Pages

Subscribe Twitter Twitter

Friday, December 17, 2010

பதிவர் கிறிக்கெற்.. பிந்திக் கிடைத்த திடுக்கிடும் செய்திகள்

உலகே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர் பார்த்துக் காத்திருந்த இலங்கைப் பதிவர்களின் மாபெரும் கிறிக்கெற் திருவிழா நாளை இடம்பெறவுள்ள நிலையில் வெள்ளவத்தைப் பகுதியில் சிறு மழைப்பொழிவு ரசிகர்களிடையே சிறு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.மழையை நிறுத்தவேண்டி ஆங்காங்கே ரசிகர்கள் மொனப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளதைக் காணக்கூடியதாயுள்ளது.

போட்டி நடைபெறும் மைதானத்திற்கு மழையால் எந்தப் பாதிப்பும் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக உள்ள ஏற்பாட்டாளர்கள் அதற்கான முன் ஆயத்தங்களை ஏற்கனவே செய்துள்ளதாக அனுதினன் தெரிவித்துள்ளார். மைதானத்தை மூடித் தாழ்ப்பாள் இடுவதற்காக கடும் பிரயர்த்தனத்திலீடுபட்டுள்ளனர் பதிவர்கள் மது மற்றும் ஆதிரை.

இம்மழைத்துளிகள் பட்ட ஆடுகளம் எகிறி எழும் பந்துகளுக்கு சாதகமில்லையெனவும்,சுழல் பந்து வீச்சாளர்களுக்கே சாதாகமாய் நாளை அமையலாம் என பிரபல அனலிஸ்ற் கன்கொன் எங்கள் துடுப்பு இன்போ விற்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இவை தவிர நாளைய போட்டியில் அணிகளில் விளையாடவுள்ள வீரர்களை ஊகித்து அறிவிப்பதில் எங்கள் இலங்கை அணியின் தெரிவாளர் லோசன் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.அவ்வாறான ஏதாவது விபரங்கள்  விக்கிரமாதித்தனால் இன்று பின்னிரவு நேரத்திலேனும் வெளியிடப்படலாமெனும் ஊகத்தின் அடிப்படையில் பலரும் பதிவுலீக்சை அவதானித்தவாறும் உள்ளனர்.
நாளைய போட்டியின் முடிவுகளை முன்கூட்டியே  நிர்ணயிக்க ஆட்ட நிர்ணய சதிகள் ஏதாவது இடம்பெறுகிறதா என்பதை துப்புத் துலக்க இப்போதே சுபாங்கன் தலைமையிலான குழு மும்முரமாய் ஈடுபட்டுள்ளது.இதுவரை தமக்கு  அவ்வாறான சம்பவங்கள் பற்றிய எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையெனவும்,அவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் லண்டனிலுள்ள கட்டுப்பாட்டு மையத்திலுள்ள பச்சிளம் பாலகன் வத்தி வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இத்துடன் அஷ்வின் ,பவன் உட்படப் பலவீரர்கள் மழையால் தமது துடுப்பாட்ட பயிற்சி பாதிக்கப்பட்டதைப் பொறுக்கமுடியாது சற்றும் தளராமல் காலுறையில் பந்தைக் கட்டித் துடுப்பாட்டப் பயிற்சியிலீடுபட்டதால் தொடர்மாடிகளில் வசிக்கும் பலரும் அசௌகரியங்களுக்குள்ளானதாக விசனம் தெரிவித்தனர்.இதற்கிடையில் சற்றும் தளராமல் கார்த்தி தனக்கு துடுப்பாட வாய்ப்பு இம்முறை வழங்கப்பட்டேயாக வேண்டுமெனவும், தன்னால் மைதானப்பையனாகத் தொடர்ந்து பணியாற்ற முடியாதெனவும் facebookல் கருத்துத் தெரிவித்தமை அவரது அணியில் உள்வீட்டுக் குத்துவெட்டுக்களின் ஒரு பகுதியே எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் சுடுசோறு சுதா தான் நாளை போட்டியில் பங்கேற்க முடியாதென அறிவித்ததால்,  அவரிடம் ஆட்டோகிறாப் பெற போட்டிக்கு சுடு சோற்றுத் தட்டுடன் வர இருந்த ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துபோயுள்ளனர். 
நாளைய வரலாற்று முக்கியத்துவம் மிக்க போட்டியில் உங்கள் அனைவரையும் சந்திக்கும்வரை அன்புடன் விடைபெற்றுக்கொள்வது சின்மஜன்..

பிற்குறிப்பு: யாவும் கலப்படமற்ற கற்பனை.யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.பெயர்குறிப்பிட்ட பதிவர்களில் பலரிடம் எனக்கு நேரடி அறிமுகமில்லாதபோதும் யாரும் கோபிக்கமாட்டார்கள் என்று நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களது பெயர்களை இங்கு இனைத்துள்ளேன்.


20 comments:

Prem said...

kalakkiddeenga Bass...!!!

KANA VARO said...

ஆஹா! ஆஹஹா... நடக்கட்டும்.

ம.தி.சுதா said...

உண்மையில் சூடான செய்தி தான்.. இப்போது தான் இரு அதிரடி ஆட்டக்காரர் வவுனியா தாண்டியுள்ளார்கள்... இது எனது சூடான செய்தி..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

LOSHAN said...

எல்லாம் ஒரு மார்க்கமாத் தான் திரியிறீங்கப்பா :)
விக்கிரமாதித்தன் நாளை விளையாடுவதா இல்லை விலகிக் கொள்வதா என்று கடும் யோசனையில் உள்ளார்.

#நேரடி ஒளிபரப்பு

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

Bavan said...

என்னை துடுப்பாட்ட பயிற்சில் ஈடுபட்டேன் எண்டு சொல்லி என்னையும் துடுப்பாட்டவீரர் எண்டு ஒத்துக்கிட்ட உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...:P

Ashwin-WIN said...

விக்கிரமாதித்தன் இல்லாம ஒரு போட்டியா? ஒவ்ஹ் நோ...

மழையே பெஞ்சாலும் நீச்சல் உடையோட வந்து விளையாடுவோம்...

YOGA.S said...

லோஷனிடம் அப்பவே கேட்டேன் மழை பெய்கிறதா?"வெள்ள"வத்தையில் வெள்ளமா?என்று!பரவாயில்லை,வடிந்து?!விடும் தானே?

SShathiesh-சதீஷ். said...

கலக்குங்க போஸ்

கன்கொன் || Kangon said...

ஹி ஹி...
கலக்குங்கோ.... ;-)

எல்லாரும் கொலைவெறியோடதான் திரியிறீங்கள் போல... :P

கணாதீபன் said...

முந்திக் கிடைத்த செய்தி.. சின்மஜனைத் தேடி ஒரு கும்பலே கொலைவெறியுடன் அலைவதாகத் தகவல்

வதீஸ்-Vathees said...

எந்தவித தடங்கல்களும் இல்லாமல் டிபோட்டி நிறைவடைந்து விட்டது...நாளை சந்திப்போம்

sinmajan said...

நன்றி ப்றேம்.. பந்துவீச்சில் நீங்கள் கலக்கிவிட்டீர்கள்..
VARO ;)

sinmajan said...

ம.தி. சுதா.. யாழிலிருந்து வந்து ஜனா அண்ணா துடுப்பாட்டத்தில் தான் வயதானாலும் சிங்கம் என நிரூபித்து விட்டார்.. ஜெயசூர்யா எதிர்ப்பாளர்கள் கவனத்திற்கு..
யோ வொய்ஸ்.. ஆட்டநாயகன் :)

sinmajan said...

இன்று தனது விக்கிரமாதித்தன் சித்து விழையாட்டை அனுதினனிடம் காட்டிவிட்டார் லோசன் அண்ணா.. ;)

sinmajan said...

Bavan.. உங்கள் துடுப்பாட்டத்தை இன்றுதானே பார்த்து ரசித்தேன்.0இனி மேல் அந்தத் தவறு நிகழாது.
Ashvin,Yoga :)

sinmajan said...

Sathiesh.. கலக்கீற்றம் :P
கன்கொன்.. இன்று தான் உங்கள் கொலை வெறியை நேரே கண்டுகொண்டேன் ;)

sinmajan said...

கணா.. வந்து சேர்ந்துவிட்டேன் :P
வதீஸ்.. நிச்சயமாக :)

கார்த்தி said...

என்னவோ ஏதோ எனக்கு இரண்டு முறையும் பற்றிங் கிடைச்சிட்டு!!

Cool Boy கிருத்திகன். said...

மறக்கமுடியாத நாள்