அண்மையில் இடம்பெற்ற பதிவர் சந்திப்பிற்குச் சென்று வந்ததிலிருந்து பதிவிடுவோமென்று சிந்தித்தாலே பலவாறு சிந்திக்க வேண்டியிருக்கிறது.எங்கள் அண்ணன்மார் தெரிவித்த கலந்துரையாடிய கருத்துக்களை அனுசரித்துத் தான் இனிமேல் பதிவெழுதுவதாக அன்று முடிவெடுத்திருந்தேன்.
இப்போது தான் பார்த்தேன் பவன் தான் இரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010 என்று ஒரு பதிவிட்டிருந்தார்.அதிலே தேடிப்பார்த்தேன் என் பதிவு எதனையும் காணவில்லை.நான் எழுதும் எல்லாப் பதிவையும் மொக்கைப் பதிவாய்க் கருத்தித்தானே பதிவேற்றுகின்றேன்.ஒன்றுகூடவா பவனுக்குச் சிக்கவில்லை.கடுப்பாகி பவனுக்கு வெள்ளை வான் அனுப்புவோமாவென்று சிந்திக்கையில்தான் பவனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கி அவரது 2011 பதிவுகளிலாவது இடம்பெறுவோமென்று முடிவெடுத்தேன். சின்மஜா.. உன் மொக்கை இராச்சியம் தான் இனியென்று ஒரு மொக்கைப் பதிவு எழுதுவோமென்று பார்த்தால்
பதிவர் சந்திப்பில் மன்னார் அமுதன்,கோபி தெரிவித்த கருத்துக்கள் நினைவிற்கு வந்து தொலைத்தது.
பதிவர் சந்திப்பில் மன்னார் அமுதன்,கோபி தெரிவித்த கருத்துக்கள் நினைவிற்கு வந்து தொலைத்தது.
அப்போ எப்படி நான் இரசித்த மொக்கைப் பதிவுகள் - 2011ல் இடம் பிடிப்பதென்று கடும் சிந்தனையில் மூழ்குகையில் தான் பதிவர் சந்திப்பில் லோசன் அண்ணா, அசோக்பரன் எது பற்றியும் எழுதலாம் என தெரிவித்த கருத்துக்கள் நினைவிற்கு வந்தது.அப்பாடா..எனக்கும் ஆதரவு தெரிவிக்க இவர்கள் இருக்கிறார்கள் தானே என்ற ஊக்கம் மொக்கைப்பதிவு எழுதியே தீருவதென்ற எனது கொலை வெறியை உச்சமாக்கியது.
சரி தட்டச்சுவோம் என்றால் மயூரன் அண்ணா பதிவர் சந்திப்பில் தெரிவித்த தட்டச்சு அரசியல் நினைவிற்கு வந்தது.சேது ஐயா தெரிவித்த பழைய பாமினியா..புதிய பாமினியா இல்லை tamil 99 ஆ எதை உபயோகிப்பதென்று சந்தேகம்.சரி நானும் தமிழ் வளர்ப்போமென்றால் அந்த தட்டச்சு முறை எதுவுமே எனக்குத் தெரியாது.சரி பழகித் தட்டச்சுவோமென்றால் ..நாங்கள் தமிழ் மொழி மூல ஆரம்பக்கல்வி தானே கற்றிருக்கிறோம் .எங்களுக்கு இந்தப் பிரச்சினை அவசியமில்லையென்று யாரோ பதிவர் சந்திப்பில் தெரிவித்தது நினைவிற்கு வந்தது.யாரென்று தான் நினைவிற்கு வரவில்லை.சரி வழமை போல எமக்கென்றே உருவாக்கப்பட்ட Ammaa ..அம்மா முறை tamil phonetic லேயே மீண்டும் தஞ்சம் அடைவதாய்த் தீர்மானித்தேன்.
சரி ஆரம்பிப்போம் நமது மொக்கைப் பதிவை என்று பார்த்தால் ..பதிவர் சந்திப்பில் சுபாங்கன் நினைவிற்கு வந்தான்.மின்னஞ்சலை மூலமாய் வைத்து மொக்கைப் பதிவிடுவோமென்றால் இறுதியில் நன்றி மின்னஞ்சல் என்று போட முடியாது.சரி யார் அனுப்பினானோ அவன் பெயரைப் போடுவோமென்றால் அவனே யாருடையதோ மின்னஞ்சலை forward சிய்திருந்தான்.முதலில் அனுப்பியவனை ஆராய்ந்து கண்டு பிடிப்பது சிரமமாயிருக்கிறது.
மொக்கையே எனக்கு சரி வராது போல.. சரி விடு.. யாராவது கேட்டால் நாமள் சமுதாயப் பொறுப்புணர்வான பதிவர் என்று ”றீல்” விடுவம் என்று முடிவெடுத்திட்டேன்.
இதற் கிடையில் பதிவர் சந்திப்பில் அறிமுகமான ஜனா அண்னா மாத்தி யோசி என என்னை நவீன தொழினுட்பத் பதிவெழுதுவதற்கு அழைத்திருந்தார்.ஏற்கனவே தொழினுட்பப் பதிவென்று நான் அதிகமாக கழுத்தறுப்பதாக நண்பர்கள் குறைப்பட்டுக் கொண்டதால் இனிமேல் தொழிநுட்ப ஆணியே புடுங்குவதில்லை என்ற எனது முடிவை தளர்த்தி ஜனா அண்னாவின் அன்புக் கோரிக்கையை செவிமடுப்போம் என்று முடிவெடுத்தேன்.புதிய தொழிநுட்பப் பதிவொன்று எழுதுவதென்று மாற்றி மாற்றி யோசிச்சுப் பார்த்தேன்...ம்ஹீம்.. "தொழிநுட்பம் சம்பந்தமான ஒரு நவீன பதிவு”..தலைப்பிலேயே சந்தேகம். அதென்ன நவீன..?? ஏதாவது பின் ,முன் நவீனங்களைக் கலந்து கட்டி தொழிநுட்பப் பதிவு எழுதச் சொல்கிறாரோ..?? எனக்குத் தான் பின்,முன் நவீனத்துவம் என்றாலே என்னவென்றே தெரியாதே..!! என்ன செய்ய..?? இதையொருமுறை பார்த்துச் சொல்லுங்கள் ஜனா அண்னா..!!மாத்தி மாத்தி யோசிக்க இது தான் நினைவிற்கு வருகிறது.இது போன்ற பதிவு உங்கள் கோரிக்கைக்கு அமைகிறதா..??
அடப்பாவிங்களா..!! இவ்வளவு முயன்றும் எதைப் பற்றிப் பதிவிடுவதென்று எனக்கு எதுவும் தோன்றுகிறதில்லையே..?? Any suggestions..??
பிற்குறிப்பு: இதுவொரு மொக்கைப் பதிவு ..அட நம்புங்கப்பா...
11 comments:
எழுதுங்கோ எழுதுங்கோ, ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீங்களும் நான் இரசித்த மொக்கைப் பதிவர்களுக்குள்ள வராமலா போய்விடுவீங்கள்.
ம்...முயற்சி செய்து எழுதுங்கோ...என்ன பதிவு எழுதினாலும் குழுமத்தில பகிருங்கோ அப்பதான் நாங்களும் பார்க்க சாரி கும்ம முடியும் ஹி...ஹி..
இதுக்கு பெயர்தான் மொக்கை பதிவா? சொல்லவேயில்லை...
கடைசிலயாவது பையன் விசயத்துக்கு வந்திடுவன் எண்டு வரிக்குவரி நிதானமா வாசிச்சனே! இதுவல்லவா மரண மொக்கை..
அது சரி முதலில என்ன எழுத வந்தீங்க எண்டு சொல்லுங்கோ!!
நானும் ஏதோ அதிகார மையத்தின் சதியாக்கும் என்று நினைத்து வந்தேனுங்கோ....ஹ.ஹ..ஹ...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)
அப்போ 2011ல் புதிய அவதாரமோ...??
ஃஃஇதுவொரு மொக்கைப் பதிவு ..அட நம்புங்கப்பா..ஃஃஃஃஃ
நம்பலேன்னா என்னா பண்ணுவீஙக.....
ஆஹா... அற்புதமான பதிவு...
அருமையாக கருப்பொருள்..
என் ஐயப்பாட்டை நீக்கும் வரிகள்..
தமிழ் மணம் விருதுக்கு அனுப்புங்கோ..
என் வோட்டை தூக்கிப்பிடிச்சு ஓங்கிக்குத்தி விடுறேன்...
நவீன தொழிநுட்ப பதிவு என்றால்...புதுசு கண்ணப புதுசு...அதாவது ஏதாவது ஒரு தொழிநுட்ப அறிமுகம், பவயன்படும் விதம் குறித்த படு லேட்டஸ்ட்டு மாட்டர். சும்மா...கூகில் தெய்வாத்துக்கிட்ட வேண்டிக்கிட்டா, காட்டிப்பபூடுதப்பா...
அப்படியே கப்ஸரு பண்ணி, டமிலில கலந்துகட்டுங்க கண்ணா!! என்னா புருஞ்சிக்கினீங்களா?
இதுவல்லவா மரண மொக்கை நண்பா!!
Post a Comment