Pages

Subscribe Twitter Twitter

Thursday, August 5, 2010









நான் கொழும்புக்குப் புறப்பட்ட காலக் கதை....

 இரண்டு மூன்று வருடங்களிற்கு முன் ..யாழ்-கொழும்பு பயணம் என்பது குதிரைக் கொம்பு போன்றது..நீண்ட நெடிய வலிமிகு ஏற்பாடுகள் அவசியமானது.. அந்த ஏற்பாடுகள் மிக வேகமாக மாறுந் தன்மையுடையது.நேற்று இருந்த ஒழுங்கு முறை இன்றிருக்காது.இன்றைய ஒழுங்கு முறை நாளை இருக்குமா என்பதையும் யாராலும் உறுதிப் படுத்திவிடவும் முடியாது..இவற்றோடு ஒப்பிடுகையில் வெளிநாடு செல்வது எவ்வளவோ எளிதானது..

முதலில் பாதுகாப்பு முன் அனுமதி(clearance) பாதுகாப்பமைச்சிடம் பெறவேண்டும்.மாதக்கணக்கில் தவமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளவேண்டும்…இந்த முதல் ஏற்பாட்டைப் பூர்த்தி செய்த பின் அடுத்தது..
கப்பலில் செல்வதென்றால் யாழ் பழைய புகையிரத நிலையத்தில் முதல் நாளே பெட்டி படுக்கையுடன் குடி பெயர வேண்டியது தான்.(யாரது? கப்பல் என்று விட்டு புகையிரத் நிலையம் என்கிறான் என்று புத்திசாலியாக் முற்படுவது.. J எங்கள் புகையிரத நிலையம் அப்போதெல்லாம் புகையிரதத்தைக் கண்டு தசாப்த காலமாயிருந்தது..)இங்கு சென்று ஆயிரக் கணக்கான மக்கள் சமுத்திரத்தில் ஐக்கியமாகி விட்டால் அதன் பின் கப்பல் ஓடும் நாட்களில் அவ்ர்கள் வந்து பல நூற்றுக் கனக்காண மக்களை வசு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சென்று பாதுகாப்புப் பதிவுகள் முடித்து பயணம் ஆரம்பமாகும். இரவிரவாக கப்பலோடி மறுநாள் காலையில் திருகோணமலையை அடையும்..இந்தக் கப்பலைப்பெறவே மாதக் கணக்கில் புகையிரத நிலையத்தில் தவமிருந்தவர்களும் நம்மிடையே இருந்தார்கள்.

விமானமென்றால் சொல்லவே தேவையில்லை.அது ஒரு வர்த்தக ஏகபோகம்.ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனம் தான் அதனை வழங்கியது..சில மாதத்திற்கு முந்தியே முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டும்.அந்த நிறுவனத்தில் முன்பதிவு செய்தவர் நீங்கள் என்றால் உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.எந்த அவமானத்தையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருந்திருக்கவேண்டும்.அங்கே உங்களை மந்தை மேய்ப்பதைப்போல் மேய்ப்பார்கள்.சுய ரவத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பதிவினை மேற்கொள்வதை விட வேறு வழியில்லை.பெருங்கொடுமை என்னவெண்றால் இந்த நிறுவனத்தின் கதவுகள் அவர்களது உறவினர்களுக்கும்,தெரிந்தவர்களுக்கும் பண முதலைகளுக்கும் எப்போதும் திறந்திருக்கும்..யாரும் கண்டுகொள்ளக் கூடாது..ஆனால் இவ்வளவும் நிகழ்ந்தாலும் அந்த நிறுவனத்திற்கு முன்னால் மக்கள் கூட்டத்திற்கு குறைவிருக்காது..ஏனென்றால் இவ் இரு (கடல்,ஆகாய) மார்க்கங்களைத் தவிர எங்கள் மக்களுக்கு வேறு மார்க்கமிருக்கவில்லை....




2 comments:

Prem said...

பதிவுலகில் உங்களைக் கண்டமையை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்...
வாழ்த்துக்கள் தோழா...!!!

sinmajan said...

உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி சகா.. ;)