Pages

Subscribe Twitter Twitter

Saturday, October 9, 2010









காமம் என்னும் செசிக்கு காதல் என்னும் பொடி வேணும் ....


இது லம்போரோகினி செசிஸ்.. சில்லால் மட்டுமே அடையாளம் காணக்கூடிய இரும்பு குவியல்....

இதுக்காகத்தானா கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தும்டெலிவரிக்காக காத்துக் கிடக்கிறார்கள் ..???
ஏதோ உண்மை தான் ...
ஒருசிலசெக்கன்களில் சில நூறு மைல்களை எட்டிப்பிடிக்கும் வேகம் ... லாவகமாகதிருப்பக்கூடிய சக்கரங்கள் ...
எந்த தரைதோற்றத்திற்கும் தாக்குப் பிடித்து ஓடும்கட்டமைப்பு ... எல்லாம் இந்த செசி
ஸ்ன் வேலை தான் ....
ஆனாலும் ஒரு பொடிதேவை ...
எந்திரன் ரஜினி மாதிரி .. என்ன ஒரு லுக்கு ...
அந்த இரும்பு செசிஸ்க்கு அடிச்ச பொடி தான் இது ... பொடி கட்டாயம் தேவை ... பார்க்க ..ரசிக்க ..ஏன் சுகமாய் ஏறிப் பொய் வர ...
ஒரு பொடி தேவை தான் ...
அடிப்படை நோக்கம் சீறிப் பாயும் எஞ்சின் என்றபோதிலும் அதை செயல்ப்படுத்த அல்லது அனுபவிக்க எமக்கு ஒரு அழகிய வசதியான பார்த்தவுடன் கண்ணைப் பறிக்கும் ஒரு வெளித்தோற்றம் தேவை ...



அப்படியே எமக்கொரு அழகிய கோவில் தேவை .. தூரத்தே தெரியும் கோபுரங்கள் தேவை ... திருவிழாக்கள் தேவை.. வழிபாட்டு முறைகள் தேவை ... அடையாளங்கள் தேவை ...கடவுள் என்பவன் ஸ்தூலமாக அண்டமெங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்துள்ள போதிலும் .....
அடிப்படையான காமத்துக்கு .... கண்டதும் காதல் எனப்படும் ஒருவகை காமத்துக்கு ...எமக்கு வேண்டும் ஒரு நாகரிகமான கவசம் ... எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாளம் ....
ஆம் .. காதல் தெய்வீகமானது.. அழகானது ...
கோவிலுக்குப் போகாமல் ...
திருவிழாக்கள் கொண்டாடாமல் ....
மனதாலே தவமிருந்து அனாதியான இறைவனை காணலாம் தான் ...
ஆனாலும் கோவிலுக்குப் போவதிலுள்ள சுகம் ..
ஊர்கூடி தேருளுப்பதில் உள்ள சுகம் ....
கடவுளை அடையவிட்டலும் பரவாயில்லை ..
எனக்கு வேணும் அந்த சுகம் ....
அது தான் காதல் ....
காமத்தை அடிப்படையாக ... கருவாக....
நோக்காக.. கொண்ட காதல் ...
நோக்கத்தை அடையாவிடினும் சுகமே..
வந்த நோக்கத்தை மறக்கடிக்கும் அந்தக் காதல் ....
எப்பொழுதும் தெய்விகமானது தான் .....
அப்படித்தான் காரும் ... என்னவோ எஞ்சின் க்காகத் தான் டொயட்டா , நிசான் எண்டு வாங்கினாலும் ... கடைசியில் எம் ஆத்மாவுடன் கலப்பது அந்த பொடியே... நினைத்தவுடன் மனதுக்குள் உணரப்படுவதும் அதே ....

ஆக...
காமம் என்னும் செசிக்கு காதல் என்னும் பொடி வேணும் ....


5 comments:

Unknown said...

பிடிச்சிருக்கு...

கணாதீபன் said...

எதைக் கொண்டு போய் எதோட..

தனன் said...

என்ன பாஷ்.. அங்க இங்க எண்டு தாவீற்று கடசீல ஒரு முடிவை அறிவிக்கிறீங்க..

Uthistran said...

நன்றி நண்பர்களே ... தனன் எல்லாத்தையும் தொடர்புபடுத்தி பாருங்க

Unknown said...

என்னமா கொண்டு போய் கோக்கிரான்கப்பா