Pages

Subscribe Twitter Twitter

Sunday, September 5, 2010









நான் ஏன் தகவல் தொழிநுட்பத் துறை(IT)யைத் தெரிவு செய்தேன் ..??

இன்று தகவல் தொழிநுட்பத்துறையில்(IT) வேலை செய்வதையே பலர் விரும்புகின்றார்கள்.பலரும் தகவல் தொழிநுட்பத் துறையில் வேலை செய்வதை இலகுவானதாகவும் ,குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்த இடத்தில் கணனி முன் இருந்தவாறே பெருமளவு சம்பளம் கை நிறையப் பெறும் துறை எனவே நம்புகின்றார்கள்.
ஆனால் அத் துறையில் வேலை செய்பவர்களைக் கேட்டால் குழறிக் குழறி அழுவார்கள். ஒரு நாளில் மிக அதிக மணி நேர வேலை.. மிக இறுக்கமான நேர வரையறைகளுக்குள் வேலைகளைச் செய்து முடிக்கவேண்டியிருத்தல்..விடுமுறை நாட்களிலும் வேலை கட்டாயமாக்கப்படல்.. குழு வேலைகளிற்கேயுரித்தான தவறுகளிற்கு பிறரைச் சுட்டலும் வெற்றிகள் தங்களால் மட்டுமே என பறை சாற்றலும்.. இவை எல்லாவற்றிற்கும் மேலாக  திடீர் திடீரென்று வேலையிலிருந்து தூக்கி வீசப்படும் அபாயம்.. என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்..அவர்கள்  அடிக்கடி கம்பனி மாறுவது வெறுமனே அதிக சம்பளம் பெறுவதற்காக மட்டும் அல்ல  என்பது அப்போது தான் புரியும் ..!!.
யாரது..??இவ்வளவும் தெரிந்தும் நீயேன் தகவல் தொழிநுட்பத்துறையைத் தெரிவு செய்தாயென பராசக்தி படப் பாணியிலே கேட்பது..??

நான் ஏன் தகவல்  தொழிநுட்பத் துறை(IT)யைத் தெரிவு செய்தேன் என்றால் ..!!??

  • நான் சீரான நித்திரையை வெறுக்கின்றேன்.
  • நான் ஏற்கனவே போதுமான அளவு வாழ்வின் இன்பங்களை அனுபவித்து விட்டேன்.
  • பதற்றம்(tension) இன்றிய வாழ்க்கை எனக்கு பிடிப்பதில்லை
  • செய்த பாவங்களிற்கெல்லாம் வாழும்போதே பரிகாரம் தேட நினைக்கிறேன்.
  • வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஓர் காரணமிருக்கிண்றது என்ற கோட்பாட்டைத் தவறென நிரூபிக்க விரும்புகின்றேன்.
  • என் வாழ்வு வேறு யாராலும் நாசமாக்கப்பட்டது என்று பிறர் கூறுவதை நான் விரும்பவில்லை.ஆகவே சொந்தச் செலவில் சூனியம் வைக்க விரும்புகின்றேன். 
;)

மூலம்: அண்மையில் நண்பனொருவன் அனுப்பிய மின்னஞ்சல்


6 comments:

மீன்துள்ளியான் said...

this should be labelled as reality ..

sinmajan said...

உங்கள் ஆதங்கத்திற்கேற்ப யதார்த்தம் எனவும் சுட்டியிட்டு விட்டேன் மீன்துள்ளியான்.. :)

Anonymous said...

அல்லர்படுகிறவனுக்கு தான் அருமை தெரியும்...புரஜெக்டுகளில பிரண்டு கிடந்தே காலங்கழிக்கிறது ஊரவனுக்கு சொகுசாப்படுகுது போல...கணனியில் வாழ்க்கையை தொலைத்தோர் நாங்களெல்லாம்.

sinmajan said...

thinklibre சோர்ந்திடாதீங்க.. இன்னும் ஆரம்பிகவே இல்ல ;)

Anonymous said...

நான் இதை ஏற்று கொள்ள மாட்டேன். எனக்கு ஓட்டுனர் பணியிலிருக்கும் நண்பர்களிலிருந்து விற்பனை பிரதிநிதியாக இருக்கும் நண்பர்கள் வரை பழக்கம் உண்டு. நான் ஒரு கணிப்பொறியாளன். நான் என்னையும், என்னை போல் பணியில் இருக்கும் மற்ற பல நண்பர்கள் செய்யும் வேலையையும், எனது மற்ற பணியிலிருக்கும் நண்பர்களுடன் ஒப்பிடும்போது, எனக்கே சில சமயங்களில் குற்ற உணர்ச்சியில் கண்ணீர் கூட வருவதுண்டு. என்னளவில் நான் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒழுங்காக வேலை செய்வேன். அனால் நூற்றுக்கு பத்து பேர் கூட ஒழுங்காக வேலை பார்ப்பார்களா என்பது சந்தேகமே. அதுவும் பார்க்கும் செக்கு மாட்டு வேலைக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வேறு. ஆனாலும் ஆங்கிலத்தில் சொல்வது போல் LIFE IS NOT FAIR...

இங்கு பின்னுரயிட்டிருக்கும் பல நண்பர்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வேலை செய்பவர்கள் என்று நம்புகிறேன். இருந்தும் அவர்களிடம் நான் கேட்பது என்னவென்றால் எப்பொழுதாவது அவர்கள், அரசாங்கத்துரையை விட்டு விடுங்கள், பிற தனியார் துறை நண்பர்களின் உழைப்பையும் அவர்கள் பெறுகிற ஊதியத்தையும் பற்றி அறிந்திருக்கிறீர்களா? சிந்தித்திருக்கிறீர்களா ?

நகைச்சுவை புறந்தள்ளிவிட்டு சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கொஞ்சம் எழுதலாமே.

sinmajan said...

உங்கள் கரிசனை புருகின்றது Anonymous நண்பரே..!! ஆனாலும் இதைக் கூறுவதற்கே நீங்கள் உங்கள் பெயரை உருமறைப்புச் செய்கையில் ,
நான் மட்டும் ..!!