”கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த குடிகள் நாம்” போன்ற உணர்வூட்டி உசுப்பேத்தும் உரைகளில் நாம் காட்டும் ஆர்வத்தில் ஒர் சிறு பங்கையேனும் எமது வரல்லற்று முதுசொம்களை பேணுவதில் நாம் காட்டுவதில்லை.நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை.
யாழ்ப்பாணத்தில் இராசதானி அமைத்து தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று நாளைய தலைமுறைக்கு கட்புல ஆதாரமாகக் காட்டக்கூடிய சில ஆதாரங்களே இன்று நம்மிடையே எஞ்சியுள்ளது.அவையும் சிதைவடைந்து நலிவடைந்து அழிவடையும் நிலைக்குச் செல்வதை நாமெல்லாம் அமைதியாக அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்.
நல்லூர் இராசதானியின் இறுதி எச்சங்களாக இன்று எஞ்சியுள்ளவற்றுள் பிரதானமானது ”யமுனா ஏரி” எனப்படுகிற மன்னர்கள் பயன்படுத்திய ப வடிவ தடாகம்.புதர் மண்டிய பற்றைக் காட்டினிடையே அமைதியாய் சிதைவடைந்தவாறு அது இன்றுமிருக்கிறது.யமுனா ஏரிக்குச் செல்வதற்கான பாதையை அதற்கு அண்மையில் சென்று நின்று கேட்டால் கூட அவ்விடத்தில் இருக்கும் இளைஞர்கள் கூட சரியாக அடையாளங்காட்ட மாட்டார்கள். அந்த அளவில் யமுனாஏரி பற்றிய விளிப்புணர்வு எங்கள் யாழ் மக்களிடம் இருக்கின்றது.
அடுத்தது கல்வியங்காட்டை அண்மித்து அமைந்துள்ள ”மந்திரிமனை” .இது ஓர் புராதன மாடி வீடு.பிரதான வாசலிலிலே அவ் வீடு பற்றி சாசனம் ஒன்று பழந் தமிழில் எழுதப்பட்டிருக்கும். உள்ளே பல மர வேலைப்பாடுகளுடனான தூண்களையும் காணலாம்.அதுவும் சிதைவடைந்த வாறேயுள்ளது.முன்பு ஒரு முறை அங்கு செல்கையில் ஒர் ஏழைக் குடும்பமொன்று அதன் ஒரு பகுதியைத் தமது வசிப்பிடமாக்கியிருந்தார்கள்.எஞ்சிய பகுதிகளை அவ்விடத்தில் வசிக்கும் மூதாட்டியொருத்தி தனது ஆடு மாடுகளைக் கட்டுமிடமாக உபயோகித்துக் கொண்டிருந்தாள்.இவ்வாறாக எங்கள் வளங்களின் உச்சப் பயன்பாடு சென்றுகொண்டிருந்தது.
அடுத்தது பருத்தித்துறை வீதியில் நல்லூரில் அமைந்துள்ள ஒரு நுளைவாயில் ஒன்று.பழைய அரண்மனையின் சிதைவு இது என்கிறார்கள்.இதற்குத் தகரத்தாலான கொட்டகையொன்று (வரலாற்று ஆதாரக் காப்பிற்காக ஒரு சில நடவடிக்கைகளை நம்மவர்களும் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம் இக் கொட்டகை.அதனை யார் எப்போது அமைத்தார்கள் என்பது தெரியவில்லை) அமைத்து மழை,வெயிலிலிருந்து பாதுகாத்திருந்தார்கள்.அண்மையில் நல்லூரில் நட்சத்திர விடுதியொன்று இதற்கு அண்மையில் கட்ட முற்படுகையில் எங்கள் கலாசார காவலர்கள் (!!??) பொங்கி எழுகையில் இது பற்றிய விளிப்புணர்வு ஓரளவு மக்களிற்கு ஏற்பட்டிருக்கலாம்.
எங்கள் யாழ் தொல்பொருட் சாலையின் இன்றைய நிலை பற்றி கானாபிரபா அவர்கள் ஓர் பதிவு இட்டிருந்தார்.அதனை இங்கே பார்வையிடலாம்.இப்படியாக எங்கள் மரபுவழி முதுசொங்கள் பேணப்படும் ஆர்வம் சென்று கொண்டிருக்கிறது.எப்போது தான் நாமெல்லாம் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றோமோ?? ஆனால் தாமதமாகும் ஒவ்வோர் கணமும் அவை சிதைவடைந்து அழிவடைந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்பது மட்டும் வருத்தத்திற்குரிய உண்மை..
இவை பற்றிய கலாநிதி க.குணராசா அவர்களின் நமது ஈழநாடு செவ்வி ,மற்றும் யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற விவாதம் போன்றவை தொடர்பாக 2002,2003 காலப்பகுதியில் பத்திரிகைகளில் வெளியான ஆக்கங்களின் இணைப்புகளை
திரு .தங்கமுகுந்தன் அவர்கள் பின்னுட்டத்தில் இணைத்திருக்கிறார். அவற்றையும் ஒருதடவை மேலதிக தகவல்களிர்காகப் பாருங்களேன் ..
படங்கள் கீழுள்ள தளங்களிலிருந்து சுடப்பட்டன..
நன்றி
12 comments:
புதிது புதிதாகக் கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்யும் எம் இனம் இதையெல்லாம் கண்டெடுத்துப் பார்க்குமா என்ன :(
மாற்று நடவடிக்கைகள் எடுப்பதற்கான சிறு தடயங்களும் தென்படுவதாய் இல்லை... அப்படி இருக்க நாம் என்ன தான் செய்து விட முடியும்...!
:( .. இது தான் என்னாலும் முடிந்தது..
வருகைக்கு நன்றி கானா அண்ணா..
ஆதங்கப் படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் பிறேம்..!!
எங்கட யாழ் பல்கலைக்கழக புத்திசீவிகள்(?) பிரசங்க மேடையளில பொழியிறதை நிப்பாட்டி இந்த கிரிசகேடுகளை கொஞ்சம் திரும்பிப்பார்ர்த்தினமெண்டா பலதுக்கும் நல்லம்..ஆனா நடவாத காரியம்.
நிச்சயமாகத் தேஜோ .. செயற்படவேண்டியவர்கள் தாமதிக்காது செயற்பட்டாக வேண்டும்
http://kiruththiyam.blogspot.com/2009/06/blog-post_20.html
http://kiruththiyam.blogspot.com/2009/08/blog-post_449.html
நன்றி .. பயனுள்ள பத்திரிக்கை ஆக்கங்களின் இணைப்பு ..
அவ் மந்திரி மனையில் அடைக்கப்பட்டுள்ளது சுரங்கம் என்று தான் கேள்விப்படிருந்தேன்..
இப்போது தான் தெரிகிறது அவை மூன்றடுக்கு நிலவறைகள் என..
எதெல்லாத்தையும் காப்பாத்தாத உங்களுக்கு இப்ப இது தான் ஒரு குறையோ..?? போங்கப்பா..போய் பிள்ள குட்டிய படிப்பிக்கிற வழியயாவது பாருங்க..
காலமாற்றத்தால் அழிந்தவை ஒருபுறம். இன்று இனவழிப்பின் கோரத்தால் அழிவது மறுபுறம். இதற்காக குரல் கொடுப்போர் யார்?
Post a Comment