வெள்ளாட்டு மந்தைக் கூட்டம்..
அமைதியாய்ச் சிங்கம்..
நாதியற்று நடுத்தெருவில் நரிகள்..
முள்வேலியற்ற முகாம்கள்
மாதிரிக் கிராமங்கள்..
யாருமற்ற சிறைச்சாலை
தொல்பொருட்சாலை..
சமச் சீரான தராசு..
பீரங்கியில் ஊங்சல்..
குதூகலமானதோர் குடும்பம்..
படுகொலைச் செய்தியேயில்லாத நாளிதள்..
ஆர்ப்பாட்டங்களேயற்ற தலைநகரம்..
தொடர்ந்து அலறும் தொலைபேசி..
கலைக்கப்பட்டது தூக்கம் ..
விழிகளின் ஓரமாய் வடியும்
ஒரு துளி கண்ணீர்..
ஒரு துளி கண்ணீர்..
7 comments:
அருமையான வரிகள்.... வாழ்த்துக்கள்...
எனக்குத் தன் சுடு சோறு ..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/
என்ன ம.தி சுதா..??
உங்கள் சுடுசோற்றை நீங்களே இரண்டாவதாக்கிவிட்டீர்கள்..
நன்றி
உங்கள் தளத்திற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
கனவு கூடக் கண்ணீர் தான் வடிக்கும் :(
ம்ம்ம்ம்....
அருமையான வசன நடை.... நடைமுறையும் கூட...!!!
ம்...
Post a Comment