Pages

Subscribe Twitter Twitter

Tuesday, August 24, 2010









டக்டக்கோ..

டக்டக்கோ என்றதும் எதோ சிறு பிள்ளைகளின் விளையாட்டுடன் சம்பந்தப்பட்ட பதிவு என எண்ணி வந்திருந்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான்.

இது அதுபற்றியது அல்ல.DuckDuckGo என்பது Google,Bing,yahoo போன்றதொரு தேடற்பொறி(search engine)யின் பெயர். அண்மைக்காலமாகத் துரித கதியில் இணையத் தேடல் உலகில் பிரபலமடைந்துவருகிறது இந்த DuckDuckGo.

இவ் DuckDuckGoவில் நாம் தேடலிற்காக ஓரு சொல்லை அடிக்கின்றோமென்றால்
அது அச் சொல் பற்றிய பயனுள்ள சிறிய முற்குறிப்பொன்றை முன்கூட்டியே வழங்கிவிடுகின்றது(Zero-click info).உதாரணமாக Sri Lanka என்று தேடினோமானால் முதலில்
Sri Lanka பற்றிய முன்குறிப்பொன்று DuckDuckGo வால் தொடர்பான இணைய இணைப்புகளுக்கு (related web links)முன்னமே வழங்கப்பட்டிருக்கும்.அத்துடன் அவ் இணைப்பு உத்தியோகப்பூர்வ தளத்தினுடையதா என்பதையும் அருகிலேயே DuckDuckGoவில் தந்து விடுகிறார்கள்.இதன்மூலம் நாம் பெறப்போகும் தகவல் உத்தியோகபூர்வமானதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.


அத்துடன் பலபொருள் கொள்ளக்கூடிய ஒரு சொல்லை நாம் DuckDuckGoவில் தேட முற்பட்டால் அது நம்மை முன்கூட்டியே பலபொருள் உள்ளது பற்றி நினைவுறுத்தும்.இதன் மூலம் நாம் பயனற்ற வேறு இணைப்புகளிற்குச் சென்று எமது நேரத்தை வீணடிப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.
DuckDuckGoவை பயன்படுத்தும்போது பயன்படுத்தும் எங்களைப் பற்றிய எந்த தகவல்களையும் இரகசியமான முறையில் பெற்றுக்கொள்வதில்லை.google இவ்வாறாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதாக சர்ச்சை பலகாலமாயுள்ளது. தனிப்பட்ட சுதந்திரத்தைத் த் தாம்(privacy) மீறுவதில்லை என்பதை தமக்குரிய விளம்பரமாகக்கூட உபயோகித்துவருகின்றது DuckDuckGo.


மேலும் DuckDuckGoவில் தேடலில் ஈடுபடுகையில் நாம் பல விசைப்பலகை சுருக்கக்குறியீடு(Key Board short cuts) களை உபயோகிக்கலாம்.உதாரணமாக கீழ் நோக்கிய அம்புக்குறியை உபயோகித்து எமக்குத் தேவையான கீழுள்ள தேடல் பெறுபேறுகளை இலகுவில்அடைந்துகொள்ளலாம்.
துரிதகதியில் வளர்ந்து வரும் இந்த DuckDuckGo தேடற்பொறியை நீங்களும் உபயோகித்துப்பார்க்க விரும்பினால் இங்கே சொடுக்குங்கள்.



2 comments:

எஸ்.கே said...

மிக நல்ல தகவல்! மிக்க நன்றி!

sinmajan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி எஸ்.கே