தேரேறிய நல்லூர் முருகன் தீர்த்தமாடி திருக்கல்யாணத்துக்கும் தயார், முருகா! முருகா! என திருவடிதொழும் பக்த்தர்கள் அமைதியாக தம் கடவுளருக்கு நேர்த்திக்கடன்கள் நிறைவேறியதாக ஓரு மனநிறைவு. அறுதிப்பெரும்பான்மை வாக்குகளால் தம்வம்ச இலட்சியங்கள் இன்று பரளுமன்றில் நிறைவேறியதாக மக்கள் பிரதிநிதிகள், கல்லெறி மரணதண்டனைக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஈரானியப் பெண்மணி, துபாய் பூருஜி (Burj Kahlifa) கட்டிட உயரத்திலும் 130 மீற்றர்கள் உயரம் குறைவன அளவு அடிஆழத்தில் உயிருடன் பத்திரமாக புதைந்து, வெளியேவர குறைந்தது நான்கு மாதங்களாவது செலுமென காத்திருக்கும் சிலியின் 33 சுரங்கப்பணியாளர்கள், கண்ணிவெடி அகற்றும் ஆபிரிக்க எலிகள் என உலகம் வலம் வந்துகொண்டிருக்க நாங்களும் நீங்களும் திண்ணையில் ...
உங்களுக்குத் தெரியும், ஒரு கதை இருக்குது! ரொம்பகாலத்துக்கு முன்பு கடவுள் ஆண்கள் பெண்கள் என்று உருவாக்கமுன்பே அழகு, அழகில்லாதது, பண்பு, பண்பில்லாதது, வீரம், மானம், அது இது என்று ஒருமனிதனுக்கு இருக்கவேண்டிய எல்லாப் சிறப்பியல்புகளையும் படைத்துவிட்டாராம். காலாகாலத்தில் கடவுள் மனிதனைப் படைக்கும் போது எழுந்தமானமாக( கடவுளின் சிபார்சு இன்றி ), எலவே பூமியில் படைக்கப்பட்டுள்ள சிறப்பியல்புகளும் வந்து ஒட்டிக்கெளுமாம். கதை, படைக்கப்பட்ட 'சிறப்பியல்புகள்' மட்டும் இருந்த் காலத்தில் நடந்ததாம். அழகும் அழகில்லாததும் சேர்ந்துதான் எப்போதும் திரியுமாம். அறிவு ரொம்பவே கவனமானதாம், அறிவில்லாததுடன் சேரவேமாட்டாதாம், வீரத்தைக் கண்டால் வீரமில்லாததுக்கு நடுக்கமாம், அதிர்ஷ்டத்தின் வழி தனிவழி இப்படி எல்லாமே ஒரே தினுசு தினுசாக இருந்தாதாம். இப்ப உங்களுக்கு விளங்கும் பல வகையான சுவாரசியம் மிக்க சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்புண்டு. அவற்றில் ஒரு மாதிரிக்கதைதான் இது!
அழகும் அழகில்லாததும் சேர்ந்து குளிக்கப் போனார்களாம். அழகில்லாதது, அழகின் ஆடைகளை அணிந்துவிட்டு தனது அசிங்கமான ஆடையினை விட்டுவிட்டு எங்கோ கண்தெரியாத இடம் சென்றுவிட்டதாம். அழகும் வேறுவழியின்றி அசிங்கமான ஆடையுடன் 'மானத்தை' காப்பாற்றியதாம். இன்றும்கூட அழகு அசிங்கமான ஆடையுடன் திரிவதாகத் தகவல். ஏனவெ இதுபோன்ற பல 'தில்லுமுல்லுகள்' அந்தக்காலத்தில் நடந்ததாகக் கேள்வி. ஏனவே, பாவம் மனிதர்கள் நாங்கள் இது போன்ற உண்மைகளை அறிவதில்லை. வெளியில் காண்பதை உண்மையேன நம்புகிறோம். ஒரு மனிதனின் இயல்புகளை கொண்டு அவனை தீர்ப்பிடவோ, புகழவே, இகழவோ, இன்ன்னும் எனென்னவோ செய்யக்கூடாது என கடுமையாக நம்புவதில் என்ன தவறு. ஏன்னைப் பொறுத்தவரையில் மனிதர்கட்கேஉரிய மனிதம் மட்டுமே கொண்டாடப்படவேண்டியது, நம்பப்படவேண்டியது.
எங்கள் அறிவுக்கு எட்டியவகையில், ஆத்மீக எண்ணங்களுக்கு எற்றவகையில் இலங்கயில் மடுத்திருப்பதியோ, கதிர்காமமோ, சிவனோளிபாதமோ, தலதாமாளிகையோ இந்தியாவின் அதோ இதோ, மிகவும் அமைதி, நிம்மதி, விரும்புவது எல்லாம் தருமென நினைப்பதைவிட மனிதர்கள் தமது மனிதத்துவத்தை முதன்மைப்படுத்துவது நல்லது. ஏன் இதை நான் சொல்லிமுடிக்கிறேன் என்றால் அந்தக்காலத்தில் இந்த 'நிம்மதி' என்ன தில்லுமுல்லு செய்திச்சுதோ யாருக்குத்தெரியும்.
ஆடுகள் எல்லாம் கழுத்தில் கயிறுடன் பிறப்பதில்லை, அதுபோல்
நாங்களும் நீங்களும் அங்கும்இங்கும் இழுபட எதையும்கொண்டு வரவில்லை.
8 comments:
good work bro... :)
இரண்டாவது தடவை வாசித்தபோது தான் முழுமையாகப் புரிந்துகொள்ளக் கூடியதாயிருந்தது..
முன்பின் நவீனத்துவங்கள் ஏதாவது கலந்து கட்டி எழுதினீர்களோ தெரியாது.
உண்மை தான்.. நிம்மதி மட்டும் ஏதோ தில்லுமுள்ளுச் செய்து அனேகமான மனிதர்களுடன் வந்து ஒட்டிக்கொள்ளவில்லைப் போலும்.
அருமையான கட்டுரை..அடுத்த தடவை எழுதுகையில் எழுத்துப் பிழைகளையும் கொஞ்சம் சரிபாருங்களேன்..
-கணாதீபன்
தலைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்க எழுத்து நடைக்கு சிறுகதை நல்லா வரும் போல இருக்கு.எழுதிப்பாருங்கண்ணா..
நல்ல பதிவு
தலைப்பே அருமையாக இருக்கிறது..
மனிதர்கட்கேஉரிய மனிதம் மட்டுமே //கொண்டாடப்படவேண்டியது, நம்பப்படவேண்டியது
Exactly. A good read. Keep rocking thalai.
//குறைந்தது நான்கு மாதங்களாவது செலுமென காத்திருக்கும் சிலியின் 33 சுரங்கப்பணியாளர்கள்
இரண்டு மாதங்களிலேயே வியக்கத் தக்க அர்ப்பணிப்போடு வெற்ரிகரமாக மீட்டுவிடார்கள்..அர்ருமையான அர்ப்பணிப்பு.. பார்த்தீர்களா??
very nice work, keep it up.
Post a Comment