Pages

Subscribe Twitter Twitter

Tuesday, December 21, 2010









பெருகும் யாழ்ப்பாணத்தின் பெயரினாலான இணையத் தளங்கள்..

தற்போது யாழ் குடாநாட்டில் இணையப் பாவனை, வீடியோ வசதிகளுடனான தொலைபேசிப் பாவனை என்பன இளைஞர்களிடையே மிக வேகமாக அதிகரித்தவாறுள்ளது.இதற்கேற்றவாறுயாழ்ப்பாணத்தின் பெயரிலோ இல்லை வேறு பெயர்களிலோ யாழ் செய்திகளை வெளியிடும் இணையத் தளங்களும் புற்றீசல்கள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டன.

இவை தமது செய்திகளை பல்வேறுபட்ட வாசகர் வட்டத்தைச் சென்றடைய facebook,twitter போன்ற சமூக இணைப்புத் தளங்களையும் உச்ச அளவில் உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டன.இந்த விளம்பர உத்தி சர்வதேச அளவில் ஏற்கனவே பிரபலமானதொன்று தான்.இதுபோன்ற பல உத்திகளை உபயோகித்து  சில இணையத் தளங்கள் தமக்கென கணிசமானதொரு வாசகர் வட்டத்தை ஏற்கனவே திரட்டியும் விட்டன.அத்துடன் இவ்வாறான இணையத் தளங்கள் உலகெங்கும் பரந்து வாழும் யாழ் மீது அக்கறையுள்ள இளைஞர்களின் கவனத்தை மீண்டும் யாழ் நோக்கித் திசை திருப்புவதில் குறிப்பிட்டதொரு பங்கை ஆற்றி வருகின்றன.

இதுபோன்ற இணையத் தளங்கள் பெரும்பாலும் யாழிலுள்ள, யாழ்ப்பாணத்திற்கு வெளியேயுள்ள இளைஞர்களைக் கொண்ட சிறு சிறு குழுக்களாலேயே  நிர்வகிக்கப்படுகின்றன.யாழின் தற்போதைய யதார்த்த கள நிலையை வெளிக்கொணரும் பல செய்திகளை இவ்வாறான இணையத் தளங்கள் அண்மைக்காலமாக முண்டியடித்து வெளியிட்டு வருகின்றன.இங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது.
அந்தச் செய்தி வெளியிடப்படும் பாணி,அவற்றின் சொல்லாடல் பாங்கு போன்றவற்றில் பல(பெரும்பாலும் மூத்த) யாழ் அபிமானிகள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள்.இதே விடயங்களைக் காரணம் காட்டி  சில இளைஞர்களும் ஆங்காங்கே தமக்குள் ஆதரவாகவும் எதிராகவும் வாதிப்பதும் இப்போது சகஜமாகிவிட்டது.

இவ்வாறான இணையத்தளங்களை விமர்சிப்ப்பவர்களின் வாதம்  இதுவரை பல்வேறு அச்சுறுத்தல்களிற்கிடையே மிகுந்த நிதானத்துடனும் , சமூகப்பொறுப்புடனும் செய்திகளை வெளியிட்டு தம் உயிர்களைக் கூடத் தியாகம் செய்த ஊடகப் பாரம்பரியம் மிக்க யாழ்ப்பாணத்தில், இப்போது சில கெமெரா போணும்,சில ஆயிரம் பணமும் இருந்தால் யாரும் இணையத் தளங்களை உருவாக்கி நடாத்தலாம் எனும் நிலையைப் பயன்படுத்தி சும்மா சிறு இளைஞர் குழுக்கள் தளங்களை ஆரம்பித்து  தமது தளங்களைப் பிரபலப்படுத்தவும்,வாசகர்களை அதிகரித்து விளம்பரங்களைப் பெறவும் சிறு சிறு சம்பவங்களையும் ஊதிப் பெருப்பித்து ஏதோ யாழ்ப்பாணம் சமூதாயச் சீர்கேடுகளால் அழிவின் விளிம்பிலிருப்பது போல செய்திகளாக்கி சிறிதும் சமூகப் பொறுப்பின்றி இணையத்தில் வெளியிடுகிறார்கள் என்றவாறாக அமைகின்றது.இவற்றின் உச்சக்கட்டமாக உணர்வுபூர்வமான விடயங்களைப் பற்றிய செய்திகளைக்கூடக் கிளுகிளுப்பான சொல்லாடல் முறையில் சிறிதும் சமூகப் பொறுப்பற்ற முறையில் எழுதுகிறார்கள் என்றவாறாகக் குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.சிலர் இந்த விமர்சனங்களிற்கப்பால் சென்று சில விடயங்களை சில மட்டங்களில் வெளியிடாமல் இருப்பது அல்லது மெலிதாக்கிய அளவில் வெளியிடுவதும் கூட சமூகப் பொறுப்புணர்வு தான் என்கிறார்கள். 
.

அவ்வாறான இணயத் தளங்களுக்கு ஆதரவானவர்களின் வாதம்   இவ் இணையத்தளங்களை நிர்வகிப்பவர்களது முழு நேரத் தொழில் இதுவாயிருப்பதில்லை  எனவும்  சமுதாயப் பொறுப்புணர்வுக்காகத் தான் இவ்வாறான இணையத் தளங்களை நடாத்துகிறார்கள் என்றவாறாறு அமைகின்றது.அவர்கள் ஆதாரங்களுடன் தான் செய்தி வெளியிடுவதாகவும் சில அடிப்படை நாகரிகங்களிற்காகத் தான் அவற்றை வெளியிடாதுள்ளதாகத் தெரிவிப்பதாகவும் விளம்பரம் என்பது இவ்வாறான இணையத் தளங்களின் தொடர்ச்சியான நிலைத்திருக்கைக்கு அவசியமானதொன்றெனவும் அவ் இணையத் தளங்களிற்கு ஆதரவானவர்கள் வாதிடுகிறார்கள்.குறித்த இணையத்  தளங்களில் எழுதுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே எனவும், அவர்கள் முறையான பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள் இல்லையெனவும் எனவே எழுத்து நடையில் சிறிது வித்தியாசம் இருப்பது தவர்க்கமுடியாதது என்கிறார்கள்.ஊடகப் பாரம்பரியம் பேசுபவர்களெல்லாம் பத்திரிகை மன நிலையிலிருந்து இன்னும் வெளிவராதவர்கள் எனவும்,அவர்கள் இணையத் தளங்களையும் பத்திரிகைகள் போலவே பார்ப்பதாகவும் வாதிடுகிறார்கள்.வேண்டுமானால் இவ்வாறு விமர்சிப்பவர்களே ஆக்கங்களை எழுதி அவ்வாறான தளங்களிற்கு மின்னஞ்சலாமே என்று வாதிடுகிறார்கள்.

எது எவ்வாறானாலும் சமுதாயப் பொறுப்புணர்வு எனும் சொல்தான்  இங்கே இரு சாராரிடம் சிக்கி சின்னாபின்னப்படுகிறது.விக்கிலீக்ஸ் போன்ற இணையத் தளங்களெல்லாம் உலகையே தன் பக்கம் திருப்பியுள்ள நிலையில் நாமும் உலகின் வேகத்தில் இயங்கியேயாக வேண்டும்.உலகின் மாற்றத்திற்கேற்ப மாறியே ஆக வேண்டும்...கட்டற்ற இணையம் என்பது ஓர் பலமான  ஊடகம்..
ஆயிரம் பூக்கள் மலர்வதில் தவறேதுமில்லை..
ஆனால் பூமாலைகள் மட்டும் குரங்குகளின் கையிலே சிக்கிவிடக் கூடாது...


21 comments:

KANA VARO said...

good post..

Subankan said...

அருமையான ஆக்கம். எனக்கும் இதே ஆதங்கம் இருக்கிறது. அதைவிடக் கொடுமை சமுதாயச் சீர்திருத்தல் என்று கிளம்பியிருக்கும் ஒரு இணையத்தளம், ஆபாச வீடியோக்களையும், புகைப்படங்களையும் ஆதாரங்கள் என்ற பெயரில் வெளியிடுவதுதான்.

ம.தி.சுதா said...

பெயர்கள் தான் ஒன்று.. ஹ..ஹ..ஹ.. பதிவகள் பெரும்பாலும் ஒன்று தான்.. பல தளங்கள் யாழ்ப்பாண மானத்தை விற்கும் தளங்களாகவே இருக்கிறது.. அதிலும் ஒரு தளம் (சுபாவும் இதை தான் சொல்லியிருப்பார்) இல்லாத விசயங்களை ஏதோ ஆதாரம் போல் போடுகிறது..
திரடிய பதிவை திருப்பிக் கேட்டால் என் நண்பன் தந்தான போட்டேன் என்றொரு பதிலும் இருக்கிறது...

Bavan said...

//ஆயிரம் பூக்கள் மலர்வதில் தவறேதுமில்லை..
ஆனால் பூமாலைகள் மட்டும் குரங்குகளின் கையிலே சிக்கிவிடக் கூடாது..//

அதே.. நல்ல ஒரு ஆக்கம்..:))

maruthamooran said...

எனக்கும் இதே ஆதங்கம் இருக்கிறது.

ARV Loshan said...

நியாயமான ஆதங்கம்.. நிதர்சனமான உண்மை. தேவையான அலசல்.

இக்பால் செல்வன் said...

ஆமோதிக்கின்றேன்..... பொறுப்பற்ற இணைய ஊடகம், பொறுப்பு பெறுதல் அவசியம், இல்லை அவ்வாறானவைகள் மக்கள் விலக்க வேண்டும்.. அப்படியான பொறுப்பு மக்களுக்கும் வேண்டும்............ cheap media sells sex, violence and cheap news for cheap hits

Anonymous said...

ஆயிரம் பூக்கள் மலர்வதில் தவறேதுமில்லை..
ஆனால் பூமாலைகள் மட்டும் குரங்குகளின் கையிலே சிக்கிவிடக் கூடா

யாழ்ப்பாணன் in ரஷ்சியா said...

ஆயிரம் பூக்கள் மலர்வதில் தவறேதுமில்லை..
ஆனால் பூமாலைகள் மட்டும் குரங்குகளின் கையிலே சிக்கிவிடக் கூடா

நிருஜன் said...

சூப்பர்!

அசால்ட் ஆறுமுகம் said...

//அதைவிடக் கொடுமை சமுதாயச் சீர்திருத்தல் என்று கிளம்பியிருக்கும் ஒரு இணையத்தளம், ஆபாச வீடியோக்களையும், புகைப்படங்களையும் ஆதாரங்கள் என்ற பெயரில் வெளியிடுவதுதான்//

உண்மை, நானும் அந்த செய்திகளை பார்தபோது நினைததேன்......

Jana said...

இது பற்றி நானும் சிந்தித்ததுண்டு. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். இவ்வாறான தளங்கள் அண்மைக்காலமாக தனிதமனித தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதையும் அவதானித்திருக்கின்றேன். இணையம் பலரையும் சேர்கின்றது என்ற பொறுப்புணர்வுடன், அதேவேளை காலத்திற்கு தேவையான முறையில் அமைந்து வந்தால் எல்லாருக்கும் சௌக்கியமாக இருக்கும் என நினைக்கின்றேன். பகிர்வுக்கு நன்றி

Kiruthigan said...

பலருக்கும் இருக்கும் ஆதங்கங்கள் இவை..
நானும் சிந்தித்ததுண்டு தம்மை பிரபலப்படுத்துவதற்காக இவர்கள் செய்யும் சில வேலைகள் இளம்பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்ற அதேநேரம் சமூகவலைத்தளங்களின் நன்மைகளைப்பற்றி மட்டுமே அறிந்திருக்கும் பெற்றோர்களுக்கு விளிப்புணர்வைளும் கொடுத்துள்ளன என்பதை மறுக்கமுடியாது.

கார்த்தி said...

நேற்றும் ஒரு விடயம் இவ்வாறான ஒரு தளத்தில் படித்தேன். இவர்கள் சின்ன விடயங்களையும் ஊதிப்பெரிதாக்குவது போலதான் எனக்கும் படுகிறது. இவ்வாறான செய்திகள் எமது மக்கள் பற்றிய தவறான செய்தியை பரப்புவது போலாகி விடுகிறது.
நானும் இதைப்பற்றி சிந்தித்தேன். வேண்டிய ஒரு பதிவு!

பகீ said...

நானும் ஒரு யாழ்ப்பாண இணையத்தளத்தை நடாத்துபவன் என்ற வகையில், உங்கள் கருத்தை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றேன்.

அன்புடன்
ஊரோடி பகீ

ஷஹன்ஷா said...

நல்ல ஆதங்கம்......
உண்மையே யாழ்ப்பாணம் ஏதே சமூக சீர்கேட்டின் தலைமையகம் என காட்டுவதற்கு சில பலர் முயற்சிக்கின்றனர்.....

இல்லாத விடயங்கள் பற்றி(குறிப்பாக பெண்கள் விடயங்கள்) ஏதோ நேரில் கண்டவர் போல பதிகின்றனர்....-கண்டிக்க வேண்டிய விடயமிது...

Anonymous said...

சுலபமாக பிரபல்யமடைய விரும்புகிறவர்கள் குறுக்குவழியை நாடுவது காலங்காலமாக நடக்கிறது. ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் கலாச்சார பிறழ்வுகள் அதிகரித்து விட்டதும் உண்மை.எயிட்ஸ் நோய் பாதி்ப்பு,ரீனேஜ் கருக்கலைப்பு முன் எப்போதும் இல்லாதளவு அதிகரித்துவிட்டது.யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டாலே எங்கள் இனத்தை காப்பாற்ற முடியும்.சிந்திப்போம் உண்மையை வெளிக்கொணர்வோம்.
http://biz-manju.blogspot.com

கணாதீபன் said...

நியாயமான ஆதங்கம்..

ம.தி.சுதா said...

ஜனா அவங்க இப்ப மோசமாயிட்டாங்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

sinmajan said...

நிச்சயமாக சுதா.. குரங்குகள் கையில் பூமாலைகள் சிக்கிவிட்டது... :(

கார்த்தி said...

அந்தக்காலத்திலயே நீங்கள் எழுதினது! இப்பவும் உந்த கேடு கெட்டதுகள் சாகாமதான் இருக்கினம்! உந்த எருமைகளுக்கு இவை உறைக்காது. அவர்களை நடுவெயிலில் விட்டு கழுத்தை கொஞ்சம் கொஞ்சமா வெட்டோணும்! உவங்கின்ர தளத்திற்கு போறதே கலாச்சார சீர்கேடு!
உந்த நாதாரிகளையும் பிள்ளைகள் எண்டு வளத்துவிட்ட பெற்றோரை என்ன வெண்டு சொல்வது.
எமது ஆக்கங்களை திருடுவதை கூட ஏற்றுக்கொள்ளலாம்! ஆன எம்மவர்களின் மானத்தை கற்பழிக்கும் கேவலம்கெட்ட செயலுக்காக வெட்டிக்கொல்லவேண்டும்!!