொடுக்குங்கள்.
1) TubeChop
2)splicd 


1 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி..
//இன்று ஒவ்வொரு நிமிடமும் 24 மணிநேரத்திற்கு மேற்பட்ட வீடியோ உலகெங்குமிருந்து தரவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றதாம் என்றால் அதன் பிரமாண்ட வளர்ச்சியைப் பாருங்களேன்..//

அப்ப பாருங்களேன்!!