Pages

Subscribe Twitter Twitter

Tuesday, December 28, 2010









Windows 7.. Google Chrome.. எது உங்கள் தெரிவு..??



நீங்கள் உங்கள் கணனி உங்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்கின்றதில்லையே என அடிக்கடி கடுப்பாகின்றீர்களா..?? கற்பனை செய்து பாருங்கள்..
 நீங்கள் உங்கள் மின்னஞ்சலை பார்வையிடுவதற்காக உங்கள் கணனியை இயக்கியவுடன் வழமைபோல் உங்கள் கணனி இயங்குநிலையை அடையும் வரை நீண்ட நேரம் காத்திருக்காமல் சில செக்கன்களிலேயே உங்கள் மின்னஞ்சல் முகவரிக்குச் சென்றுவிட்டால்..நீங்கள் கணனியை வாங்கும்போது இயங்கிய வேகத்திலேயே தொடர்ந்து இயங்கினால்.. நீங்கள் எங்கிருந்தாலும் திடீரென்று தேவைப்படுகையில் நீங்கள் சேகரித்த  தகவல்களை உபயோகிக்கக் கூடியதாயிருந்தால்... உங்கள் கணனி தொலைந்துவிட்டால் உங்கள் தரவுகள் முழுமையாகவே இழக்கப்பட்டுவிடுமே என்னும் பயமில்லாது போய்விட்டால்...புதிதாய் நீங்கள்  வாங்கும் வன்பொருட்களை(digitel camera,Printer,etc.) கணனியுடன் இணைப்பதற்கிடையில் நீண்ட நெடிய படிமுறைகளைத் தாண்ட வேண்டியில்லாமல் கணனியுடன் இனைத்தவுடன் வேகமாகவே உபயோகிக்கக்கூடியதாயிருந்தால்...நீங்கள் குதூகலமாயிருப்பீர்கள் என உணர்கிறீர்களா..??

கவலையை விடுங்கள்..Google உங்களுக்காகவே Chrome OS உடன் தயாராகிவிட்டது.. உங்களுக்குப் பரீச்சயமான Microsoft windows போன்ற ஆனால் புதியதொரு இயங்குதளம்(operating system)..இது பெரும்பான்மையாக இணையத்தை அடிப்படையாகக் கொண்டதொரு இயங்கு தளம்..



Saturday, December 25, 2010









போலி கலாச்சாரக் காவலர்களும் இணையமும்...

பூத்திருக்கும் புத்தாயிரமாம் ஆண்டு..மிலேனியம் என்றெல்லாம் விவாதத் தலைப்புகள் வழங்கப்பட்டது நேற்றுப்போல் இருக்க ..இதோ விடைபெறுகிறது 2010.. தொழிநுட்ப உலகில் பிரதானமாக இணைய உலகு கடந்த தசாப்த காலத்தில் கண்ட மாற்றம் அளப்பரியது.2000ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் 361 மில்லியன் இணையப் பாவனையாளர்கள் உலகில் இருந்திருக்கிறார்கள்.இந்தத் தொகை ஏறக்குறைய இன்றைய facebook பாவனையாளர்களின் தொகையின் அரைப்பங்கே..ஆனால் இவ் வருட இறுதியில் உலகளாவிய இணையப் பாவனையாளர் தொகை இரண்டு பில்லியனைக் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பிடத்தக்கவகையில் இந்த தசாப்த காலத்தில் ஆபிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சி வேகம்(>2000%) பிரமாண்டமானது.அதிலும் குறிப்பாக 2000ஆண்டு காலப்பகுதியில் உலகின் பெருந்தொகையான இணையப் பாவனையாளர்கள் கொண்ட முன்னணி 10 நாடுகளில் இடம்பெற்றிருக்காது 61ஆவது இடத்திலிருந்த ஆபிரிக்க நாடான நைஜீரியா 2010ல் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது தான் இணைய உலகில் ஆபிரிக்காவின் பிரமாண்ட வளர்ச்சிக்கு சான்று பகர்கிறது.


Thursday, December 23, 2010









இலங்கைப் பதிவர் சந்திப்பு என்னில் ஏற்படுத்திய பாதிப்பு..

அண்மையில் இடம்பெற்ற பதிவர் சந்திப்பிற்குச் சென்று வந்ததிலிருந்து பதிவிடுவோமென்று சிந்தித்தாலே பலவாறு சிந்திக்க வேண்டியிருக்கிறது.எங்கள் அண்ணன்மார் தெரிவித்த கலந்துரையாடிய கருத்துக்களை அனுசரித்துத் தான் இனிமேல்  பதிவெழுதுவதாக அன்று முடிவெடுத்திருந்தேன்.


இப்போது தான் பார்த்தேன் பவன் தான்  இரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010 என்று ஒரு பதிவிட்டிருந்தார்.அதிலே தேடிப்பார்த்தேன் என் பதிவு எதனையும் காணவில்லை.நான் எழுதும்   எல்லாப் பதிவையும் மொக்கைப் பதிவாய்க் கருத்தித்தானே பதிவேற்றுகின்றேன்.ஒன்றுகூடவா  பவனுக்குச் சிக்கவில்லை.கடுப்பாகி பவனுக்கு வெள்ளை வான் அனுப்புவோமாவென்று சிந்திக்கையில்தான் பவனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கி அவரது  2011 பதிவுகளிலாவது இடம்பெறுவோமென்று முடிவெடுத்தேன். சின்மஜா.. உன் மொக்கை இராச்சியம் தான் இனியென்று ஒரு மொக்கைப் பதிவு எழுதுவோமென்று பார்த்தால்


Tuesday, December 21, 2010









பெருகும் யாழ்ப்பாணத்தின் பெயரினாலான இணையத் தளங்கள்..

தற்போது யாழ் குடாநாட்டில் இணையப் பாவனை, வீடியோ வசதிகளுடனான தொலைபேசிப் பாவனை என்பன இளைஞர்களிடையே மிக வேகமாக அதிகரித்தவாறுள்ளது.இதற்கேற்றவாறுயாழ்ப்பாணத்தின் பெயரிலோ இல்லை வேறு பெயர்களிலோ யாழ் செய்திகளை வெளியிடும் இணையத் தளங்களும் புற்றீசல்கள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டன.

இவை தமது செய்திகளை பல்வேறுபட்ட வாசகர் வட்டத்தைச் சென்றடைய facebook,twitter போன்ற சமூக இணைப்புத் தளங்களையும் உச்ச அளவில் உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டன.இந்த விளம்பர உத்தி சர்வதேச அளவில் ஏற்கனவே பிரபலமானதொன்று தான்.இதுபோன்ற பல உத்திகளை உபயோகித்து  சில இணையத் தளங்கள் தமக்கென கணிசமானதொரு வாசகர் வட்டத்தை ஏற்கனவே திரட்டியும் விட்டன.அத்துடன் இவ்வாறான இணையத் தளங்கள் உலகெங்கும் பரந்து வாழும் யாழ் மீது அக்கறையுள்ள இளைஞர்களின் கவனத்தை மீண்டும் யாழ் நோக்கித் திசை திருப்புவதில் குறிப்பிட்டதொரு பங்கை ஆற்றி வருகின்றன.

இதுபோன்ற இணையத் தளங்கள் பெரும்பாலும் யாழிலுள்ள, யாழ்ப்பாணத்திற்கு வெளியேயுள்ள இளைஞர்களைக் கொண்ட சிறு சிறு குழுக்களாலேயே  நிர்வகிக்கப்படுகின்றன.யாழின் தற்போதைய யதார்த்த கள நிலையை வெளிக்கொணரும் பல செய்திகளை இவ்வாறான இணையத் தளங்கள் அண்மைக்காலமாக முண்டியடித்து வெளியிட்டு வருகின்றன.இங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது.


Friday, December 17, 2010









பதிவர் கிறிக்கெற்.. பிந்திக் கிடைத்த திடுக்கிடும் செய்திகள்

உலகே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர் பார்த்துக் காத்திருந்த இலங்கைப் பதிவர்களின் மாபெரும் கிறிக்கெற் திருவிழா நாளை இடம்பெறவுள்ள நிலையில் வெள்ளவத்தைப் பகுதியில் சிறு மழைப்பொழிவு ரசிகர்களிடையே சிறு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.மழையை நிறுத்தவேண்டி ஆங்காங்கே ரசிகர்கள் மொனப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளதைக் காணக்கூடியதாயுள்ளது.

போட்டி நடைபெறும் மைதானத்திற்கு மழையால் எந்தப் பாதிப்பும் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக உள்ள ஏற்பாட்டாளர்கள் அதற்கான முன் ஆயத்தங்களை ஏற்கனவே செய்துள்ளதாக அனுதினன் தெரிவித்துள்ளார். மைதானத்தை மூடித் தாழ்ப்பாள் இடுவதற்காக கடும் பிரயர்த்தனத்திலீடுபட்டுள்ளனர் பதிவர்கள் மது மற்றும் ஆதிரை.

இம்மழைத்துளிகள் பட்ட ஆடுகளம் எகிறி எழும் பந்துகளுக்கு சாதகமில்லையெனவும்,சுழல் பந்து வீச்சாளர்களுக்கே சாதாகமாய் நாளை அமையலாம் என பிரபல அனலிஸ்ற் கன்கொன் எங்கள் துடுப்பு இன்போ விற்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.


Tuesday, December 14, 2010









விக்கிலீக்கிற்கு மாற்றுத் தெரிவு..இதுவும் லீக் தான்..

இதுவும் லீக் தான்.. ;)

அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் உருவாக்கிவிட்டிருக்கும் பரபரப்பு இன்னும் தணியவில்லை.விக்கிலீக்ஸிற்கும் அதன் நிறுவுனர் Julian Assange ற்கும் ஆதரவாகவும் எதிராகவும் உலகெங்கும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

வரையறையற்ற இணையம்,கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் Wikileaks ற்கும் அதன் நிறுவுனரிற்கும் ஆதரவான குரல்களும் , இதனைத் தொடர்ந்து அனுமத்தித்தால் நாடுகளின் இரகசிய உள்வீட்டுத் தகவல்கள் எல்லாம் வெளிப்படைத் தன்மையின் பெயரால் சென்றடையக் கூடாதவர்களிற்கெல்லாம் சென்றடைந்து தீவிரவாதிகளை ஊக்குவிக்கும்,இறுதியில் நாடுகளிடையில் குழப்பங்களை உருவாக்கி இன்னுமோர் உலக யுத்தத்திற்கு வழிவகுத்துவிடும் Wikileaks ற்கும் நிறுவுனர் Assange ற்கு எதிரான குரல்களும் பரவலாக  எழுந்தவாறுள்ளன.

எது எவ்வாறாயினும் பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைக் காரணம் காட்டியே Julian Assange கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவர் மீது எவ்வாறான வழக்குகள் எல்லாம் இனித் தொடுக்கப்படும்.அதனை Julian Assange எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.ஆனால் அவரைப் பிணையில் எடுக்கும் நடவடிக்கைக்கு உதவ உலகின் பலபாகங்களில் இருந்தும் சில பெருந்தலைகள் முன்வந்துள்ள போதும் அதுவும் எந்த அளவிற்குச் சாத்தியமானது என்பதும் சந்தேகத்திற்குரியதே .


Friday, December 10, 2010









எண்ணத்தெரிந்தவர்கள் மற்றும் எண்ணத் தெரியாதவர்கள் என உலகத்தில் உள்ளவர்களை மூன்றாக வகைப்பட்டுத்த முடியும்.

உலகவரலாறு வழமைபோன்று தனது பிடிவாதமான பாதையில் சற்றும் தளராமல் மனிதர்களைப் பணயமாக வைத்து போய்க்கொண்டிருக்கிறது. இஸ்லாமின் இறைத்தூதரின்(முகம்மது நபி- Peace be upon him) உருவத்தை காட்டுன்னாக(Cartoon) வரைந்து 'ஒருவிதமானபாராட்டு மற்றும் எதிர்ப்பை பெற்றுக்கொண்ட டென்மார்க் கேலிச்சித்திரஒவியர் தற்போது அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளாராம். ஐக்கிய இராச்சியத்திற்கு விஐயம் மேற்கொண்ட பாப்பாண்டவர் உலகத்தில் மதச்சார்பற்றவர்களின்(Secular) ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றுதிரளவேண்டும் எனக்கூறி, "தான் கண்ட நாசிசத்தை" தன் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டிஅரியணையிலுள்ளோர் ஆட்சிபுரிவோரிடம் தனது மனக்கவலையை கொட்டித்தீர்த்துள்ளார். இன்றைய யூதர்களுக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையும் அக்கறையும் இல்லையாம். அமெரிக்கா இருக்கும்போதுஏன் இருக்கவேணும் என திண்ணையில் இருக்கிற நீங்கள் நினைக்கிறது புரியுது எனக்கு.

அது சரி மனிதர்களை பணயமாகவைத்து என்றால் எப்படிஎன்கிற உங்கட கேள்வி நியாயம்தான்.


Wednesday, December 8, 2010









இது Facebook உருவான கதை..

The Social Network.. .
உலகின் மிக இளவயது செல்வந்தர் Facebook நிறுவுனர் Mark Zuckerberg இன் கதை இது..facebook இன் ஆரம்பகாலம் பற்றி மிக சுவாரஷ்யமாகவே பேசுகின்றது..ஆச்சர்யம் என்னவென்றால் நண்பர்களிடையே இணைப்பை உருவாக்குவதையே அடிப்படையாகக் கொண்ட facebook, அதன் உருவாக்கம் மற்றும் பிரமாண்ட வளர்ச்சியின்போது நண்பர்களைப் பிரித்தது தான்..அங்கொன்றும் இங்கொன்றுமாக நான் கேள்விப்பட்டிருந்த Facebookஇன் தோற்றம் பற்றிய கதையை ஒரு வரிசையாக்கி காரணகாரிய தர்க்கங்களை ஊகிக்கக் கூடியவாறானதோர் நிலைக்கு இட்டுச் செல்கின்றது இப்படம்.. தற்செயலான மில்லியனர் என சிலரால் விமர்சிக்கப்படுவார் Mark  Zuckerberg.ஆனால் facebookன் உருவாக்கத்திற்காக அவரின் மிகக் கடுமையான உழைப்பை தெளிவாகக் காட்டுவதில் எந்த இடத்திலும் பின் நிற்கவில்லை இப் படம்..

Erika எனும் பெண் நண்பியுடனான வாக்குவாதமும் அதனால் ஏற்படும் பிரிவுடன் ஆரம்ப்பிக்கிறது படம்..இவ் வாக்குவாதத்தால் கடுப்படையும் Mark , மதுபோதையில் தாறுமாறாக நண்பியை விமர்சித்து blog பதிவு போட்டவாறே, ஒரே இரவில், சக மாணவிகளை எழுந்தமானமாக  இருவர் இருவராக தெரிவுசெய்து "Who looks more hotter in these two?” என தரப்படுத்தும் facemash எனும் வலைத்தளமொன்றை உருவாக்குகின்றார்.இதற்காக பல்கலைக்கழக வலையமைப்பை உடைத்து அங்கிருந்து இரகசியமாக சக மாணவிகளது புகைப்படங்களைப் பெற்றுக்கொள்கிறார்.Mark ன் நண்பர் Eduardo தான் சதுரங்க வீரர்களை தரப்படுத்தும் முறையை சிறிய தயக்கத்தின் பின்னர் இங்கு மாணவிகளை தரப்படுத்த உபயோகிக்க உதவுகின்றார்.இவ்வாறு வலுப்பெறுகிறது Mark,Eduardo நட்பு..


Monday, December 6, 2010









Facebookஇன் புதிய profile..LinkedInற்கு ஆப்பா..??

நேற்றிரவு Facebook புதியதொரு profile view வை அறிமுகப்படுத்தியுள்ளது.இன்று காலை பெரும்பாலான ஆங்கில தொழிநுட்பத் தளங்களில் இது தான் செய்தி.
இப் புதிய  மாற்றத்தின்போது அவர்கள் இரு  விடயங்களை முக்கியமாகக் கவனத்திலெடுத்துள்ளார்கள்.முதலாவது விடயங்களைச் சுவாரஷ்யமான முறையில் காட்சிப்படுத்தல், மற்றையது பயனர்கள் அடிக்கடி உபயோகிக்கும் விடயங்களை முன்னிலைப் படுத்தி எளிதில் அடையச் செய்தல்.இதற்காக profile பக்கத்தை அணுஅணுவாக ஆராய்ந்திருக்கிறார்கள். உதாரணமாக view more photos முன்பெல்லாம் முக்கியத்துவம் குறைந்த பல இணைப்புகளுடன் இருந்தது.அதனை இப்போது சரி செய்து இருக்கிறார்களாம்.

பிரதான மாற்றங்களாக உங்கள் பிறந்தநாள்,தொழிலிடம்,வசிப்பிடம் போன்ற தகவல்களை முன்கொண்டுவந்திருக்கிறார்கள்.அத்துடன் மிக அண்மையில் உங்களின் பெயரிடப்பட்ட புகைப்படங்களினை வரிசையாகக் காட்சிப்படுத்தும் வசதியினை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.அங்கே நீங்கள் விரும்பாத புகைப்படங்களை மறைக்கும் வசதியினையும் ஏற்படுத்தியிருக்கிறார்களாம்.Tab வசதியினை profile படத்தின் கீழ்கொண்டுவந்திருக்கிறார்கள்.

சுவாராசியமான மாற்றம் info பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.உங்கள் கடந்த கால ,நிகழ்கால தொழில் வழங்குனரின் விபரங்கள்,நீங்கள் முன்பு,தற்போது பணியாற்றிய project விபரங்கள்,உங்களுடன் பணியாற்றியோர் விபரங்கள் என பல புதிய விபரங்களை இணைத்துள்ளார்கள்.இவற்றின்மூலம் உங்கள் face book profile info பக்கம் ஏறக்குறைய ஓர்online resume போன்றதொரு தோற்றப்பாட்டினைக் கொடுக்கும்.இது அண்மைக் காலமாக தொழில்சார் profile உருவாக்குவதை நோக்காகக்கொண்டு துரிதமாக வளர்ந்துவரும் LinkedIn ற்கு ஆப்படிக்கும் முயற்சியாகவே பரவலாகப் பேசப்படுகிறது. ஏனெனில் புதிதாக இங்கு facebook profile info வில் இணைக்கப்பட்ட விடயங்களை linkedIn முதலிலேயே சிறிது மாறுதலான வடிவில் வழங்கிக் கொண்டிருந்தது.எனினும் இவ் ஆப்படிக்கும் முயற்சியில் facebook எந்தளவு வெற்றி பெறுகின்றது என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும். facebookகை ஓர் தொழில்சார் தளமாகவும் பார்க்க எவ்வளவு பேர் முன்வருகின்றார்கள் என்பதில் தான் இது தங்கியுள்ளது.

தற்போதைக்கு இப் புதிய profileஐ நீங்கள் விரும்பினால் உடனடியாக நீங்களாகவே Activate செய்யும் வசதியை வழங்கியிருக்கிறார்கள்.ஆனால் புதிய profileற்கு மாறிய பின்னர் old is gold என்று பழைய profile ற்கு மாற எண்ணுபவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.இங்கே சென்று நீங்கள் புதிய profileற்கு மாறிக்கொள்ளலாம்.ஆனால் சிறிது சிறிதாக அவர்களே அடுத்த வருட முற்பகுதியிலே அனைவரையும் இப் புதிய profile க்கு மாற்றிவிடக்கூடும்.
உத்தியோகபூர்வ தகவல் அறிய இங்கே சொடுக்குங்கள்.. ;)


Friday, December 3, 2010









ம்..

வெள்ளாட்டு மந்தைக் கூட்டம்..
அமைதியாய்ச் சிங்கம்..
நாதியற்று நடுத்தெருவில் நரிகள்..

முள்வேலியற்ற முகாம்கள்
மாதிரிக் கிராமங்கள்..
யாருமற்ற சிறைச்சாலை
தொல்பொருட்சாலை..
சமச் சீரான தராசு..
பீரங்கியில் ஊங்சல்..
குதூகலமானதோர் குடும்பம்..

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு..
படுகொலைச் செய்தியேயில்லாத நாளிதள்..
ஆர்ப்பாட்டங்களேயற்ற தலைநகரம்..

தொடர்ந்து அலறும் தொலைபேசி..
கலைக்கப்பட்டது தூக்கம் ..
விழிகளின் ஓரமாய் வடியும்
ஒரு துளி கண்ணீர்..