Pages

Subscribe Twitter Twitter

Thursday, September 2, 2010









தடயமில்லா இணையப் பாவனை நோக்கி..-02

தடயமில்லா இணையப் பாவனை பற்றிய சில அடிப்படைத் தகவல்களைப் பெற தடயமில்லா இணையப் பாவனை நோக்கி-01 ஐ வாசித்துவிட்டு இங்கே வாருங்கள்.

நாம் இணையத்தில் உலாவுகையில் ஒரு இணையத் தளத்திற்கான URL ஐ அடித்தோமென்றால் பின்புலத்தில்  DNS எனும் செயன்முறை நடந்து முடிந்தே அவ் இணையத் தளம் எமது பார்வைக்கு வருகின்றது.
உதாரணமாக நாம் www.nizal-sinmajan.blogspot.com எனும் URL ஐ அடித்தோமென்றால் முதலில் அத் தளமுள்ள server இனுடைய IP முகவரி கண்டறியப்பட்டு அவ் IP முகவரியினூடாகவே உரிய தளம் பெறப்பட்டு எங்கள் Google chrome, firefox போன்ற உலாவி(Browser)களில் காட்சிப்படுத்தப்படுகின்றது.இவ் DNS வசதி மட்டும் இல்லாவிட்டால் நாம் இணையத் தள முகவரிகளை இலக்கங்களில் தான் மனனம் செய்தோ பதிந்தோ வைத்திருக்கவேண்டியிருந்திருக்கும்.உதாரணமாக twitter தளத்திற்குச் செல்வதற்கு http://168.143.162.36/ என்றே அடிக்கவேண்டியிருக்கும்.இவ் DNS வசதியானது இலக்கங்களுடன் விளையாடுவதற்கு ;) நம்மில் பலருக்குள்ள சிரமத்தைப் போக்கியிருக்கின்றது.
ஆனால் எங்கள் உலாவிகள் நாம் ஏற்கனவே விஜயம் செய்த இணையத் தளத்திற்கு மீள விஜயம் செய்கையில் மீள DNS செயன்முறையில் ஈடுபட்டு நேர விரயம் ஏற்படாமலிருக்க நாம் விஜயம் செய்த தளங்களையும் அவற்றின் IP முகவரியையும் (நாம்  incognito/private browsing நிலையில் இணையத்தில் உலாவினால் கூட)நமது கணனியிலேயே சேமித்து வைக்கின்றது. இங்கே தான் நமது தடயமில்லா இணையப் பாவனைக்கு ஆப்பு அடிக்கப்படுகிண்றது.
Run இல் சென்று cmd என அடித்தோ அல்லது வேறு முறைகளிலோ Command prompt ஐ பெறுங்கள்.அதிலே ipconfig /displaydns என அடித்து ENTER செய்து பாருங்கள்.நீங்கள் விஜயம் செய்த தளங்களின் முழு வரலாறே வந்து இருக்கும்.இங்கே நீங்கள் private browsing இல் ஈடுபட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் தள முகவரிகளைச் சேமித்து வைத்திருக்கும்.

கவலையை விடுங்கள்.இதனை நாங்கள் அழித்துவிடலாம்.command prompt இல் ipconfig /flushdns என அடித்து EN TER செய்தால் எல்லா விபரங்களையும் அழித்துவிடலாம்.
யாரது அப்பாடா என ஆழ்ந்த பெருமூச்சு விடுவது..?? இன்னும் சில வழிகள் இருக்கின்றன உங்கள் இணையத் தள விஜயங்களிற்கான தடங்களைப் பெற்றுக் கொள்வதற்கு..


0 comments: