Pages

Subscribe Twitter Twitter

Wednesday, December 8, 2010









இது Facebook உருவான கதை..

The Social Network.. .
உலகின் மிக இளவயது செல்வந்தர் Facebook நிறுவுனர் Mark Zuckerberg இன் கதை இது..facebook இன் ஆரம்பகாலம் பற்றி மிக சுவாரஷ்யமாகவே பேசுகின்றது..ஆச்சர்யம் என்னவென்றால் நண்பர்களிடையே இணைப்பை உருவாக்குவதையே அடிப்படையாகக் கொண்ட facebook, அதன் உருவாக்கம் மற்றும் பிரமாண்ட வளர்ச்சியின்போது நண்பர்களைப் பிரித்தது தான்..அங்கொன்றும் இங்கொன்றுமாக நான் கேள்விப்பட்டிருந்த Facebookஇன் தோற்றம் பற்றிய கதையை ஒரு வரிசையாக்கி காரணகாரிய தர்க்கங்களை ஊகிக்கக் கூடியவாறானதோர் நிலைக்கு இட்டுச் செல்கின்றது இப்படம்.. தற்செயலான மில்லியனர் என சிலரால் விமர்சிக்கப்படுவார் Mark  Zuckerberg.ஆனால் facebookன் உருவாக்கத்திற்காக அவரின் மிகக் கடுமையான உழைப்பை தெளிவாகக் காட்டுவதில் எந்த இடத்திலும் பின் நிற்கவில்லை இப் படம்..

Erika எனும் பெண் நண்பியுடனான வாக்குவாதமும் அதனால் ஏற்படும் பிரிவுடன் ஆரம்ப்பிக்கிறது படம்..இவ் வாக்குவாதத்தால் கடுப்படையும் Mark , மதுபோதையில் தாறுமாறாக நண்பியை விமர்சித்து blog பதிவு போட்டவாறே, ஒரே இரவில், சக மாணவிகளை எழுந்தமானமாக  இருவர் இருவராக தெரிவுசெய்து "Who looks more hotter in these two?” என தரப்படுத்தும் facemash எனும் வலைத்தளமொன்றை உருவாக்குகின்றார்.இதற்காக பல்கலைக்கழக வலையமைப்பை உடைத்து அங்கிருந்து இரகசியமாக சக மாணவிகளது புகைப்படங்களைப் பெற்றுக்கொள்கிறார்.Mark ன் நண்பர் Eduardo தான் சதுரங்க வீரர்களை தரப்படுத்தும் முறையை சிறிய தயக்கத்தின் பின்னர் இங்கு மாணவிகளை தரப்படுத்த உபயோகிக்க உதவுகின்றார்.இவ்வாறு வலுப்பெறுகிறது Mark,Eduardo நட்பு..

தொடர்ந்து என்ன..? மாணவர்கள் சும்மா இருப்பார்களா? 22000 hits ஆரம்பித்து வெறும் இரண்டே மணி நேரத்தில்.. விடிகாலை நான்கு மணிக்கு பல்கலை இணையம் மிகையான இணைய பாவனை நெரிசலால் முடங்குகின்றது.. 
பிறகென்ன பல்கலை முகாமையிடம் நேரடி விசாரணை தான்.. விசாரணையினிடையே Mark கூறுவார்.. பல்கலை இணைய வலையமைப்பை உடைக்கக் கூடிய ஓட்டைகளை இனங்காண உதவிய தன் மீது கரிசனை காட்டவேண்டுமென.. சூடான விவாதம் தொடரும்.. இறுதியில் ஆறு மாத நன்னடத்தை எச்சரிக்கையுடன் mark விடுவிக்கப்படுவார்..

வெளியில் தன் தவறை உணர்ந்தவனாக வந்தபோதும்..நண்பன் Eduardo விடம் கேட்பார்.. “Doesn't anybody  has some sense of humour..?" இதனூடக Markஇன் அப்போதைய மனநிலையை எளிதாக எடுத்துக்காட்டியுருப்பார் இயக்குனர்.
இச்சம்பவத்தின் பின் markஇன் image கடுமையாகவே damage ஆகி இருக்கும்..

தொடர்ந்து vinklevoss சகோதரர்கள் Mark இடம் அறிமுகமாகி தங்கள் harverd Connection வலையமைப்பைப் பற்றிய தங்கள் ideaவை விளங்கப்படுத்தி ,அதனை செய்வதற்காக markஉடன் வர்த்தகம் பேசுவார்கள்..சம்மதிப்பான் mark..
இதன்போது mark முன்பு செய்திருந்த கேட்பவர்களின் சுவையை உணர்ந்து கொள்லத்தக்க MP3 player யை Microsoft வாங்க முன்வந்தபோதும் mark அதனை இலவசமாக இணையத்தில் தரவேற்றியது பற்றிய ஓர் உரையாடல் தொடரும். இங்கே பணமீட்டுவது மட்டும் தான் markஇன் இலக்கு அல்ல என்பதைக் காட்ட முற்படுவார் இயக்குனர்..

பின்னர் Mark, Eduardo உடன் இணைந்து 70:30 இலாப உடன்பாட்டுடன் the Facebookஎனும் சமுக வலையமைப்பை உருவாக்குவதில் vinklevoss சகோதரர்களுக்குத் தொடர்ந்து சாக்குப் போக்குக் கூறியவாறே மும்முரமாக இறங்கி விடுவான்.. 
தொடர்ந்து கதை உச்ச வேகத்தில் பயணிக்கும்..

thefacebook அறிமுகமாகும்..
எதிர் பார்ப்பதை விடவும் விரைவாக பிரபலமாகும்..

vinklevoss சகோதரர்கள் தமது idea திருடப்பட்டதாக mark உடன் கணவான் யுத்தம் புரிய முனைவார்கள்..
அதில் vinklevoss சகோதரர்களுக்கு வெற்றி கிடையாது..

இன்னுமோர் பிரபலம் Sean parker உடன் அறிமுகம்..


Mark  Sean parkerன் உரையாடலில் கவரப்படல்.. Eduardo , Sean பனிப்போர் ஆரம்பம்..

 the face book வளர்ந்துகொண்டேயிருக்கும்..

the facebook, face book ஆக மாறும்..
.
facebookகும் உச்ச வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்..

Sean,  Eduardo பனிப்போர் உச்சமடையும்.. Eduardo குழிபறிக்கப்பட்டு facebookஇலிருந்து வெளியேற்றப்படுவான்..

 vinklevoss சகோதரர்கள் முக்கிய படகோட்டல் போட்டியொன்றில் தோல்வியடைவார்கள்.. அந் நேரத்தில் facebook ஐரோப்பா வரை பிரபலமடைந்திருக்கும்..மனமுடைந்து போகும்  vinklevoss சகோதரர்கள் தங்கள் idea திருடப்பட்டதாக Mark ற்கு எதிராக நீதிகோரல்..

Eduvardoவும்  தான் ஏமாற்றப்பட்டதாக நீதி கோரல்..

எல்லாமே ஒரு புள்ளியில் சந்திக்க... விசாரணை..
அவரவர் தங்கள் தங்கள் தரப்பு நியாயங்களை உணர்வு பூர்வமாக விபரிக்க விசாரணை சூடு பிடிக்கும்..

Look, a guy who builds a really nice chair ,doesnt owe money to everyone who ever build a chair.. !!??

ஆர்ப்பாட்டமில்லாமல்,அமைதியாக அருமையாக இயக்குனர் David Fincher கதையை நகர்த்தியிருப்பார்..எந்த இடத்திலும் சலிப்புத்தட்டாது..அமைதியான அளவான,அழகான பின்ணணி இசை..நடிகர்களின் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு..

இறுதியில் தன் முன்னாள் நண்பிக்கு friend request அனுப்பிவிட்டு அடிக்கடி refresh செய்து முடிவுக்காக Mark Zuckerberg காத்திருக்க படம் முடிகிறது..The social network.. காட்சிகளிடையே சொன்ன செய்திகளிற்கிடையே ஒரே இரவில் பணக்காரனாகத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது..
இது நிஜ Mark Zuckerbergன் நேர்காணல் ஒன்று.. இத் திரைப்படம் பற்றி Mark Zuckerberg கை மெலிதாகக் கலாய்த்திருப்பார்கள்..






2 comments:

கணாதீபன் said...

Look, a guy who builds a really nice chair ,doesnt owe money to everyone who ever build a chair.. !!??
இது எங்கேயோ உதைக்குதே? இன்னும் பார்க்கவில்லை..பார்த்துவிட்டு வருகிறேன்.

Prem said...

மித வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கே...!!!
என்னமா பண்ணியிருக்கிறாங்க...!!!