பூத்திருக்கும் புத்தாயிரமாம் ஆண்டு..மிலேனியம் என்றெல்லாம் விவாதத் தலைப்புகள் வழங்கப்பட்டது நேற்றுப்போல் இருக்க ..இதோ விடைபெறுகிறது 2010.. தொழிநுட்ப உலகில் பிரதானமாக இணைய உலகு கடந்த தசாப்த காலத்தில் கண்ட மாற்றம் அளப்பரியது.2000ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் 361 மில்லியன் இணையப் பாவனையாளர்கள் உலகில் இருந்திருக்கிறார்கள்.இந்தத் தொகை ஏறக்குறைய இன்றைய facebook பாவனையாளர்களின் தொகையின் அரைப்பங்கே..ஆனால் இவ் வருட இறுதியில் உலகளாவிய இணையப் பாவனையாளர் தொகை இரண்டு பில்லியனைக் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பிடத்தக்கவகையில் இந்த தசாப்த காலத்தில் ஆபிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சி வேகம்(>2000%) பிரமாண்டமானது.அதிலும் குறிப்பாக 2000ஆண்டு காலப்பகுதியில் உலகின் பெருந்தொகையான இணையப் பாவனையாளர்கள் கொண்ட முன்னணி 10 நாடுகளில் இடம்பெற்றிருக்காது 61ஆவது இடத்திலிருந்த ஆபிரிக்க நாடான நைஜீரியா 2010ல் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது தான் இணைய உலகில் ஆபிரிக்காவின் பிரமாண்ட வளர்ச்சிக்கு சான்று பகர்கிறது.
இணையத் தொழினுட்பத் துறையில் Google,Facebook,Twitter போன்ற ஏராளமான தளங்கள் புகுந்து ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருப்பதுவும் இந்தத் தசாப்த காலத்தில்தான்..அதிலும் பிரதானமாக இவ் ஒரு தசாப்த காலத்தினுள் இணைய தொழினுட்பத்தின் சகல இடுக்குகளிலும் நுளைந்த google தன்னை ஓர் அசைக்கமுடியாத வல்லரசனாக நிறுவிக்கொண்டது.facebook 500 மில்லியன் பாவனையாளார்களைக் கடந்து 600 மில்லியனை நோக்கி வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.facebook நிறுவுனர் Mark Zuckerberg தன்னை உலகின் மிக இள வயது செல்வந்தராக நிறுவிக்கொண்டார். இதேபோல் வணிக உலகில் இணையம் புகுந்து பெரும் மாற்றங்களைச் செய்துவிட்டது.Paypal,Amazon என நாங்கள் இணையமூடான வியாபார நடவடிக்கைகளிற்கு உதாரணமாகத் தெரிவித்துக்கொள்ளலாம்.
அண்மைக்காலத்தில் விக்கிலீக்ஸ் பல நாடுகளின் கண்களிற்குள் விரலைவிட்டு ஆட்டி,உலக வல்லரசுகளையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.ஆக மொத்தம் இன்று உலகின் அன்றாட இயக்கத்திலிருந்து இணையமென்பது பிரிக்கமுடியாததோர் சக்தியாக தன்னை நிறுவிக்கொண்டு விட்டது.
ஆனால்..
இங்கே நம்மவர்களின் ஒரு பகுதியினர் இப்போதும் கூட, அதிகரித்துவரும் இணையப் பாவனை நம் இளைய சமுதாயத்தைச் சீர்ப்படுத்துகிறதா..சீரழிக்கிறதா என பாடசாலைகளில் விவாதம் நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.இன்னொரு பகுதியினர் அதிகரித்துவரும் இணையப் பாவனை தான் நமது இளைய சமுதாயத்தை தவறான வழியில் திருப்பி கலாசார சீரழிவிற்குக் காரனமாகிறது என கிடைக்கும் இடுக்குகளில் எல்லாம் புகுந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்..
பேச வேண்டியவர்கள் பேசாமல் இருப்பதும், பேசக்கூடாதவர்கள் பேசிக் கொண்டிருப்பதுமே எமது சமூகத்தின் பெரிய சாபக்கேடு..
-யாரோ
11 comments:
காத்திரமான பதிவு. அன்று யாழில் பெருகும் இணையம் தொடர்பாக இடப்பட்டிருந்த இடுகையும், இன்றைய இடுகையும் பல நிதர்சனமான உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
மிக அருமையானதும் காத்திரமானதுமான பதிவு. அடடா..நையீரியாவின் அசுர வளர்;சி திடுக்கிட வைக்கின்றது. இன்றுதான் இது பற்றி அறிந்துகொண்டேன். நம்மவர்கள்!!!! அனைத்திலும் திருந்துவார்கள் என்றே எதிர்பார்க்கின்றேன், இன்னும் நம்பி இருக்கின்றேன். என்ன கொஞ்சம் நாள் எடுக்கும்.
கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பார்களா..?
யுத்தத்தில் இருந்து மீண்ட நாடு, சீரான வளர்ச்சி பாதையை தெரிவு செய்ய சில காலம் எடுக்கும் என நினைக்கின்றேன். எம்முடைய வளர்ச்சியும் வெகு தொலைவில் இல்லை
ஜனா அண்ணா கூறியதைப் போல் நைஜீரியாவின் வளர்ச்சி தற்போது தான் அறியக் கிட்த்தது. நன்றி
இப்படியான பட்டிமன்றங்களை நடாத்துபவர்களுக்கோ பங்குபற்றுபவர்களுக்கோ இணையத்தைப்பற்றி ஒரு விடயமும் தெரியாதிருப்பது இன்னும் வருத்தமான விடயம்!
//பேச வேண்டியவர்கள் பேசாமல் இருப்பதும், பேசக்கூடாதவர்கள் பேசிக் கொண்டிருப்பதுமே எமது சமூகத்தின் பெரிய சாபக்கேடு//
மிகவும் சரியான கூற்று
//ஆனால்..
இங்கே நம்மவர்களின் ஒரு பகுதியினர் இப்போதும் கூட, அதிகரித்துவரும் இணையப் பாவனை நம் இளைய சமுதாயத்தைச் சீர்ப்படுத்துகிறதா..சீரழிக்கிறதா என பாடசாலைகளில் விவாதம் நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.இன்னொரு பகுதியினர் அதிகரித்துவரும் இணையப் பாவனை தான் நமது இளைய சமுதாயத்தை தவறான வழியில் திருப்பி கலாசார சீரழிவிற்குக் காரனமாகிறது என கிடைக்கும் இடுக்குகளில் எல்லாம் புகுந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்//
சரியோ பிழையோ எல்லாம எங்களின் கண்ணோட்டத்தில் தான் உள்ளது .எப்போதும் நாங்கள் எங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டால் போதும் .தேவையில்லாமல் வேறு ஒன்றுக்குள் புகுந்து கொண்டு அலட்டிகொள்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை .எங்களுடைய காலம் தான் வீணாகும் அருமையான பதிவு
ம்ம் அத்தனையும் உண்மை!!
நடைபெறும் சில சம்பவங்கள் தான் யாழ்ப்பாணத்து பெருசுகளை அப்பிடிச் சொல்லச் செய்யுது..
>>பேச வேண்டியவர்கள் பேசாமல் இருப்பதும், பேசக்கூடாதவர்கள் பேசிக் கொண்டிருப்பதுமே எமது சமூகத்தின் பெரிய சாபக்கேடு..
-யாரோ
உண்மை.. நல்ல பதிவு
யுத்தத்தில் இருந்து மீண்ட நாடு சீரான வளர்ச்சி பாதையை தெரிவு செய்ய சில காலம் எடுக்கும் என நினைக்கின்றேன். எம்முடைய வளர்ச்சியும் வெகு தொலைவில் இல்லை- நிரூஜா
நிரூஜாவினுடைய யதார்த்தமான சிறந்த கருத்து. நிச்சயமாக யுத்தத்தில் இருந்து மீண்ட எம்முடைய வளர்ச்சியும் வெகு தொலைவில் இல்லை.
Post a Comment