Pages

Subscribe Twitter Twitter

Wednesday, August 25, 2010









தமிழ் மாணவர்களின் உயர்கல்வி..நாம் கவனிக்கின்றோமா..??

இலங்கையின் கல்வித் துறை அடுத்த கட்டத்தினுள் புகுவதற்கு மிக வேகமாகவே தயாராகி வருகின்றது.வெளிநாட்டின் பல்கலைக்கழகங்களை
இலங்கைக்குள் உத்தியோகபூர்வமாகவே அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.


அதற்கு முன்னோடியாக உயர்கல்வி அமைச்சின் கீழ் வரும் Sri Lanka Institute of Information Technology(SLIIT) தான் வழங்கும் பட்டப்படிப்புகளிற்கான அடுத்த கல்வியாண்டிற்காக பங்களாதேஷ் மாணவர்களிற்கான அழைப்பை விடுத்திருக்கின்றது.இத்ற்காக பங்களாதேஷில் SLIIT ஓர் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே நுளைவுத் தேர்வுகளை நடாத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆரம்பித்துவிட்டது.இதுவரை நமது மாணவர்கள் வெளிநாட்டு உயர்கல்விக்காக IELTS எடுப்பது போல அங்குள்ள மானவர்கள் இனி இலங்கை வர IELTS எடுக்கப் போகிறார்கள் ;) .மேலதிக விபரங்களிர்காக இங்கே சொடுக்குங்கள். இந் நடவடிக்கைகள் மாலைதீவு,கியூபா என விஷ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும்  SLIIT பரிசீலித்துக் கொண்டிருக்கிறதாம்.


ஆனால் நமது தமிழ் மாணவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்..??!!ஒரு தொகுதி மாணவர்கள்( பெற்றோர் திரும்பத் திரும்ப பலவந்தப் படுத்தியோ, அல்லது சுய விருப்பின் பேரிலேயோ) மூன்று முறை க.பொ.த (உ/த) எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.சரி..எத்தனை முறை எடுத்தாலும் விரும்பிய  துறைக்குப் பல்கலைக்கழகங்களிற்குத்  தெரிவாகும் சிறு தொகை மாணவர்களை விட்டுவிடுவோம்.எஞ்சியோர் நிலை என்ன..?

 விரும்பியோ விரும்பாமலோ பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவு செய்து அனுப்பும் துறையில் கல்வியைத் தொடர்கின்றார்கள் ஒரு குறித்த தொகையினர்.எஞ்சிய பணபலம் உடைய ஒரு தொகையினர் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை நோக்கிச் செல்கிறார்கள்.அதில் ஒரு தொகையினர் வெற்றிபெற, ஒரு தொகையினர் கையில் கிடைக்கும் உதிரி வேலைகளோடு தமது காலத்தைக் கழிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு விடுகிறார்கள்.இலங்கையில் எஞ்சும் மறு தொகையினர் கையில் கிடைக்கும் ஏதாவது வேலைகளுடன் திருப்தியடையச் செய்யப்படுகிறார்கள்.சுய விருப்புடன் க.பொ.த(உ/த) வேலையில் இணைபவர்கள் இல்லாமலில்லை.அவர்களில் சிலர் பின்நாளில் கடும் முயற்சியுடன் உயர் பதவிகளை அடைவதையும் மறுப்பதற்கில்லை.

இலங்கையில் இப்போதுள்ள பல்கலைக்கழகங்களிற்கான தேர்வு முறை விசித்திரமானது.பல ஓட்டைகளைக் கொண்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.அதற்காககப் பல்கலைக்கழகங்களிற்குத் திறமையற்றவர்கள் தெரிவாகிறார்கள் என்று கூறிவிடமுடியாது.அவர்கள் மிகக் கடினமான ஒரு தெரிவுத் தடையை கடந்து வந்தவர்கள்.ஆனால் திறமையான சில மாணவர்கள் அரச பல்கலைக் கழகங்களிற்குத் தெரிவாகாமல் போய்விடுகிறார்கள் என்பதையும் நாம் மறுத்து விட முடியாது.

பல்கலைக்கழகங்களிற்கு தாம் விரும்பிய துறைக்குத் தெரிவாகாத பெருந்தொகையான மாணவர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு தான் என்ன? உயர் பணபலம் படைத்தவர்கள் தரமான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நாடிச்செல்லலாம்.எஞ்சியோர்..!!??அவர்களிற்கு இலங்கையில் உயர்கல்வித் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய வாய்ப்புகள் பற்றி ஏற்கனவே ஓர் தரமான நிலையை அடைந்த  நம் தமிழ் சகோதரர்கள்,நண்பர்கள்,உறவினர்கள் சரியான முறையில் வழிகாட்டுகிறார்களா..??


இவ் வருட க.பொ.த(உ/த) முடிவடைகிற தறுவாயை அடைந்துள்ளது.இது நம் சமுதாயத்தின் கல்வித் தரம் பற்றிச் சிந்திக்கும் யாவரும்  சிந்தித்துச் செயற்படுவதற்குரிய தருணம்..


5 comments:

Thejo said...

யாழ்ப்பாணத்து மாணவர்களது நிலை இப்போது 'குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது' என்றால் மிகையாகாது. மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் எமது சமூகத்துக்கு இருக்கும் ஆர்வம் கேள்விக்குரியது. தேவையில்லாததை கைப்பற்றிக்கொள்ளும் வேகத்தில் நாங்கள் தேவையானதை கைப்பற்றுவதில்லை. இனியாவது மாறுவோமா? காலத்தின் தேவை உணர்ந்த பதிவு.

Anonymous said...

தேவையில்லாததை கைப்பற்றிக்கொள்ளும் வேகத்தில் நாங்கள் தேவையானதை கைப்பற்றுவதில்லை.
-தேஜோ
சரியான கணிப்பு.

sinmajan said...

நிச்சயமாக தேஜோ..

நன்றி Annonymous ;)

Prem said...

மாற்றுக்கருத்துக்கு இடமில்லை...!
தமிழ் மாணவர்களின் கல்விப் பாதையில் புதியதொரு மாற்றம் ஏற்படுத்தப்ப்ட வேண்டும்...!!!

sinmajan said...

என்ன..து.. மாற்றுக்கருத்திற்கு இடமில்லையா..??
இது ஜனநாயக விரோதம்.. :P

ம்..ஏற்படுத்தப்பட வேண்டும்..பிறேம்!!