விஞ்ஞானம் விந்தையானது மட்டுமல்ல, சிலவேளைகளில் அது விசித்திரமானதும் கூட. விமர்சகர்கள் விஞ்ஞானத்தின் 'அவசரத்தன்மை'யை பலவீனமாக எடுத்துக்கொண்டு சூடாக விவாதிப்பதும் உண்டு. இன்றைய விஞ்ஞான விளைவு, வழிகாட்டும் நிலையிலா அல்லது எங்கோ ஒரு திசையில் 'வழிந்தோடும்' நிலையிலா என்பதும் விளங்குவதற்கு சற்றே கடினமாகத்தான் உள்ளது. சரி, அது இருக்கட்டும், திண்ணையில் இருக்கிற 'உங்களோடு' நேரடியாகவே விசயத்துக்கு வாறேன்.
"அதிக மதுபானம் அருந்துவபர்களின் ஆயுட்காலம், மதுபானம் அருந்துவதனை இடை நிறுத்தியவர்களிலும் பார்க்க, அதிகம் ", நான் சொல்லவில்லை, 20 வருடங்களாக 1800பேரைக்(அதிகமானவர்கள் ஆண்கள்) கொண்டு மேற்கொள்ளப்பட்ட ' புள்ளிவிபர ஆராய்ச்சி ' தெரிவிக்கிறது. வாழ்நாளிலே மது அருந்ததவர்கள் இங்கு கருதப்படவுமில்லை, கவலைப்படத் தேவையுமில்லை. ஆராய்ச்சிக் கட்டுரையின் முழு வடிவம் ஆங்கிலத்தில்.
ஆராய்ச்சி முடிவு ஒருபுறம் இருக்கட்டும், சரியா பிழையா என்பது தேவையில்லை, நடக்கிறதை கண்டுகொள்வோம் என்பது எனது நிலை. ஆனால் ஒருவிடயம் மிகவும் முக்கியமானது, என்னவென்றால், ' மது அருந்துவதைக் கைவிட்டவர்கள்(abstainers) ' பற்றியது. இவர்களது மனங்களுக்குள் ஆழ ஊடுருவினால் பின்வரும் 'மனத்தாக்கங்களை' கேட்கமுடியும். கையில காசில்லை, அதனால குடியை நிறுத்திட்டன், என்பவர்கள் சிலவேளைகளில் கழிவிரக்கம் கொள்கிறர்கள். தாம் மதுவுக்கு அடிமையாக காரணமான 'சந்தர்ப்பத்தையோ அல்லது சம்பவத்தையோ', மீட்டுப்பார்த்து தங்களின் கரங்களைக் கட்டிப்போடுகிறார்கள். "ஏனக்கு இவ்வளவு நஷ்டம் எற்பட்டுவிட்டது, மானம் போய்விட்டது" என்று கூறிக்கூறி தங்களின் மது எதிர்ப்பு வலிமையை கூட்டிக்கொள்கின்றனர். இவற்றை எல்லாம் கடந்து தன்னுடன் "கூட மது அருந்தியவர்களையும் / தற்போதும் மது அருந்த வற்புறுத்த்தும் நண்பர்களையும் " இவர்கள் வெறுப்போடு கடந்து செல்கிறார்கள். எனவே இவர்கள் மது அருந்துவபர்களையும் பார்க்க, அதிகமாக தங்களை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். வாழ்வுநிறைவு வேகமாக அண்மிக்கிறது.
"உங்களுடைய கோபங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படமாட்டிர்கள், மாறாக உங்களுடைய கோபம் தான் உங்களைத் தண்டிக்கும்" என்பது புத்தபெருமான் கூறியதாம். உங்களைத் தண்டிப்பதனை முதலில் நிறுத்துங்கள். முன்பின் தெரியாத, எந்தவித தொடர்பும் அற்ற, முற்றுமுழுதாக அன்னியமான ஒரு மனிதனுக்கும் தன்னால் இயன்ற உதவியை தன் நெருங்கிய நண்பனாகப் பாவித்து செய்யத் தெரிந்தவன் தான் நற்குணமுடைய மனிதன். ஏனவே அவனுக்கு எவருமே நெருங்கிய நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை. எம்மில் பலர், "கூட்டாக மதுஅருந்துபவர்களை" நெருங்கிய நண்பர்களாகக்கருதுவதும், மதுவை வெறுக்கும் போது 'எதிரிகளாக' நினைப்பதும்(அவர்களிடமிருந்து விலகி இருத்தல்) எமக்கு ஆரோக்கியமானது அல்ல. சமூகக்குடிப்பழக்கம்(social drinking) என்பது எம்மிடமிருந்து விலக்கப்படவேண்டும் என்பத்ற்கு காரணங்கள் உண்டு. உங்களிடமிருந்து விடைபெறும் முன்பு, 'வயிறுமுட்டக் குடிக்கும்' கனவான்களுக்கு ஒரு செய்தி:, நீங்கள் வாழும் காலம் அதிகமாக இருக்கலாம் ஆனாலும் சுயநினைவோடு, வாழ்வை ரசித்து வாழும் காலம் மிகவும் குறைவாகவே இருக்கும். உங்களை நீங்களே அறியாமல், ஞாபகம் இன்றி, பலகாலம் உயிரோடு இரு(ற)ந்துகொண்டிருப்பீர்க்ள்.
3 comments:
அருமை......அருமை.....உங்கள் தலைப்பு அதிகம் கவர்கிறது........ "உங்களுடைய கோபங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படமாட்டிர்கள், மாறாக உங்களுடைய கோபம் தான் உங்களைத் தண்டிக்கும்" என்பது புத்தபெருமான் கூறியதாம்.உங்கள் நடை மிக அருமை....வாழ்த்துக்கள் நண்பரே.... .
The tittle is nice & true too
குடிமக்களுக்கு அழகாக செய்தி கூறியுள்ள பாணி பிடிச்சிருக்கு ..
Post a Comment