Pages

Subscribe Twitter Twitter

Monday, August 30, 2010









சிதைவடைந்து கொண்டிருக்கும் நம் வரலாற்று ஆதாரங்கள்..

கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த குடிகள் நாம்போன்ற உணர்வூட்டி உசுப்பேத்தும் உரைகளில் நாம் காட்டும் ஆர்வத்தில் ஒர் சிறு பங்கையேனும் எமது வரல்லற்று முதுசொம்களை பேணுவதில் நாம் காட்டுவதில்லை.நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை.
யாழ்ப்பாணத்தில் இராசதானி அமைத்து தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று நாளைய தலைமுறைக்கு கட்புல ஆதாரமாகக் காட்டக்கூடிய சில ஆதாரங்களே இன்று நம்மிடையே எஞ்சியுள்ளது.அவையும் சிதைவடைந்து நலிவடைந்து அழிவடையும் நிலைக்குச் செல்வதை நாமெல்லாம் அமைதியாக அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்.
நல்லூர் இராசதானியின் இறுதி எச்சங்களாக இன்று எஞ்சியுள்ளவற்றுள் பிரதானமானது ”யமுனா ஏரிஎனப்படுகிற மன்னர்கள் பயன்படுத்திய  வடிவ தடாகம்.புதர் மண்டிய பற்றைக் காட்டினிடையே அமைதியாய் சிதைவடைந்தவாறு அது இன்றுமிருக்கிறது.யமுனா ஏரிக்குச் செல்வதற்கான பாதையை அதற்கு அண்மையில் சென்று நின்று கேட்டால் கூட அவ்விடத்தில் இருக்கும் இளைஞர்கள் கூட சரியாக அடையாளங்காட்ட மாட்டார்கள். அந்த அளவில் யமுனாஏரி பற்றிய விளிப்புணர்வு  எங்கள் யாழ் மக்களிடம் இருக்கின்றது.

அடுத்தது கல்வியங்காட்டை அண்மித்து அமைந்துள்ளமந்திரிமனை” .இது ஓர் புராதன மாடி வீடு.பிரதான வாசலிலிலே அவ் வீடு பற்றி சாசனம் ஒன்று பழந் தமிழில் எழுதப்பட்டிருக்கும். உள்ளே பல மர வேலைப்பாடுகளுடனான தூண்களையும் காணலாம்.அதுவும் சிதைவடைந்த வாறேயுள்ளது.முன்பு ஒரு முறை அங்கு செல்கையில் ஒர் ஏழைக் குடும்பமொன்று அதன் ஒரு பகுதியைத் தமது வசிப்பிடமாக்கியிருந்தார்கள்.எஞ்சிய பகுதிகளை அவ்விடத்தில் வசிக்கும் மூதாட்டியொருத்தி தனது ஆடு மாடுகளைக் கட்டுமிடமாக உபயோகித்துக் கொண்டிருந்தாள்.இவ்வாறாக எங்கள் வளங்களின் உச்சப் பயன்பாடு சென்றுகொண்டிருந்தது.

அடுத்தது பருத்தித்துறை வீதியில் நல்லூரில் அமைந்துள்ள ஒரு நுளைவாயில் ஒன்று.பழைய அரண்மனையின் சிதைவு இது என்கிறார்கள்.இதற்குத் தகரத்தாலான கொட்டகையொன்று (வரலாற்று ஆதாரக் காப்பிற்காக ஒரு  சில நடவடிக்கைகளை  நம்மவர்களும் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம் இக் கொட்டகை.அதனை யார் எப்போது அமைத்தார்கள் என்பது தெரியவில்லை) அமைத்து மழை,வெயிலிலிருந்து பாதுகாத்திருந்தார்கள்.அண்மையில் நல்லூரில் நட்சத்திர விடுதியொன்று இதற்கு  அண்மையில் கட்ட முற்படுகையில் எங்கள் கலாசார காவலர்கள் (!!??) பொங்கி எழுகையில் இது பற்றிய விளிப்புணர்வு ஓரளவு  மக்களிற்கு ஏற்பட்டிருக்கலாம்.
எங்கள் யாழ் தொல்பொருட் சாலையின் இன்றைய நிலை பற்றி கானாபிரபா அவர்கள் ஓர் பதிவு இட்டிருந்தார்.அதனை இங்கே பார்வையிடலாம்.இப்படியாக எங்கள் மரபுவழி முதுசொங்கள் பேணப்படும் ஆர்வம் சென்று கொண்டிருக்கிறது.எப்போது தான் நாமெல்லாம் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றோமோ?? ஆனால் தாமதமாகும் ஒவ்வோர் கணமும் அவை சிதைவடைந்து அழிவடைந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்பது மட்டும் வருத்தத்திற்குரிய உண்மை..


இவை பற்றிய கலாநிதி க.குணராசா அவர்களின் நமது ஈழநாடு  செவ்வி  ,மற்றும் யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற விவாதம்  போன்றவை தொடர்பாக  2002,2003 காலப்பகுதியில் பத்திரிகைகளில் வெளியான ஆக்கங்களின் இணைப்புகளை 
திரு .தங்கமுகுந்தன்  அவர்கள்   பின்னுட்டத்தில்   இணைத்திருக்கிறார். அவற்றையும்  ஒருதடவை  மேலதிக  தகவல்களிர்காகப்  பாருங்களேன் ..

படங்கள் கீழுள்ள தளங்களிலிருந்து சுடப்பட்டன..
நன்றி


Friday, August 27, 2010









தடயமில்லாத இணையப் பாவனையை நோக்கி..-01

சில சமயங்களில் நம்மில் பல பேரிற்கு நாம் விஜயம் செய்த இணையத் தளங்களின் தள விபரங்களை வேறு நபர்கள் அறியாமலிருக்க வேண்டும் என்ற தேவையிருக்கலாம்.காரணங்கள் பல இருக்கலாம்  ;) . தடயமற்ற முறையில் இணையத் தளங்களில் உலாவுவதெப்படி என்று எனக்குத் தெரிந்த சில விடயங்களை உங்களுடன் பகிரலாமென எண்ணியுள்ளேன்.
நம்மில் பலர் நமது கணனியில் நமது இணையத்தள விஜயங்கள் பற்றிய தடயம் இல்லாமல் இணையத்தில் உலாவும் நோக்கத்துடன் பாவனையின் பின்னர் ;)   firefox,chrome போன்ற பல உலாவிகளின்(Browser) துணையுடன்  பாவனைத்தொகுப்பை( history) அழித்துவிட்டு திருப்திப்பட்டுக் கொள்கிறோம்.
 இந்த பாவனைத் தொகுப்பை(History) அழிக்கும் நடவடிக்கையை இலகுவாக்கும் முகமாக ஏறக்குறைய அனைத்து உலாவிகளும் இப்போது Private Browsing/incoginto
வசதியை வழங்குகின்றது.இவ்வசதியை நாம் பயன்படுத்தினால் மேற்படி உலாவிகள் எமது இணையத் தள உலாவல்களிற்கான பாவனைத் தொகுப்பை பதிந்து வைத்துக்கொள்வதில்லை.இவ் வசதியைப் பெற்றுக்கொள்ள Google chromeல் ctrl+Shift+n பொத்தான்களை ஒன்றாக அழுத்தினால் போதும்.incoginto வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.Firefox என்றால் ctrl+Shift+P யை அழுத்தி மேற்கூறிய வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.ஆனால் இவ் incoginto சில வெளிப்படையான விடயங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்காது.
chromeஇல் கீழுள்ளவாறான எச்சரிக்கையில் அவர்கள் இது எச் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பானதல்ல என்பதை உங்களிற்கு குறிப்பிட்டிருப்பார்கள்.

 ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் இது உங்களிணையத் தள விஜயங்கள் பற்றிய பாவனை வரலாற்றில் (History)பதிந்து வைத்திருப்பதைத் தடுக்குமே தவிர உங்கள் கணனியிலேயே வேறெங்கும் உங்கள் இணையத் தள விஜயங்கள் பற்றிய தகவல்களைச் சேமிக்கப்படுவதையும் தடுக்கும் என்று குறிப்பிட்டுவிட முடியாது.அங்கே தான் பெரியதொரு ஓட்டையிருக்கிறது.மிக இலகுவில் உங்கள் கணனியிலிருந்தே நீங்கள் incoginto  வசதியைப் பாவித்தால் கூட நீங்கள் பாவித்த தள விபரங்களைப் பெற்றுக்கொண்டுவிடலாம்.அது எப்படியென்றும் அதனைத் தடுப்பதெப்படியென்றும் வேறோர் பதிவில் பார்ப்போம்.


Wednesday, August 25, 2010









தமிழ் மாணவர்களின் உயர்கல்வி..நாம் கவனிக்கின்றோமா..??

இலங்கையின் கல்வித் துறை அடுத்த கட்டத்தினுள் புகுவதற்கு மிக வேகமாகவே தயாராகி வருகின்றது.வெளிநாட்டின் பல்கலைக்கழகங்களை
இலங்கைக்குள் உத்தியோகபூர்வமாகவே அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.


அதற்கு முன்னோடியாக உயர்கல்வி அமைச்சின் கீழ் வரும் Sri Lanka Institute of Information Technology(SLIIT) தான் வழங்கும் பட்டப்படிப்புகளிற்கான அடுத்த கல்வியாண்டிற்காக பங்களாதேஷ் மாணவர்களிற்கான அழைப்பை விடுத்திருக்கின்றது.இத்ற்காக பங்களாதேஷில் SLIIT ஓர் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே நுளைவுத் தேர்வுகளை நடாத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆரம்பித்துவிட்டது.இதுவரை நமது மாணவர்கள் வெளிநாட்டு உயர்கல்விக்காக IELTS எடுப்பது போல அங்குள்ள மானவர்கள் இனி இலங்கை வர IELTS எடுக்கப் போகிறார்கள் ;) .மேலதிக விபரங்களிர்காக இங்கே சொடுக்குங்கள். இந் நடவடிக்கைகள் மாலைதீவு,கியூபா என விஷ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும்  SLIIT பரிசீலித்துக் கொண்டிருக்கிறதாம்.


ஆனால் நமது தமிழ் மாணவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்..??!!ஒரு தொகுதி மாணவர்கள்( பெற்றோர் திரும்பத் திரும்ப பலவந்தப் படுத்தியோ, அல்லது சுய விருப்பின் பேரிலேயோ) மூன்று முறை க.பொ.த (உ/த) எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.சரி..எத்தனை முறை எடுத்தாலும் விரும்பிய  துறைக்குப் பல்கலைக்கழகங்களிற்குத்  தெரிவாகும் சிறு தொகை மாணவர்களை விட்டுவிடுவோம்.எஞ்சியோர் நிலை என்ன..?

 விரும்பியோ விரும்பாமலோ பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவு செய்து அனுப்பும் துறையில் கல்வியைத் தொடர்கின்றார்கள் ஒரு குறித்த தொகையினர்.எஞ்சிய பணபலம் உடைய ஒரு தொகையினர் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை நோக்கிச் செல்கிறார்கள்.அதில் ஒரு தொகையினர் வெற்றிபெற, ஒரு தொகையினர் கையில் கிடைக்கும் உதிரி வேலைகளோடு தமது காலத்தைக் கழிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு விடுகிறார்கள்.இலங்கையில் எஞ்சும் மறு தொகையினர் கையில் கிடைக்கும் ஏதாவது வேலைகளுடன் திருப்தியடையச் செய்யப்படுகிறார்கள்.சுய விருப்புடன் க.பொ.த(உ/த) வேலையில் இணைபவர்கள் இல்லாமலில்லை.அவர்களில் சிலர் பின்நாளில் கடும் முயற்சியுடன் உயர் பதவிகளை அடைவதையும் மறுப்பதற்கில்லை.

இலங்கையில் இப்போதுள்ள பல்கலைக்கழகங்களிற்கான தேர்வு முறை விசித்திரமானது.பல ஓட்டைகளைக் கொண்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.அதற்காககப் பல்கலைக்கழகங்களிற்குத் திறமையற்றவர்கள் தெரிவாகிறார்கள் என்று கூறிவிடமுடியாது.அவர்கள் மிகக் கடினமான ஒரு தெரிவுத் தடையை கடந்து வந்தவர்கள்.ஆனால் திறமையான சில மாணவர்கள் அரச பல்கலைக் கழகங்களிற்குத் தெரிவாகாமல் போய்விடுகிறார்கள் என்பதையும் நாம் மறுத்து விட முடியாது.

பல்கலைக்கழகங்களிற்கு தாம் விரும்பிய துறைக்குத் தெரிவாகாத பெருந்தொகையான மாணவர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு தான் என்ன? உயர் பணபலம் படைத்தவர்கள் தரமான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நாடிச்செல்லலாம்.எஞ்சியோர்..!!??அவர்களிற்கு இலங்கையில் உயர்கல்வித் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய வாய்ப்புகள் பற்றி ஏற்கனவே ஓர் தரமான நிலையை அடைந்த  நம் தமிழ் சகோதரர்கள்,நண்பர்கள்,உறவினர்கள் சரியான முறையில் வழிகாட்டுகிறார்களா..??


இவ் வருட க.பொ.த(உ/த) முடிவடைகிற தறுவாயை அடைந்துள்ளது.இது நம் சமுதாயத்தின் கல்வித் தரம் பற்றிச் சிந்திக்கும் யாவரும்  சிந்தித்துச் செயற்படுவதற்குரிய தருணம்..


Tuesday, August 24, 2010









டக்டக்கோ..

டக்டக்கோ என்றதும் எதோ சிறு பிள்ளைகளின் விளையாட்டுடன் சம்பந்தப்பட்ட பதிவு என எண்ணி வந்திருந்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான்.

இது அதுபற்றியது அல்ல.DuckDuckGo என்பது Google,Bing,yahoo போன்றதொரு தேடற்பொறி(search engine)யின் பெயர். அண்மைக்காலமாகத் துரித கதியில் இணையத் தேடல் உலகில் பிரபலமடைந்துவருகிறது இந்த DuckDuckGo.

இவ் DuckDuckGoவில் நாம் தேடலிற்காக ஓரு சொல்லை அடிக்கின்றோமென்றால்
அது அச் சொல் பற்றிய பயனுள்ள சிறிய முற்குறிப்பொன்றை முன்கூட்டியே வழங்கிவிடுகின்றது(Zero-click info).உதாரணமாக Sri Lanka என்று தேடினோமானால் முதலில்
Sri Lanka பற்றிய முன்குறிப்பொன்று DuckDuckGo வால் தொடர்பான இணைய இணைப்புகளுக்கு (related web links)முன்னமே வழங்கப்பட்டிருக்கும்.அத்துடன் அவ் இணைப்பு உத்தியோகப்பூர்வ தளத்தினுடையதா என்பதையும் அருகிலேயே DuckDuckGoவில் தந்து விடுகிறார்கள்.இதன்மூலம் நாம் பெறப்போகும் தகவல் உத்தியோகபூர்வமானதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.


அத்துடன் பலபொருள் கொள்ளக்கூடிய ஒரு சொல்லை நாம் DuckDuckGoவில் தேட முற்பட்டால் அது நம்மை முன்கூட்டியே பலபொருள் உள்ளது பற்றி நினைவுறுத்தும்.இதன் மூலம் நாம் பயனற்ற வேறு இணைப்புகளிற்குச் சென்று எமது நேரத்தை வீணடிப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.
DuckDuckGoவை பயன்படுத்தும்போது பயன்படுத்தும் எங்களைப் பற்றிய எந்த தகவல்களையும் இரகசியமான முறையில் பெற்றுக்கொள்வதில்லை.google இவ்வாறாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதாக சர்ச்சை பலகாலமாயுள்ளது. தனிப்பட்ட சுதந்திரத்தைத் த் தாம்(privacy) மீறுவதில்லை என்பதை தமக்குரிய விளம்பரமாகக்கூட உபயோகித்துவருகின்றது DuckDuckGo.


மேலும் DuckDuckGoவில் தேடலில் ஈடுபடுகையில் நாம் பல விசைப்பலகை சுருக்கக்குறியீடு(Key Board short cuts) களை உபயோகிக்கலாம்.உதாரணமாக கீழ் நோக்கிய அம்புக்குறியை உபயோகித்து எமக்குத் தேவையான கீழுள்ள தேடல் பெறுபேறுகளை இலகுவில்அடைந்துகொள்ளலாம்.
துரிதகதியில் வளர்ந்து வரும் இந்த DuckDuckGo தேடற்பொறியை நீங்களும் உபயோகித்துப்பார்க்க விரும்பினால் இங்கே சொடுக்குங்கள்.



Friday, August 13, 2010









சிக்கிச் சின்னாபின்னமான அரட்டை ஆட்டை

இணைய அரட்டை.. சற்(chat).. இப்போதெல்லாம் நம் வாழ்வில் தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டது.அரைமணி நேர அரட்டை என்று ஆரம்பித்து மணிக்கனக்கில் நீண்டு
அவ் அரட்டைகள் நமக்கெல்லாம்ஆப்படிப்பதும் உண்டு.நாங்கள் எல்லாரும் சற்(chat)ல ஆட்டையைப் போடுறதைப் பார்த்திற்று நம்ம நண்பன் ஒருத்தன்..
ஒரு நாள்...இணைய அரட்டையில தன்ர திறமையைக் காட்டப்ப்போய் மொக்கையாகின வரலாறும் இருக்கு..

அவன் இணைய அரட்டைக்கு புதுசு..அவன நாங்கள் எல்லாம் ”தல” எண்டு தான் கூப்பிடிறனாங்கள்.அவனும் தன்னோடை முந்தி ஊரில படிச்ச பிள்ள ஒண்டு இப்ப ukல இருக்கெண்டு எங்களுகெல்லாம் build up குடுத்திற்று தான் இண்டைக்கு  ”சற்”ல அந்தப் பிள்ளைக்கு ஆட்டையைப் போட்டுக் காட்டிறன் எண்டு சவால் விட்டுக் களத்தில இறங்கினான்.

நம்மாள் அமர்க்களமாய் தன்ர ஆங்கிலப் புலமையை எல்லாம் எடுத்து விட்டு ஆட்டையை ஆரம்பிச்சிது..  எழுத்துக் கூட்டி ஒன்றை அடிச்சு முடிக்கிறதுக்கிடையில அங்கையிருந்து மல்ரிபரல் மாதிரி பதில் வந்து குவியத் தொடங்கீற்றுது. நம்ம ”தல”யும் எங்களிட்டை நோண்டி ஆகியிரக்கூடாது எண்டதுக்காண்டி சமாளிச்சு சற்ல அடிச்சுத் தள்ளிக்
கொண்டிருக்கத்தான் அந்த இடி வந்து நம்ம ”தல”யின்ர தலையில இறங்கிச்சு..”சற்”றுக்கிடையில UKWIM எண்டு.. நம்ம நண்பனுக்கு அதுக்கு கருத்துப் புரியல..அது போன்ற அரட்டைக்கே உரித்தான குறுக்கப்பட்ட ;) விசேட சொற்கள் அவனுக்குப் பெரிதாகப் பரிச்சயமுமில்லை.எங்கள கேட்டு நோண்டியும் ஆகியிரக்கூடாதெண்டிட்டு அதுக்கு ஏதோ மழுப்பி அடிச்சு முடிச்சிட்டான்..தொடர்ந்து இப்பிடியே சுருக்கெழுத்து வந்திறங்கவே நிலைகுலைஞ்ச நம்மாள் அவசரமாய் வெளில போகணும்
 எண்டு ஒரு மாதிரி சொல்லி சமாளிச்சு சற்றை மூடி எதுவுமே ஆகாத மாதிரி
அப்பாவியாய் வெளில வந்திடிச்சு..

ஆனாப் பாருங்கோ எங்கட புலனாய்வுப் படை இதை சும்மா விட்டிருமோ..??அக்குவேறு ஆணி வேறாய் துப்புத் துலக்கி ukwim விசயத்தைக் கண்டு புடிச்சு நம்ம தலய உண்டு இல்லாமல் பண்ணிடிச்சு..

அது சரி அதில அவனை பிரிச்சு மேஞ்ச பலருக்கு ukwim எண்டா என்னண்டு கருத்து தெரியாது பாருங்கோ..(நம்மளுக்கும் தான்..)என்ன..??உங்களுக்கும் தெரியாது போல..கண்டுக்காதங்க.. you know what i mean ?? சிரிக்கிறீங்களே..
ஐயோ கையோ..என்ன சின்ன புள்ளத் தனமாய் கிடக்கு..
அந்த you know what i mean ர முதலெழுத்துகளைச் சேர்த்துப் பாருங்கோ..
ukwim வரும் (யாருப்பா அது UKல விக்கிற விம் சோப் எண்டு நினைச்சன் எண்டிறது ;))

அதுசரி ..இப்படி இனி நாங்கள் மொக்கையாகீரக்கூடாதென்று இணையத்தில கூகிளாண்டவரிட்ட சரணடைந்த போது தான் இது சிக்கியது.
ஏராளமான உத்தியோகப்பற்றற்ற ஆனால் அடிக்கடி உபயோகிக்கப்படும் சொற்களைத் திரட்டி அகராதியையே தயாரித்திருந்தார்கள்.


Monday, August 9, 2010









கலாசாரம் பேணுவோம்..வாரீர்..




தம்பிக்கு தடுமாற்றம் தலை கால் புரியாது
வெம்பிப் பழுத்த பழம் வேறொன்றும் அறியாது
”அம்பி”யாய் இருந்த தம்பி ”றெமோ”வாகி
 மதில் வழியே எம்பி எம்பி கனவுலகில் சஞ்சரிப்பார்..

உந்துருளி உந்துகையில் சுந்தரியின் சிந்தனையில்
மந்திபோல் குந்தி மாடுபோல் முறுக்கிடுவார்
சந்து பொந்து தெரியாமல் வந்த லொறி மீது பாய்ந்து
நொந்து போய் கட்டிலிலே நோவால் படுத்திடுவார்


பனிநனைத்த தலையோடும் முகம் நிறையப் பூச்சோடும்
நம்மூர் பெண்கள் சினிமா நாயகிகள் தாமென்ற நினைப்பில்
நுனிநாக்கு ஆங்கிலத்தோடு நூதனமாய் ”டமில்” கலந்து
எஞ்சியிருந்த தமிழழையும் கதறக் கதறக் கருவறுப்பர்


கன்றாவிக் கதை கனக்க காதோரம் கேட்குதப்பா
எண்டாலும் கனபேர் உயிர் கொடுத்து பொத்தி வளர்த்த
பண்பாடு பஞ்சாபி போட்டால்த்தான் போகுமென்றால்
பெண்சாதி எல்லோரும் போட்டிடுவீர் பஞ்சாபி..



Thursday, August 5, 2010









நான் கொழும்புக்குப் புறப்பட்ட காலக் கதை....

 இரண்டு மூன்று வருடங்களிற்கு முன் ..யாழ்-கொழும்பு பயணம் என்பது குதிரைக் கொம்பு போன்றது..நீண்ட நெடிய வலிமிகு ஏற்பாடுகள் அவசியமானது.. அந்த ஏற்பாடுகள் மிக வேகமாக மாறுந் தன்மையுடையது.நேற்று இருந்த ஒழுங்கு முறை இன்றிருக்காது.இன்றைய ஒழுங்கு முறை நாளை இருக்குமா என்பதையும் யாராலும் உறுதிப் படுத்திவிடவும் முடியாது..இவற்றோடு ஒப்பிடுகையில் வெளிநாடு செல்வது எவ்வளவோ எளிதானது..

முதலில் பாதுகாப்பு முன் அனுமதி(clearance) பாதுகாப்பமைச்சிடம் பெறவேண்டும்.மாதக்கணக்கில் தவமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளவேண்டும்…இந்த முதல் ஏற்பாட்டைப் பூர்த்தி செய்த பின் அடுத்தது..
கப்பலில் செல்வதென்றால் யாழ் பழைய புகையிரத நிலையத்தில் முதல் நாளே பெட்டி படுக்கையுடன் குடி பெயர வேண்டியது தான்.(யாரது? கப்பல் என்று விட்டு புகையிரத் நிலையம் என்கிறான் என்று புத்திசாலியாக் முற்படுவது.. J எங்கள் புகையிரத நிலையம் அப்போதெல்லாம் புகையிரதத்தைக் கண்டு தசாப்த காலமாயிருந்தது..)இங்கு சென்று ஆயிரக் கணக்கான மக்கள் சமுத்திரத்தில் ஐக்கியமாகி விட்டால் அதன் பின் கப்பல் ஓடும் நாட்களில் அவ்ர்கள் வந்து பல நூற்றுக் கனக்காண மக்களை வசு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சென்று பாதுகாப்புப் பதிவுகள் முடித்து பயணம் ஆரம்பமாகும். இரவிரவாக கப்பலோடி மறுநாள் காலையில் திருகோணமலையை அடையும்..இந்தக் கப்பலைப்பெறவே மாதக் கணக்கில் புகையிரத நிலையத்தில் தவமிருந்தவர்களும் நம்மிடையே இருந்தார்கள்.

விமானமென்றால் சொல்லவே தேவையில்லை.அது ஒரு வர்த்தக ஏகபோகம்.ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனம் தான் அதனை வழங்கியது..சில மாதத்திற்கு முந்தியே முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டும்.அந்த நிறுவனத்தில் முன்பதிவு செய்தவர் நீங்கள் என்றால் உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.எந்த அவமானத்தையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருந்திருக்கவேண்டும்.அங்கே உங்களை மந்தை மேய்ப்பதைப்போல் மேய்ப்பார்கள்.சுய ரவத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பதிவினை மேற்கொள்வதை விட வேறு வழியில்லை.பெருங்கொடுமை என்னவெண்றால் இந்த நிறுவனத்தின் கதவுகள் அவர்களது உறவினர்களுக்கும்,தெரிந்தவர்களுக்கும் பண முதலைகளுக்கும் எப்போதும் திறந்திருக்கும்..யாரும் கண்டுகொள்ளக் கூடாது..ஆனால் இவ்வளவும் நிகழ்ந்தாலும் அந்த நிறுவனத்திற்கு முன்னால் மக்கள் கூட்டத்திற்கு குறைவிருக்காது..ஏனென்றால் இவ் இரு (கடல்,ஆகாய) மார்க்கங்களைத் தவிர எங்கள் மக்களுக்கு வேறு மார்க்கமிருக்கவில்லை....




Tuesday, August 3, 2010









விரைவில் வருவேன்..

என் இயல்பான சோம்பலைக் கடந்து இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விசயம்..பரீட்சைக்காலம்..அதன் பின் பதிவுலகில நாமளும் குதிக்கிறதாயிருக்கம்(?)..(யாரது..?குதிச்சு என்னத்தைக் கிழிக்கப்போறாயெண்டு கேக்கிறது..?? பன்ஞ் டயலக்கோடை எவ்வளவு பேர் அறிமுகமாகிறாங்க.. அப்ப எல்லாம் ஒண்டும் கேக்கமாட்டீங்க..நம்மளை மட்டும்..??!!)