Pages

Subscribe Twitter Twitter

Monday, August 9, 2010









கலாசாரம் பேணுவோம்..வாரீர்..




தம்பிக்கு தடுமாற்றம் தலை கால் புரியாது
வெம்பிப் பழுத்த பழம் வேறொன்றும் அறியாது
”அம்பி”யாய் இருந்த தம்பி ”றெமோ”வாகி
 மதில் வழியே எம்பி எம்பி கனவுலகில் சஞ்சரிப்பார்..

உந்துருளி உந்துகையில் சுந்தரியின் சிந்தனையில்
மந்திபோல் குந்தி மாடுபோல் முறுக்கிடுவார்
சந்து பொந்து தெரியாமல் வந்த லொறி மீது பாய்ந்து
நொந்து போய் கட்டிலிலே நோவால் படுத்திடுவார்


பனிநனைத்த தலையோடும் முகம் நிறையப் பூச்சோடும்
நம்மூர் பெண்கள் சினிமா நாயகிகள் தாமென்ற நினைப்பில்
நுனிநாக்கு ஆங்கிலத்தோடு நூதனமாய் ”டமில்” கலந்து
எஞ்சியிருந்த தமிழழையும் கதறக் கதறக் கருவறுப்பர்


கன்றாவிக் கதை கனக்க காதோரம் கேட்குதப்பா
எண்டாலும் கனபேர் உயிர் கொடுத்து பொத்தி வளர்த்த
பண்பாடு பஞ்சாபி போட்டால்த்தான் போகுமென்றால்
பெண்சாதி எல்லோரும் போட்டிடுவீர் பஞ்சாபி..



6 comments:

Thejo said...

தம்பியென்றால் எம்புவதும் எம்புவதால் வம்புதனை வலிய இழுப்பதும் முதுசமாய் எமக்கு முன்வந்தோர் அளித்தது.
எம்புவதிலோ கெம்புவதிலோ குறையேதும் காண்பீரேல் கண்டுகொள்ளும் உமக்கு காலம் குறுகுகிறது...

sinmajan said...

:)
நன்றி தேஜோ..உங்கள் வருகைக்கும் முதுசொமான முதல் கருத்திற்கும்..

Tharshy said...

நன்று...:)

sinmajan said...

நன்றி கொற்றவை.. :)

Voice of jaffna said...

அருமை....

sinmajan said...

நன்றி யாழின் குரல்.