இணைய அரட்டை.. சற்(chat).. இப்போதெல்லாம் நம் வாழ்வில் தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டது.அரைமணி நேர அரட்டை என்று ஆரம்பித்து மணிக்கனக்கில் நீண்டு
அவ் அரட்டைகள் நமக்கெல்லாம்ஆப்படிப்பதும் உண்டு.நாங்கள் எல்லாரும் சற்(chat)ல ஆட்டையைப் போடுறதைப் பார்த்திற்று நம்ம நண்பன் ஒருத்தன்..
ஒரு நாள்...இணைய அரட்டையில தன்ர திறமையைக் காட்டப்ப்போய் மொக்கையாகின வரலாறும் இருக்கு..
அவன் இணைய அரட்டைக்கு புதுசு..அவன நாங்கள் எல்லாம் ”தல” எண்டு தான் கூப்பிடிறனாங்கள்.அவனும் தன்னோடை முந்தி ஊரில படிச்ச பிள்ள ஒண்டு இப்ப ukல இருக்கெண்டு எங்களுகெல்லாம் build up குடுத்திற்று தான் இண்டைக்கு ”சற்”ல அந்தப் பிள்ளைக்கு ஆட்டையைப் போட்டுக் காட்டிறன் எண்டு சவால் விட்டுக் களத்தில இறங்கினான்.
நம்மாள் அமர்க்களமாய் தன்ர ஆங்கிலப் புலமையை எல்லாம் எடுத்து விட்டு ஆட்டையை ஆரம்பிச்சிது.. எழுத்துக் கூட்டி ஒன்றை அடிச்சு முடிக்கிறதுக்கிடையில அங்கையிருந்து மல்ரிபரல் மாதிரி பதில் வந்து குவியத் தொடங்கீற்றுது. நம்ம ”தல”யும் எங்களிட்டை நோண்டி ஆகியிரக்கூடாது எண்டதுக்காண்டி சமாளிச்சு சற்ல அடிச்சுத் தள்ளிக்
கொண்டிருக்கத்தான் அந்த இடி வந்து நம்ம ”தல”யின்ர தலையில இறங்கிச்சு..”சற்”றுக்கிடையில UKWIM எண்டு.. நம்ம நண்பனுக்கு அதுக்கு கருத்துப் புரியல..அது போன்ற அரட்டைக்கே உரித்தான குறுக்கப்பட்ட ;) விசேட சொற்கள் அவனுக்குப் பெரிதாகப் பரிச்சயமுமில்லை.எங்கள கேட்டு நோண்டியும் ஆகியிரக்கூடாதெண்டிட்டு அதுக்கு ஏதோ மழுப்பி அடிச்சு முடிச்சிட்டான்..தொடர்ந்து இப்பிடியே சுருக்கெழுத்து வந்திறங்கவே நிலைகுலைஞ்ச நம்மாள் அவசரமாய் வெளில போகணும்
எண்டு ஒரு மாதிரி சொல்லி சமாளிச்சு சற்றை மூடி எதுவுமே ஆகாத மாதிரி
அப்பாவியாய் வெளில வந்திடிச்சு..
ஆனாப் பாருங்கோ எங்கட புலனாய்வுப் படை இதை சும்மா விட்டிருமோ..??அக்குவேறு ஆணி வேறாய் துப்புத் துலக்கி ukwim விசயத்தைக் கண்டு புடிச்சு நம்ம தலய உண்டு இல்லாமல் பண்ணிடிச்சு..
அது சரி அதில அவனை பிரிச்சு மேஞ்ச பலருக்கு ukwim எண்டா என்னண்டு கருத்து தெரியாது பாருங்கோ..(நம்மளுக்கும் தான்..)என்ன..??உங்களுக்கும் தெரியாது போல..கண்டுக்காதங்க.. you know what i mean ?? சிரிக்கிறீங்களே..
ஐயோ கையோ..என்ன சின்ன புள்ளத் தனமாய் கிடக்கு..
அந்த you know what i mean ர முதலெழுத்துகளைச் சேர்த்துப் பாருங்கோ..
ukwim வரும் (யாருப்பா அது UKல விக்கிற விம் சோப் எண்டு நினைச்சன் எண்டிறது ;))
அதுசரி ..இப்படி இனி நாங்கள் மொக்கையாகீரக்கூடாதென்று இணையத்தில கூகிளாண்டவரிட்ட சரணடைந்த போது தான் இது சிக்கியது.
ஏராளமான உத்தியோகப்பற்றற்ற ஆனால் அடிக்கடி உபயோகிக்கப்படும் சொற்களைத் திரட்டி அகராதியையே தயாரித்திருந்தார்கள்.
3 comments:
நல்ல நகைச்சுவையான பதிவு...
எழுதுங்கள் இன்னமும்... என்னுடைய வோட்டும் உங்களுக்குத் தான்...!
நன்றி பிறேம்..உங்கள் அன்பிற்க்கும் ஆதரவிற்கும் :)
1. ஆப்பிள் ஐபேடுடன் போட்டியிடும் சீன நகல் ஐபெட் !!
2. சினிமா விமர்சனம்-குறுக்குப்புத்தி 18+
3. இந்தியா ஒளிர்கிறது, இந்தியா ஒளிர்கிறது
4.நேரடி ஒளிபரப்புக்கு ஜெயலலிதா பயன்படுத்தும் இணையதளம்!
5.ஆயிஷா
(www.jeejix.com ) . உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
Post a Comment